Thursday, November 27, 2014

குரங்கு மாறினால் பூமாலை தப்பிக்குமா !?

        
   "பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கிறது ! அதற்கு ஏண்டா புனிதமான அரசியல பாவிக்கிறீங்க !?" என்பது ஒரு கலைக் கூத்தாடி சினிமாவில் பாவித்த வசனமாகும் .அபூஹுரைராவுக்கு (ரலி ) சைத்தான் கற்றுக் கொடுத்த ஆயதுல் குர்சி போல பொய்மையின் தெளிவான உருவமான சினிமா சொன்ன உண்மை இதுவாகும் .

Friday, November 21, 2014

அட இது தாண்டா மனிதாபிமானம் ...!

    
   1845ல் 10 லட்சம் பேரை அயர்லாந்து பஞ்சம் காவு வாங்கியது. உதுமானிய கலீஃபா அவர்களுக்கு உதவிட 10,000 ஸ்டெர்லிங்கை நிதியாக தர முன் வந்தார்.

            ஆனால் ஐயர்லாந்தின் அரசி வெரும் 2000 ஸ்டெர்லிங்கை மட்டுமே தன் நாட்டு குடி மக்களுக்கு தர உத்தேசித்திருந்ததால் கலீஃபாவின் உதவியை வெரும் 1,000 ஸ்டெர்லிங்கோடு நிருத்திக்கொள்ள கேட்டுக்கொண்டாள் .

இலங்கையில் இன்று ........

                         நம்பி ஏமாறுதல் இந்த உம்மத்தின் தலைவிதி என்றால் அதற்கான இன்னொரு கதவு இப்போது திறக்கப் படுகிறது .இருக்கின்ற பேயில் நல்ல பேயை தேர்வது உலமாக்களால் காலத்தின் கடமையாக வேறு சொல்லப்படுகிறது .என்ன செய்வது பிணம் தின்னும் சாத்திரத்தில் தானே இரையாகும் ஏமாந்த ஜென்மங்களை ஜனநாயக தேசிய சிறுபான்மையில் தவிர வேறு எங்கும் காண இன்று முடியாது .

ஐ .எஸ் இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?(சில கேள்விகள் )

                                                            ஒரு காலம் இருந்தது ,அது முஸ்லீம்களிடமும் முஸ்லீம் உலகத்திடமும் முஸ்லீம் அல்லாதோரும் பாதுகாப்பையும் புகழிடத்தையும்,வேண்டக்கூடியதாக இருந்தது .அது இஸ்லாத்தின் தனிப்பெரும் அரசியலான கிலாபா சாம்ராஜியத்தோடு முஸ்லீம்கள் ஒன்றி இருந்த நேரமாகும் .அப்போது இஸ்லாத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரங்களும் ,அதிகாரிகளும் இருந்தார்கள் .ஆனால் முஸ்லீம் உம்மத் அவமானத்தோடு தலைகுனிய வேண்டிய நிரந்தர நிலை ஏற்படவில்லை.

Thursday, November 20, 2014

ஐ .எஸ் .இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?

   இன்று பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் ஒரு பிரதானமான விடயம் ஐ .எஸ் பற்றியதே என்றால் அது மிகையான கருத்தல்ல .இன்னும் என்னோடு பழகும் முஸ்லீம், முஸ்லீம் அல்லாதோர் என அநேகமானோர் இப்போது கேட்கும் கேள்விகளில் பிரதானமானது இந்த ஐ .எஸ் கூறும் இராணுவ இராஜாங்கம் பற்றியதே .ஆனால் விடயத்தை அவர்களுக்கு புரிந்த வகையில் விளக்குவது சற்று கடினமானது என உணரக்கூடியதாக உள்ளது .

Saturday, November 15, 2014

பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம் !!!!

 
மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள் !
விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள் !
பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள் !
இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள் !

Friday, November 14, 2014

அமெரிக்க தரப்பு சொல்லும் அம்புலிமாமா கதையின் உண்மை நிலை என்ன !? (ஒரு புரிதலுக்கான பதிவு )

    
    ஈராக் விவகாரத்தில் அண்மைய செய்திகள் ஒரு திட்டமிட்ட அரசியலின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான வடிவத்தை சுட்டுவதாக இருக்கிறது .வெறும் அமெரிக்க எதிர்ப்பு என்ற மேலோட்ட பார்வைகளை தாண்டிய ஒரு இரகசிய சூத்திரத்தின் நிறுவல் எனும் உண்மையாக நாளை அது காட்டி நிற்கலாம் .அது என்ன ?

          கடந்த இரு வாரங்களுக்கு முன் ஐ .நா .சபை சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் தனது உறுதியான செயல்திட்டத்தை அமுல் படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது .அதேநேரம் 1500 துருப்பினரை ஈராக் அரசுக்கு சார்பாக ஐ .எஸ் அமைப்புக்கு எதிராக நேரடி களமிறக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

Friday, November 7, 2014

இஸ்லாமிக் எமிரேட்ஸ் மாயை மேல் எழுப்பப் படும் எதிரியின் சமரசம் !

               
  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட ) மார்க்கம் 
இஸ்லாமாகும் ....(ஆள இம்ரான் :வசனம் 18)

 ( அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) அரசியல் நகர்வு தொடர்பில்  வெற்று ஆன்மீகப் பதிவோடு பார்க்கும் மதவாதமே தெரிகிறது .மதீனா யுகம் என்ற சித்தாந்த எழுச்சியின் மைல் கல்லாக அந்த ஹிஜ்ரா பார்க்கப்படுவதில்லை .அதனால்  ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் கட்டளை மற்றும் செயல் கிரமம் மறைந்து போகின்றது .

     இங்கு நான் பதிவிட வருவது இகாமதுத் தீன் என்பதன் சுன்னா எது என்ற கோட்பாட்டு பார்வை பற்றியதே .அதிகாரம் மற்றும் இஸ்லாமிய சரீயாவின் பிரயோகம் தொடர்பில் ஒரு பக்குவமான பிரிகோட்டை போட்டது காலனித்துவ வாதிகளின் சதியே .அந்த வகையில் சிலுவை சித்தாந்திகளை அரவணைக்கும் மன்னரிசம் முதல் நவ காலனித்துவத்துக்கு சலாம் போடும் இஸ்லாமிய ஜனநாயகம்,மற்றும் முரண்பாட்டு இராணுவ அரசியலை காட்டி நிற்கும் இஸ்லாமிக் ஸ்டேட் ,எமிரேட்ஸ் போன்ற தேடல்களின் உண்மை நிலையை உணர்த்த இந்தப்பதிவு உதவலாம் .)
         

Friday, October 31, 2014

அந்த அக்டோபர் முப்பது 1990 முதல் இன்றுவரை ! (மறந்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு முஸ்லீம் அகதி !)

    
       ஒரு அராஜஹத்தின் அசிங்கத் தீர்ப்பு ! மனிதம் மீறிய அடாவடி இறுமாப்பு !விடுதலைப் புலிகள் வடக்கில் வைத்த ஆப்பு ! அது முஸ்லீம் 
உம்மத்தின் வாழ்விட உரிமை பறிப்பு !அந்த அக்டோபர் முப்பது 1990 !

   தம்பியின் (பிரபாகரன் ) இயக்கம் 'தம்பிலா' என எம்மை வாஞ்சையோடு விளிப்பவர்களை அணைக்கச் சொன்னதா !?அநாதை தனத்தை உணர்த்தி உலகளாவிய உம்மத்தின் நிஜத்தோடு சேர்த்துப் பார்த்ததா!? 

Friday, October 24, 2014

ஹிஜ்ரி 1436 ! அல்ஹம்துலில்லாஹ் சொல்வதா !? இன்னாலில்லாஹ் சொல்வதா !?

      ஒரு சுயநலமிக்க கொடூரமான குப்ரிய சித்தாந்த அதிகாரத்தின் கீழ் அந்த அசத்திய (அ)நாகரீகத்தின் அடிப்படையில் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பிட்டு ஏதோ பெயருக்காக ஹிஜ்ராவை கல்குலேட் பண்ணுவது  முஸ்லீம்களுக்கு இன்று ஒரு சம்பிரதாயம் !

Thursday, October 23, 2014

ஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது !(மறு பதிவு )

       அது 2001 செப்டம்பர் 11 திகதி  வழமை போலவே விடிந்த அந்தப் பொழுது ஒவ்வொரு அமெரிக்க குடிமகன் உள்ளத்திலும் 1940 களில் ஜப்பான் நடத்திய 'பேர்ல் ஹார்பர் ' தாக்குதலை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .

ஹராத்தில் தேடப்படும் ஹலால் !!!

       ஒரு கதை சொல்வார்கள் ; நைட் கிளப் ஒன்றை முஸ்லிம் ஒருவன் நடாத்தி வந்தானாம் ! போதை வஸ்துக்கள் ,நிர்வாணப்பெண்கள் இப்படி எதற்குமே பஞ்சமில்லையாம் !ஒரு முறை அவனது முஸ்லிம்!! வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தேகத்துக்கிடமான தகவல் ஓன்று கிடைத்தது ; குறித்த நைட் கிளப்பில் இறைச்சி வகையோடு பன்றி இறைச்சியும் பரிமாறப்படுகின்றது ;என்பதுதான் !!

Wednesday, October 22, 2014

மாற்றம் என்றும் மாறாது !!!(பிக்ஹுள் அகல்லியாத் பற்றிய ஒரு தெளிவுக்காக. )

     எனது பெயர் மாற்றம் சடவாதத்தை பூஜிக்கும் உலகில் சத்தியத்தை சாத்தியமாக்கும் தீராத தாகத்தோடு வாழும் அபலை  .மாறும் உலகில் நிலையானது இஸ்லாம் என அடித்துக் கூறிய பலர் டொலர் சித்தாந்தத்தை பஞ்சனை ஆக்கி அசத்திய வாழ்வில் ஆனந்தம் கண்ட போது இந்த மாற்றத்துக்கு எல்லாமே தூக்கி வாரிப் போட்டது .

முதலாளித்துவ ஏகாதிபத்திய ஏமாற்று ஒரு புரிதல் .......

 
  பட்டாங்கதியை பல அங்குலங்கள் நெஞ்சினுள் பாய்த்து விட்டு ஒரு இரண்டு அங்குலம் பின்னால் இழுத்து எதோ விடயத்தை சரிப்படுத்தியதாக (முதலாளித்துவ அமெரிக்க) அரசு எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது .              - மார்டின் லூதர் கிங் -
               வெள்ளையர்கள் அல்லாதோரை மிருகத்தை விட கேவலமாக நடாத்தி விட்டு அதற்கு எதிரான இரத்தம் சிந்தும் போராட்டம் வலுவான போது சமரச அரசியலின் தூண்டில் அமெரிக்காவில் முதலாளித்துவ வாதிகளால் போடப்பட்டது .அதன் இரையாக கறுப்பின மக்களுக்காக சில சலுகைகள் வழங்கப்பட்டது .அந்த எமாற்றின் உண்மையை உணர்ந்த ஒரு கறுப்பின போராட்ட தலைவனின் வார்த்தைகளே மேலே தந்தவை .

Friday, October 17, 2014

சூடு பறக்கும் குப்ரிய எதிர்ப்பும் சுரணை கெட்ட முஸ்லீம் உட்கட்சி மோதலும் .....!!!

         இலங்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் விசாரணை நோக்கில் சிங்கள ,ஆங்கில அல் குர் ஆன் மொழி பெயர்ப்புகளை பெற்றுக்கொண்டுள்ளது .அதற்கான சந்தேகங்களும் ஊகங்களும் ஒருபுறம் இருக்க போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்திருக்கும் விளக்கம் விடயத்தின் திசையை இன்னொரு கோணத்தில் சிந்திக்க தூண்டியுள்ளது .

Thursday, October 16, 2014

நோபல் பரிசு அதர்ம அரசியலின் ஆதாரச் சின்னமா !?

         (ஆல்ஃபிரட் நோபல்  1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார்.

Friday, October 10, 2014

சமரசக் காவடி எடுக்கும் சகோதரர்கள் புரிவார்களா !?

                                    "இறைவன் மீது ஆணையாக ,நான் இந்த இலட்சியப் பணியை கைவிடுவேன் என்ற நம்பிக்கையில் (குறைசித் தலைவர்களாகிய ) அவர்கள் எனது ஒருகையில் சூரியனையும் ,மறுகையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் இப்பணியில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை "                 - முஹம்மது (ஸல் ) -

வெற்றியை நோக்கி .........

பூர்சுவா புலிகளின் 
புளுகு அரசியல் !
பலியாக  பின் செல்லும் 
மந்தைகளின் வரிசைகள் !!

சொந்த முற்றங்களில் 
எமக்கே கபுருகள்!
நாமே தோண்ட 
எதிரியின் உதவிகள் !!

Saturday, October 4, 2014

அமெரிக்க இச்சையில் நிர்வாண இஸ்லாம் பேசும் நியோ சலபிகள் !!

 
       சுன்னாவின் சாயம் பூசி தமது முதலாளித்துவ முகத்தை மறைக்க முயன்றாலும் நியோ சலபிசத்தின் சாயம் அடிக்கடி வெளுக்கின்றது .அந்த வகையில் ஐ .எஸ் மீதான அமெரிக்க கூட்டு யுத்தத்துக்கு சவூதி மன்னரிச பூட்ஸின் அடித்தூசியாக ஒட்டிக்கொண்டுள்ள இலங்கை இளவல்கள் இப்போது அப்பட்டமாக தமது எதிர்ப்பை காட்ட தொடங்கி உள்ளனர் .
    ஐ .எஸ் மீதான கருத்து வேறுபாடுகள் ,மற்றும் சர்ச்சைகள் தொடர்பாக இங்கு நான் பிரஸ்தாபிக்க வரவில்லை .அது வேறுவிடயம் .ஆனால் மத்திய கிழக்கில் மன்னரிச பொம்மையாட்சிக்கு ஆப்படிக்கும் இஸ்லாமிய தேடல்களை நிராசை ஆக்கும் அமெரிக்க திட்டத்தின் நேரடி செயல் திட்டங்கள் இப்போது அமுலாகியுள்ள இந்நிலையில் அதற்கு இஸ்லாமிய நியாயம் பூசும் துரோக விளம்பர அரசியலையே இந்த நியோ சலபிகள் செய்து வருகிறார்கள்.        

இதோ எம்மை கடக்கும் இன்னொரு தியாக திருநாள் !!!

 (இவ்வாறே கிறிஸ்தவர்களாகிய  )அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்கள் பாதிரிகளையும் ,சந்நியாசிகளையும் ,மர்யமுடைய மகன் மசீகையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர் .இன்னும் 
ஒரே இரட்சகனையே வணங்க வேண்டுமென்று அல்லாது அவர்கள் கட்டளை இடப்படவில்லை ;அன்றியும் வணக்கத்துக்கு தகுதியானவன் 
ஒருவரும் இல்லை ;அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மிக 
பரிசுத்தமானவன் . (சூராஹ் அத் தௌபாஹ் :வசனம் 31)

        தௌஹீதின் யதார்த்தத்தையும் ,தியாகத்தின் உச்சத்தையும் நினைவு கூறும் இந்த ஈதுல் அல்ஹா எனும் திருநாளில் சகோதரர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .ஆனாலும் நெஞ்சை அழுத்தும் ஒரு கடின வலி என்னைமட்டுமல்ல இந்த முஸ்லீம் உம்மத்தை தொடர்கிறது .

Thursday, October 2, 2014

முதலாளித்துவ 'பிரைன் கியூமரில்' இலங்கை சிவிலியன்கள் !!

   கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை ஒரு அசாதாரண மாற்றத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது .அது நவகாலனித்துவ அடிமை அரசியலின் வெளிப்படை உண்மைகளாக இன்று அமுலாகின்றது . மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் ஆச்சரியமான முற்றுப்புள்ளியின்  தெளிவான விடையாக கூட அது இருக்கலாம் .

                                         நேற்று அந்த கொடிய நாடகத்தின் பாத்திரங்கள் பிளஸ் பார்வையாளர்கள் என்ற சிறப்புப் பாத்திரத்தை ஏற்றிருந்த அதே சிவிலியன்கள் ,இன்று புதிய நாடகத்தின் பாத்திரங்களாக 'டேக் அப் பிளஸ் மேக்கப் 'செய்யப்படுகிறார்கள் . அது 'பயங்கர எதிர்ப்பு என்ற முகமூடியில் முஸ்லீம் எதிர்ப்பு' என்ற டைட்டில் .

Tuesday, September 30, 2014

சவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு !?

(நபியே !தேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு
காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும்
இருக்கின்றது. (சூரா அல் பகரா :வசனம் 189)
   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ,அல்லாஹ்வின் பதிவுப்
புத்தகத்தில் வானங்களையும் ,பூமியையும் படைத்த நாளில்
இருந்து மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் அதில் (துள்
கஹதாஹ்,துள் ஹஜ் ,முஹர்ரம் ,ரஜப் ) ஆகிய நான்கு
மாதங்கள் புனிதமானவை ஆகும் .
                                 (சூரா அத் தௌபா :வசனம் 36)  
அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாயும் சந்திரனை
பிரகாசிக்கும் ஒளி உள்ளதாகவும் ஆக்கினான்.ஆண்டுகளின்
எண்ணிக்கையையும் ,காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து
கொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய )அதற்கு மாறி மாறி வரும்
பல படித்தரங்களை உண்டாக்கினான் ;அல்லாஹ் உண்மை(யாகதக்க காரணம் )கொண்டல்லாது இவற்றைபடைக்கவில்லைஅவன்
இவ்வாறு அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கிறான்
                                   (சூரா அல் யூனுஸ் :வசனம் 5)

Friday, September 26, 2014

அமெரிக்க Tomahawk ஏவுகணைகளும், அராபிய விமானங்களும் சிரியாவில் என்ன செய்துள்ளன?


       செப்டம்பர் 23 அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் தங்கள் முதலாவது தாக்குதலை சிரியாவின் ரக்கா, அலிபோவின் புறநகர் பகுதி, இட்லிப்பின் சில பகுதிகள் மீது மேற்கொண்டன. இவர்களின் இந்த இஸ்லாமிய அரசிற்கு (IS) எதிரான தாக்குதலில் முதல் பலியானது ஒரு தாயும் அவளது குழந்தையும். நேற்றைய தாக்குதலில் மட்டும் 120 முஸ்லி்ம்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 வீகிதம் கூட I.S.போராளிகளா என்றால் இல்லை என்பதே பதிலாகும். சாதாரண சிவிலியன்களே பலியாகியுள்ளனர். அமெரிக்கா மேற்கொள்ளும் “இஸ்லாமிய அரசிற்கு எதிரான யுத்தத்தின்” கசுவாலிட்டி கவுன்டிங் ரிப்போட் இது. 

அமெரிக்க ஐ .எஸ் யுத்தமும் துருக்கியின் அந்தர் பெல்டியும்...!!

  
              ஐ .எஸ் இற்கு எதிரான அமெரிக்க கூட்டு தாக்குதலில் தான் பங்களிக்கப் போவதில்லை என துருக்கியின் அர்தூர்கான் அரசு தெரிவித்துள்ளது .இது சற்று நிதானமாக அலசவேண்டிய அரசியல் .கமால் பாட்சாவின் கிலாபா கவிழ்ப்பு துரோகத்துக்கு பின்னர் முதலாளித்துவ மேற்குலகின் விசுவாசம் மிக்க பொக்கட் பப்பியாகவே துருக்கி செயற்பட்டுள்ளது .இப்போது என்ன நடந்தது இந்த உஞ்சுக்கு!? அர்தூர்கானின் இஸ்லாமிய விழிப்புணர்வு வேலை செய்துள்ளதா !? அதுதான் இல்லை .

ஐ .எஸ் மீதான தாக்குதல் சொல்லும் செய்தி என்ன !?

         

    முஸ்லீம்களின் வளத்தையும் ,நிலத்தையும் தமது காலனித்துவ விதிக்குள் மீண்டும் முடக்குவதற்கான குப்ரிய முதலாளித்துவ யுத்தம் தொடங்கி விட்டது . ஐ .எஸ் என்ற காரண முகமூடியோடு அத்திவாரம் போடப்பட்ட எண்ணை கொள்ளையர்கள் மீண்டும் அதே கொலைகார நியாயங்களோடு கூட்டாக களம் இறங்கியுள்ளார்கள் .

Friday, September 19, 2014

ஜிஹாத்தின் பெயரில் நடாத்தப்படும் சகோதரப்படுகொலைகள் - இஸ்லாம் சொல்லாத போராட்டங்கள்.


“ஜிஹாத்” எனும் இறைவழியில் செய்யும் அறப்போர் பற்றி மௌலானா மௌதூதி முதல் ஷேய்ஹ் அன்வர் அல்-அவ்லாக்கி வரை பலரும் பேசியுள்ளனர். அதன் உள்ளடக்கங்கள், வரையறைகள், நோக்கங்கள், தெளிவுகள் என பல கோணங்களிலும் பல அறிஞர்களாலும் இவை பேசப்பட்டுள்ளன. ஆனால் அதே ஜிஹாத் எனும் அறப்போரின் பெயரை தங்கள் அரசியல், இராணுவ இலக்குகளை அடைந்து கொள்ள பல மாபியாக்களும் பயன்படுத்துவது கவலையளிக்கும் விடயமாகும். ஆப்கானில் ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக நடந்த போரில் இதே ஜிஹாத்தின் பேரால் பல சகோதரப் படுகொலைகள் தாராளமாக நடாத்தப்பட்டிருந்தன். காஷ்மீரும் இதற்கு விதிவிலக்கல்ல. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் மேஷனரியாக பல குழுக்கள் உயிர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த தொடர்ச்சியில் சிரியாவிலும் சகோதரப் படுகொலைகள் ஏராளம் தாராளமாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 

ரைபிள் ,மகசின் ,கொகிங் காண்டில் ,பிஸ்டல் கிரிப் ,ரிகர் அல்லாஹு அக்பர் ஒருபார்வை ....

   இலக்கு அதை அடைவதற்கான பாதைகளை நியாயப்படுத்தும் என்பது குப்ர் கற்றுத்தரும் அரசியல் மொழி .குறிப்பாக கம்யூனிசம் இந்த பாடத்தை அடிப்படை ஆக்கியது .அந்தவகையில் வன்முறை மற்றும் பலாத்காரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுதல் ,ஆட்சி செய்தல் இவர்கள் பார்வையில் சரியானது .இங்கு சித்தாந்த மாற்றம் என்ற நோக்கில் சில செயல்களை அடிப்படை மனித விழுமியங்களை தாண்டி பிரயோகிப்பதை இவர்கள் சரிகாண்பார்கள்.

சிரியாவில் “அஹ்ரார் அஷ்-ஷாமும்”, “அல்-காயிதாவும்” தம் தளபதிகளை இழந்தது - தாக்குதலின் பின்னணியில் I.S.I.S. ??



     ஒரு குண்டு வெடிப்பில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இட்லிப்பில் நடந்த குண்டு தாக்குதலில் இஸ்லாமிக் புரன்டின் முதன் நிலை தலைவர்கள் 28 பேர் மரணித்து விட்டனர். இது இஸ்லாமிக் புரன்டிற்கு ஒரு பெரிய இழப்பு. அஹ்ரார் அல்-ஷாமின் தலைவரும் Hassan Abboud இதில் பலியாகியுள்ளார். இஸ்லாமிக் புரன்டின் பொலிடிக்கல் லீடராகவும் இவர் செயற்பட்டிருந்தார்.அடுத்தவர் Abu Khalid al-Suri (Mohammed al-Bahaiya). முக்கியமான தலை. அல்-காயிதாவின் தலைவர் அய்மன் அல்-ஸவாஹிரியினால் சிரியாவிற்கான பிரதிநிதியாக நியமனம் செய்ய்ப்பட்டவர். இவரும் இந்த குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார்.

இலங்கை அதிபரின் இராஜதந்திரமும் சீன மயமாகும் இலங்கையும் !!


       சீன மக்கள் குடியரசு தலைவர் க்ஷீ ஜி்ங்பின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொண்டிராத அபிவிருத்தித் திட்டமான துறைமுக நகர் எனும் கடலை நிரப்பி டுபாய் ஸ்டைலில் ஒரு நகரை உருவாக்கும் மெகா திட்டத்தை சைனா ஹாபர் என்ஜினியரிங் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இலங்கை அரசு மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, அதன் பின் அது முன்னெடுத்துள்ள அரசியல் தீர்வுகள் என அனைத்தையும் சீனத் தலைவர் பாராட்டியுள்ளார். பரஸ்பரம் சீன இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை புதிய லெவலில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எல்லாம் சரி தான். இலங்கை அரச அதிபர் இதில் மிகச் சாணாக்கியமாக காய் நகர்த்தியுள்ளமையானது அவரது இராஜதந்திரத்தை நிரூபணம் செய்துள்ளது. 

Thursday, September 18, 2014

'ஜம்மியத்துல் உலமாவின்' 75 இலட்சமும் இலங்கை அரசியலின் போக்கும் !

                                        முதலாளித்துவ முதலைகளின் முதலீடுகளுக்காக பரந்த 
அடிப்படையில் திறந்து விடப்பட்ட சந்தையாக இலங்கை இப்போது மாறிக்கொண்டு இருக்கிறது .அவர்களுக்கு சேவகம் புரியும் ஊழியர் தரத்தில் சிவிலியன் வாழ்வு சிக்கவைக்கப்பட்டுள்ளது .தாய்வானை போன்ற ஒரு செயற்கையான உல்லாச புரியாக சடுதியாக இலங்கை மாறினாலும் ஆச்சரியம் இல்லை .ஒரு சில நேரம் ஆசியாவின் அற்புதமாக இலங்கை மாறும் என்ற ஜனாதிபதியின் கூற்றின் இரகசியம் அதுவாக கூட இருக்கலாம் . 

இலங்கையிலும் அபிவிருத்தியாமே !?

      யாவும் போலி எல்லாம் பித்தலாட்டம் என்பது முதலாளித்துவம் சொல்லி நிற்கும் ஒரே தெளிவான அரசியலாகும் .ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்றம் ,பெரும்பான்மை ,சிறுபான்மை இப்படியான எல்லாமே வெறும் பெயரளவுப் பெறுமானங்களே ஆகும். மக்களாகிய நாம் ஏமாளிகளாக இருப்பதால் ஏமாற்றப் படுகிறோம் ;என்பது மட்டுமே உண்மையாகும் .

    பொதுவாக மக்களுக்கு நன்மை செய்தல் என்பதே அரசியல் அதிகாரத்தின் அடிப்படை நோக்கம் .ஆனால் இன்று அது சில மேட்டுக்குடி முதலாளிகளின் நன்மைக்காக மக்கள் என்பதாக அது மாற்றப்பட்டுள்ளது .

Friday, September 12, 2014

இஸ்லாமிய எழுச்சியின் இயங்கு திசையில் ............

        இஸ்லாமிய தேசம் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு தொடர்பில் அடிப்படை தெளிவையும் அடையும் பாதை பற்றிய சுன்னா பற்றியும் மிகத் தவறாகவே சிந்திக்கப்படுகிறது ,சித்தரிக்கப்படுகிறது .பாமரத்துவமாக முஸ்லீம் சமூகமும் மதப் புரோகிதமாக தனிமனித வழிபாடும் இருக்கும் வரை இந்த தவறுகளை தவிர்க்க முடியாது .சில ஆரம்ப இலக்குகளை கூட அடைய முடியாது .

மேற்குலகு முஸ்லீம்களை மொழியைச் சொல்லும் மூன்று ஆபத்தான கலிமாக்கள் !

    1924 களில் இஸ்லாமிய கிலாபா சாம்ராஜ்யம் துருக்கியில் வீழ்த்தப்பட்ட போது அதன் விளைவுகள் முஸ்லீம் உம்மத்துக்கு எத்தைகைய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது ? என்ற அரசியல் பார்வை மிகத் தெளிவாக உம்மத்துக்கு இருக்கவில்லை .தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை சிந்தனை வீழ்ச்சியில் இருந்தனர் .அந்த சிந்தனை வீழ்ச்சி என்பது குப்ரிய சித்தாந்த கவர்ச்சியில் இருந்து வாழ்வை நோக்கும் அகீதா புரள்வு அரசியலே ஆகும் .

Thursday, September 11, 2014

மதச் சார்பின்மை மார்க்க ஆதாரத்தோடு 'பராக் பராக் ' !! முஸ்லீம்களே ஏற்க தயாரா ?(மறு பதிவு )

         இன்றைய ஜாஹிலீய  மேலாதிக்க உலகு,  முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது  அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல்  போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும்  போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .

தெற்காசியாவில் 'அல்கைதாவாம்' !ஏன் இந்த பீடிகை அரசியல் !?

      இஸ்லாமிய அடிப்படை வாதம் ,இஸ்லாமிய தீவிரவாதம் ,இஸ்லாமிய பயங்கர வாதம் ! இத்தகு வார்த்தைகள் முதலாளித்துவ ஏகாதிபத்திய மீடியா ஆர்மியின் உயிர் கொல்லி ஆயுதங்கள் .முதலாளித்துவ அகீதாவை தக்க வைப்பதற்கான , நிகழ்கால யுத்தத்தில் இஸ்லாமிய அகீதாவுக்கு எதிரான சமூகக் கருத்தை தமக்கு சாதகமாக்க இதை அளவு கணக்கு இன்றி பாவிக்கிறார்கள்.

Sunday, September 7, 2014

இது சத்திய எழுச்சிக்கு ஆப்படிக்கும் குப்பாரின் மொழி !!!



'ஜாஹிலீய' சத்துருக்களின் அநாகரீக சதுரங்கத்தில் 
அலட்சியமான வெட்டுக்காயா நான் !
இன்று என் வீட்டு முற்றத்தில் என்னை வைத்தே 
'கபுறு' தோண்டி ஆரத்தழுவி முதுகில் குத்த 
' தாகூதிய' மேலாதிக்க அரசியல் கூட்டாய்
களத்திலே நிற்கிறதே !!!

குப்ரிய அரசியல் பொறியை புரிந்து கொள்வோமா!


     ஒவ்வொரு புரட்சிகளும் ,போராட்டங்களும் ஒரு மாற்றத்தை வேண்டியே நடத்தப் படுகின்றன .அந்த மாற்றம் நிகழ்கால வாழ்வியல் ,அதன் அடிப்படை இலக்கு , அதை அடைவதற்கான வழிமுறைகளுக்கு பாதகம் இல்லாத ,அல்லது அதில் சிற்சில மேலோட்டமான பகுதி மாற்றங்களை செய்வது எனும் போராட்டமாக அமைந்து விட்டால் அதை ஒரு சித்தாந்த மாற்றமாக கருத முடியாது ; மாறாக அது வெறும் உரிமைப் போராட்டமாகவே கருதப்பட முடியும் .

இப்போது எமக்குள்ள தேடல் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சி அதன் பின் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தொடர்பில் எமது பார்வையும் ,ஏகாதிபத்திய முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் சதித் தனமான நடத்தை தொடர்பாகவும் ஒரு தெளிவை வரையறை செய்யும் நிலையில் ஒரு மயக்கம் ஏற்படுகிறது எனும் அளவுக்கு முரணான ,அல்லது ஜீரணிக்க முடியாத தகவல்கள் கிடைக்கின்றது ! அது ஏன் ? என்பதுதான் .

நவ காலனித்துவ ஏமாற்று அரசியலில் துருக்கியின் பாத்திரம் !


      இன்று சிலர் கிலாபா அரசு என்ற இஸ்லாத்தின் அரசியல் கோட்பாட்டை ஒரு அர்த்தமற்ற சாம்ராஜ்யக் கனவாக சித்தரிக்க நினைக்கின்றனர் . அல்லது அதன் அடிப்படையான யதார்த்த உருவத்தை சிதைத்த மாற்றீட்டு அரசியல் ஒன்று பற்றி பேசுகின்றனர் .இவ்வாறு பேசுபவர்கள் யூதர்களோ ,கிறிஸ்தவர்களோ அல்ல .மாறாக முஸ்லீம் உம்மத்தின் உதிரத்தில் உதித்த முஸ்லீம்கள் என்பது கவலைக்கிடமான விடயம் ஆகும் .

இஸ்லாமிய அடிப்படைவாதம் & இஸ்லாமிய பயங்கர வாதம் இலங்கையிலுமா !?


இது ஆதிக்க அரக்கர்களின் அராஜக மொழி !
முஸ்லீம் இரத்தம் குடிக்க கொடிய பொறி!
பூர்சுவா சந்தையில் என்றும் மலிவான சத்திய எதிர்ப்பு சதி !!
நேற்று ஒபாமா வரை உரித்த அதே வெங்காயத்தை 
பக்தியோடு வாங்கி அரசியல் சாக்கடை சாம்பாரை 
சுவையூட்ட நினைக்கிறார்கள் சில லோக்கல் பன்னாடைகள் !

இது முதலாளித்துவ புரஜக்டரில் காட்டப்படும் காசாவின் காட்சிகள்.....



தேசிய வலையில் சில்வண்டுகளாய் முஸ்லீம் உம்மத் !
அது வேங்கைகளை பூச்சிகள் ஆக்கிய மெகா மேஜிக் !
வீரத்தையும் எல்லைகளால் வளைத்துப் பிடித்தது !
சகோதரத்துவத்தையும் சந்தி சிரிக்க வைத்தது !
சாத்தானோடு சமரசம் பேசி சமபந்தியில் அமர வைத்தது !

இதுதான் திமிங்கிலம் போட்டு இறால் பிடிக்கும் சிஸ்டம் !!!


    சுரண்டலும் சுயநலமும் மிக்க முதலாளித்துவ ஆதிக்க
விதியில் அடிப்படை நியதி மனித குலத்தை அதன் சித்தாந்த
விழுமியங்களோடு சமரசப்படுத்துவதாகும். தனிநபர்
சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் போன்ற போலி வடிவங்களின்
பெயரில் முரண்பாட்டு அரசியலுக்கான ஒரு காட்சிப்படுத்தலை
அது காட்டி நின்றாலும் ,அது அதிகாரத்தை பேணுவதற்கான
பெயரளவு விடயங்களே ஆகும்.

Sunday, April 6, 2014

விளக்கு 'ரெடி '! விட்டில் பூச்சியா முஸ்லிம் !?


சாத்தானிய சட்டங்களை ஜீரணித்து
முஸ்லீம் ஓதும் புதிய வேதம் .
அது பிக்ஹுள் அகல்லியாத !!

Wednesday, April 2, 2014

இஸ்லாமிக் 'திமோகிரசி'!!

சத்திய சாயம் கலந்த சாக்கடை !
இது யூதர் வழி நின்று தூதர் மொழி பேசும்
எம்மவரின் ஓர் நவீன வெளியீடு ?!

Sunday, March 30, 2014

சே குவாரா முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறான் !?


 (இன்று பல முஸ்லீம் இளைஞ்சர்கள் புரிந்தும் புரியாமல் இந்த சே குவரா என்ற கம்பியூனிச புரட்சியாளனின் புகைப்படத்தை தமது 3 வீலர்களில் அலங்காரமாக்கி யுள்ளனர் . புரட்சி என்றவுடன் சே யும் கியூபாவும் பொலிவியாவும் பலரால் உணரப்படுவது போல அல்லாஹ்வின் தூதரும் (ஸல் ) மதீனாவும் முஸ் அப் இப்னு உமைரும் (ரலி ) நினைவுக்கு வருவதில்லை .இந்தக் கவலை ஒருபுறம் இருக்கின்றது .

இலங்கையில் முடிந்தது 'திமோகிரசி டிராமா' !

 
  கண்றாவி அரசியலின் கண்துடைப்பு முடிவுகள் சர்வாதிகாரத்தை சவக்குழி அனுப்பியதா !? இந்த பித்தலாட்டத்தை நம்பி போலிகளால் முஸ்லீம் உம்மத்துக்கு வேலியிடத் துடிக்கும் புத்தி ஜீவிகள் ! சிந்திக்க வேண்டும்.

Saturday, March 29, 2014

ஜனநாயகம் என்றால் என்ன?


    எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் !

                                                                                     
   தமது வாழ்வியலுக்கான வழிமுறைகளை பெரும்பான்மை எனும் பிரமாண்டமான மக்கள் தொகையின் உருவத்தில் சட்டங்களையும் , யாப்புகளையும் மக்களே உருவாக்கி (அல்லது கிடைப்பதை அங்கீகரித்து )அதே பிரமாண்டமான வாக்குத் தெரிவின் அடிப்படையில் மக்களே தீர்மானிக்கும் அதிகாரிகளிடம் அவர்கள் தீர்மானித்த சட்டங்களையும் , யாப்புகளையும் தம்மை நோக்கியே பிரயோகிக்கும் அதிகாரத்தை கொடுப்பதே ஜனநாயகமாகும் .

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?

 
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கூறியுள்ளார்கள் .
"நிச்சயமாக எனது சமூகத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியேயாகும்."
அபூதாவூத்4252

      சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .

Friday, March 28, 2014

விலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ஒரு சுதந்திரப் போராளி .

                                                                                       
(குப்ரிய சிந்தனா வாத போராட்டத்தில் தன்னை இணைத்து தவறு புரிந்தபோது ,மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீமின் உண்மைக் கதை .இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)

     நான் சொல்லப்போவது அல்லாமா இக்பாலை பற்றியது அல்லதான் ஆனால் இந்த சமூகத்தினதும் மனித நேயத்தினதும் உணர்வுகளின் பங்காளிகளாய் மாறி சரியானதை தேடி பிழையான வழிமுறை மூலம் தனது உயிரை அர்ப்பணிக்க களமிறங்கிய ஒரு இளைஞனை பற்றியதே . சமூக நேசமும் ,நியாயத்தின் தேடலும் இவனிடம் இருந்தது என்பதை என்னால் கூறமுடியுமே தவிர இறைவனிடத்தில் இவனின் நிலை பற்றி என்னால் எதுவும் கூற முடியாது .