Friday, January 31, 2014

அமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வாறு ஏமாற்றப் படுகிறார் !! (இறுதிப் பகுதி )


         மேற்கின் சிலுவை இராணுவக் கூட்டணி ஈராக் குவைத்தை ஆக்கிரமித்ததை காரணம் காட்டி அராபிய முஸ்லீம் பெருநிலத்தில் தனது பூட்சுகளை மீண்டும் நேரடியாக 1990இல்  பதித்தது .இது தட்செயலாகவோ எதேசையாகவோ நிகழ்ந்த ஒன்றல்ல .அதற்குப் பின்னால் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க அரசியல் பக்குவமாக திட்டமிடப்பட்டிருந்தது . அதற்கு அதன் சர்வதேச சட்டங்கள்,ஒப்பந்தங்கள்  என்ற பொறிமுறை நன்றாகவே பயன்பட்டது .

Thursday, January 30, 2014

ஜனநாயக நிழலில் முஸ்லிம்!!?? (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)

                                                                                     இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தெளிவானதும் உறுதியானதுமான வழிகாட்டலை வழங்கியுள்ளது .என்பது முஸ்லீம்களாகிய எமது அசைக்கமுடியாத(அகீதா ) நம்பிக்கையாகும் . அந்த வகையில் தான் இஸ்லாத்தின் அகீதா விற்கும் அது காட்டிநிற்கும் நடைமுறை வாழ்விற்கும் மாற்றமாக சிந்திப்பது,செயற்படுவது (ஹராம் )முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது .

Wednesday, January 29, 2014

தாகூத்தோடு 'கொம்ப்ரமைஸ் ' போடத் துடிக்கும் இஸ்லாமிய தாயி !!! (ஒரு பேஸ் புக் சூட்டில் இருந்து ...)


( இந்திய குப்ரிய ஜாஹிலீய அரசில் இட ஒதுக்கீடு வேண்டி போராடும் P .J  1980 களில் அவர் பேசிய சியாசா தொடர்பான விளக்கத்தை மறந்து போயுள்ளார் !? ஹாகீமியத்தை அடகு வைத்து ஏகத்துவம் பேசும் இந்த தாயியின் பின்னால் அடுத்தவர்களை கபுறு முட்டிகள் என்றும் , சியாக்கள் என்றும் கூறும் ஒரு தவறான கூட்டமும் பின் தொடர்கிறது , தாகூத்திய சலுகையின்  கீழ் சமரசம் தான் இவர்கள் காட்டும் இகாமதுத் தீனா !!? அப்படியானால் இவர்களை எப்படி அழைப்பது !? பாவம் என்னதான் ஜாஹில் முட்டிகளாக இருந்தாலும் நம்ம சகோதரர்கள் .)

Tuesday, January 28, 2014

ஒரு பாமர முஸ்லீம் பேசுகிறான் !


         நாங்கள் நஜ்ஜாசிக்கு முன் துணிவோடு நின்ற ஜவ்பர் (ரலி ) போல் நிற்கவில்லை ! பாரசீக தளபதி ருஷ்தூமுக்கு முன்னால் இஸ்லாத்தை முன்வைத்து சவால் விட்ட ருபுஹா பின் ஆமிர் ஆவதற்கு எமக்கு பின்னால் கிலாபாவும் இல்லை ! தாத்தாரியர் முன் சுருண்டு போயிருந்த வைக்கோல் முஸ்லிம் போல்தான் எம் நிலை ! 

Monday, January 27, 2014

அமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வாறு வீழ்த்தப் படுகிறார் !



               'இஸ்லாம் அல்லாத அனைத்தும் தாகூத்தின் வழி வருபவை .தாகூத்திடம் இருந்து வருகின்ற யாவும் ஜாஹிலீயத் ஆனவை ' என்பது இமாம் இப்னு தைமியா (ரஹ் ) உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இமாம்களினதும் ஏகோபித்த முடிவு . தூய சலபி இமாமான அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) முதல் ஜிஹாதிய சலப் கமாண்டர் கத்தாப் வரை இந்த நிலைப்பாட்டில் இருந்து இறுதிவரை மாறுபடாமல் அவரவர் வழியில் போராடியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால் இத்தகு தூய சிந்தனையை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்தின் நிலங்களில் சிலுவை வீரர்களை கால் பதிக்க வைத்து தமது முடியாட்சியை காக்க நிணைக்கும் மன்னரிசத்துக்கு சோடை போன நியோ சலபிகள் நிச்சயமாக இனம் காட்டப் பட வேண்டியவர்கள் .

Friday, January 24, 2014

அசட்டு ஆலிமின் ! அகபா வரலாறும் தக்க பதிலும் ..(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)


(மாற்றானை விட அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) சீராவை சீரழிக்க புறப்பட்டுள்ள நம்மவர்களின் வரிசையில் இதுவும் ஒரு கருப்பாடு மட்டுமே  . இதுதான் நிகழ்காலம் என்றால் சகித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் உம்மத்தின் எதிர்காலம் !? சிந்திக்க வேண்டிய விடயம் தான் .                        - அபூ ருக்சான் -)

இதோ அந்த சகோதரனின் பதிவு ....

தூக்கத்தைக் கலைத்த பயான்...!
***************************
இன்று ஜூம்ஆவுக்கு சற்று முன்னரே சென்று குர்ஆன் ஓதி, சுன்னத் தொழுது விட்டு பயான் கேட்டேன். 

இதோ நியோ சலபிகள் ! முஸ்லிம்களே ஜாக்கிரதை !!


         முன்னோர்களான சஹாபாக்களின் பெயர் கூறி அராபிய மன்னரிசத்தை போசித்து பாதுகாப்பது ,தக்கவைப்பது இதுதான் நியோ சலபிசத்தின் உருவாக்கத்திற்கான உடனடி எண்ணக்கரு . அதன் திட்டவட்ட இலக்கு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு பிராந்திய ஆதிக்கம் ,நலன் என்பதுவே ஆகும் .எனவே இதனடிப்படையில் இஸ்ரேலின் எதிர்காலத்தையும் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்வதும் உள்ளடங்கும் ! என்ன இஸ்லாத்தின் பெயரில் இஸ்ரேலின் பாதுகாப்பா !? என நீங்கள் கேட்கலாம் அதன் விடையை இஸ்லாமிய நிலங்களில்' காமப்' போட்டு அவர்களின் இஷ்டப்படி சுதந்திரமாக தமக்கென தனிச் சட்டம் அமைத்து ராஜாங்கம் செய்துவரும் அமெரிக்கப் படைகள் சொல்லும் .

Thursday, January 23, 2014

இஸ்லாத்தின்படி வாழ்வின் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் அரசு இருப்பது பர்ளு...!(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)


(இஸ்லாத்தின் ஆட்சியும் சத்தியத்தின் பரவலும் .)

இஸ்லாம் என்பது அரசு, சமூகம் மற்றும் மனிதர்களின் வாழ்வியல் ஆகியவற்றை உள்ளடக்கிய சித்தாந்தம் என்பதால் ஆட்சிபுரிதல் என்பது அதன் பிரிக்கமுடியாத பகுதியாக உள்ளது.

ஆகவே அரசை நிர்ணயிப்பதன்வாயிலாக ஆட்சிபுரிதலை நிலைநிறுத்த வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.

அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிபுரிதல் கட்டாயக் கடமை என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டுள்ளன.

அமெரிக்க ஈரானிய உறவுகளின் பின்னால் உள்ள ஏகாதிபத்திய நலன்கள் !


ஜனவரி 20இல், ஈரானின் சிவில் அணுசக்தி திட்டங்களை நிறுத்தி வைக்கும் ஒரு ஆறு மாதகால உடன்படிக்கை நடைமுறைக்கு வரும். ஈரானை இராணுவ பலங்கொண்டு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்த பின்னர், வாஷிங்டன் தற்போது "சமரசத்திற்கான ஒரு வாய்ப்பை" வழங்க விரும்புவதால் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றுடன் இந்த இடைக்கால உடன்படிக்கையில் பேரம்பேச இணைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகிறார்.

இகாமதுத் தீன் (மார்க்கத்தை நிலைநாட்டுதல் ) ஒரு புரிதல் !


        இகாமதுத் தீன் (மார்க்கத்தை நிலைநாட்டுதல் ) என்றால் என்ன ? அதற்கான பாதையை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) எவ்வாறு காட்டித் தந்துள்ளார்? இது விடயத்தில் ஒரு திட்டமிட்ட செயட்கிரமம் இருந்ததா ? அல்லது பல்வேறுபட்ட செயட்கிரமங்கள் பிரயோகிக்கப் பட்டதா ? இப்படி பல்வேறுபட்ட கேள்விகளை முன்வைத்தே இன்று இடம் பெறும் இஸ்லாமிய மறுமலர்ச்சி தொடர்பான செயட்களத்தை நோக்க வேண்டியுள்ளது . 

Friday, January 17, 2014

சிரியாவில் பிரதேச வாதத்தால் இஸ்லாமிய சகோதரத்துவத்தை விலை பேசும் தாகூத்திய ஆட்டங்கள் !


"சிரியாவின் விடுதலையை சிரியர்களாகிய நாம் பெற்றுக்கொள்வோம். அண்டை தேசத்து துப்பாக்கிதாரிகள் எம் தலைகளை குறிவைக்க இடமளிக்க வேண்டாம். நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். இது தான் உங்களிற்கு உள்ள ஒரே பாதை.  "    
 (ஆர்மி ஒப் தி முஜாஹிதீனின் அரசியல் பீடம் )

       முஜாஹித்கள் இன்றைய அரசியல் அகராதியில் இரண்டு வகைப்படுவர். முதலாம் அணியினர் அல்லாஹ்வின் ஆட்சியை உலகில் உருவாக்க முயலும் அணியினர். இவர்களைப்பற்றி அல்-குர்ஆனும் அல்-ஸுன்னாவும் நிறைய இடங்களில் பேசியுள்ளன.  இரண்டாம் அணியினர் அமெரிக்க மற்றும் மேற்கின் இலட்சியங்களை நிறைவேற்ற, அவர்களால் இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட கூலிப்படையினர். பாகிஸ்தான் முதல் சிரியா வரை இந்த இரண்டாம் அணியினர் செயற்படுகின்றனர். சிரியாவின் முஜாஹித்களை இல்லாதொழிப்பதில் மூன்று முனைகள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஈரானிய கூட்டு, அமெரிக்க சவுதி அரேபிய கூட்டு, ரஷ்ய சிரிய அரச கூட்டு. இதில் அமெரிக்காவின் C.I.A.-யும் சவுதி அரேபியாவின் பந்தர் பின் சுல்த்தானின் நெறிப்படுத்தலில் இயங்கும்  Al Mukhabarat Al A'amah-வும் இணைந்த சிரிய முஜாஹித்களிற்கு எதிரான செயலணி முக்கியமான ஒன்றாகும்.

முஸ்லிமே ! காலம் வேண்டுவது என்ன ?



                இஸ்லாத்தின் வரலாறு என்பது ஒரு தெளிவான அரசியல் போராட்ட வரலாறே ஆகும் . அது தீனுல் இஸ்லாம் என்ற வகையில் மனித குல வரலாற்றின் ஒவ்வொரு நபிமார்களோடும் தொடர்பு பட்டதும் ,இறுதி நபியான முஹம்மத் (ஸல் ) அவர்களை தொடர்ந்து இறுதி நாள்வரை இந்தப் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும் . இப்படி தீன் என்பது ஒரே அடிப்படையில் இருந்தாலும் ஷரீஆ என்பது ஒவ்வொரு நபிக்கும் வேறுபட்டதாக இருக்கின்றது . யுக முடிவு வரை இனி பின்பற்றத்தக்க  ஷரீஆ வாக நபி முஹம்மத் (ஸல் )அவர்களின் ஷரீஆ வே இருக்கும் என்பது முஸ்லீம்களின் தெளிவான அகீதா . இகாமதுத் தீன் (தீனை நிலைநாட்டுதல் ) என்பது இந்த ஷரீஆ எவ்வித தங்கு தடையும் இன்றி பிரயோகிக்கவும் ,அமுல் படுத்தவும் கூடிய ஒரு ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும் .

Wednesday, January 15, 2014

'சியோனிச' உறவில் சிங்கள தேசியம் !


    இயல்பாகவும் ,திட்டமிட்டும் மனிதப் பலவீனங்களை கொண்டு உருவாகும் சிக்கல்களுக்கு தனது தேவைப்பாட்டையும் ,பங்களிப்பையும் வழங்குவதன் ஊடாக தனது நிர்ணயங்களை திணித்து இஸ்ரேல் எனும் தேசத்தை அங்கீகரிக்க வைப்பதே யூதப் பொறிமுறை ஆகும் .

     இஸ்ரேல் உருவாக்கம் ,மற்றும் பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் காணப்படும் எதிர் நிலைப்பாடுகளை தமக்கு சாதகமாக பணிய வைப்பதன் அரசியலில் இருந்தே 'சியோனிசம் ' கொஞ்சம் கொஞ்சமாக தனது அநியாய  முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டது . 'இஸ்லாமிய கிலாபத் ' எனும் அதிகார சாம்ராஜ்யத்தை திட்டமிட்டு வீழ்த்தியது தொடங்கி ,இஸ்லாமிய பூமியை வெறும் முஸ்லீம் தேசிய நிலங்களாக பிரித்தது வரை இந்த சியோநிசத்தின் தீய கரங்கள் பங்களிப்பு செலுத்தியுள்ளன . இதன் மூலமாக இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு தேசத்தின் எல்லைகள் இலகுவாக பலப்படுத்தப் பட்டன .