Monday, September 30, 2013

'தாக்கூத்' பேயே ! அரசியல் பிச்சை போடு !!!


  சாத்தானிய பஞ்சு மெத்தையில் புரண்டெழுந்து 'தாக்கூதிய' திருப்தியோடுதான் முஸ்லீம் உம்மத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். என நினைப்பவர்கள் இஸ்லாத்தின் யதார்த்தம் புரியாதவர்கள் . இந்த 'ஹுப்புத் துன்யா ' இஷம்  ஒரு 'பேஷனாகி ' முஸ்லீம் உம்மத்தை ஆட்டுவிக்கின்றது .

          நேர்வழி என்பது அல்லாஹ் (சுப ) அவனது தூதர் (ஸல் ) காட்டித் தந்தவை மட்டுமே ஆகும் . அந்தப் பாதையில் ஒரு நூல் சறுக்கினாலும் அடையும் இலக்கு தப்பாகிவிடும் . அதேபோல காலத்தின் தேவையை அந்த இறை வஹி காட்டித் தரவில்லை என்று கருதினாலும் அதுவும் இஸ்லாத்தின் பூரணத் தன்மை மீது நம்பிக்கை இல்லை என்றே ஆகிவிடும் .

Sunday, September 29, 2013

ஓ முஸ்லீம் உம்மாவே ! உனது தூய பலமான எதிர்காலம் நோக்கிய சோதனை மிக்க நிகழ்காலம் அது 'அஷ்ஷாம் '!!!


இலட்சிய வாதத்தால் புடம் போடப்பட்ட உள்ளங்களுக்கு அதன் பாதையில் சுமைகளும் சுகமானது . இந்த வீடியோ பதிவுகளை தொடராக பாருங்கள் .

Friday, September 27, 2013

சிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து ஒரு அறிவித்தலை விடுத்துள்ளனர்.

அதன் சாராம்சம் கீழ் வருமாறு :

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 03)





'சோனி' ,காக்கா , முக்கால் , தொப்பி பிரட்டி ,என்ற காரண இடுகுறிப் பெயர்களால் அனேகமாக வடபகுதி தமிழர்களால் அழைக்கப்படும் முஸ்லீம்கள் அந்த 1990 அக்டோபர் மாதம் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக விடுதலைப் புலிகளால் விரட்டப் பட்டனர் .

         இந்த இனத்துடைப்புக்கு புலிகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை காரணம் சொன்னார்கள் .முஸ்லீம்கள் துரோகிகள் ! காட்டிக் கொடுத்தார்கள் என்றார்கள் ! இந்தக் காரணங்கள் எனக்கு சரியானதாக புரியவில்லை . ஏதோ ஒன்று இடித்தது ?

'தாகூத்தின் ' அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் இஸ்லாமிய சாயத்தோடு தங்கி வாழ இதோ ஓர் அறிய வாய்ப்பு !!!

                             வீரர்களின் மார்க்கத்தில் இருந்தோர் இனி கோழைகளின் புகழிடத்தை   தாம் வாழும் இடங்களில் புதுப்புது அர்த்தங்களில் அமைத்துக் கொள்ளலாம் .

              சத்தியம் சக்தியாக வாய்ப்பில்லை என்ற எம் ஏகோபித்த முடிவில் ! முஸ்லீம் உம்மத் காலத்தை வீணடித்து கவலைப்படும் நிலை கண்டு, எம் ஏற்பாட்டில் சாக்கடைக்கு சந்தனம் தெளித்து வலிந்தெடுத்து  பூசிக்கொள்ளும் அபூர்வ நடவடிக்கை !

Tuesday, September 24, 2013

'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வது என்ன ?


இது இஸ்லாமிய அகீதாவை 
'கபுரில் ' போட்டு மூடி எஞ்சிய 
சாமானை பாதுகாக்கும் சடத்துவ முயற்சி !
'குப்ரோடு ' ஒன்றிய வாழ்விற்காய் 
'ஸுன்னாவை' புறக்கணித்து அரங்கேற்றும் 
'வஹி'த்தோல்  போர்த்திய 'ஜாஹிலீயத் '!

சிந்திக்க ஒரு சில உண்மைகள்.


         கடந்த கால வரலாற்றில் நாம் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் நிகழ் காலத்தின் சில சம்பவங்கள் பற்றிய சரியான கோணத்தை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் .

            விடுதலைப் புலிகளின் முஸ்லீம் எதிர்ப்பு தொடர்பில் இப்போது பேசி என்ன பயன் ? என்பது சிலர் என்முன் வைக்கும் கேள்வியாகும் .நான் இங்கு பேச வருவது ஒரு அடிப்படையான பொதுக் குணகம் பற்றியதே  . அதன் ஆதார  வடிவமாக விடுதலைப் புலிகள் வருகிறார்கள் .ஆனால் விடயம் அவர்களோடு மட்டும் மட்டுப் படுத்தப் பட்டதல்ல .

Monday, September 23, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 02)


     அந்த அக்டோபர் 1990 இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 120000 முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது . தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியது இந்த அக்டோபர் மாதத்திலே தானாகும் .ஒரு தெளிவான இனத்துடைப்பின் வடிவம் பக்குவமாக அரங்கேற்றப் பட்டது .

                             யாழ்ப்பாணம் ,மன்னார் ,முல்லைத்தீவு ,சாவகச்சேரி போன்ற முக்கியமான முஸ்லீம்  குடிசன செறிவுமிக்க பகுதிகள் முதல் பட்டி தொட்டி எங்கும் தேடித்தேடி முஸ்லீம்கள்   விரட்டப் பட்டனர் ! சில நாள் அவகாசத்திலும் , ஒரு நாள் அவகாசத்திலும் , இரண்டு மணிநேர அவகாசத்திலும் முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேறப் பணிக்கப் பட்டனர் .

Sunday, September 22, 2013

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .......(PART 01)


               ஒரு ஆறாத காயமாய் ஆகிவிட்ட அந்த அக்டோபர் 1990 களின் நினைவுகள் எப்போதும் என் விழி ஓரத்தில் ஒரு துளி கண்ணீரை விட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது .கலீல் ஜிப்ரான் போல் அந்த ஆழமான சோகத்தை ஒரு கவிதையில் வடித்து விடும் புலமை எனக்கில்லை . அந்த இரண்டு மணிநேரம் ..... பிறந்து வளர்ந்து உணர்வுகளோடு உறவாடிய அந்த பூமியை விட்டும் சென்று விட வேண்டுமாம் ....

Friday, September 20, 2013

வாழ்க ஜனநாயகம் ! வாழ்க ஜனநாயகம் !

 

(இது ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)

     முபாசராபாதில் கலவரம் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு இருக்கிறார்கள்,காங்கரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பாரத பிரதமர் மன்மோகன் சிங்.

Thursday, September 19, 2013

ரத்த சகதியில் மலர்ந்த தேசியம் !

  ( இது ஒரு உருவகக் கதை ,ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட யதார்த்தத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லி நிற்கிறது . இரண்டு இனவாதங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் உம்மா பற்றிய பார்வை குறைந்த பட்ச மனிதத் தன்மைகளோடு அணுக அவர்களது இனவாத இலட்சியம் இடம் கொடுக்கவில்லை அத்தகு மிருகங்களில் ஒரு பிரிவை பற்றிய காலம் பிந்திய அறிமுகமே இது  )
                                                                                                                      - அபூ ருக்சான் 

அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை ஒரு பார்வை .


        ஒரு அகீதாவின் நிலைப்பிற்கும் அதன் வாழ்வியல் பிரயோகத்திற்கும் ,அதன் கட்டமைபின் பாதுகாப்பிற்கும் அதிகாரம் பொருந்திய நிலை என்பது மிகப் பிரதானமானது .எனவேதான் உலகின் ஒவ்வொரு அகீதாவும் தனது செயற்பாடுகளில் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை பிரதானப் படுத்தியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது .அதிகாரத்தை வெளிப்படையாக புறக்கணிக்கக் கூடிய வெறுக்கக் கூடிய மதங்களை பொறுத்த மட்டிலும் தனது நிலைப்பிட்காகவும் வளர்ச்சிக்காகவும் புறநடையாக அதிகாரம் நோக்கிய நகர்வுகளை அல்லது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள சக்தியின் மீது சார்பு நிலைக் கோட்பாட்டையும் கொண்டனவாக இருக்கின்றது . அல்லது சமரசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உடன்பாட்டையாவது ஏற்படுத்தி விடுகின்றன .

இனி சத்தியத்தின் காலம் ....








Wednesday, September 18, 2013

'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்லாக்காய் பறக்குது !




      ஏகாதிபத்திய நாடக பாணி அரசியலின் அடுத்த கட்டமும் சிரிய விவகாரத்தில் அரங்கேறி விட்டது . அது ஐநாவின் பங்கி மூன் அவரது திரு வாயால் மொழிந்து அறிக்கையாக வெளியிட்டு விட்டார் . அது குறித்த இரசாயன தாக்குதலை செய்தது சிரியப் போராளிகளாம் .

நீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா !?


             கொழும்புத் துறைமுகத்தை 'லோகோஸ் ஹோப் ' எனும் கப்பல் புத்தகங்களை சுமந்து ஆல் கடலில் ஒரு அறிவுச் சுரங்க வடிவில் வந்திருக்கின்றது. இக்கப்பல் வருவது இதுதான் முதற் தடவையல்ல .இலவசமாக சென்று ரசித்து புத்தகங்கள் உட்பட பல பொருட்களை  கொள்வனவு செய்துவர மக்கள் வெள்ளமும் அலை மோதுகிறது . இந்த முஸ்லீம் உம்மத்தும் நிறையவே செல்கிறது .