Wednesday, March 19, 2014

செச்னியாவின் (கவ்கஸ் எமிரேட்) அமீர் Dokku Abu Usman (Dokku Umarov) மரணம் !


      செச்னியாவின் விடுதலைக்காக ஆகுதியானவர்கள் ஏராளம். ஜெனரல் டுடாயேவ், கொமாண்டர் அஸ்லன் மஸ்கடோவ், கொமாண்டர் கத்தாப் , கொமாண்டர் ஸமீல் பஸய்யேவ், அமீர் அப்துல் கலீம் சதுலாயேவ்... என தங்கள் இரத்தங்களால் இஸ்லாமிய வீர சரித்திரத்திற்கு வர்ணம் பூசியவர்கள் ஏராளம். அந்த வரிசையில் கவ்கஸ்ஸின் சிங்கம் கொமாண்டர் Emir Dokku Abu Usman (Dokku Umarov ) அவர்கள் தன்னையும் இணைத்து கொண்டார்கள். இவரது மரணத்தை கவ்கஸ் இஸ்லாமிக் எமிரேட் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிராக தீரமுடன் போராடியவர். பல தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னின்று நடாத்தியவர். சோவியத் மீடியாக்கள் இவரை “ரஷ்யன் பின்-லேடன்” என்றே வர்ணிக்கும்.

       2012-ல் அவர் ஒரு வீடியோ உரையில் ரஷ்ய பொது மக்களை தாக்குவதை தடை செய்ததுடன் ஆக்கிரமிப்பு இராணுவத்தை மட்டும் குறிவைத்து தாக்குதமாறு கட்டளையிட்டிருந்தார். ஆனால் ரஷ்ய அரசோ 2004 ஸ்கூல் அட்டாக், 2010 ரஷ்ய மெட்ரொ பொம்பிங் மற்றும் 2011 டொமோடெடோவோ சர்வதேச விமான நிலைய தாக்குதல் போன்றவற்வின் முதன்மை குற்றவாளியாக இவரை குறிப்பிட்டிருந்தது. கொலை, ஆட்கடத்தல், சொத்துக்களை நாசம் பண்ணியமை என இவர் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியதுடன் இன்றைய திகதியில் ரஷ்ய அரசின் முதல் தர குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார். 

      2000 ஆண்டில் ஏற்பட்ட படுகாயத்தில் இருந்து மீண்டது முதல் செச்னிய ஜிஹாத்தில் பெரும் பங்காற்றியவர் இவர். அஸ்லன் மஸ்கடோவ் இவரை தனது பாதுகாப்பு கவுன்சிலின் செயளாலராக நியமனம் செய்திருந்தார். 2007-ல் செச்னியாவை இவர் இஸ்லாமிய குடியரசாக பிரகடனம் செய்ததுடன் அதன் அமீராக தன்னை அறிமுகம் செய்திருந்தார். 02 தசாப்த காலங்களாக ஜிஹாத்தில் தன்னை அர்ப்பணம் செய்திருந்த உமரோவ் அவர்கள் மென்மையான அனுகுமுறைகளை கொண்ட தளபதியாவார். மிகவும் மனித நேயமிக்கவர். இருந்து விலகி இஸ்லாத்தை நேசித்தவர். தனது வர்த்தகத்தை துறந்து 1994 முதல் கவ்கஸ் இங்குஸ் விடுதலைக்காக போராடியவர்.

       உலகலாவி பல முஜாஹிதா அமைப்புக்களுடனும் நெருங்கிய உறவை பேணிய போதும் ,இஸ்லாமி கிலாபா பற்றிய பார்வைகளில் முரண்பட்டிருந்தார். மரபுரீதியான மத்ஹப் சார்ந்த இஸ்லாமிய சிந்தனைகளின் தாக்கமிக்க ஒருவராகவே அவர் இருந்து வந்தார். இவர் பற்றிய ஒரு விரிவான பதிவை இன்ஷாஅல்லாஹ் வரும் நேரங்களில் பார்ப்போம்.

No comments:

Post a Comment