Wednesday, October 31, 2012

u.s வஹியும் !!?? அதற்கு குடை பிடிக்கும் முல்லா நம்பர் வன்னும் !!!





சில  பெருந்தகைகள் நேற்றுவரை முழுப் பூசணிக்காயை சோற்றிலே 

மறைத்தார்கள் !! இன்று அந்த பூசணிக் 

காய்தான் இனி உங்கள் சோறு !! என  முஸ்லீம் உம்மாவை எச்சரித்து   

களமிறங்கியது மட்டுமல்லாமல் 

தட்டிக்கேட்க நினைப்பவர்களை ஜாஹிலீயத்தில் (அறிவிலிகள் ) 

இருப்பவர்கள் என கூறி தமது வழமையான 

முல்லா தனத்தின் முன் முக்காடிட்டு அடங்கி பேசும் படியும் 

கர்ஜிக்கிரார்கள் . இது அறிந்து அடிவருடும் 

இவர்கள் ஆதரவாளர்களுக்கோ பெரும் கொண்டாட்டம் தான் .ஆனால் 

திண்டாட்டம் என்னவோ வழமை 

போலவே பாமரத்துவமான முஸ்லீம் உம்மாவிட்கே . கீழே வரும் 

கன்றாவியையும் சற்று பாருங்களேன் .

இனி உங்களுக்கு' அல் குர் ஆன்' பழைய ஏற்பாடு !! யூ .எஸ் போலிசி 

தருகிறது இந்த புதிய ஏற்பாடு !! 

பழையதை நீங்கள் விசுவாசிக்க தடையில்லை . ஆனால் புதியதை தான் 

பின்பற்ற வேண்டும் என இந்த 

'முல்லா நம்பர் வன்' தனது பத்துவாக் குண்டுகளை ஏவத் 

தொடங்கியுள்ளது .


Tuesday, October 30, 2012

22 வருடங்கள் மெளனித்திருக்கும் முஸ்லிம்களின் வெளியேற்றம்


Thinakaran
விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்காக நடத்திய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முழுமையாக மழுங்கடிக்கப்படுவதற்கு அவர்கள் விட்ட மாபெரும் வரலாற்றுத்தவறுகள் பல காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக இற்றைக்கு இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து தமிழ் பேசும் மற்றுமொரு சகோதர இனமான முஸ்லிம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம் என இன்றைய (28.10.2012) தினகரன் ஞாயிறு வாரமஞ்சரியின் ஆசிரியர் தலையங்கள் தெரிவிக்கின்றது.

'ஆபரேஷன் கர்தாவும்' நவீன இஸ்லாமிய இராஜதந்திரமும் ஒரு ஒப்பீடு ..



இஸ்லாமிய வரலாற்றின் சில சம்பவங்கள் அதிகம் அறியப்படாதவை . இஸ்லாம் எழுச்சிமிக்க தீர்க்கமான மதீனா காலகட்டத்தில் இருந்த போது நடந்த இந்த சம்பவம் சுவையானது மட்டுமல்ல இதில்  அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) தெளிவான அரசியல், இராஜதந்திர , இராணுவ நகர்வுகளின் திட்டமிடல் பற்றி அதிசயிக்கவும்  வேண்டியுள்ளது .
 

Monday, October 29, 2012

முற்றுப் பெறாதது சாத்தானின் தூதே ...



கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய சாக்கடையில் 
சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக 
இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும் 
ற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின் 
வீதிகளில் வலம் வரத் தொடங்கின !

Sunday, October 28, 2012

தீர்வு ஒரு இஸ்லாமியப் பார்வை ...


 
    முஸ்லீம்களின் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தவறு ஜாஹிலீய மேலாதிக்க சுழலை ஜீரணிக்க கற்றுக் கொண்டதே . அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை சில இஸ்லாமிய 'பிளாஸ்டர்கள்'  மூலம் 'பெட்ச்' போட்டு' டச் ' பண்ணினால் அது இஸ்லாமாகி விடும் அல்லது அதுதான் இஸ்லாமிய தீர்வு ! என சிந்திக்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது . இந்த மகத்தான பணி மன்னிக்கவும் பிணி இஸ்லாமிய இயக்கங்களாலேயே செய்யப்படுகின்றது . இது முற்றிலும் பிழையான சுன்னாவுக்கு முரணான ஒரு வழிமுறையாகும் .

Saturday, October 27, 2012

சமரசம் (வஸ்திய்யாஹ்) - Compromise


நவீன காலம் வரை இந்த பதப்பிரயோகம் முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருக்கவில்லை. மாறாக மேற்குலகிலிருந்தும் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும் உருவாகி வந்ததே சமரசம்” என்ற இந்த சிந்தனை. முதலாளித்துவம் என்ற மேற்குலகின் அடிப்படைக்கொள்கை கூட சமரசத்தீர்வினு}டாக உருவானதால் அதனது சகல மட்டங்களிலும் இது பிரதிபலிக்கின்றது.

கிறிஸ்தவ தேவாலயமும்அதனைச் சாரந்திருந்த அரசர்களும்” என்ற ஒரு தரப்பினருக்கும்மேற்கிலே அக்காலத்தில் உருவாகியிருந்த சிந்தனையாளர்களும்தத்துவஞானிகளும்” என்ற ஒரு தரப்பினருக்குமிடையே இடம்பெற்ற போராட்டங்களை தீர்க்கவென தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தீர்வே இந்த சமரசம்’ என்ற எண்ணக்கருவாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதம் ....




கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

எகிப்திய ஜனாதிபதியின் மரண ஓலம்..






by: Azeez Nizardeen (badrkalam.blogspot.com)

ஸ்ரேலின் தலைவர் ஷிமோன் பெரஸையும் இஸ்ரேலையும் உயர்ந்த உன்னத  நண்பன் என்று விழித்து எகிப்தின் தற்போதைய இஸ்லாமியவாத  (?) ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேல் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்களுக்கும், போராட்டங்களுக்கும், எழுச்சிகளுகும் உறுதுணையாக இருப்பது அமெரிக்க நலன் சார்ந்த அரசியலே. 

புலமைப் பரிசில் யுத்தம் ஒரு பார்வை ......

 
       கரணம் தப்பினால் மரணம் என்பது ஒரு பழமொழி ஆனால்தருணம் சொதப்பினால் மடையன் என்பது இப்போது இலங்கை கல்வித் திட்டத்தின்  போட்டித்தனக் கண்ணோட்டத்தினால் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்  பரீட்சை க்கு    தோற்றும் மாணவர்கள் விடயத்தில் சொல்லாமல் சொல்லும் ஒரு கருத்தாகும்      
   

Friday, October 26, 2012

ஒரு அகதியின் நாட்குறிப்பிலிருந்து .....




                                                 யாழ் நகர் எனது பிறப்பிடம் . இருள் பிடித்த இனவாத துப்பாக்கிகளின் நிழலில் அச்சத்தோடும் ,அச்சுறுத்தலோடும் வளர்ந்தேன் வாழ்ந்தேன் என்பது 100% உண்மை ! . ஆனால் எந்த தவறான சிந்தனைகளும் என்னை ஆக்கிரமிக்க கூடாது என்பதுதான் உலகை நான் புறிய ஆரம்பித்தது ,முதல் நான் இறைவனிடம் வேண்டிக்கொண்டது . 1990 களில் விடுதலைப் புலிகளால் இரண்டு மணிநேர அவகாசத்தில் யாழ் நகரில் வாழ்ந்த இந்த முஸ்லீம் உம்மா பலாத்காரமாக விரட்டப்பட்டது ; அந்த சோகத்தோடும், சுமைகளோடும்  இவனும் ஒரு துளியாய் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்வு .அத்தோடு எமது பெயருக்கு முன்னால் அகதி என்ற காரண இடுகுறிப் பெயரும் ஒட்டிக்கொண்டது . முஸ்லீம் என்ற காரணத்தால் விரட்டப்பட்டதால் இஸ்லாம் என்பதன் தேடல் இயல்பாகவே ஆரம்பித்தது .

ஈத் முபாரக் .............

மனித அடிமைத்துவத்தின் அநீதியின் மத்தியில் இது எமக்கு இன்னொரு பெருநாள் !அசத்தியம் அதிகார சக்தியாகி சத்தியத்தை சாத்தியமற்றதாய்காட்டி நிற்கும் நிலையில் எமக்கு இன்னொரு பெருநாள் !கொலை கொள்ளை பலாத்காரமென ஜாஹிலீயத் எம்மீது அத்துமீறும் நிலையில் எமக்கு இன்னொரு பெருநாள் !இப்ராஹீம் (அலை ) இன் தியாகத்தை மிம்பரில் முழங்கி தீமையை எதிர்க்க திராணியற்று கொல்லையில் ஒழிந்துவெள்ளைச் சாரத்தை சமாதானக் கொடியாய் காட்ட முண்டியடித்து பாயும் நிலையில் இது எமக்கு இன்னொரு பெருநாள் !

ஈத் முபாரக் .............

Thursday, October 25, 2012

இந்த பிணம் திண்ணும் சாத்திரங்கள் பேய்கள் அரசால்வதால் தான் !!!


அன்பின் அன்னை ஆபியாவே ! உன் செய்திகள்

பெக்ராம் சிறையில் அடைத்தார்களாமேபெண்மையை பலர் பதம் பார்தார்கலாமேபூக்களை கணரக ஆயுதத்தால் பறித்தார்களாமே................. 

வாசிக்க முடியவில்லை ,வாசித்ததால் 
இப்போது  சுவாசிக்க துணிவில்லை !
ஒரு கோழையாய், கைதியாய் இந்த உம்மாவில்   ஒருவனாய் !
கண்ணீரையும் பிரார்த்தனையும் தவிர என் கரங்கள் துரும்பானதே !

ஓநாய்களின் அச்சம் தவிர தட்டத்தனியாக ஒரு பெண் செல்லும் 
காலம் பற்றி கண்டேன் அந்நாள் என்னால் !

சூடான் மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதல் உணர்த்தும் செய்தி என்ன ?


முஸ்லீம் உலகு மீதான இன்னொரு தெளிவான அதிர்ச்சி வைத்தியத்தை சியோனிசத்தரப்பு செய்துள்ளது . ஆனால் இத் தாக்குதல் தான் அவர்களது இலக்கு எனக் கருதினால் யஹூதிய வியூகங்கள் தொடர்பில் வெறும் மேலோட்டமான கணிப்பே ஆகும் . உண்மையில் இது இஸ்ரேலின் இராணுவ  வல்லமையை மீண்டும் ஒரு முறை பறை சாற்றுவதோடு முஸ்லீம் உலகு மீது பகிரங்க எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது .அத்தோடு இது அவர்களின் ஒரு பாரிய அறுவடை நோக்கிய விதைப்புகளின் ஒரு நடவடிக்கையே .

சூடானின் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்?




சூடானின் “யர்மூக்” ஆயுத தொழிற்சாலை மீது விமான குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நான்கு குண்டு வீச்சு விமானங்கள் நடாத்தியுள்ளதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஒண்ணுமே புரியல !


               

பசித்த குப்பாருக்கு புசிக்க பண்டமானோம் !
இப்போது முஸ்லிமின் இறைச்சியில் தாம் 
யஹூதி பிஸ்ஸாவை கடிக்கிறான் !!
முஸ்லிமின் இரத்தத்தை கோலா வாக்கி நசராணி 

பயங்கர வாதம் ஒரு பார்வை .


பயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும்இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் மாநாடொன்றினை நடத்தி அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் பொது விருப்பத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல்” என்பதே பயங்கரவாதம் என்று அதன் அர்த்தத்தை அரசியல் ரிதியில் மாற்றின. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல கருத்தரங்குகள்ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும்சட்டங்கள் இயற்றப்பட்டும் எந்த இயக்கங்கள்சங்கங்கள்கழகங்ககள்நாடுகள் (அவர்களின் வரைவிலக்கணப்படி) பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பன போன்ற பல தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த சட்டங்களும்பாகுபாடுகளும்எந்நாடுகள் இவற்றை இயற்றினவோஅந்நாடுளின் அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Wednesday, October 24, 2012

அரேபிய வசந்தம்!!!



வேலியை மேயும் பயிர்களின்
விழலுக்கு நீர் இறைப்பில் 
அரேபிய வசந்தத்தில் ஓர்
ஹோலிவூட் காவியம்! 

Tuesday, October 23, 2012

Syrian National Council (SNC) உறுப்பினர்கள்! - அரபு வசந்தத்தின் மொட்டுக்கள் இவர்கள்


கௌரவமான குடி மக்கள் !!

மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதும், பஸர் அல் அஸாதின் ஷிஆ ஆட்சி வீழ்த்தப்பட்டதன் பின்னர் ஆட்சியமைக்க அமெரிக்காவால் தயார் படுத்தப்பட்டதுமான “சிரிய தேசிய கவுன்சில்” உறுப்பினர்கள் இவர்கள். ஆட்சிக்கு முன்னரே இப்படியென்றால் ஆட்சி கைவசமானதும்.....................
 

முர்ஷியின் பொய் முகங்கள்

இது எகிப்தின் அதிபர் முஹமட் முர்ஷி இஸ்ரேலின் அமைச்சர் ஷிமோன் பெரஸிற்கு எழுதிய கடிதம். மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த உத்தியொக பூர்வ கடிதம் டெல்அவிவின் தொலைகாட்சியில் காட்டப்பட்டுள்ளது. இரு நாட்டு இராஜதந்திர நலன்களை வலியுறுத்தி இஸ்ரேலை அங்கீகரித்த துரோக கடிதம். அன்வர் சதாத், ஹுஸ்னி முபாரக் வரிசையில் இப்போது முஹம்மட் முர்ஷி. இஹ்வான்கள் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ அமெரிக்க டீலிற்கு மட்டும் உண்மையாளர்களாக, ஸியோனிஸத்திற்கு சான்று பகர்பவர்களாக உள்ளனர்.
வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனநாயகம் !
வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனநாயகம் !

Monday, October 22, 2012

நாம் செய்யவேண்டிய பிரதான பணி என்ன ?


மனிதன் தனது உடல் சார்ந்த தேவைகளையும் ,உள்ளார்ந்த உணர்வுகளையும் திருப்திப் படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை ஒழுங்கு படுத்துகிறது .பசி ,
இனப்பெருக்கம் , உறவுகள் போன்ற எல்லாம் இங்கு வஹி மூலம் மிகச்சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது . தேவையான ஒன்றை புறக்கணித்தோ , மிதமிஞ்சிய கட்டுப்பாடற்ற வரையறுக்கப்படாத அனுபவிப்போ இந்த ஒழுங்கு முறையில் இருக்காது என்பதுதான் 
எமது அகீதா. 

ஹிக்மத்தால் மீறப்படும் ஹராம்கள் !!!



கடந்த இரு மாதங்களுக்கு முன்  கொழும்பு பிரதான நூல் நிலையத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது . முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் குரலாக அந்த கண்டனக் கூட்டம் . அமைந்திருந்தது . அக்கூட்டத்திலே விசேடமாக I.M.F பற்றியும் ,அதன் பட்டவர்த்தனமான சுயநலவாத முகம் தொடர்பிலும் பல தெளிவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன . இவ்வளவிற்கும் இந்தக்கூட்டம் முஸ்லீம் அல்லாத அந்நிய சமூகத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது !

சாம் பாசிலின் பட ரீலும் ஒபாமாவின் நிஜ ரீலும் ! அதுக்காக இதுவா ? இதுக்காக அதுவா ?


அமெரிக்க மக்களையும் தூதரகங்களையும் தாக்கியவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது – ஓபாமா


அமெரிக்காவின் காப்டிக் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் இஸ்லாத்தையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் பற்றி மோசமாக விமர்சித்துள்ளதால், உலகம் முழுவதும் பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.இது குறித்து ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில் உலகத்துக்கு ஒரு உறுதியான செய்தியை சொல்கிறோம்.

போயா தினம் உழ்ஹிய்யா வேண்டாம்: ஜம்இய்யதுல் உலமா



ACJU: பெருநாள் தினமான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுமாறும்   அய்யாமுத்தஷ்ரீக்குடைய இரண்டாம் நாளான ஒக்டோபர் 29 ஆம் திகதி திங்கட்கிழமை போயா தினமாக இருப்பதனால் அன்றைய தினம் உழ்ஹிய்யா கடமைகளை முற்றாக தவிர்த்து நாட்டு சட்டத்தை முற்றாக பேணி நடக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  வேண்டியுள்ளது.

அச்சத்தில் ஒரு அரசியல் அதுதான் சர்வாதிகாரம் !


அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையை பயன்படுத்தல் பயங்கர வாதம் என்றால் உலகின் தலைவிதி இன்று அந்த அரசியலால் தான் நிச்சயிக்கப்படுகின்றன ! . வன்முறையின் வடிவம் பற்றி எமக்குள் ஒரு மயக்கம் உண்டு ; அது அடிப்படையில் கருவி ஏந்தியிருக்கும் துன்ப்ருத்தும் ,கொலை செய்யும் ...இப்படி பல ஆனால் அதை விட ஆபத்தானது அது நான் என்ற மமதையோடு பயத்தை மூலதனமாக்கி ஆட்சி செய்வது .இப்போது அதன் கீழ் மக்கள் தினம் தினம் உயிரோடு 
இறந்து கொண்டே இருப்பார்கள் .அனேகமாக எல்லா சர்வாதிகாரத்தினதும் பொதுப்பண்பு இந்த பயத்தை 
மூலதனமாக்குதலே . 

Sunday, October 21, 2012

விலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ஒரு சுதந்திரப் போராளி .

 

     நான் சொல்லப்போவது அல்லாமா இக்பாலை பற்றியது  அல்லதான் ஆனால் இந்த சமூகத்தினதும் மனித நேயத்தினதும் உணர்வுகளின் பங்காளிகளாய் மாறி சரியானதை தேடி பிழையான வழிமுறை மூலம் தனது  உயிரை  அர்ப்பணிக்க களமிறங்கிய ஒரு  இளைஞ்சனை  பற்றியதே . சமூக நேசமும் ,நியாயத்தின் தேடலும் இவனிடம்  இருந்தது என்பதை என்னால் கூறமுடியுமே தவிர இறைவனிடத்தில் இவனின்  நிலை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது .

முதலாளித்துவப் பொய்களில் முஸ்லீம் உம்மா !!!


அவல அரங்கேற்றத்திற்கு நியாயக் கவிபாடும் 
உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க 
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !

ஓலங்களை இராகமாயும் குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன் 
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில் 
பூகோளமே உறங்கி விட்டதே !

சபாஷ் இனி சரியான போட்டிதான் போங்கோ !




விடிவெள்ளி http://vidivelli.lk/epaper/index.php#

இதுவும் ஒரு' ஹோலி வூட்' தானா?


சிரிய போர் விமானங்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரை மீளக் கைப்பற்றும் முகமாக உக்கிர தாக்குதல்
 
 


(2012-10-17 09:49:வீரகேசரி ஆன்லைன்)

சிரிய போர் விமானங்கள் மாரெட் அல் – நுமான் நகரிலுள்ள போராளிகளின் தளங்கள் மீது செவ்வாய்க்கிழமை உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளன.இட்லிப் மாகாணத்திலுள்ள மேற்படி நகரை கடந்த புதன்கிழமை கிளர்ச்சியாளர்கள் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 

Saturday, October 20, 2012

அஹ்லாக் இல்லாததால் இஸ்லாம் இல்லையா ? இஸ்லாம் இல்லாததால் அஹ்லாக் வரவில்லையா ?



Photo
அஹ்லாக் இல்லாததால் இஸ்லாம் இல்லையா ? இஸ்லாம் இல்லாததால் அஹ்லாக் வரவில்லையா ? இப்படி ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள் ? " முஸ்லீம்கள் எழுச்சி அடையாமல் இருப்பதற்கு  காரணம் அஹ்லாகின்மையே " என பேசியும் எழுதியும் வரும் உலமாக்கள் ,சிந்தனையாளர்கள் இன்று அதிகரித்து விட்டார்கள் . வழமை போலவே வரைவிலக்கணத்தில் இருந்து விளைவை பார்ப்பதை விட்டு விளைவில் இருந்து வரைவிலக்கணத்தை நோக்கும் தவறு இங்கும் பிரயோகிக்கப்படுகின்றது .

'தாகூத்' ஒரு பார்வை .


"ஒவ்வொரு சமூகத்திலும் அல்லாஹ்வையே வணங்குங்கள் ;தாகூத்திற்கு அடிபணிவதை விட்டும்  நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ;என்று (எச்சரிக்குமாறு ) நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம் "   (TMQ அத்தியாயம் 16 : வசனம் 36)
    
                                                                                                                                 
               ' தாகூத் ' என்பது இறைவனை எதிர்த்து சவால் விட்டு சதி செய்பவனை குறிக்கும் ! அல்லாஹ்வை தவிர்த்து வேறு எவரை வழிபடப்படுகிறதோ அவரைக்  குறிக்கும் ! வழிபட்டு நடப்பவன் கட்டாயத்தின் காரணத்தினால் வழிபட்டாலும் சரியே ! அல்லது தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழிபட்டாலும் சரியே !அது 'தாகூத் ' ஆகும் .அது மனிதனாக இருக்கலாம் ,அல்லது ஒரு சைத்தானாக இருக்கலாம் ,அல்லது சிலை ,அல்லது  அல்லாஹ் அருளாத சிந்தனை, அல்லது அல்லாஹ் அருளாத  வழிமுறை ,அல்லது ஏதேனும் ஒரு பொருளாக இருக்கலாம் .
                                                             (இப்னு ஜரீர் அத்தபரி  ஜாமியுள் பயான் பீ தப்சீரில் குர் ஆன் பாகம் 3, பக்கம் 13)

மக்கள் போராட்டம் - கவனிக்கத் தவறிய உண்மைகள்



மத்தியகிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியானது அவர்களிற்கான விடுதலைக்கான வழி என அம்மக்களால் உணரப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் பொருளாதார ரீதியில் உரிமைகள் ரீதியில் எதிர்கால சுபீட்சமான வளங்கள் ரீதியில் தமக்கு ஒரு மாற்றத்தை இந்த போராட்டங்களின் வெற்றி கொண்டு வந்து விடும் என அவர்கள் நம்புவதன் விளைவே மேற்படி புரட்சிகள் வேகமாக வலுவடைவதும் வெற்றியை நோக்கி நகர்வதுமாகும்

இந்த மக்கள் போராட்டமானது அரசுகளை அரசியல் தலைவர்களை இராணுவங்களை ஏன் நாடுகளின் எல்லைகளில் கூட மாற்றங்களை கொண்டு வர வல்லன. சுதந்திரம் என்பதற்கும் நவீன வாழ்வியல் மாற்றம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்றைய அராபிய மக்கள் விடுதலை எனும் பேரில் நவீனத்துவத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையையே கோரி நிற்கின்றனர். மாற்றங்கள் ஒரு போதும் சுதந்திரங்களை வழங்கப் போவதில்லை. சுதந்திரமே மாற்றங்களைப் பெற்றுத் தர முடியும். ஆனால் நடப்பதோ சுதந்திரத்தின் பேரால் மாற்றங்களை அடைய முற்படுவதே. மீண்டும் புதிய போத்தலில் பழைய மதுவே கிடைக்கும்.

" FREEMASION" - சாத்தானின் இராணுவம் உலகை ஆள தயாராகிறது !!



                         பிரீமேசன் இந்தப் பெயர் நம்மில் பலருக்கும் தெரியாத புதிய வருகை. ஆனால் இந்தப் பெயர் வரலாற்றுரீதியில் காலம் காலமாக தினமும் பல சக்திகளால் உச்சரிக்கப்பட்டு  வந்துள்ளதொன்றாகும். புரியவில்லையா? ஆம் சாத்தானிய வழிபாட்டை அடிப்டையாகக் கொண்ட உலகிலேயே அதி பயங்கரமான நாசகாரக் கும்பல் இது. வெறுமனே சில ஆயிரம் பேர்களை உள்ளடக்கிய அமைப்பல்ல. மாறாக மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தன்னிடத்தே சாத்தானிய பைபிளை யாப்புச் சட்டமாக வைத்துள்ள மிகப் பிரமாண்டமான உலகளாவிய வலைப்பின்னலைக் கொண்ட பயங்கரவாத அமைப்பு. சாத்தானை கடவுளாக வழிபடும் அமைப்பு. சாத்தானிய இராஜியத்திற்காக கடினமாக முயற்ச்சிக்கும் அமைப்பு. அமரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவருகிறார்கள்.

இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட்.



நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 71

பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.

அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.
சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன?

Friday, October 19, 2012

ஓரம் போ ! ஓரம் போ ! பேரினவாதச் சிங்கம் வருது !


          தன்மைகளும் வடிவங்களும் வேறுபட்டிருந்தாலும் மிக மோசமான அரசியல் ,இராணுவ அழுத்தத்தில் முழு உலகிலும் முஸ்லீம் உம்மா நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . உளரீதியாகவும் ,உணர்வுரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் அதிக பட்சமாக மரண அச்சுறுத்தல் வரை இந்த அநீதி தொடர்கின்றது .இந்த அடிப்படையிலே தான் சிறுபான்மை  வாழ் முஸ்லீம்கள் தொடர்பில் தற்போது பேரினவாதம் தனது கொடிய கரங்களை பதிக்க முயல்கின்றது என்றால் அது ஒரு மிகையான கருத்தல்ல .

நேற்றைய பொன்குடம் இன்று மண்குடமா ? இது தான் அடிவருடித்தன இஸ்லாமிய எழுச்சி !!



அன்று கடாபி லிபியாவில் உடைத்த போது அது பொற்குடம் ! இன்று இவர்கள் எகிப்திலும் 
துருக்கியிலும் உடைக்கும் போது அது மண் குடம் ! கடாபியும் குர் ஆனிலும் , கம்பியுநிசம் , ஜனநாயகத்திலும் , தனது சொந்த சரக்கிலும் இருந்து தான் 'கிரீன் புக்கை ' வைத்து பசுமை புரட்சியை செய்தார்! அதற்கு எதிரானவர்களை மட்டுமே    கே.ஜி .பீ 
தனத்தோடு கிளஸ் நிகோகளால் சமாதி கட்டினார் . அதுவும் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி லிபியாவை இட்ட
ுச்சென்றதாக அவருக்கு சார்பான விமர்சனங்களும் உண்டு . 
அப்படிப் பார்த்தால் இதுவும் வினைத்திறன் மிக்க அதிகாரம் 
தான் .

 அன்று இஸ்லாமிய சரீயாவின் சில விடயங்களில் அதற்கு எதிரான அவரது கடும் போக்கு இறை மறுப்பாக இனம் காணப்பட்டது . அப்போது கூறினோம் வஹி பூர்த்தி ஆக்கப்பட்ட பின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு , சூழ்நிலை , காலத்திற்கு ஒத்துப்போதல் 
என்பன ஹராம் ! எனவும் இப்போதைய எகிப்து ,துருக்கி என்பவற்றின் நிலைப்பாடு வினைத்திறன் ! எனவும் போற்றுகிறோம் . நாம் எங்கோ தவறு விடுகின்றோம்.