Friday, July 19, 2013

சொன்னாலும் வெட்கமடா ! சொல்லா விட்டால் குற்றமடா ! (இது உலகம் போற போக்கு !)


"Judges should be lions. but yet lions under the throne" (Francis Bacon) இந்த வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்கும் .அதாவது "நீதிபதிகள் சிங்கங்களைப் போல இருக்க வேண்டும் ஆனாலும் அந்த சிங்கங்கள் மன்னனின் சிம்மாசனத்திற்கு கீழ்ப்பட்டே செயல்பட வேண்டும் !"இந்த வார்த்தைகளே போதும் 'ஜாஹிலீயத்தின் ' சர்வதேசம் இன்று எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள !




          இந்த வள்ளலில் தான் சதாம் ஹுசைனின் மரண தண்டனை முதல் எகிப்தின் பதவி கவிழ்க்கப் பட்ட ஜனாதிபதி முர்சி மீதான இராணுவ நீதிமன்ற விசாரணை வரை மட்டுமல்லாமல் சாதாரண பாமரன் வரை நீதித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது ."பலமுள்ளவன் சரியானவன் "என்பது ஏகாதிபத்தியம் வரைந்த ஒரு அடிப்படை விதி !விரும்பியோ வெறுத்தோ இந்த அநியாயத்துக்கு 'யெஸ் சார் ' போடுவதில் தான் ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்வை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் ! அல்லாது விடின் பயங்கர வாதி , தீவிர வாதி , அடிப்படை வாதி , போன்ற இலவசப் பட்டங்களை சுமந்து அவன் வெகுசன விரோதியாக காலம் கழிக்க வேண்டியதுதான் .





             எகிப்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கும் இஸ்லாமிய சரீயாவின் முன்னுரிமை தொடர்பில் அது மக்கள் கணிப்பை வேண்டி அது நடாத்தப் பட்டது .அதில்  பெரும்பான்மை பலத்தையும் முஹம்மட் முர்சி எடுத்துக்காட்டி ,மேற்கை நோக்கி ஒரு சவாலை விட்டார் . அதாவது 'ஜனநாயக பலத்தால் எமது பலத்தை எடுத்துக் காட்டி விட்டோம் ' என்ற செய்தியே அதுவாகும் . அதற்கு பதில் அளித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இவ்வாறு கூறினார் 'ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை காட்டுவதல்ல மாறாக சிறுபான்மையை அனுசரித்து அவர்களுக்கான உரிமையை கொடுத்து விடுவதே " என்ற வார்த்தைகளே அதுவாகும் !



                                            ( இங்கு எனக்கு இன்னொரு கேள்வி எதேச்சையாக எழுந்தது அதாவது எகிப்தில் 90% பெரும்பான்மை 8 தொடக்கம் 10 % கிறிஸ்தவர்கள் மத்தியில் மதச் சார்பின்மையை  இன்னொரு சிறுபான்மையாக கருத வேண்டுமா !? )

                       இவர்களுக்கு எப்போது எது தேவையோ அப்போது வரைவிலக்கண மாற்றம் சர்வ சாதாரண விடயம் . அதி நாசகார ஆயுதங்கள் உள்ளது என ஈராக்கில் புகுந்த அமெரிக்க தலைமையிலான கூட்டு காடேரிகள் ,அங்கு அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய போராளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் சிவிலியன்களுக்கு எதிராகவும் பல நாச கார ஆயுதப் பிரயோகங்களை புரிந்த போதும் அது பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தமாகவே வரைவிலக்கணப்பட்டுப்போனது! ஆப்கானிலும் இதே நிலைதான் . காசாவிலும் இஸ்ரேலின் வெறியாட்டம் தேசத்தை பாதுகாக்கும் கலியாட்டமாகவே வரைவிலக்கணப் பட்டுப்போனது ! 




                       மொத்தத்தில் அநீதியால் கைதி செய்யப்பட்ட நீதி இந்த 'தாகூதிய' அதிகார தாண்டவத்தில் சர்வ சாதாரணம் . 'குப்ர் ' பொலிடிக்சில் இதெல்லாம் சகஜமப்பா ! இன்னும் இவர்கள் காட்டும் 'டிமோகிரசி டிப்லோமடிக் மீது முஸ்லீம்கள் மட்டுமல்ல ,மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் நம்பிக்கை வைக்க மாட்டன் . ஒரு மஸ்ஜிதை திறந்து வைத்து மறுபக்கம் நான்கு மஸ்ஜிதை உடைத்துப் போடும் இலங்கை வரை இந்த  'கிரேட் பொலிடிக்ஸ் 'தான் தொடருது . முஸ்லிம்களே ! இன்னுமா இந்த அசிங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் !



              

No comments:

Post a Comment