Friday, November 8, 2013

சிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... - கமால் பாஷா இன்னும் இறக்கவில்லை போலும் !!




  
      சிரிய விவகாரத்தில் நான்கு சக்திகள் தங்கள் எதிர்கால நலன்களிற்கான பின்புலத்தில் செயற்படுகின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி சவுதி அரேபிய என்பன ஒரு அணியாகவும், ஈரானும் ஷியா மத தலைமைகளும் மறு அணியாகவும் பங்காற்றுகின்றன. இதை விட மூன்றாம் அணியாக துருக்கி தனது பிராந்திய நலன்களை மேம்படுத்தும் நோக்கில் சிரிய விவகாரத்தை கையாள முற்பட்டுள்ளது. இவைகளை தவிர ரஷ்யாவும் தனது மத்தியகிழக்கு மற்றும் மத்தியதரைக்கடல் ஆதிக்கத்திற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இவர்கள் எவருக்குமே சிரிய பொது மக்கள் பற்றிய நலன்களின் எந்த கரிசணையும் இல்லை. 

Thursday, November 7, 2013

காமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா !?


(  இது 16/11/2011  இல் ' குமுதம் '  இதழில்  வந்த ஒரு நேரடி  ரிபோர்டின் சுருக்கம் . வல்லரசாகும்  தகுதிக்கான  தராதரங்களில்  இந்தியா  மேற்கின்  முதலாளித்துவ  சித்தாந்த  தரத்திலும் அதிலிருந்து  உதிக்கும் சிந்தனை  தரத்திலும் எவ்வகையிலும்  குறைந்ததல்ல  என்பதை  உணர்ந்து  கொள்ள  இந்த விடயங்கள்  சிறந்த  உதாரணமாகும் .
           
                                     குடி  குடியை கெடுக்கும்  என்பார்கள் வரி  வருமானத்துக்காக அதை  குடியிருக்கவும்  விட்டிருப்பார்கள் !  சாதிப்  பூசல் நாட்டைக்  கெடுக்கும் என்பார்கள்  சாதி , மத ,பேதங்களில்  இருந்துதான்  ஆதிக்க அரசியலுக்கு  கடிவாளம் போடுவார்கள் !

Wednesday, November 6, 2013

ஹிஜ்ரா சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்காலமும் .


          ஹிஜ்ரி 1435 இலும் காலடி எடுத்து வைத்துள்ளோம் ! அரசியல் அநாதைகளாக, குப்பார்களால் அவன் விரும்பியவாறு அத்துமீறப்பட முடியுமானவர்களாகவே இம்முறையும் ஹிஜ்ரி ஆண்டுக்குள் நுழைந்துள்ளோம் .ஆனால் ஹிஜ்ரா எனும் வரலாற்று வடிவம் இதற்கு எல்லாம் மாற்றமானது . அது இஸ்லாமிய இலட்சிய வாதத்தின் அரசியல் இராஜதந்திர வெற்றியின் அடிப்படை ஆகும் .

                 இஸ்லாமிய வாழ்வியலின் நடைமுறை சாத்தியம் ஹிஜ்ராவில் இருந்து பாதுகாப்புப் பெறுகிறது , சுதந்திரமாக அமுல் படுத்தப் படுகிறது . ஆனால் நாமோ பூரண இஸ்லாத்தை வைத்துக்கொண்டு பாதுகாப்பற்றவர்களாக ,அதை அமுல் படுத்த சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோம் .

Monday, November 4, 2013

அப்படியானால் இவர்கள் யார் !?


           இன்றைய தினம் நீ ஒரு சவூதி சலபியாக இருந்தால் சிரியாவின் விவகாரத்தில் நேற்றுவரை இருந்த  நிலைப்பாடுகளை மாற்றிக்கொள் ! அது இஸ்லாமிய போராட்டம் எனும் நிலையில் இருந்து மகத்தான சவூதி மன்னரின் கட்டளையின் பெயரில் அது வெறும் உள்நாட்டு யுத்தமாக ,சிரிய அரசுக்கெதிரான கிளர்ச்சியாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது .

                சிரியாவின் அரசுக்கெதிரான போரில் பாதிக்கப்படும் முஸ்லீம் சிவிலியன்கள் தொடர்பில் அனுதாபப்படலாம் ஆனால் அந்த அநியாயத்தை செய்யும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கு கொள்ளவோ ,ஆதரவு அளிக்கவோ முடியாது .அவ்வாறு செய்வது சவூதி மன்னரின் நியாயங்களின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் . 

Sunday, November 3, 2013

இஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ் உலகை ஆள....?

அனைத்து தடைக்கற்களையும் தகர்த்தெறிவோம்!

தேசியவாதச் சிந்தனையை களைவோம்…!

சகோதரத்துவப் பிணைப்பால் இணைவோம்!

இஸ்லாத்திற்கு பலம்சேர்ப்போம்!

முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்கு ஒன்றிணைவோம்!

இஸ்லாமிய அகீதாவே எமது ஒற்றுமையின் நாதம்!

குர்ஆன் சுன்னாவே எமது மூலமந்திரம்!

வாழ்வில் குர்ஆன் சுன்னா நிலைபெற கிலாபா மீண்டும் நபிவழியில் முஸ்லிம் உலகில் நிறுவப்படவேண்டும்!

அதுவே முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்பு!

அதுவே எமது கேடயம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”

(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

மேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் மீள் உதயம் '.

(காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )




         "அரேபிய சாம்ராஜ்யத்தில் முஸ்லீம்கள் ஓன்று பட்டு விட்டால் ,அவர்கள் உலகுக்கு ஆபத்தாகவும் சாபமாகவும் மாறலாம் .அல்லது அருட் கொடையாகவும் மாறலாம் .என்றாலும் ,அவர்கள் பிரிந்து காணப் பட்டர்களானால், எந்தவொரு பெறுமானமும் தாக்கமும் அற்றவர்களாகவே இருப்பார் "
                                                         
                                                                     - லோரென்ஸ் பிரேவின் -
                                                         ( ஒரு மேற்கத்தேய சிந்தனையாளர் )

Friday, November 1, 2013

இவர்களா வைத்தியர்கள் !?


இவர்கள் இலுமினாட்டிகளா !? என
தூதர் (ஸல் ) சமூகத்தை யூதர் சமூகத்தோடு சேர்த்து
போஸ்டர் ஒட்டிப்போனது ஒரு கூட்டம் !?
இவர்களா ஏகத்துவ வாதிகள்?என
பதில் போஸ்டர் மறுநாள் பல் இளிக்க !
இந்த வாடிக்கையான வேடிக்கை 'பேப்பர்களை
மாடொன்று சுவைத்துப் போனது !

அரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவா' முட்டை ஏன்!?

   சவூதி மன்னரின் உளவுப்பிரிவுத் தலைவர் பந்தர் பின் சுல்தான் , ரஷ்யாவின் விளாடிமிர் புடினின் இரகசிய  இணைவின் அர்த்தம் சவூதி அரண்மனை முப்தியின் சிரிய விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய 'பத்துவா ' மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

       "ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற லெனினிச பயிற்றுவிப்பில் KGB  தனத்தோடு வளர்ந்த விளாடிமிர் புடின் அமெரிக்க C .I .A ஆலோசனையில்  மத்திய கிழக்கு விடயங்களை கையாளத் தொடங்கியுள்ளார் . அந்த வகையில்  இந்த கூட்டுச் சதியின் தெளிவான வெளிப்பாடே  Abdul-Aziz ibn Abdullah Aalash-Shaikh இன் 'பத்துவா' ஆகும் .

சவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கும் நாடா..? (ஒரு முக நூல் பதிவில் இருந்து )


     ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின் அங்கு “இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில்” நிறுவப்பட்ட மனிதனுடைய அரசியல், பொருளில், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகளுடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு வழங்கப்படும் நிலையில் ஆட்சி நிகழ வேண்டும். 

Thursday, October 31, 2013

“குளோபல் ஜிஹாத்" சிரிய ஜிஹாதாகிய கதை - சிரியாவில் நடக்கும் ஜிஹாதை கைவிடுமாறு கோரும் சவுதியின் அரண்மனை முஃப்தி!!




by:Abu Sayyaf

    மாறும் அரசியல் நலன்களிற்காக ஜிஹாத்திற்கு ரிவேர்ஸ் கியர் போடும் சவுதி தலைமைத்துவங்கள் 
தமிழ் சினிமாவில் முதல் பாதியில் ஒரு கதையும் இடைவேளையின் பின் மறு பாதியில் திருப்பங்களுடன் கூடிய இன்னொரு கதையும் வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். இன்றைய சர்வதேச அரசியலிலும் சிரியா விவகாரத்தில் இவ்வாறான சில திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பஸர் அல்-அஸாதை எதிர்த்து நடந்த உள்நாட்டு போரில் அரச எதிர்ப்பாளர்களிற்கு அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஆயுத, நிதியுதவியளித்தன.

அந்த நாள் மறந்து விட்டதா ?





                                                              அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி  அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி ,அஜமி , வெள்ளையன் ,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் .

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .

(சவூதி ஒரு பக்கம் ஏமனில் முஸ்லிமை அழிக்க அமெரிக்க ட்ரோன் அட்டாக்குக்கு பேஸ் கொடுத்தல், மறுபுறம் சிறிய விவகாரத்தில் அமெரிக்காவோடு முரண்பாடு இந்த  போலி அரசியல்ஏன் !? 

ஈரான் ஒரு பக்கம் பாலஸ்தீன விவகாரத்தில் கடும் இஸ்ரேல் அமெரிக்க எதிர்ப்பு , மறுபக்கம் சிறிய விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைவு இந்த போலி அரசியல் ஏன்? சவூதி அரேபியா ,ஈரான் போன்றவைகளின் அண்மைய அரசியல் நகர்வுகளில் மயக்கம் கொண்ட சிலருக்காக காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)


 
              ஓன்று  அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும்  குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும்  'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு  காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்கள் . இந்த வரைவிலக்கணத்தின் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் ,  முதலாளித்துவ 'தாகூத்தால்'  தாபிக்கப் பட்டுள்ளன .

தாகூத்திய எதிரியால் இலக்காகப்பட்ட நபீலாவும் , அம்பாக்கப்பட்ட மலாலாவும் ! (ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

  
       இந்த சிறுமியை யாருக்காவது தெரியுமா ? இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர். மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது. 

Tuesday, October 29, 2013

குறை மதியோடு இஸ்லாத்தின் மீது பகுத்தறிவை பாவிக்காதீர்கள் !


      இஸ்லாம் முஸ்லீம்களை பொறுத்தவரை வாழ்க்கையையே வணக்கமாக்கி உள்ளதோடு ,சில செயல்ரீதியான அடிப்படைக் கடமைகளையும் வணக்கமாக்கியுள்ளது . அந்த அடிப்படை வணக்கங்கள் சில பல அசைவுகளையும் ,நடத்தைகளையும் , நேரத்தையும் ,காலத்தையும் ,சில நிகழ்வுகளின் நினைவு கூறல்களையும் சம்பந்தப்படுத்தி அமைந்திருக்கும் .

       அகிலத்தின் ஏகபோக இரட்சகனான அல்லாஹ்வை உணர்ந்து ,புரிந்து ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமே முஸ்லீம்களாகிய நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவோம் .அவன் மனித சமூகத்திற்கு வழிகாட்ட தேர்ந்த அவனது இறுதித் தூதரான முஹம்மது (ஸல் ) அவர்களின் மூலம் எமக்கு கற்றுத்தந்த ,காட்டித் தந்த ,எதிர்வு கூறிய விடயங்களில் அவற்றை பௌதீக விதிகளுக்கு கீழ் இருந்து புரிந்து கொண்டாலும் ,புரியாவிட்டாலும் அது சரியானது ,தேவையானது என எவ்வித சந்தேகமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வோம் .அதுதான் (ஈமான் ) எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

Monday, October 28, 2013

சர்வதேச உளவுச் செயற்பாட்டில் சவுதி அரேபியா - லிபியாவின் சீப் ஒப் இன்டலிஜென்ட் சவுதியின் நண்பரானார்!!


   பந்தர் பின் சுல்தான். சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவு டைரக்டர் ஜெனரல். அதாவது Al Mukhabarat Al A'amah-வின் அமீர். சவுதி ரோயல் அரசாட்சியின் அபிலாஷைகளிற்கு முழு வடிவம் கொடுப்பவர். அமெரிக்காவின் நண்பர். இன்நாட்களில் விளாடிமிர் புட்டினின் நண்பரும் கூட. அண்மையில் அவர் சவுதி அரசிற்கு நன்மைபயக்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்து முடித்துள்ளார். லிபியாவின் அதிபர் கேர்ணர் முஹம்மர் அல்-கடாபியின் உளவுப் பிரிவின் தலைவரான Moussa Koussa-வை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளார். அதாவது அவரை சவுதியின் நண்பனாக மாற்றியுள்ளார்.