Thursday, January 31, 2013

'புரோபிட் அண்ட் பெனிபிட் பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய ரியல் நீதியும் .



        விஸ்வரூபம் திரைப்பட  விடயத்தில் நடிகர் கமலுக்கோ கோடிக்கணக்கில் இழப்பாம் .தமிழ் நாட்டு அரசுக்கு அத் திரைப்படத்தை வெளியிடுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் தானாம் ! மொத்தத்தில் நடப்பு நிலவரம் எல்லாம் 'புரோபிட் அண்ட் பெனிபிட் 
பேசில் ' நடக்கும் பக்கா  'கபிடலிச பொலிடிக்ஸ் '

Tuesday, January 29, 2013

பசர் அல் அசாதிட்கு U .N 500மில்லியன் கடனுதவி !!! (இதுவரை செய்த கடமைகளுக்கான இறுதிக் கொடுப்பனவோ ?)


நீதியை நிர்க்கதியாக்கிய 
அநீத ஆட்சிகள் - அரசியலை 
சாக்கடையாக்கி சத்தியத்தை 
துப்பாக்கி தோட்டக்களால் 
சீண்டிப் பார்த்த சீர்கேடுகள். 
இவர்கள் தான் அசத்திய தர்பாரின் 
சாத்தானிய சாம்ராஜிய சேவகர்கள் .
என்னதான் நடக்கும் இனி ?
இந்த அற்பப் பிராணிகளின் 
அதர்ம உறவுகள் மூலம் .
அல்லாஹ்வின் படைகள் முன் 
அடங்கிப் போவதோ ,
அழிந்து போவதோ தவிர 

(இதற்கிடையே இட்லிப் நகரத்தில் அசாத் படையின் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் கைதிகளின் சிறைச்சாலை கடந்த 29/01/2013 இல் இஸ்லாமிய படைகள் வசம் வீழ்ந்தது . அல்லாஹு அக்பர் ...)

நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும்


 
 
           ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு  சொல்கிறது . இந்த வெறியாட்டத்தின் பின் கூட இஸ்லாத்தை துடைத்தெறிய முடியவில்லை . 

பெரும்பான்மையின் 'அம்மாதான் ' ரியல் அம்மா !? சிறுபான்மையின் 'அம்மாவோ ' வெறும் சும்மா !? (திமோகிரசி பேசில் கருத்துச் சுதந்திரம் ஒரு குறும் பார்வை )

              
          கருத்துச் சுதந்திரம் அதன் வீச்செல்லை என்ன ? இந்த வினாவிற்கு விடைதேடினால் சிலநேரம் பதிவுகளுக்கு பக்கங்கள் போதாமல் போகலாம் ! எப்போதும் தாமும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புவதே இன்று ஆதிக்கத்தில் இருக்கும் மேற்கின் சிந்தனை வாதத்தின் பிழைப்பாக போய் விட்டது . மனிதன் சட்டம் இயற்றினால் நிகழும் தவிர்க்க முடியாத நோய் இதுதான் .

Monday, January 28, 2013

எமது போராட்டம் எது ?



                            "தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமூகத்திற்கு எதிர்காலமே கிடையாது "     (வரலாற்றாய்வாளர் இப்னு கல்தூன் )


                                         உங்கள்  மூதாதையர்களோ (கடவுள்களாக வணங்கப்பட்ட ) சிலைகளை உடைத்த 'இப்ராஹீம்களாக 'இருந்தார்கள் .நீங்களோ (இப்ராஹிம் (அலை ) அவர்களின் தந்தையாராகிய ) சிலையை விற்று வாழ்க்கை நடத்திய 'ஆசர்களாக ' உள்ளீர்கள் ! நீங்கள் தானா முஸ்லீம்கள் ?               
                                                                                                                                           (கவிஞர் இக்பால் )

Saturday, January 26, 2013

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?



                                பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

Friday, January 25, 2013

'வை திஸ்' கொலை வெறி !?



      இது 'வைட் ஸ்கின் ' சியோனிஸ்ட் ' காவிப் போர்வையில் காட்ட நினைக்கும் காட்டு மிராண்டித் தனம் . 'அசோகனின்' வாளை 'இராம ஜென்ம பூமியின்' பக்தர்களின் வழிகாட்டுதலில் ஏந்தி நிற்கும் 'தீசனின் ' தீவிர வாதக் கதை !!! இவர்களது அஹிம்சையின் முன் முஸ்லீம்களுக்கு மட்டும் 'ஹிம்சை ' என்பதுதான் நடப்பு விதி !!! இந்த முதலாளித்துவ முதலைகள் முடுக்கி விட்டிருப்பது தமது ஆதிக்கக் கதிரைகளை கட்டிக் காக்க என ஆள் சேர்க்கும் அநீதமான அரசியல் .

பெண் நிர்வாண சுகத்தில் நியாயம் காணும் உலகம் !!




                      பெண்ணை நிர்வாணப் படுத்தி பார்ப்பதில் பண்டைய ரோம் , கிரேக்கம் , அரேபியா , இந்த வரிசையில் நவீனத்தின் சொந்தக்காரர்களாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேற்கின் சிந்தனையை அடிப்படையாக கொண்ட உலகும் சற்றும் சளைத்தது அல்ல . அவளை காட்சிப் பொருளாக்கி காமக் கண்களால் ரசித்து ருசித்து பார்ப்பதில் இன்று முழு உலகும் ஒருமித்த கருத்திலேயே உள்ளது .

Thursday, January 24, 2013

முதலாளித்துவ மேட்டுக்குடி மரபில் யுத்தம் எப்போதும் ஒரு 'வீடியோ கேம்' தான் !!


             முதலாளித்துவ மேட்டுக்குடி மரபில் யுத்தம் எப்போதும் ஒரு 'வீடியோ கேம்' தான் !! என்பதை அவர்களது வாய்களினால் சிலநேரம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விடுகிறார்கள் . அரசியல் ,பொருளாதாரம் , தமது குரூர உளத் திருப்தி இந்த மூன்றிலும் கொள்ளை இலாபம் என்பதே அவர்களது அடிப்படைக் கொள்கை . இந்த மாபியா சிந்தனையில் மனிதாபிமானம் அவர்கள் தரப்பில் இருந்து நியாயங்களை சொல்லவே பயன்படுகின்றது .

Wednesday, January 23, 2013

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரி .


 

             இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை  'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .

(FREEDOM OF THE UTERUS) கருப்பைச் சுதந்திரம் ஒரு விபச்சார அழைப்பே .


 
                இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண் , பெண் உடலுறவுக்கான  உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக் ) கொள்வார் .


                      இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின் , ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான் . அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான் . இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் .

Monday, January 21, 2013

ஏகாதிபத்திய காலனித்துவ பிடிக்குள் ஆபிரிக்கா உணர வேண்டிய பிரதான உண்மை என்ன ?


                     ' மாலி ' இன்று மீடியாக்களின் பார்வையில் அதிகம் உச்சரிக்கப்படும் ஆபிரிக்க நாடு . முதலாளித்துவ வல்லரசான 'பிரான்ஸ்' இன்று அதன் மீது ஒரு சண்டித்தனமான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்துள்ளது . ஒரு வலிமை பொருந்திய நாடு வறிய  ஆபிரிக்க நாடொன்றில் அரசியல் இராஜ தந்திர ரீதியில் ஆக்கிரமிப்பு செய்வது இது தான் முதல் தடவையல்ல . ஆனால் சொல்லப் பட்ட காரணம் தான் சற்று சிந்திக்கத் தூண்டுவது. அது வழமை போலவே இஸ்லாமிய தீவிர வாதம் , பயங்கர வாதம் எனும் நொண்டிச் சாட்டாகும் . இதனடிப்படையில் இஸ்லாம் பற்றிய தவறான அச்சத்தில் திசை திருப்பப்பட்டிருக்கும் மனித சமூகம் இன்று மாலியின் நிகழ்வுகளை ஒருபக்கப் பார்வையிலேயே பார்க்கின்றது .

Sunday, January 20, 2013

'குரங்கு கையில் பூமாலை ' என்றால் என்ன ?


              1961 இல்  இந்த சம்பவம்  பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN  PROFUMO ' . அவரின் கேவலமான    நடத்தைக்கு    உதாரணமான      சம்பவமே கீழே வருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .


Saturday, January 19, 2013

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து .. (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )




மரத்துப் போன மனதில் இருந்து 
விறைத்துப்போன விரலுக்கு 
வரும் வாத்தைகள் இந்த 'உம்மாவின்'
சோகங்களால் கண்ணீர் வடிப்பினும் 
மீண்டும் இஸ்லாம் ச
க்தியாய் மாறி 
கிலாபாத்தின் கேடயத்தில் 
விடுதலைக்கதவுகளை
தட்டித்திறக்கும் நாள் வெகுதூரமில்லை .


இது ஒரு பகிரங்கக் கொலைகாரன் பற்றிய அறிமுகம் .



மரணமே இவனைக் கண்டு அஞ்சும் .
கர்ப்பிணிகள் இவனது நாமத்தை கூறினால் .
கருச்சிதைவு 100% நிச்சயம் !
துப்பாக்கிகள் கூட இவன் கையில் சிக்காமல் 
தூக்கில் தொங்கவும் தயாராம் !
மனித வரலாறு இவனது பதிவிற்கு 
பக்கங்கள் வைக்கவில்லை காரணம் 
கொடிய மிருகத்தை அதில் சேர்ப்பதில்லையாம் !
சொல்லகராதியில் கொலை என்ற வார்த்தை 
தன்னை புரிய வைக்க இவனை 
சந்திக்கச் சொல்கிறதாம் !