Thursday, October 23, 2014

ஹராத்தில் தேடப்படும் ஹலால் !!!

       ஒரு கதை சொல்வார்கள் ; நைட் கிளப் ஒன்றை முஸ்லிம் ஒருவன் நடாத்தி வந்தானாம் ! போதை வஸ்துக்கள் ,நிர்வாணப்பெண்கள் இப்படி எதற்குமே பஞ்சமில்லையாம் !ஒரு முறை அவனது முஸ்லிம்!! வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தேகத்துக்கிடமான தகவல் ஓன்று கிடைத்தது ; குறித்த நைட் கிளப்பில் இறைச்சி வகையோடு பன்றி இறைச்சியும் பரிமாறப்படுகின்றது ;என்பதுதான் !!


       கொதித்துப்போய்விட்டார்கள் அந்த முஸ்லிம் குடிமக்கள் !!!இது விடையமாக கிளப் உரிமையாளரை கண்டு தமது பலத்த எதிர்ப்பை சொல்ல படையெடுத்து விடையத்தை உரிமையாளரிடம் முன்வைத்தபோது ........அவர் அதிர்ந்து போய் பின்வருமாறு பதில் கூறியுள்ளார் ; "அஸ்தஹுபிருல்லாஹ் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படியான ஹராமான வேலைகளை நான் செய்வதில்லை " என்பதே அதுவாகும் !!!


      இந்த சம்பவம் உண்மையோ பொய்யோ இதில் சிரிப்பை விட முஸ்லிமின் இன்றைய வாழ்வுச்சூழலை எடுத்துக்காட்டுகின்றது என்பதை வெட்கத்தை விட்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment