Friday, January 17, 2014

முஸ்லிமே ! காலம் வேண்டுவது என்ன ?



                இஸ்லாத்தின் வரலாறு என்பது ஒரு தெளிவான அரசியல் போராட்ட வரலாறே ஆகும் . அது தீனுல் இஸ்லாம் என்ற வகையில் மனித குல வரலாற்றின் ஒவ்வொரு நபிமார்களோடும் தொடர்பு பட்டதும் ,இறுதி நபியான முஹம்மத் (ஸல் ) அவர்களை தொடர்ந்து இறுதி நாள்வரை இந்தப் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும் . இப்படி தீன் என்பது ஒரே அடிப்படையில் இருந்தாலும் ஷரீஆ என்பது ஒவ்வொரு நபிக்கும் வேறுபட்டதாக இருக்கின்றது . யுக முடிவு வரை இனி பின்பற்றத்தக்க  ஷரீஆ வாக நபி முஹம்மத் (ஸல் )அவர்களின் ஷரீஆ வே இருக்கும் என்பது முஸ்லீம்களின் தெளிவான அகீதா . இகாமதுத் தீன் (தீனை நிலைநாட்டுதல் ) என்பது இந்த ஷரீஆ எவ்வித தங்கு தடையும் இன்றி பிரயோகிக்கவும் ,அமுல் படுத்தவும் கூடிய ஒரு ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும் .

Wednesday, January 15, 2014

'சியோனிச' உறவில் சிங்கள தேசியம் !


    இயல்பாகவும் ,திட்டமிட்டும் மனிதப் பலவீனங்களை கொண்டு உருவாகும் சிக்கல்களுக்கு தனது தேவைப்பாட்டையும் ,பங்களிப்பையும் வழங்குவதன் ஊடாக தனது நிர்ணயங்களை திணித்து இஸ்ரேல் எனும் தேசத்தை அங்கீகரிக்க வைப்பதே யூதப் பொறிமுறை ஆகும் .

     இஸ்ரேல் உருவாக்கம் ,மற்றும் பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் காணப்படும் எதிர் நிலைப்பாடுகளை தமக்கு சாதகமாக பணிய வைப்பதன் அரசியலில் இருந்தே 'சியோனிசம் ' கொஞ்சம் கொஞ்சமாக தனது அநியாய  முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டது . 'இஸ்லாமிய கிலாபத் ' எனும் அதிகார சாம்ராஜ்யத்தை திட்டமிட்டு வீழ்த்தியது தொடங்கி ,இஸ்லாமிய பூமியை வெறும் முஸ்லீம் தேசிய நிலங்களாக பிரித்தது வரை இந்த சியோநிசத்தின் தீய கரங்கள் பங்களிப்பு செலுத்தியுள்ளன . இதன் மூலமாக இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு தேசத்தின் எல்லைகள் இலகுவாக பலப்படுத்தப் பட்டன . 

Tuesday, January 14, 2014

”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்குறிப்பிலிருந்து.....!! (Re-Publish)


(தாகூத்திய சதிகளில் சிக்கி அற்ப உலக இலாபாங்களுக்காக தூய இஸ்லாமிய கிலாபா அரசின் மீள் வருகையை  தடுக்க நினைக்கும் தவறான இஸ்லாமிய பெயர்தாங்கி வடிவங்களை புரிந்து கொள்ள மீள் பதிவிடப் படுகிறது . ஆனால் சத்திய இலட்சிய படைகளோடு இந்த F.S .A அணியும் இணைந்து குப்பார்களின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்ற மனதார்ந்த பிரார்தனையோடு இப்பதிவை இடுகிறேன் .)

சிரியா வெற்றியை நோக்கி ......


சிரியாவில் தமக்குள் முரண் படாமல் ஒற்றுமையாக பணியாற்ற அணைத்து போராளிகள் இயக்கமும் உடன்பாடு .(மாஷா அல்லாஹ் )

Monday, January 13, 2014

ஒரு வரித் துணியின் ஆதங்க வரிகள் ! அதுதான் புலித் துணியின் சோக சரிதை !(100% உண்மை கலந்த கற்பனை. )


     ஒரு விலை மாதுவின் கசங்கிய துணியை விட கேவலமான அரசியல் வரலாறுதான் எனக்கு இன்றுள்ளது .எனது தேவை பலரின் இலாபங்களுக்காக பயன்பட்டுப் போனதால் இன்று வெட்கித்துப் போகிறேன் . விடுதலை வேட்கை என்ற நியாயத்தோடு எகாதிபத்தியங்க்களின் தாகம் தீர்க்க பயன்பட்டுள்ளேன் என்பது ஆயிரம் நியாயங்களை சொன்னாலும் அசிங்கமானதுதான் .தாயக மண் ,இலட்சியம் என்ற மேட்பூச்சில் ஒரு அற்பமான இனவாதப் பாதையில் மனித விழுமியங்களை மிதித்தவாறே பயணித்த அந்தப் பொழுதுகள் அன்று பெருமைப்படும் விடயமாகத்தான் இருந்தது .

Thursday, January 9, 2014

படம் சொல்லும் நடப்பு புரியா விட்டால் விடை சொல்லும் கழுதை !


  (நிகழ்கால சித்தாந்தமும் அதன் ஆதிக்க அரசியலும் பெற்றுத்தந்ததும் , கற்றுத் தந்ததும் என்ன !? இன்னும் அதனை நம்புகிறாயா மனிதா !? மக்களால் ,மக்களுக்கு ,மக்களுக்காக !!! என போலி முகம் காட்டி ஆதிக்க கதிரை ஏற பல குடிகளை குடி கெடுத்து ,படு கொலைகளால் படி அமைத்து ,பாதகங்களை கொள்கையாக்கி  ,பக்கச் சார்பை பலமாக்கி பலம் பெற்றவுடன் அந்த அதிகார செருக்குடன் மீடியா நியாங்களோடு உனது வளத்தை ,உனது உரிமையை , கொள்ளையடித்து அதில் ஒரு சிலதை உனக்கே பிச்சையாக்கும் பகல் கொள்ளையர்கள் யார் !? என்பதை கீழ் வரும் படங்கள் சொல்லி நிற்கும் . இந்த கேடு கெட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தின் கீழிருந்தே உனது விடிவுப் பாதையை நீ தேடினால் !!! அதற்கு பதில் சொல்லும் கீழே ஒரு கழுதை !!!)

முஜாஹிதீன் ஒரு கவிதையிலே ...



(' தாகூத்தியத்தை 'எதிர்த்து நின்று ,இறை திருப்திக்காய் தம்மை அர்ப்பணித்த எல்லா முஸ்லீம்வீரர்களையும்  பொதுவாக நினைவு கூறும் ஒரு பதிவு .)

வஹியை வாழ்வாக்கி 
வல்லோன் அன்பைப் பெற 
இஸ்லாம் சுமப்பதே 
இலக்காய் மாறிவிட 
முஹம்மதின்(ஸல் ) படையணி அதில் 
முன்னணி வீரன் நீ ....

அரசியல் முஸ்லீம் உம்மத்தின் அடிப்படை இபாதத் ! (முக நூல் பதிவுகளில் இருந்து ...)


   ரிஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்தும் நாம் அறியலாம்.

    அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

Wednesday, January 8, 2014

ஓ முஸ்லிமே ! இந்த சூதாட்ட அரசியலில் சூனிய வாழ்வா உனது தேடல் !?


   குடிமக்களுக்கு சேவை செய்வதற்காக அரசா ? சில மேட்டுக்குடிகளின் சுரண்டல் ஆதிக்க அதிகாரத்தை சகித்துப்போய் ஏதோ வாழ்ந்து விட்டு செல்பவனா குடிமகன்  !? ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற சூதாட்ட அரசியலின் துரும்புச் சீட்டா குடிமகன் !? நம்பிய பின் மோசடி செய்வதெனும் அதிகார நியதியின் கீழ் அடிப்படை  உரிமைகளை கூட ஏதோ பிச்சை வேண்டுவது போல் கையேந்தி ஏங்கித் தவிப்பது தான் வாக்குப் போட்டதன் பலனா !? ஏன்? எதனால்? 

Monday, January 6, 2014

தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதியில் தர்மமே வெல்லும் .


(சிரியா தொடர்பில் இன்றைய சில தகவல்களில் சற்று கலக்கமடைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்காக இது மீள் பதிவிடப்படுகிறது . 'உஹத் ' களத்தின் கசப்புகள் 'பத்ரின்' இனிப்பை மறக்கடித்தன ! மொங்கோலிய ஆக்கிரமிப்பு இனி ஒரு இஸ்லாத்தின் எழுச்சி வரலாறா !? என்ற அவ நம்பிக்கையை கொடுக்க ஜன் ஜலூத்தில் சத்தியத்தின் வீரர்கள் அல்லாஹ்வின் உதவியோடு அந்த அவ நம்பிக்கையை கபுரில் போட்டு புதைத்தனர் ! வெற்றி தோல்வி தொடர்பான நம்பிக்கை யார் வசம் செல்லவேண்டும் !?என்ற உண்மையை புரிந்து தங்களின் பங்களிப்பையும் ,அர்ப்பணிப்பையும் முஸ்லீம் உம்மாஹ் செய்ய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும் .)

உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்!(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)


  மனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்! அவை குறித்த இஸ்லாமிய பார்வைகுறிப்பாக முஸ்லீம்களுக்கு 
  மிகவும் அவசியமாகும். 
முதலாளித்துவம் வலியுறுத்தும் கீழ்வரும்  நான்கு சுதந்திரங்களும் இஸ்லாத்திற்கும் அதன் சட்டங்களுக்கும் முறண்பட்டவையாகும்!
 

Sunday, January 5, 2014

அல்லாஹ் எங்கிருக்கிறான் !? (இதோ விஷமிகளின் இன்னொரு வடிவம் முஸ்லீம் உம்மாவே ஜாக்கிரதை ! இறுதிப் பகுதி)

(112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

(112:2)اللَّهُ الصَّمَدُ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

(112:3)لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

(112:4)وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

   கடந்த 27/12/2013 இல் கம்மல்துறை தக்கியா ஜும்மாவில் அந்த பேச்சாளர் அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையில்' அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாவின் ' கருத்துக்கு மாற்றமான ஒரு வாதத்தை முன்வைத்து ,இப்னு தைமியாவை (ரஹ் ) மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லீம் உம்மாவையும் காபிர் ஆக்க முயன்றுள்ளார் !? ஆனால் இஸ்லாமிய அகீதாவில் முதலிடம் பெறும் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையே அசைக்கப் படும் போதும் ,அது ஒரு சாதாரண சம்பவமாகி இன்று சிந்திக்கப் படுவதை இட்டு அந்த சமூகத்தில் ஒருவன் என்ற வகையில் வெட்கமும் வேதனையும் அடைகிறேன் .

Saturday, January 4, 2014

இதோ விஷமிகளின் இன்னொரு வடிவம் முஸ்லீம் உம்மாவே ஜாக்கிரதை !

         விலாசம் தேட முயலும் விஷமப் பிரச்சாரகர்களின் மத்தியில் இருந்து இன்னொரு அறிமுகம் இலங்கை முஸ்லீம்களுக்கு மத்தியில் கடந்த 27/12/2013 வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது . சிந்தனை வீழ்ச்சிக்கும் குப்ரிய ஆதிக்க கொடும் பிடிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் உம்மத்திற்கு இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ் என்ற விடயம் விளக்கம் என்ற பெயரில் குழப்பப் பட்டுள்ளது .கம்பஹா மாவட்டத்தின் கம்மல் துறை தக்கியா பள்ளிவாசல் ஜும்மாஹ் பயானில் இந்த பித்னா வெளிக்கிளம்பியது .

Friday, January 3, 2014

கொள்கை வாதமாக்கப்பட்டுள்ள கொலை வதங்களுக்கு மத்தியில் முஸ்லீம் உம்மாஹ் !!


 நம்பிக்கையீன மாக்கப் பட்ட ஒரு நம்பிக்கையில் நிராகரிப்போடு சமத்துவம் சகவாழ்வு ஒன்றிய குடித்தனம்  சரிகாணப் படுகிறது !? அதனால் ஏட்டுச் சுரைக்காய் வடிவில் எம்  தூய இலட்சிய வாழ்வு ஆக்கப்பட்டிருக்கிறது .  இயக்க வாதம் எனும் வெறிபிடித்த பார்வையால் எமக்கு நாமே வசைபாடும் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது .பத்துவா எனும் பெயரில் விடப்படும் வார்த்தை அம்புகள் கபுரை தோண்டியும் பழி தீர்க்கும் !! இப்படி சகோதர மாமிசத்தை சத்தியத்தின் பெயரில் உண்ணும் காட்டேரிகளா நாம் சகோதரா !!? 


Thursday, January 2, 2014

முஸ்லீம் உம்மவே காலத்தின் தேவை எது !?


"சிந்தனா ரீதியான ரித்தத் நடக்கின்றது ஆனால் அபூபக்கரை (ரலி ) காணவில்லை "
                                                                      - அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ் )-

                     முஸ்லிம் உம்மத்தின் சிந்தனை வீழ்ச்சியின் உச்ச விளைவையும் ,இத்தகு அதி பயங்கர ஆபத்தை எதிர்கொள்ளக் கூடிய வெற்றிகரமான ஒரு பொறிமுறை பற்றியும் ரத்தினச் சுருக்கமாக மேலே தந்த வார்த்தைகள் விளக்கி நிற்கின்றன . இன்றைய முஸ்லிம் உம்மத்தின் அவலகரமான வாழ்வும் ,அடிமைத்துவ அரசியல் மனப்பாங்கும் ஒரு இலட்சியவாத சமூகத்தை ஒரு கோழைத்தனமான வடிவில் காட்டி நிற்கின்றது .அத்தோடு இந்த முஸ்லீம் உம்மத்தின் ஒரே தெரிவான இஸ்லாம் எனும் வாழ்வியல் சாதாரண மதச் சடங்கு வடிவில் பேணப்பட அதற்குள்ளும் முரண்பாடுகள் !! இந்த பற்றி எரியும் உள்வீட்டுச் சண்டையில் எண்ணை ஊற்றி அத்தகு பிரிவினையை தமது ஆதிக்க அரசியலுக்கு சாதகமாக பயன் படுத்துகிறான் குப்ரிய எதிரி !