Wednesday, October 17, 2012

இவரை உங்களுக்கு தெரியுமா ?


"என்றாவது ஒருநாள் ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது .மாறாக எனது
வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும் "
                                                                                                                                    கலாநிதி ராஜனி திரணகம 
                                                                                                                                             (முறிந்த பனை ) 

இவரை உங்களுக்கு தெரியுமா ? என்பதுகளின் இறுதிப் பகுதியில் பாசிசப் 
புலித்தனத்தின் வீரவேட்டுக்களால் அமைதியாக்கப்பட்ட ஒரு கருத்தியல் போராளி ! இவர் (மற்றும் இவர் சார்ந்த குழு ) செய்த ஒரே தவறு பாரபட்சமின்றி ,பக்க சார்பின்றி 
(அன்றைய ஹீரோக்களையும் ,அன்டிஹீரோக்களையும் , சீரோக்களாய்) ஒரு தற்கொலை அரசியல் தனம் வாய்ந்த கூத்து மேடையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இனம் காட்டியதுதான் . 

இதில் விசேடம் என்னவென்றால்
இங்கு பார்வையாளர்கள் யாருமில்லை இலங்கையின் ஒவ்வொரு பொதுமகனும் அதில் பாத்திரம் தான் ! கொல்,அல்லது கொல்லப்படு எனும் பொது விதியில் ஆயுதங்களோடு 
இனவாத மமதை தலைக்கேறி கோரத்தாண்டவமாடியது அந்த கூத்து ! 
இங்கு நகைப்புக்கிடமான விடயம் அஹிம்சை 
என்பதும் அவ்வப்போது அதில் எடுத்தாடப்படும் !!

 தமது பாத்திரத்தை இனம் காட்டவும், 
நரவேட்டையின் களைப்பு தீரவும் , நரவேட்டைக்கு தயார் படுத்தவும் , என அஹிம்சை 
நன்றாகவே பயன் படுத்தவும் பட்டது ! எனும் விடையத்தையும் கூட இந்த ராஜனி குழு 
மிக பட்டவர்த்தனமாக விமர்சித்தது . அதில் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றின்' லஞ்ச் ஆப் வே 'உண்ணாவிரதம் தொடங்கி, திலீபனின் 'பட்டில் ஆன் வே 'உண்ணாவிரதம் வரை அந்த விமர்சனம் பின் நிற்கவில்லை . 'இன்டியன் பீஸ் கீபின்க் போர்சஸ்' தம்மை இனசல் 
பிபல் கிளிங் போர்சஸ்" ( I.P.K.F)ஆக மாறியதைகூட நன்றாகவே இவர்கள் விமர்சிக்கிறார்கள் .

 'ரேபிட்கான ' ரேனிங் அமெரிக்கப்படை கூட இந்திய ஜவான்களிடம்
பெற்றுக்கொள்ளவேண்டும் . எனும் உண்மையை கூட இந்த ராஜனி குழு சொல்லத்தவறவில்லை !! கசப்பாய் இருந்தாலும் உண்மையே பேச வேண்டும் என்பதற்கு 
எடுத்துக்காட்டாய் இந்த ராஜனி குழு திகழ்ந்தது என்பது தொடர்பில் சமகால நிகழ்வுகளுக்கு மத்தியில் நாமும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் .

No comments:

Post a Comment