Thursday, January 31, 2013

'புரோபிட் அண்ட் பெனிபிட் பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய ரியல் நீதியும் .



        விஸ்வரூபம் திரைப்பட  விடயத்தில் நடிகர் கமலுக்கோ கோடிக்கணக்கில் இழப்பாம் .தமிழ் நாட்டு அரசுக்கு அத் திரைப்படத்தை வெளியிடுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் தானாம் ! மொத்தத்தில் நடப்பு நிலவரம் எல்லாம் 'புரோபிட் அண்ட் பெனிபிட் 
பேசில் ' நடக்கும் பக்கா  'கபிடலிச பொலிடிக்ஸ் '

Tuesday, January 29, 2013

பசர் அல் அசாதிட்கு U .N 500மில்லியன் கடனுதவி !!! (இதுவரை செய்த கடமைகளுக்கான இறுதிக் கொடுப்பனவோ ?)


நீதியை நிர்க்கதியாக்கிய 
அநீத ஆட்சிகள் - அரசியலை 
சாக்கடையாக்கி சத்தியத்தை 
துப்பாக்கி தோட்டக்களால் 
சீண்டிப் பார்த்த சீர்கேடுகள். 
இவர்கள் தான் அசத்திய தர்பாரின் 
சாத்தானிய சாம்ராஜிய சேவகர்கள் .
என்னதான் நடக்கும் இனி ?
இந்த அற்பப் பிராணிகளின் 
அதர்ம உறவுகள் மூலம் .
அல்லாஹ்வின் படைகள் முன் 
அடங்கிப் போவதோ ,
அழிந்து போவதோ தவிர 

(இதற்கிடையே இட்லிப் நகரத்தில் அசாத் படையின் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் கைதிகளின் சிறைச்சாலை கடந்த 29/01/2013 இல் இஸ்லாமிய படைகள் வசம் வீழ்ந்தது . அல்லாஹு அக்பர் ...)

நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும்


 
 
           ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு  சொல்கிறது . இந்த வெறியாட்டத்தின் பின் கூட இஸ்லாத்தை துடைத்தெறிய முடியவில்லை . 

பெரும்பான்மையின் 'அம்மாதான் ' ரியல் அம்மா !? சிறுபான்மையின் 'அம்மாவோ ' வெறும் சும்மா !? (திமோகிரசி பேசில் கருத்துச் சுதந்திரம் ஒரு குறும் பார்வை )

              
          கருத்துச் சுதந்திரம் அதன் வீச்செல்லை என்ன ? இந்த வினாவிற்கு விடைதேடினால் சிலநேரம் பதிவுகளுக்கு பக்கங்கள் போதாமல் போகலாம் ! எப்போதும் தாமும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புவதே இன்று ஆதிக்கத்தில் இருக்கும் மேற்கின் சிந்தனை வாதத்தின் பிழைப்பாக போய் விட்டது . மனிதன் சட்டம் இயற்றினால் நிகழும் தவிர்க்க முடியாத நோய் இதுதான் .

Monday, January 28, 2013

எமது போராட்டம் எது ?



                            "தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமூகத்திற்கு எதிர்காலமே கிடையாது "     (வரலாற்றாய்வாளர் இப்னு கல்தூன் )


                                         உங்கள்  மூதாதையர்களோ (கடவுள்களாக வணங்கப்பட்ட ) சிலைகளை உடைத்த 'இப்ராஹீம்களாக 'இருந்தார்கள் .நீங்களோ (இப்ராஹிம் (அலை ) அவர்களின் தந்தையாராகிய ) சிலையை விற்று வாழ்க்கை நடத்திய 'ஆசர்களாக ' உள்ளீர்கள் ! நீங்கள் தானா முஸ்லீம்கள் ?               
                                                                                                                                           (கவிஞர் இக்பால் )

Saturday, January 26, 2013

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?



                                பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

Friday, January 25, 2013

'வை திஸ்' கொலை வெறி !?



      இது 'வைட் ஸ்கின் ' சியோனிஸ்ட் ' காவிப் போர்வையில் காட்ட நினைக்கும் காட்டு மிராண்டித் தனம் . 'அசோகனின்' வாளை 'இராம ஜென்ம பூமியின்' பக்தர்களின் வழிகாட்டுதலில் ஏந்தி நிற்கும் 'தீசனின் ' தீவிர வாதக் கதை !!! இவர்களது அஹிம்சையின் முன் முஸ்லீம்களுக்கு மட்டும் 'ஹிம்சை ' என்பதுதான் நடப்பு விதி !!! இந்த முதலாளித்துவ முதலைகள் முடுக்கி விட்டிருப்பது தமது ஆதிக்கக் கதிரைகளை கட்டிக் காக்க என ஆள் சேர்க்கும் அநீதமான அரசியல் .

பெண் நிர்வாண சுகத்தில் நியாயம் காணும் உலகம் !!




                      பெண்ணை நிர்வாணப் படுத்தி பார்ப்பதில் பண்டைய ரோம் , கிரேக்கம் , அரேபியா , இந்த வரிசையில் நவீனத்தின் சொந்தக்காரர்களாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேற்கின் சிந்தனையை அடிப்படையாக கொண்ட உலகும் சற்றும் சளைத்தது அல்ல . அவளை காட்சிப் பொருளாக்கி காமக் கண்களால் ரசித்து ருசித்து பார்ப்பதில் இன்று முழு உலகும் ஒருமித்த கருத்திலேயே உள்ளது .

Thursday, January 24, 2013

முதலாளித்துவ மேட்டுக்குடி மரபில் யுத்தம் எப்போதும் ஒரு 'வீடியோ கேம்' தான் !!


             முதலாளித்துவ மேட்டுக்குடி மரபில் யுத்தம் எப்போதும் ஒரு 'வீடியோ கேம்' தான் !! என்பதை அவர்களது வாய்களினால் சிலநேரம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விடுகிறார்கள் . அரசியல் ,பொருளாதாரம் , தமது குரூர உளத் திருப்தி இந்த மூன்றிலும் கொள்ளை இலாபம் என்பதே அவர்களது அடிப்படைக் கொள்கை . இந்த மாபியா சிந்தனையில் மனிதாபிமானம் அவர்கள் தரப்பில் இருந்து நியாயங்களை சொல்லவே பயன்படுகின்றது .

Wednesday, January 23, 2013

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரி .


 

             இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை  'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .

(FREEDOM OF THE UTERUS) கருப்பைச் சுதந்திரம் ஒரு விபச்சார அழைப்பே .


 
                இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண் , பெண் உடலுறவுக்கான  உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக் ) கொள்வார் .


                      இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின் , ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான் . அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான் . இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் .

Monday, January 21, 2013

ஏகாதிபத்திய காலனித்துவ பிடிக்குள் ஆபிரிக்கா உணர வேண்டிய பிரதான உண்மை என்ன ?


                     ' மாலி ' இன்று மீடியாக்களின் பார்வையில் அதிகம் உச்சரிக்கப்படும் ஆபிரிக்க நாடு . முதலாளித்துவ வல்லரசான 'பிரான்ஸ்' இன்று அதன் மீது ஒரு சண்டித்தனமான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்துள்ளது . ஒரு வலிமை பொருந்திய நாடு வறிய  ஆபிரிக்க நாடொன்றில் அரசியல் இராஜ தந்திர ரீதியில் ஆக்கிரமிப்பு செய்வது இது தான் முதல் தடவையல்ல . ஆனால் சொல்லப் பட்ட காரணம் தான் சற்று சிந்திக்கத் தூண்டுவது. அது வழமை போலவே இஸ்லாமிய தீவிர வாதம் , பயங்கர வாதம் எனும் நொண்டிச் சாட்டாகும் . இதனடிப்படையில் இஸ்லாம் பற்றிய தவறான அச்சத்தில் திசை திருப்பப்பட்டிருக்கும் மனித சமூகம் இன்று மாலியின் நிகழ்வுகளை ஒருபக்கப் பார்வையிலேயே பார்க்கின்றது .

Sunday, January 20, 2013

'குரங்கு கையில் பூமாலை ' என்றால் என்ன ?


              1961 இல்  இந்த சம்பவம்  பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN  PROFUMO ' . அவரின் கேவலமான    நடத்தைக்கு    உதாரணமான      சம்பவமே கீழே வருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .


Saturday, January 19, 2013

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து .. (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )




மரத்துப் போன மனதில் இருந்து 
விறைத்துப்போன விரலுக்கு 
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும் 
மீண்டும் இஸ்லாம் ச
க்தியாய் மாறி 
கிலாபாத்தின் கேடயத்தில் 
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை .


இது ஒரு பகிரங்கக் கொலைகாரன் பற்றிய அறிமுகம் .



மரணமே இவனைக் கண்டு அஞ்சும் .
கர்ப்பிணிகள் இவனது நாமத்தை கூறினால் .
கருச்சிதைவு 100% நிச்சயம் !
துப்பாக்கிகள் கூட இவன் கையில் சிக்காமல் 
தூக்கில் தொங்கவும் தயாராம் !
மனித வரலாறு இவனது பதிவிற்கு 
பக்கங்கள் வைக்கவில்லை காரணம் 
கொடிய மிருகத்தை அதில் சேர்ப்பதில்லையாம் !
சொல்லகராதியில் கொலை என்ற வார்த்தை 
தன்னை புரிய வைக்க இவனை 
சந்திக்கச் சொல்கிறதாம் !

இறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை .




                            அது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமா கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் வாழும் மனிதர்களை தூய்மைப் படுத்த தனது எல்லைகளை விரிவு படுத்திச் சென்றது . அன்றைய வல்லரசு அந்தஸ்தில் இருந்த சாம்ராஜ்யம் பாரசீகம் ;அதன் ஏகபோக அதிபதியாக தன்னை பிரகடனப் படுத்திய  ஒரு மன்னனாக கிஸ்ரா வீற்றிருந்தான்  . இஸ்லாத்தின் தூதை அவன் முற்றாக புறக்கணித்தான் .

Thursday, January 17, 2013

'பிர் அவ் நிசத்தின் ' ,நும்ரூதிசத்தின் வாரிசுகள் யார் ?

 

                     அதிகாரம் , ஆணவம் ,ஆதிக்க வெறி என்பன அடுத்த மனிதனை இழிவாக கருத வைக்கின்றது .நான் என்ற மமதையில் தனக்கு மண்டியிடச் சொல்கிறான் .தனது கட்டளைகளை அவர்கள் மீது திணிக்கவும் ,தன் மன இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் அடுத்த மனிதர்களை பயன் படுத்தவும் துணிகின்றான் .


                            சிறிது ஆதிக்கமோ ,செல்வமோ,புத்திக் கூர்மையோ ,சாதுரியமோ அல்லது ஏதேனும் ஒருவகை திறமையோ பெற்றிருப்போர் அனேகமாக வரம்புகளை மீறி அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றனர் .

காமத்தில் இலாபம், இலாபமான காமம் ...

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 07)
                              ஐரோப்பாவின் அறிவியல் ஆதிக்கம் மதத்தை சர்ச்சுகளுக்கு உள்ளே மட்டும் அங்கீகரித்து மதச் சார்பற்ற அரசியலை கொள்கையாக்கியது . இங்கும் முதலாளித்துவம் புகுந்து விளையாடியது . எதிலும் இலாபம் என்ற சுயநலம் மனித மூளைகளை இயக்கியது . அடக்கி ஆளப்பட்ட பெண்கள் சமூகம் 
தனது உரிமைகளை  வென்றெடுக்க காலம் கணிந்ததாக நினைத்து களமிறங்கினார்கள் 

Wednesday, January 16, 2013

இது சத்தியத்தின் செய்தி ...


         சிரியாவில் 'TAFTANAZ ' விமானத்தளம் 'JABATH AL NUSRAH ' வசம் வீழ்ந்ததன் பின்னர் அசாத் தரப்பு இராணுவம் தற்காப்பு நிலையையும் தாண்டி சாவா ,சரணடைவா ? என்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளார்கள் .

                                 
                            'TAFTANAZ ' விமானத்தளத்தை தக்க வைப்பது தொடர்பில் மிகப் பலத்த போராட்டத்தையும் இழப்பையும் அசாத் இராணுவம் அடைந்தது . அதற்கான காரணம் வான் வழியான தாக்குதலையோ படை நகர்வுகளையோ இந்தத் தளத்தையே  மையப் படுத்தி அசாத் அணி செய்து வந்தது . 


தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 06)




ஜனநாயகத்தில் பெண் .

ஜனநாயக நெருப்பின் முன் 
ஒரு விட்டில் பூச்சியாய் பெண் 
உலகில் உலா வந்தாள் !
சம வாழ்வுரிமை ,வாக்குரிமை 
தொழில் உரிமை , ஆணோடு சம உரிமை 
எல்லாம் கிடைத்தது 
காமப் பார்வைகளின் தொடரில் 
நிம்மதியை மட்டும் விலை பேசியதாக !

கருப்பை சுதந்திரத்தின் முன் 
கட்டில் சுகத்தோடு அவள் 
விடுதலை வீட்டில் அவமானத்தை 
உரிமையோடு தொட்டில் 
கட்டவும் கேட்டாள் !
அந்த விபச்சார விலாசத்தை தேடி 
'நோபல் ' பரிசோடு அணிவகுத்தார்கள் 
அந்த நவீனத்தின் காவலர்கள் !

                                         (தொடரும் ...)

Tuesday, January 15, 2013

இது உங்கள் சிந்தனைக்கு .



* நான் யார் ?
*எங்கிருந்து வந்தேன் ?
*எதற்காக வந்தேன் ?
*எங்கே செல்லப் போகின்றேன் ?
                                        இந்த வினாக்களுக்கு மனிதன் சரியான விடை தேடாத வரை அவனால் உலகம் பற்றியும் அதில் அவனது வாழ்வு குறித்தும் தீர்க்கமான முடிவிற்கு வரமுடியாது .இந்த தேடல் சரியாக அமையாத நிலையில் , அல்லது தெளிவற்ற நிலையில் மனித வாழ்வு ,அவனை ஒரு பேசும் விலங்கு என்ற நிலைக்குள் சுழல வைத்து விடும் .

Monday, January 14, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 05)


" பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்! 
  அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும் !
  அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !
  சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு 
  அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும் ! - இதுதான் இன்றைய 
  அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை "

   டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படு கொலையோ அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின் உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப் படும் பயங்கர வாத எதிர்ப்பு யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள் . மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம் .

சிரியாவில் இருளை உடைத்து தியாக ஒளியில் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் இஸ்லாத்தின் தூய அரசியலான ' கிலாபா கோட்பாடு'



        சிரிய சண்டைக்களங்கள் தலைநகரான 'டமஸ்கசை ' சுற்றி மிகப் பரவலாக படர்ந்து விட்ட நிலையில் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பகுதிகளே 'தாகூதிய ' அசாத் படைகள் வசம் இருக்கின்றது . இஸ்லாமிய இராணுவத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றி தீர்மானிக்க முடியாத நுணுக்கமான நகர்வுகளே அங்கு மேற்கொள்ளப் படுகின்றது .

Sunday, January 13, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 04)



                            முன்னைய  சமூகங்களில் பெண்களின் நிலை  பற்றி ஆராயும் தொடரில் ,கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை நாங்கள் இதுவரை பார்த்தோம் . இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் ஆரம்ப அத்திவாரமாக குறிப்பிடப் படும் சமூகங்களே நான் இதுவரை குறிப்பிட்டவை .இதே வரிசையில் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா, மற்றும் ஆபிரிக்க ,ஆசிய பகுதிகளோடு தொடர்பு பட்ட நாகரீகங்களில் பெண்கள் தொடர்பான பார்வை மற்றும் நடத்தை பற்றியும் சிறிதளவு ஆராய்வது பொருத்தம் .

Saturday, January 12, 2013

சிரியாவின் இரண்டாவது அதிமுக்கிய இராணுவ விமானத் தளமான' TAFTANAZ' இஸ்லாமிய போராளிகள் வசம் .


    

                                        தொடர்ச்சியான ஒருமாத முற்றுகைச் சமரின் பின்னர் 'இட்லிப் ' நகரின் வடபுறம் அமைந்திருந்த இரண்டாவது அதிமுக்கிய சிரிய விமானப்படை விமானத்தளம் இஸ்லாமிய போராளிகள் வசம் (நேற்றைய தினம் அதாவது 11/ 01/2013 இல் ) வீழ்ந்ததாக சிரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .இந்த இழப்பானது சிரியாவின் 'தாகூதிய ' அரசுக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி நிலையாகும் .

Friday, January 11, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 03)



 ஐரோப்பிய சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
                                               ஐரோப்பிய நாகரீகத்தில் பெண்கள் என்ற விடயத்தை நாம் ஆராயும் போது , இன்றைய நவீனத்தின்  நாம் ஆராயும் விடயத்தின்  அடிப்படையை தொட்டவர்களாக ஆகிவிடுவோம் . இருண்ட ஐரோப்பா என்ற வரைவிலக்கணத்தை வரலாற்றுப் பாடத்தின் ஒரு தகவலாக அனேகமாக எல்லோரும் கற்றுள்ளோம் .அதில் 'கிறிஸ்தவ சர்ச்சுகளின் ' சர்வதிகாரம் சகலதையும் கடவுளின் பெயரால் தவறாக செய்தது . அந்த தவறில் இருந்து பெண்ணியத்தின் கண்ணியமும் அகௌரவமாக சித்தரிக்கப்பட கிரேக்க ,ரோம நாகரீகத்தை விட சற்று வித்தியாசமான அடக்கு முறையை பெண்களின் மீது மதத்தின்  பெயரால் கிறிஸ்தவம் செய்தது .

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 02)



சமூகக் கோட்பாட்டில் பெண்கள் ஒரு சுருக்க வரலாற்றுப் 
பார்வை .

                        வரலாற்று ரீதியில் பெண்கள் தொடர்பான பல்வேறு சமூகங்களின் கருத்துக்களை முதலில் நாங்கள் ஆராய்வது பொருத்தமானது . ஏனென்றால் இந்த ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் அவ்வாறான பார்வைகள் இருக்கின்றதா என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் .


கிரேக்க சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
                'பண்டோரா ' எனும் பெண்ணே முதல் பெண் , இவளே எல்லா தீமைகளுக்கும் ஆணி வேராகும் . இந்த அடிப்படையில் பெண்களிடமிருந்தே எல்லாத் தீமைகளும் உற்பத்தியாகின்றன . அவள் மனிதப் பிறவியே அல்ல . இந்த பார்வையின் கீழ் அவர்கள்

Thursday, January 10, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி01)



           பெண் விடுதலை , கருப்பை சுதந்திரம் , ஆணுக்கு நிகரான பெண் சமத்துவம் ,போன்ற கோஷங்கள் அன்றாடம் எழுப்பப்பட்டும் , சட்டரீதியான அதன் வடிவங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டும் இருக்கும் நிலையிலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ,அடக்கு முறைகள் , அத்துமீறல்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது . இது தொடர்பில்  சட்டத்தின் பாதுகாப்பும் , கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனைகளும் கேள்விக்குறியான நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூக வாழ்வு குறித்து அச்சப்பட்டே காலம் நகர்த்த வேண்டியுள்ளது . 

சவூதியின் அனுசரணையில் மதவாத பெரும்பான்மைகளுக்கு விருந்தே ரிசானா நபீக்கின் மரண தண்டனை .



                                      ஆவேசமான பார்வை நிரபராதியையும் குற்றவாளியாக்கும் , அனுதாபமான பார்வை குற்றவாளியையும் நிரபராதியாக்கும் . ரிசானா நபீக்கின் ஒரு விடயத்தில்  ஏறத்தாள பல்வேறுபட்ட சுயநல பார்வைகள் புகுந்து விளையாடியுள்ளன , விளையாடுகின்றன . ரிசானா ரபீக்கின் பொறுப்பில் இருந்த குழந்தை இறந்த விடயத்தில் கொலையா தற்செயலா? எனும் சந்தேகம் சாட்சிகள் மூலம் சரியாக நிரூபிக்கப் படாத நிலையில் ,  அசமந்தமான இந்த நடவடிக்கை,   குறிப்பாக  வழமையாகவே கொட்டப்படும்  காழ்ப்புணர்ச்சி கோணத்தில் மனித உரிமை மீறல் எனும் பெயரில்  இஸ்லாத்தின் சிவில் ,கிரிமினல் சட்டங்களின் மீது தமது துவேஷத்தை துப்பும் மதவாத அரசியலுக்கு  ஆதாரமாக ஆகி விட்டது. 

மனிதாபிமான உதவியின் ஆதார வடிவம் 'அமீருல் மூமினீன் ' கால்வாய் .


 

         அது கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி )யின் ஆட்சிக்காலம் . 'ஹிஜாஸ் ' மாகாணத்தில் கடுமையான பஞ்சம் ஏற்படுகின்றது . அந்த சோதனையை எதிர்கொள்ள கலீபா பாரசீகம் ,சிரியா , எகிப்து ,எமன் போன்ற பாதிக்கப் படாத பகுதிகளின் கவர்னர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புமாறு கட்டளை இடுகிறார்கள் .பல்வேறு பகுதிகளிலும் இருந்து உணவுப் பொருட்களும் ,தானியங்களும் வந்து சேர்கின்றது .ஒரே ஒரு ஆளுகை பகுதியில் இருந்து மட்டும் உதவிகள் வந்து சேரவில்லை . அது எகிப்து .

Wednesday, January 9, 2013

ரிசானா நபீஸ் மரணமும் விமர்சனங்களும்!



by Abu saiyaf  இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனை,தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை ஒருவர் காட்டு மிராண்டித் தனமாக படுகொலை செய்வதிலிருந்து தடுக்கும், மனிதர்களை வேட்டையாட சுதந்திரம் கேட்பவர்களுக்கு அது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாக இருக்கலாம்.

'அஷ் ஷாமில்' அம்பலமாகும் வரலாற்று பாத்திரமான ஒரு 'ஸியோனிஸ' சதிமுகம் .



          இஸ்ரேலிய எதிர்ப்பாளர் என்ற வெளிப்படையான வடிவம் 'அல்லாஹ்வின் கட்சி ' எனும் இந்த அமைப்பினருக்கு, முஸ்லீம் உம்மத்தினர் மத்தியில் அதீதமான ஈடுபாட்டை கொண்டு வந்த சிறந்த முகமூடி ஆகியது . கெரில்லா தந்திரங்கள் , அதிரடியான தாக்குதல் நடவடிக்கைகள் என, லெபனானை மையம் கொண்டு இயங்கிய இந்த இயக்கம் யூத ஆக்கிரமிப்புக்கு எதிராக  , உணர்வு ரீதியாகவும் , பழிவாங்கும் வேகத்தோடும் இருந்த முஸ்லீம் உம்மாவின் கருத்தில் தனிப்பெரும் இடத்தையும் பெற்றுக் கொண்டது .