Tuesday, May 14, 2013

இது காலத்தின் கட்டாயத் தேவை .


"நிச்சயமாக, எனது தொழுகையும் , என்னுடைய குர்பானியும் ,என்னுடைய வாழ்வும் ,என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்று (நபியே !)நீர் கூறுவீராக !

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை ;இதைக் கொண்டே நான் ஏவப் பட்டுள்ளேன் ; இன்னும் முஸ்லீம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக )
(T M Q அல் அன் ஆம் :வசனம் 162,163)

Saturday, May 11, 2013

இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!


அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒரு திசை திருப்பும் உளவியல் தரம் வாய்ந்த ஒரு நடவடிக்கையா? எனும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. அந்த நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது ? என்பதை புரிந்து கொள்ள ஒரு வரலாற்றுத் தெளிவு அவசியமானது. ஆழமான ஆய்வுகள் இல்லாத விடத்தும் எனக்கு புரிந்தவரை சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 


Wednesday, March 6, 2013

எங்கள் நிலமும் இன்திபாதாவை நோக்கி...


யா யாஸீன்......................

உங்கள் தேசம் இரத்தத்தினால்
   யஹுதிகளால் குளிப்பாட்டப்படுகிறது.

நிலத்தில் சிந்திய இரத்தத்தின் அச்சத்தில்
   குழந்தைகள் கூட சிறுநீர் கழிக்க   மறுக்கின்றன இங்கே.

யஹுதியின் “மர்கபா” டாங்கிகள்
   உங்கள் வாசல் வரை வந்து விலாசம் தேடுகின்றன

எதிரி சாவகாசமாக எல்லையில் நின்று குண்டு போட
   எம் எல்லைக்குள் அரபு தேச எஜமானரின் பூட்ஸ் லேஸ்
கூட உள் நுழைய அச்சப்படுகிறது.

Saturday, March 2, 2013

இந்தத் தொப்பி சரியானால் போட்டுக் கொள்ளுங்கள் . ( கீழே இரண்டு வேறுபட்ட சம்பவங்கள் ஆனால் ஒரே இலக்கை நோக்கி )



              "நாங்கள் சம்பிரதாய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல " இப்படிக் கூறுகிறார் 'கிரம விமலஜோதி தேரர் ' .'பொது பல சேனாவின் ' சமரச வாயிலை இவ்வாறுதான் குறிப்பிட்ட தேரர் முஸ்லீம்களுக்கு இனம் காட்டுகிறார் ! சரி அவர் குறிப்பிடும் சம்பிரதாய வழி என்ன ? என்பதில் முஸ்லீம்களில் பலருக்கு தேடல் தொடங்கியிருக்கும் காரணம் இதுதான் . அந்த இடத்தில் இருந்து' அஹ்லாக்கோடு ' இன்னொரு தேசிய முன்மாதிரியை காட்டி தீனை உயிர்ப்பிப்பது சிலவேளை இலங்கை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளிக்கலாம் என்ற நப்பாசைதான் .

Friday, March 1, 2013

'மீடியா ' பூச் சுத்தலும் சிரிய விவகாரமும் .



                சிரிய விவகாரத்தில் அசாத் படைக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு அமெரிக்க இராணுவ உதவி !! என்ற தலைப்பு இப்போது அநேகமான மேற்கின் 'மீடியாக்களால்' வெளிவிடப்படுகின்றது . இந்த விடயத்தில் சரி பிழை ஒருபக்கமிருக்க மீடியா யுத்தத்தில் 'அம்புஸ் ' தனமான 'கெரில்லா'உத்திகளையும் செய்ய முடியும் என்பதை மேற்கின் மீடியாக்கள் மீண்டும் ஒருமுறை இத்தகு செய்திகள் மூலம் நிரூபித்துள்ளன .

இலங்கையின்'ஹலால் விவகாரம் 'ஒரு பார்வை .



                          இலங்கையின் பொது பல சேனா எனும் பௌத்த மதவாத அமைப்பின் அண்மைய நகர்வு பொருட்களுக்கு 'ஹலால் ' சான்றிதழ் வழங்கும் முறையை நீக்கக் கோரிய முஸ்லீம் எதிர்ப்பு வடிவமாகும் .நடப்பு நிலவரப்படி' ஹலால் ' சான்றிதழ் வழங்கும் விவகாரத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முஸ்லீம்கள் இதோ ஓரளவு நல்ல அறிகுறி குறித்த விடயத்தில் கிடைத்து விட்ட திருப்தியோடு 'அல்ஹம்துலில்லாஹ் ' சொன்னதையும் நாங்கள் அவதானிக்கிறோம் .

Monday, February 25, 2013

உங்கள் சிந்தனைக்கு சில வரிகள் .


         கடந்த 12ம் திகதி 'பராக் ஒபாமா 'அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வாகிய பின் முதல் தடவையாக பேசியபோது பின்வரும் கருத்தை வெளியிட்டார் . இந்தக் கருத்தின் பின்னால் உள்ள அரசியலை சற்று அலச வேண்டிய தேவை உள்ளது .


     "ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 66 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களில் 34 ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள். பின்னர் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு அங்கு தீவிரவாதிகளுடனான (அமெரிக்க)  போர் ஆண்டு இறுதியில் (2013 டிசம்பரில் ) முற்றிலும் நிறுத்தப்படும்." (அப்படியானால் தாலிபான் இல்லாமல் போய் விடுமா ? அல் காய்தா அழிந்து விடுமா ? இந்த வினாக்களை மையப்படுத்தி சில ஆழமான பார்வை எமக்கு அவசியமானது .

Sunday, February 24, 2013

ஐ .நாவின் பார்வையில் யுத்தக் குற்றமும் அது கண்டும் காணாத அடாவடிகளின் யுத்த சுத்தமும் !



                           அந்த' நான் கடவுள் ' என்ற அகம்பாவ தேசங்களின் நெற்றிக்கண் நியாயங்களில் பயங்கர குற்றங்கள் கூட இந்த   ஐ .நாவின் பார்வையில் சுத்தமாகவே எப்போதும் மொழி பெயர்க்கப்படும் ! அந்த அராஜகமான கழுகுக் கொள்கையை , அரிவாளும் சம்மட்டியும் கொண்டு எதிர்ப்போம் என்ற புரட்சிகர பூச் சுத்தளில் உலகின் ஒரு பகுதி அணி திரண்டதும் உண்மைதான் .ஆனால் நடந்த கதை வல்லரசுகளின் அடியாட்களாக அந்த குண்டர் படைக்கு தொண்டர் படையாக பனிப்போரில் மனித குலம்  பணி செய்தது மட்டும்தான்; இதில் வேடிக்கை என்னவென்றால் சில நடுநிலை நாயகங்கள் 'அணிசேராமலும்  ' அடியாளானது !

செத்துப் போன கிளிக்கு சிங்காரித்து என்ன பயன் ?



                                   மூன்று தசாப்த  இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

                  ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்ற விடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு  விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

Friday, February 22, 2013

நான் கலந்து கொண்ட 'ஜும்மாஹ் '.



              ' ஜும்மா' மேடைகள் சிந்தனைப்  பீடைகளை முஸ்லீம் உம்மத்தில் வளர்த்து விடும் வழமையான பணியை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறது என்பதற்கு , 22/02/2013 ஆகிய இன்று நான் கலந்து கொண்ட எனது 'மஹல்லா மஸ்ஜித் ஜும்மாஹ் ' ஒரு சிறந்த சான்றாக இருந்து வருகின்றது . வழமையான சம்பிரதாய தொடக்கத்துடன் ஆரம்பித்தபோது நானும் காதை கூர்மைப்படுத்தி கேட்க ஆரம்பித்தேன் .

Thursday, February 21, 2013

பசுந் தோல் போர்த்திய புலிகள் யார் !?




                "வணிகத்தில் இலஞ்சம் கொடுப்பது குற்றமில்லை " ! இவ்வாறு கூறுவது 'மாபியா ' இயக்கத்தின் தலைவரோ ,அல்லது ஒரு முன்னாள் 'ரவுடியோ ' அல்ல மாறாக ஒரு புகழ் பெற்ற வரலாற்றை பறை சாற்றி நிற்கும் முன்னாள் காலனித்துவ வாத நாடான 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி 'ஆவார் .

Wednesday, February 20, 2013

இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?


      முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)

Saturday, February 16, 2013

சிரியச் செய்திகள் சில .






கடந்த 11ம் திகதி அலெப்போ நகரத்தில் அமைந்திருந்த இன்னொரு விமானத் தளமான 'ஜர்ராஹ் ' கைப்பற்றப் பட்டபின் கடந்த 14ம் திகதி அசாத் படையின் 3 தாக்குதல் ஜெட் விமானங்கள் முஜாஹிதீன்களால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது .


இதன் பின்னர் அலெப்போ நகரம் மிகக் கடுமையான 'ஸ்கட் ' ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதில் சிவிலியன்கள் தரப்பில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .


Friday, February 15, 2013

ஒட்டு மொத்த 'கிரிமினல்களின் ' பக்குவமான புகழிடம் எது ?



                                           குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அதுதான் ஜனநாயகம் . ஆண்டிக்கு ஆண்டியே அரசனாம் !! இப்படித்தான் சொன்னார்கள் . சுதந்திரத்தை அடுத்தவனின் மூக்கு நுனிவரை நீட்டமுடியும் என்று துள்ளிக் குதித்தார்கள் . அதன் வடிவம் பற்றிய ஆசை எப்போதும் நிராசையானது தவிர இன்றுவரை நியாயமாகவில்லை . பகல் கொள்ளைக்கும் ,பக்கச் சார்புக்கும் , படு பாதகங்களுக்கும் அது துணை போனதே தவிர உருப்படியாக அது என்றும் தீர்வு சொன்னதில்லை .

Wednesday, February 13, 2013

விசேட செய்தி ...(12/02/2013)


         சிரிய இஸ்லாமிய போராளிகள் அலேப்போ நகரத்துக்கு வடக்கே அமைந்துள்ள இன்னொரு இராணுவ விமானத் தளமான  ' அல் ஜர்ராஹ் 'வை  கைப்பற்றியுள்ளனர் . இதில் விசேடம் என்னவென்றால் இந்தக் கைப்பற்றலில் சேதமற்ற நிலையில் ' மிக் ' ரக தாக்குதல் விமானங்களும் , எம் 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் சிலதும் எவ்வித சேதமற்ற நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது . தக்பீர் அல்லாஹு அக்பர் ...அல்லாஹு அக்பர் ...