Thursday, October 31, 2013

“குளோபல் ஜிஹாத்" சிரிய ஜிஹாதாகிய கதை - சிரியாவில் நடக்கும் ஜிஹாதை கைவிடுமாறு கோரும் சவுதியின் அரண்மனை முஃப்தி!!




by:Abu Sayyaf

    மாறும் அரசியல் நலன்களிற்காக ஜிஹாத்திற்கு ரிவேர்ஸ் கியர் போடும் சவுதி தலைமைத்துவங்கள் 
தமிழ் சினிமாவில் முதல் பாதியில் ஒரு கதையும் இடைவேளையின் பின் மறு பாதியில் திருப்பங்களுடன் கூடிய இன்னொரு கதையும் வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். இன்றைய சர்வதேச அரசியலிலும் சிரியா விவகாரத்தில் இவ்வாறான சில திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பஸர் அல்-அஸாதை எதிர்த்து நடந்த உள்நாட்டு போரில் அரச எதிர்ப்பாளர்களிற்கு அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஆயுத, நிதியுதவியளித்தன.

அந்த நாள் மறந்து விட்டதா ?





                                                              அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி  அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி ,அஜமி , வெள்ளையன் ,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் .

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .

(சவூதி ஒரு பக்கம் ஏமனில் முஸ்லிமை அழிக்க அமெரிக்க ட்ரோன் அட்டாக்குக்கு பேஸ் கொடுத்தல், மறுபுறம் சிறிய விவகாரத்தில் அமெரிக்காவோடு முரண்பாடு இந்த  போலி அரசியல்ஏன் !? 

ஈரான் ஒரு பக்கம் பாலஸ்தீன விவகாரத்தில் கடும் இஸ்ரேல் அமெரிக்க எதிர்ப்பு , மறுபக்கம் சிறிய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைவு இந்த போலி அரசியல் ஏன்? சவூதி அரேபியா ,ஈரான் போன்றவைகளின் அண்மைய அரசியல் நகர்வுகளில் மயக்கம் கொண்ட சிலருக்காக காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)


 
              ஓன்று  அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும்  குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும்  'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு  காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்கள் . இந்த வரைவிலக்கணத்தின் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் ,  முதலாளித்துவ 'தாகூத்தால்'  தாபிக்கப் பட்டுள்ளன .

தாகூத்திய எதிரியால் இலக்காகப்பட்ட நபீலாவும் , அம்பாக்கப்பட்ட மலாலாவும் ! (ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

  
       இந்த சிறுமியை யாருக்காவது தெரியுமா ? இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர். மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது. 

Tuesday, October 29, 2013

குறை மதியோடு இஸ்லாத்தின் மீது பகுத்தறிவை பாவிக்காதீர்கள் !


      இஸ்லாம் முஸ்லீம்களை பொறுத்தவரை வாழ்க்கையையே வணக்கமாக்கி உள்ளதோடு ,சில செயல்ரீதியான அடிப்படைக் கடமைகளையும் வணக்கமாக்கியுள்ளது . அந்த அடிப்படை வணக்கங்கள் சில பல அசைவுகளையும் ,நடத்தைகளையும் , நேரத்தையும் ,காலத்தையும் ,சில நிகழ்வுகளின் நினைவு கூறல்களையும் சம்பந்தப்படுத்தி அமைந்திருக்கும் .

       அகிலத்தின் ஏகபோக இரட்சகனான அல்லாஹ்வை உணர்ந்து ,புரிந்து ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமே முஸ்லீம்களாகிய நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவோம் .அவன் மனித சமூகத்திற்கு வழிகாட்ட தேர்ந்த அவனது இறுதித் தூதரான முஹம்மது (ஸல் ) அவர்களின் மூலம் எமக்கு கற்றுத்தந்த ,காட்டித் தந்த ,எதிர்வு கூறிய விடயங்களில் அவற்றை பௌதீக விதிகளுக்கு கீழ் இருந்து புரிந்து கொண்டாலும் ,புரியாவிட்டாலும் அது சரியானது ,தேவையானது என எவ்வித சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வோம் .அதுதான் (ஈமான் ) எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

Monday, October 28, 2013

சர்வதேச உளவுச் செயற்பாட்டில் சவுதி அரேபியா - லிபியாவின் சீப் ஒப் இன்டலிஜென்ட் சவுதியின் நண்பரானார்!!


   பந்தர் பின் சுல்தான். சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவு டைரக்டர் ஜெனரல். அதாவது Al Mukhabarat Al A'amah-வின் அமீர். சவுதி ரோயல் அரசாட்சியின் அபிலாஷைகளிற்கு முழு வடிவம் கொடுப்பவர். அமெரிக்காவின் நண்பர். இன்நாட்களில் விளாடிமிர் புட்டினின் நண்பரும் கூட. அண்மையில் அவர் சவுதி அரசிற்கு நன்மைபயக்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்து முடித்துள்ளார். லிபியாவின் அதிபர் கேர்ணர் முஹம்மர் அல்-கடாபியின் உளவுப் பிரிவின் தலைவரான Moussa Koussa-வை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளார். அதாவது அவரை சவுதியின் நண்பனாக மாற்றியுள்ளார். 

இது தாண்டா அசல் அரசியல் சாக்கடை !


சுயநலத்தை மூலதனமாக்கிய பக்கச்சார்பு வியாபாரம் ! - அது 
முதலாளித்துவம் கற்றுக்கொடுத்த கொடிய சாபம் !
இங்கு இலாபம் கிடைக்குமானால் நியாயம் அநியாயம் ஆக்கப்படும் !
தாரம் வாங்க தாய்கூட தேவைப்பட்டால் ஏலம் விடப்படுவாள் !
விபச்சார தரிசனங்கள் விளம்பரமாகி காம மொழியோடு 
வீதியெங்கும் பெண்ணுரிமை பேசும் !

Sunday, October 27, 2013

ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?


      Al Mukhabarat Al A'amah. என்றால் என்ன தெரியுமா?. சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP - General Intelligence Presidency). உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது. 1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது. மபாகித் எனப்படும் (General Investigation Directorate) மபாகித்ல் (சவுதி உளவு ஸ்தாபனம்) இருந்து இந்த அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டு மன்னரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் இயக்குனராக சவுதி ரோயல் குடும்பத்தை சார்ந்த ஒருவரே இருந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது “பந்தர் பின் சுல்தான்” அதன் தலைவராக இருந்து வருகிறார். 

Saturday, October 26, 2013

வருகிறது முஹர்ரம் இப்படி வரவேற்போம் !

   ஈமான் கொண்டோரே !நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ;அன்றியும் ,சைத்தானின் அடிச்சுவடுகளை பின் பற்றாதீர்கள் .நிச்சயமாக அவன் உங்கள் பகிரங்க விரோதியாவான் .

        எனவே தெளிவான ஆதாரங்கள் உங்களிடம்  வந்த பின்னும் , நீங்கள் சறுகி விடுவீர்களானால் ,(உங்களை தண்டிப்பதில் )நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ;தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் .                                                    (சூரா அல் பகரா வசனங்கள் 208,209)


                 இன்னொரு முஹர்ரத்தையும் நாம் நெருங்கி விட்டோம் .ஆனாலும் அரசியல் அநாதைகளாக , கேட்பார் அற்றவர்களாக அல்லாஹ்வின் எதிரிகளின் சகல விதமான அடாவடித் தனங்களையும் சந்தித்தவர்களாகவே இந்த இஸ்லாமிய புதுவருடத்தையும்  அடைய இருக்கின்றோம் .வழமை போலவே ஒரு சராசரி நாளாகவா இந்த நாளும் முஸ்லிமை  வந்தடையப் போகின்றது ? 

Friday, October 25, 2013

முஸ்லீம் எனும் அடையாளத்தை விட்டுக் கொடுத்தால் நாம் யார் !?

(ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து ( இறுதிப் பகுதி )

  அந்த 1990 அக்டோபர் 29 ம்  திகதி யாழ்ப்பாண முஸ்லீம் பகுதி அதிகாலையிலேயே விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப் படிருந்தது . சேம்பரில் ஏற்றப்பட்ட தோட்டாக்கள் எம்மில் பதியும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது .ரிகரை நெருங்கிய புலி விரல்கள் அழுத்தத் துடிக்கும் ஆசையோடு துருதுருத்துக் கொண்டிருந்தது. 'மெக்சிமம் ' பிடுங்கி விட்டு விரட்டி அடிப்பது மட்டும்தான் கட்டளை என்பதால் முஸ்லீம் மூளைகளை சிதறடிக்கும் இரத்த விளையாட்டுக்கு இப்போது சந்தர்பம் இல்லையே என அந்த ஆயுத பாணியான  வீர வேங்கைகள் வெறுப்போடு வெறுங்கை சிவிலியன்களான எம்மை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

Thursday, October 24, 2013

“ட்ரோன் அட்டாக்” எனும் பெயரில் நிகழ்த்தப்படும் அமெரிக்க பயங்கரவாதம் !!







written by: Abu Sayyaf

அமெரிக்க தாக்குதல்களில் அவர்கள் எதிரிகளை கொன்றதை விட எதிலும் சம்மந்தம் இல்லாத சாதாரண பொது மக்களை கொன்றதே அதிகம் .

   ஒரு ஜீப் வண்டி புளுதியை கிளப்பிக்கொண்டு விடியல் காலை செல்கிறது. சில நிமிடங்களில் அது வெடித்து சிதறுகிறது. எங்கும் புகை மண்டலம். சிதறடிக்கப்பட்ட கருகிப்போன ஜீப்பினுள் எட்டிப் பார்த்தால் ஒரு தாயும் அவள் குழந்தைகளும் அவள் கணவரும் பிணமாக எரிந்த நிலையில் கோரமாக காட்சி தருகின்றனர். 

இதோ இன்னொரு முஹர்ரம் ....



       அது கலீபா உமர் (ரலி ) ஆட்சிக்காலம் ; அபூ மூசா அல் அஸ் அரி (ரலி )  கலீபாவிட்கு எழுதிய கடிதத்தின் வரிகளின் முக்கியத்துவம் கலீபாவால் உணரப்பட்டது . அப்படி என்னதான் எழுதியிருந்தார் ?விடயம் இதுதான் " உங்களிடம் இருந்து வரும் கடிதங்களில் காலம் குறிப்பிடப்படுவதில்லை " எனும் செய்தியே அது . கலீபா முக்கியமான சஹாபாக்களை ஓன்று கூட்டி ஆலோசித்தார்கள் . முஸ்லீம் உம்மாவின் காலக்கணிப்பின்' கலண்டர் ' உதித்தது . அந்தக் கட்டங்கள் சுருக்கமாக உங்கள் கண்முன் தருகிறேன் .கீழே அவதானியுங்கள் .

Tuesday, October 22, 2013

இதுதான் 'ஹிக்மத்' 'லேபில் அடித்த அசல் கோழைத்தனம் !

       மஸ்ஜிதில் இருந்து அதான் ஒலித்தது . அது அல்லாஹ்வின் அழைப்பு ! அதிகாரத்தில் இருந்து குப்ரியத் கட்டளையிட்டது .அது உலக வாழ்வியலுக்கான அழைப்பு .துன்யா வேறு ஆகிரா வேறா!? மறுமையின் வெற்றிக்காக இம்மை இல்லையா !? வெற்றி பெற விரைந்து வாருங்கள் என்ற அதானுக்கு மறுமைக்கு என ஒரு ஆன்மீக நியாயத்தை கூறிவிட்டு மறுபக்கம் 'தாகூத்தின்' அதே போன்ற அழைப்புக்கு புரிந்தும் புரியாமலும் தலைவணங்கிப் போவது சரியா !? இது தானா முஸ்லிமின் நடத்தை !?

Sunday, October 20, 2013

மேற்கினது முகவரான மனித உரிமைகள் அமைப்பினது இரட்டை வேடங்கள்! இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதே அவர்களது இலக்கு! (ஒரு முக நூல் பதிவில் இருந்து ..)

  இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்திற்கு எதிரான விஷமப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடும் போக்கை நாம் சர்வ சாதாரணமாக காணலாம்.

ஹோம்ஸை அதிரவைக்கும் இன்னொரு அணி !!





                  ரஷ்ய அரசு பஸர் அல்-அஸாதின் சிரிய இராணுவ அரசிற்கு அரசியல் ரீதியான ஆதரவை மட்டும் நல்கவில்லை. ஆயுத தளவாட உதவிகள், வெடிபொருட்கள், போரியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், சிக்னல் தொழில்நுட்ப உதவிகள் என பல தரப்பட்ட உதவிகளை வழங்கி வருகிறது. போதாக்குறைக்கு ரஷ்ய இராணுவ வீரர்களையும் சில களமுனைகளிற்கு சிரிய இராணுவ சீருடையில் நகர்த்தியுள்ளது. சிரிய படையினருடன் தோளோடு தோள் சேர்ந்து ரஷ்ய தாக்குதல் அணியினரும் சண்டையிட்டு வருகின்றனர்.