Wednesday, January 16, 2013

இது சத்தியத்தின் செய்தி ...


         சிரியாவில் 'TAFTANAZ ' விமானத்தளம் 'JABATH AL NUSRAH ' வசம் வீழ்ந்ததன் பின்னர் அசாத் தரப்பு இராணுவம் தற்காப்பு நிலையையும் தாண்டி சாவா ,சரணடைவா ? என்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளார்கள் .

                                 
                            'TAFTANAZ ' விமானத்தளத்தை தக்க வைப்பது தொடர்பில் மிகப் பலத்த போராட்டத்தையும் இழப்பையும் அசாத் இராணுவம் அடைந்தது . அதற்கான காரணம் வான் வழியான தாக்குதலையோ படை நகர்வுகளையோ இந்தத் தளத்தையே  மையப் படுத்தி அசாத் அணி செய்து வந்தது . 



                                    மேலும் அசாத் இராணுவத்தின் விசேட படையின் கடுமையான பாதுகாப்பு வழங்கப் பட்ட நிலையிலேயே இத் தளம் இஸ்லாமிய போராளிகளால் வீழ்த்தப்படும் இறுதிக் கட்டம் வரை இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது .

                                    'TAFTANAZ ' தளம் தொழில் நுட்ப ரீதியிலும் நவீன மயமானது . அங்குள்ள அதி நவீன கருவிகள் மூலம் சிரிய வான்பரப்பை போராளிகளால் (அவர்களது  தரை அணிகள் கேந்திர நிலைகளை கட்டுப்படுத்தி உள்ள நிலையில் ) கட்டுப்படுத்த முடியும் . அந்த வகையில் இப்போது அசாத் படையினரின் வான்வழி முற்றாக இஸ்லாமிய போராளிகளால் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது .


                                பொதுவாகவே இராணுவ சமர்களில் கெரில்லா போராட்டத்துக்கு எதிராய் 40% மும் மரபு ரீதியான சமரில் 60% மும் வான்வழி உதவித் தாக்குதல்கள் அவசியமானது . அந்தவகையில் இன்றைய சூழ்நிலையில் மரபுச் சமரிடுவது  இராணுவ ரீதியில் அசாத் தரப்புக்கு தற்கொலைக்கு ஒப்பானது . 

                                       தற்போது கிடைத்துள்ள சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் பசர் அல் அசாத் தன் குடும்ப சகிதம் சிரிய கடல் எல்லையில் தரித்திருந்த ரஷ்ய போர்க் கப்பல்களில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகின்றது .உத்தியோக பூர்வமாக இத் தகவலை உறுதிப் படுத்த முடியவில்லை .



                                                 மேற்கின் மீடியாக்களால் சிரியாவின் தகவல்கள் இப்போது தெளிவாகவே இருட்டடிப்பு செய்யப் படுகின்றது . இப்போது முஸ்லீம்களாகிய நாம் யாரோடு கை கோர்ப்பது ? எமது உணர்வுகளாலும் கருத்தினாலும் எதனை முன் வைப்பது ?  கிலாபத்தா ? டிமோகிரசியா ? அதாவது ஹாக்கா ? பாத்திலா ? முடிவு செய்து கொள்வோம் . அநீதியை விரட்டி நீதியை தேடும் மனித சமூகமே இந்த செய்தி உங்களுக்காகவும் தான் . அல்லாஹு அக்பர் ...

                                    

No comments:

Post a Comment