Thursday, November 20, 2014

ஐ .எஸ் .இனது நகர்வு இஸ்லாமிய அரசியலா !?

   இன்று பட்டி தொட்டி எங்கும் பேசப்படும் ஒரு பிரதானமான விடயம் ஐ .எஸ் பற்றியதே என்றால் அது மிகையான கருத்தல்ல .இன்னும் என்னோடு பழகும் முஸ்லீம், முஸ்லீம் அல்லாதோர் என அநேகமானோர் இப்போது கேட்கும் கேள்விகளில் பிரதானமானது இந்த ஐ .எஸ் கூறும் இராணுவ இராஜாங்கம் பற்றியதே .ஆனால் விடயத்தை அவர்களுக்கு புரிந்த வகையில் விளக்குவது சற்று கடினமானது என உணரக்கூடியதாக உள்ளது .

        அதற்கான காரணம் அவர்களுக்கு  இஸ்லாமிய அரசியல் அகீதா ,மற்றும் அதன் பிரயோகம் ,நிர்மாணம் தொடர்பான அடிப்படை தெளிவு இல்லாத நிலையில் விடயத்தை விளக்குவது ஆபத்தானது மட்டுமல்ல ,சில பர்ளுகள் ,வாஜிப்கள் தொடர்பில் புறநடையாக சிந்திக்கும் நிலைக்கும் அவர்களை கொண்டு செல்லலாம் என்பதே ஆகும் .

       முஸ்லீம் உம்மத்தை பொறுத்தவரை குப்ரிய ஆதிக்க பிசாசுகளால் பலத்த நெருக்கடிகளையும் ,கசப்பான அனுபவங்களையும் ,அவமானங்களையும் சுமந்துள்ள இன்றைய நிலையில் ,சிலநேரம் இத்தகு இராணுவ வியல் சார்ந்த எதிர்போராட்டங்கள் மீது கவர்ச்சி ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று .ஒட்டு மொத்த தாகூத்திய சக்திகளும் இத்தகு அரசியலுக்குள் தான் முஸ்லீம் உம்மத்தை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர் .

              குப்ரிய சக்திகளின் அநாகரீக நடத்தைகளின் பிரதி விளைவே இன்றைய சர்வதேச ஜிஹாதின் நிர்மாணம் என்பதில் என்னால் மாற்றுக்கருத்து கொள்ளமுடியாதுள்ளது .தியாகத்தோடும் ,அர்ப்பணிப்போடும் இன்று களமாடும் அந்த வீரர்களை விமர்சிக்கும் சில இஸ்லாமிய ! மஞ்சள் மீடியாக்களை போல இது விடயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது .காரணம்  அவமானத்தின் வலி என்ன என்பது எனக்கு நன்கு புரியும் .

           தவறான அணுகு முறைகளோடு முஸ்லீம் உம்மத்தின் தீர்வு தொடர்பில் புறப்பட்ட பல அமைப்புகள் இயக்கங்கள் இன்று தாகூதோடு சமரச அரசியலில் ஒருபுறம் உடன்பாட்டில் இருக்கின்றன .இன்னொரு புறம் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வலுவோடு குப்ரிய வல்லாதிக்க சக்திகளோடு தற்காப்பு நிலையெடுத்து  ஒரு தொகை முஸ்லீம் உம்மத்போராடிக் கொண்டிருக்கிறது .அத்தகு போராட்டத்தின் தற்காலிக வலுச் சமநிலை மீறலாக தான் இந்த ஐ .எஸ் இராணுவ ஆதிக்கத்தின் நிகழ்காலத்தை என்னால் கணிப்பிட முடிகிறது .

           ஆனால் மேற்கூறிய இரண்டுமே முஸ்லீம் உம்மத்தின் தீர்வாக என்னால் கருத முடியாதுள்ளது .அது ஏன் என்றால் முஸ்லிமின் தீர்வு மற்றும் யதார்த்தம் என்பது 100% அக்மார்க் சுன்னாவில் இருந்து மட்டுமே பெறமுடியும் .அப்படிப் பார்த்தல் அர்தூர்கானின் துருக்கிக்கும் ,இன்று பக்தாதி வசமிருக்கும் ஈராக்குக்கும் இடையில் ஒரு பாரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு படவில்லை .அதாவது இந்த இருவருமே இரண்டு தீர்வுப் பாதைகளை காட்டி நிற்கிறார்கள் ;ஆனால் இவை இரண்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) மதீனாவை நிர்மாணித்த சுன்னாவின் வழியில் இல்லை என்பதே எனது ஆதங்கமாகும் .
                                                                                                                            (தொடரும் ...)

No comments:

Post a Comment