Sunday, December 22, 2013

எம்மை நாம் புரிந்து கொள்வோமா முஸ்லீம் உம்மாவே !!!?


       "நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளிடம் இருந்து அவர்களின் உயிர்களையும் செல்வங்களையும் சுவனம் தருவதாக கூறி விலைக்கு வாங்கிக் கொண்டான் ......"           (அல் குர் ஆன் சூரா அத்தவ்பா :111)

       து ஸ்லாமி பிரச்சாரத்தின் சூடான மக்காவின்  பொழுதுகள் . இஸ்லாமிய சாம்ராஜியதுக்கான சித்தாந்த விதைகள் விருட்சமாகும் துணிவோடு குப்ரிய கருங்கட்களையும் உடைத்து வேர்விட்டு தன் முளைகளை சற்று வெளிப்படுத்திய காலம் .குப்ரிய ஆதிக்க கொடூரிகள் அச்சமும் கொலைவெறியும் கொண்ட கண்களோடு ஒவ்வொரு முஸ்லிமையும் பார்த்தார்கள் . அப்போதும் 'வஹி 'வழி அகீதா சுமந்த அந்த சிறுதொகை முஸ்லீம் மாவீரர்கள் சரணடைவு நிலைப்பாட்டில் 'சகவாழ்வு ' என்ற கோழைத் அரசியல்  அத்தியாயத்தை கொள்கை வடிவில் பேசி நிற்கவில்லை .


        இதுதான் இஸ்லாம் என்று குப்ரிய திருப்தியை வஹியோடு கலப்படமாக்கி மலிவு விலையில் சுகவாழ்வு காண சிறிதும் முயலவில்லை . மாறாக அவர்களது வாழ்வையும் மரணத்தையும் அல்லாஹ்வுக்காக என கொடுத்து விட்டு அந்தப் போராட்டத்தில் மட்டுமே கண்ணியத்தை கண்டார்கள் . அந்த நேரம் ஜிஹாதிட்கான அனுமதியும் இல்லை ! வெறும் சித்தாந்தத்தை மட்டுமே கொண்ட கருத்துப் போராட்டம் மட்டுமே அனுமதிக்கப் பட்டிருந்தது .மேலே தந்த 'வஹி' வசனமும் அருளப் பட்டிருக்கவில்லை. ஆனால் வடிவத்தில் 'மதனி' வசனமான மேலே தந்த வசனத்தை உதாரணப் படுத்தியே அந்த தியாகத்தின் வரைவிலக்கணங்கள் அன்றும் நிராயுத சித்தாந்த வீரர்களாக   வாழ்ந்து கொண்டிருந்தார்கள் .

       அவர்களது வாழ்க்கைப்பாதை ஒரு இலக்கை நோக்கியே கைகாட்டி நின்றது. அது அவர்களது கண்கள் காணாத அனுபவித்து யாரும் சொல்லாத ,சுவனம் என்ற இடமே ஆகும் . அந்த அசைக்க முடியாத நம்பிக்கை எதிரி கொடுக்கும் கடும் வேதனையின் போதும் இறை திருப்தியை தேடவைத்தது .அந்த விழுப்புண்களை ஆதாரமாக்கி அல்லாஹ்விடம் சுவனத்தை 'அவார்ட் ' வாங்கும் பேரவா தவிர ஒரு எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை .'அஹ்லாக் 'என்பது அல்லாஹ்வின் திருப்தியில் ,அல்லாஹ்வின் திருப்திக்காக என்பதே அவர்களின் முடிவாக இருந்தது . (மாறாக குப்ரை 'கவர்வதே 'அஹ்லாக்' என மிருகவதை 'டைட்டில்' காட்டி போட்டு பயம் காட்டி  ,  கொடுக்கும்  குர்பானை தவிர்ப்பதிலும் ,குறைப்பதிலும் , மறைப்பதிலும் அல்லாஹ்வின் திருப்தி கிடைத்து விடாது .குப்பாரின் திருப்தியில் அல்லாஹ் சந்தோசப் படுவதாக எந்த வஹி விளக்கமும் இல்லை .)


     அன்று மக்காவில் வாழ்ந்த அந்த சிறு தொகை முஸ்லீம்கள் குப்ரியத்தை சுமந்த ஒவ்வொரு மனிதனோடும் சராசரி மனித விழுமியங்களை ,உறவுகளை தவிர்த்து இஸ்லாத்தை முன்னிறுத்தி அவர்களின் ஒரு இடத்தை குறிப்பாக தாக்குவதில் பேரின்பம் அடைந்தார்கள் . அது குப்ர் எனும் அவர்களது சித்தாந்த வாழ்வியல் .அஹ்லாக் ,அஹ்லாக் என வாய் கிழிய கத்தி 'குப்ரோடு உறவாடு இஸ்லாத்தில் 'அட்ஜஸ்ட் 'போடு என சமரசத்தை சத்திய 'ரேஞ்சில் ' ஓடவிடும் பொய்க்கால் குதிரைகளோ , பொம்மலாட்டமோ அன்று இருக்கவில்லை . "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது .அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே ." என்ற வஹி வசனத்தை உணர்தவர்களாக ,அழிந்து போவதோடு எமக்கென்ன ஒட்டு ,உறவு !? என அசத்திய அகீதாவை விசுவாசித்த மனிதர்களை இஸ்லாத்தால் சீண்டிப் பார்ப்பதில் தனிச்சுகம் கண்டார்கள் .

          ஏனைய சஹாபாக்கள் சகிதம் அப்துல்லா இப்னு மசூத் (ரலி ) அவர்கள் அமர்ந்திருக்க ,அந்த சம்பாசனை இவ்வாறு இருந்தது ."அல்லாஹ்வின் தூதர் (ஸல் )குறைசித் தலைவர்களுக்கு முன் அல் குர் ஆன் ஓதுவது போல் வேறு யாரும் ஓதுவதில்லை "என அவர்கள் பேசிக்கொண்ட போது அப்துல்லா இப்னு மசூத் (ரலி ) அவர்கள் நான் அதைச் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் "எனக்கூறியவராக எழுந்து சென்று குறைசித் தலைவர்கள் கூடும் இடத்துக்கு அருகில் வந்து வஹியின் வசனங்களை சத்தமாக ஓதினார்கள் ! அதிர்ந்து போன குறைசியரால் அவர் நையப்புடைக்கப் படுகிறார் .

    அந்த வலியோடும் வேதனையோடும்  மீண்டும் சஹாபாக்கள் சபைக்கு வந்த அப்துல்லா இப்னு மசூத் (ரலி ) அவர்கள் நாளை மீண்டும் அதை செய்வதாக உறுதிப்பட கூறி விட்டு மறுநாளும் அதே போல செய்து மீண்டும் நையப்புடைக்கப் படுகிறார் .   அந்த வலியோடும் வேதனையோடும்  மீண்டும் சஹாபாக்கள் சபைக்கு வந்த அப்துல்லா இப்னு மசூத் (ரலி ) அவர்கள் நாளை மீண்டும் அதை செய்வதாக உறுதிப்பட கூற இதுவரை செய்ததே போதுமானது திருப்தி கரமானது என சஹாபாக்களால் தடுக்கப்படுகிறார் .இந்த சம்பவம் உணர்த்துவது என்ன!?

     அவர்கள் பொழுதுபோக்காக கூட குப்ரை வஹியை கொண்டு சீண்டிப் பார்ப்பதிலும்  ,அதன் மூலம் கிடைக்கும் ரணங்களில் கூட தமக்குள் கூட்டாக ,தனியாக திருப்திப்பட்டுக்கொள்ளும் ஒரு வித்தியாசமான அஹ்லாக்கை காட்டி நின்றார்கள் ;என்று நான் சொன்னால் சிலரால் நான் முறைத்துப் பார்க்கப்படுகிறேன் .அவர்கள் கூறும் சிந்தாமல் ,சிதறாமல் ,நோகாமல் ,வலிக்காமல் குப்ரை திருப்திப்படுத்தும் 'அஹ்லாக்' மூலம் இஸ்லாம் வெற்றிபெறும் எனும் தத்துவத்தை அல்லாஹ்வின் தூதரின் (ஸல் )சீறாவில் எந்த இடத்திலும் காண முடியவில்லை .அப்படியானால் இது யாருடைய சீறா !?

      "அரசியல் என்பது இரத்தம் சிந்தாப் போராட்டம் ,போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் " என கூறிய மாஓவின் வார்த்தைகள் இஸ்லாத்தில் இருந்தே 'காப்பி ' அடிக்கப்பட்ட ஒரு சிந்தனையாகவே கருதுகிறேன் . சைத் இப்னு அபீ வக்காஸ் (ரலி ) அவர்கள் சீனா தேசம் சென்றபோது தனக்குள் விதைத்து சென்றது . பக்குவமாக ஒரு நீண்ட வரலாற்றுத் தொடராக விதைக்கப் பட்டிருக்கிறது  .அது ஒரு தவறான சித்தாந்தத்தினால் பயன்படுத்தப் படுகிறது .இத்தகு அரசியலை புரிந்து கொள்ள மேலே பதிந்த வரலாறு சான்றாகின்றதல்லவா ! இந்த  உண்மை புரிந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வே இஸ்லாமிய அரசியல் என்ற இயல்பான போராட்டப் பாதைக்குள் அடிவைத்து விடுவான் . அதற்கு சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதமிருக்காது .

        ......"எத்தனையோ சிறு சிறு கூட்டங்கள் எத்தனையோ பெரும் பெரும் கூட்டங்களை அல்லாஹ்வின் உதவி கொண்டு வென்றிருக்கிறார்கள் . மேலும் அல்லாஹ் (இத்தகு போராட்டத்தில் ஏற்படும் சோதனைகளை திருப்தியோடு பொறுத்துக் கொள்ளும் )பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" ....                     (அல் குர் ஆன் சூரா அல் பகரா :249)  
                                                                       


        

   

No comments:

Post a Comment