Wednesday, May 22, 2013

'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .



'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை ,இந்திய அரசுகளோடு நெருக்கமானவருமான முகமட் நசீட் அண்மையில் தெரிவித்துள்ளார் .


தற்போது ஊழல் குற்றச் சாட்டின் பேரில் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் இவர் நடப்பு சூழ்நிலையில் ஒரு அரசியல் சண்டையை மூட்டி விடுவதன் மூலம் தனது விடயத்தில் ஒரு தளர்வு நிலை வேண்டிய இராஜ தந்திர யுத்தத்தையே செய்வதாக புரிந்தாலும் இவரது  கூற்றுக்கு ஆதாரமாக குறித்த உடன்பாடு தொடர்பான பிரதி ஒன்று வெளியாகியிருப்பது விடயத்தை அவ்வளவு சுலபமாக தட்டிக் கழிக்க முடியாது என்பதாகவே காட்டி நிற்கின்றது .

Tuesday, May 21, 2013

பாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .........




        பாகிஸ்தான் தேர்தல் திருவிழா கோலாகலமாக நிறைவேறியது ; வாக்கு வணக்கங்கள் மூலம் ஜனநாயக கடவுள் இம்முறையும் வழமை போலவே பூஜிக்கப் பட்டுள்ளார் ! இந்தக் கடவுள் அருள் பாளிக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு நவாஸ் செரீப் வரம் கொடுப்பான் பேர்வழி என முன்னிலையாக "பழைய குருடி கதவைத் திறடி " என்பது போல் வழமையான பாணியில் மக்கள் நடத்தப் படுவதும் இனி  தவிர்க்க முடியாதது .

Monday, May 20, 2013

வெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையும் ,கற்பனையும் கலந்த ஒரு பார்வை )




பசர் அல் அசாதின் வார்த்தைகளாக வெளியில் வந்தவை .......

"யார் என்ன சொன்னாலும் நான் பதவி விலக மாட்டேன் ."( என ஆர்ஜென்டீன  பத்திரிகை ஒன்றுக்கு 'சிரிய' ஜனாதிபதி ' பசர் அல் அசாத் ' பேட்டியளித்துள்ளார் . அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து ஒரு சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் மாதம் சிரிய விவகாரத்தில் ஒரு சுமூகத் தீர்வை எட்டும் நிலைப்பாட்டில் கூட்ட  ஏற்பாடுகளை செய்துவரும் இன்றைய நிலையில்  இவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார் .)



(இந்த மாநாட்டை கூட்டுவதற்கு பிரதான நிபந்தனையே 'பசர் அல் அசாத் ' பதவி விலக வேண்டும் என்பதே ஆகும் . இந்த அரசியல் ச(க )தியில் முஸ்லீம் உம்மாவுக்கு சிந்திக்க வேண்டிய பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன .அவைகளை உணர்ந்து கொள்ள குறித்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் இன்னும் சில முக்கியமான கீழ்வரும்  பகுதிகளை எடுத்துக் காட்டுவது நிலைமையை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் . )

Thursday, May 16, 2013

தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?


                                           பேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது , அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ஒரு வாழ்வியலில் எதிர் தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் அடிப்படை அரசியல் சிந்தனை .

Tuesday, May 14, 2013

Jabhat al-Nusra - யார் இவர்கள்? என்ன செய்கிறார்கள்? - சிரிய சமர்களத்தில் எழுந்து நிற்கும் இரண்டாம் அணி!!



Jabhat al-Nusra ( جبهة النصرة لأهل الشام‎ Jabhat an-Nuṣrah li-Ahl ash-Shām)

இஸ்லாமிய ஆட்சியை இலக்காக கொண்டு செயற்படும் முஜாஹிதீன்களின் அணி. சுன்னத் வல் ஜமா அறிஞர்களின் வழிகாட்டலிலும், கடந்த காலங்களில் ஆப்கான், பொஸ்னியா, கொசாவோ, செச்னியா, ஈராக் போன்ற பல ஜிஹாதிய களங்களில் போராடிய தீரமிகு போராளிகளின் கூட்டு இது. அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்கி அதில் அஷ்-ஷரீஆ சட்டங்களை நிலை நாட்டி தாகூத்திய (அல்லாஹ் அல்லாத) சக்திகளின் அனைத்து அதிகாரங்களையும் இல்லாதொழிக்கும் ஜிஹாதை சிரியாவில் களமாக திறந்து வி்ட்டுள்ள அணியிது. 



அல்-காயிதாவின் பின்புலம் அல்லது மறுவடிவம் என பல ஆய்வாளர்களாலும் இந்த அமைப்பு நோக்கப்படுகிறது. அப்துல்லாஹ் ஆஸம் (ரஹ்), அன்வர் அல் அவ்லாகி (ரஹ்), உஸாமா பின் லாதின் (ரஹ்), முஸப் அல் ஸர்க்கவி (ரஹ்) போன்றவர்களின் சிந்தனை, செயற் தாக்கங்களிற்கு உட்பட்டவர்கள் பலர் இந்த ஜிஹாதிய அணியில் உள்ளனர். 

இது காலத்தின் கட்டாயத் தேவை .


"நிச்சயமாக, எனது தொழுகையும் , என்னுடைய குர்பானியும் ,என்னுடைய வாழ்வும் ,என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்று (நபியே !)நீர் கூறுவீராக !

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை ;இதைக் கொண்டே நான் ஏவப் பட்டுள்ளேன் ; இன்னும் முஸ்லீம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக )
(T M Q அல் அன் ஆம் :வசனம் 162,163)

Saturday, May 11, 2013

இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!


அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒரு திசை திருப்பும் உளவியல் தரம் வாய்ந்த ஒரு நடவடிக்கையா? எனும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. அந்த நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது ? என்பதை புரிந்து கொள்ள ஒரு வரலாற்றுத் தெளிவு அவசியமானது. ஆழமான ஆய்வுகள் இல்லாத விடத்தும் எனக்கு புரிந்தவரை சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 


Wednesday, March 6, 2013

எங்கள் நிலமும் இன்திபாதாவை நோக்கி...


யா யாஸீன்......................

உங்கள் தேசம் இரத்தத்தினால்
   யஹுதிகளால் குளிப்பாட்டப்படுகிறது.

நிலத்தில் சிந்திய இரத்தத்தின் அச்சத்தில்
   குழந்தைகள் கூட சிறுநீர் கழிக்க   மறுக்கின்றன இங்கே.

யஹுதியின் “மர்கபா” டாங்கிகள்
   உங்கள் வாசல் வரை வந்து விலாசம் தேடுகின்றன

எதிரி சாவகாசமாக எல்லையில் நின்று குண்டு போட
   எம் எல்லைக்குள் அரபு தேச எஜமானரின் பூட்ஸ் லேஸ்
கூட உள் நுழைய அச்சப்படுகிறது.

Saturday, March 2, 2013

இந்தத் தொப்பி சரியானால் போட்டுக் கொள்ளுங்கள் . ( கீழே இரண்டு வேறுபட்ட சம்பவங்கள் ஆனால் ஒரே இலக்கை நோக்கி )



              "நாங்கள் சம்பிரதாய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல " இப்படிக் கூறுகிறார் 'கிரம விமலஜோதி தேரர் ' .'பொது பல சேனாவின் ' சமரச வாயிலை இவ்வாறுதான் குறிப்பிட்ட தேரர் முஸ்லீம்களுக்கு இனம் காட்டுகிறார் ! சரி அவர் குறிப்பிடும் சம்பிரதாய வழி என்ன ? என்பதில் முஸ்லீம்களில் பலருக்கு தேடல் தொடங்கியிருக்கும் காரணம் இதுதான் . அந்த இடத்தில் இருந்து' அஹ்லாக்கோடு ' இன்னொரு தேசிய முன்மாதிரியை காட்டி தீனை உயிர்ப்பிப்பது சிலவேளை இலங்கை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளிக்கலாம் என்ற நப்பாசைதான் .

Friday, March 1, 2013

'மீடியா ' பூச் சுத்தலும் சிரிய விவகாரமும் .



                சிரிய விவகாரத்தில் அசாத் படைக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு அமெரிக்க இராணுவ உதவி !! என்ற தலைப்பு இப்போது அநேகமான மேற்கின் 'மீடியாக்களால்' வெளிவிடப்படுகின்றது . இந்த விடயத்தில் சரி பிழை ஒருபக்கமிருக்க மீடியா யுத்தத்தில் 'அம்புஸ் ' தனமான 'கெரில்லா'உத்திகளையும் செய்ய முடியும் என்பதை மேற்கின் மீடியாக்கள் மீண்டும் ஒருமுறை இத்தகு செய்திகள் மூலம் நிரூபித்துள்ளன .

இலங்கையின்'ஹலால் விவகாரம் 'ஒரு பார்வை .



                          இலங்கையின் பொது பல சேனா எனும் பௌத்த மதவாத அமைப்பின் அண்மைய நகர்வு பொருட்களுக்கு 'ஹலால் ' சான்றிதழ் வழங்கும் முறையை நீக்கக் கோரிய முஸ்லீம் எதிர்ப்பு வடிவமாகும் .நடப்பு நிலவரப்படி' ஹலால் ' சான்றிதழ் வழங்கும் விவகாரத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முஸ்லீம்கள் இதோ ஓரளவு நல்ல அறிகுறி குறித்த விடயத்தில் கிடைத்து விட்ட திருப்தியோடு 'அல்ஹம்துலில்லாஹ் ' சொன்னதையும் நாங்கள் அவதானிக்கிறோம் .