Monday, February 25, 2013

உங்கள் சிந்தனைக்கு சில வரிகள் .


         கடந்த 12ம் திகதி 'பராக் ஒபாமா 'அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வாகிய பின் முதல் தடவையாக பேசியபோது பின்வரும் கருத்தை வெளியிட்டார் . இந்தக் கருத்தின் பின்னால் உள்ள அரசியலை சற்று அலச வேண்டிய தேவை உள்ளது .


     "ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 66 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களில் 34 ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள். பின்னர் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு அங்கு தீவிரவாதிகளுடனான (அமெரிக்க)  போர் ஆண்டு இறுதியில் (2013 டிசம்பரில் ) முற்றிலும் நிறுத்தப்படும்." (அப்படியானால் தாலிபான் இல்லாமல் போய் விடுமா ? அல் காய்தா அழிந்து விடுமா ? இந்த வினாக்களை மையப்படுத்தி சில ஆழமான பார்வை எமக்கு அவசியமானது .

Sunday, February 24, 2013

ஐ .நாவின் பார்வையில் யுத்தக் குற்றமும் அது கண்டும் காணாத அடாவடிகளின் யுத்த சுத்தமும் !



                           அந்த' நான் கடவுள் ' என்ற அகம்பாவ தேசங்களின் நெற்றிக்கண் நியாயங்களில் பயங்கர குற்றங்கள் கூட இந்த   ஐ .நாவின் பார்வையில் சுத்தமாகவே எப்போதும் மொழி பெயர்க்கப்படும் ! அந்த அராஜகமான கழுகுக் கொள்கையை , அரிவாளும் சம்மட்டியும் கொண்டு எதிர்ப்போம் என்ற புரட்சிகர பூச் சுத்தளில் உலகின் ஒரு பகுதி அணி திரண்டதும் உண்மைதான் .ஆனால் நடந்த கதை வல்லரசுகளின் அடியாட்களாக அந்த குண்டர் படைக்கு தொண்டர் படையாக பனிப்போரில் மனித குலம்  பணி செய்தது மட்டும்தான்; இதில் வேடிக்கை என்னவென்றால் சில நடுநிலை நாயகங்கள் 'அணிசேராமலும்  ' அடியாளானது !

செத்துப் போன கிளிக்கு சிங்காரித்து என்ன பயன் ?



                                   மூன்று தசாப்த  இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

                  ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்ற விடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு  விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

Friday, February 22, 2013

நான் கலந்து கொண்ட 'ஜும்மாஹ் '.



              ' ஜும்மா' மேடைகள் சிந்தனைப்  பீடைகளை முஸ்லீம் உம்மத்தில் வளர்த்து விடும் வழமையான பணியை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறது என்பதற்கு , 22/02/2013 ஆகிய இன்று நான் கலந்து கொண்ட எனது 'மஹல்லா மஸ்ஜித் ஜும்மாஹ் ' ஒரு சிறந்த சான்றாக இருந்து வருகின்றது . வழமையான சம்பிரதாய தொடக்கத்துடன் ஆரம்பித்தபோது நானும் காதை கூர்மைப்படுத்தி கேட்க ஆரம்பித்தேன் .

Thursday, February 21, 2013

பசுந் தோல் போர்த்திய புலிகள் யார் !?




                "வணிகத்தில் இலஞ்சம் கொடுப்பது குற்றமில்லை " ! இவ்வாறு கூறுவது 'மாபியா ' இயக்கத்தின் தலைவரோ ,அல்லது ஒரு முன்னாள் 'ரவுடியோ ' அல்ல மாறாக ஒரு புகழ் பெற்ற வரலாற்றை பறை சாற்றி நிற்கும் முன்னாள் காலனித்துவ வாத நாடான 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி 'ஆவார் .

Wednesday, February 20, 2013

இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?


      முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)

Saturday, February 16, 2013

சிரியச் செய்திகள் சில .






கடந்த 11ம் திகதி அலெப்போ நகரத்தில் அமைந்திருந்த இன்னொரு விமானத் தளமான 'ஜர்ராஹ் ' கைப்பற்றப் பட்டபின் கடந்த 14ம் திகதி அசாத் படையின் 3 தாக்குதல் ஜெட் விமானங்கள் முஜாஹிதீன்களால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது .


இதன் பின்னர் அலெப்போ நகரம் மிகக் கடுமையான 'ஸ்கட் ' ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதில் சிவிலியன்கள் தரப்பில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .


Friday, February 15, 2013

ஒட்டு மொத்த 'கிரிமினல்களின் ' பக்குவமான புகழிடம் எது ?



                                           குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அதுதான் ஜனநாயகம் . ஆண்டிக்கு ஆண்டியே அரசனாம் !! இப்படித்தான் சொன்னார்கள் . சுதந்திரத்தை அடுத்தவனின் மூக்கு நுனிவரை நீட்டமுடியும் என்று துள்ளிக் குதித்தார்கள் . அதன் வடிவம் பற்றிய ஆசை எப்போதும் நிராசையானது தவிர இன்றுவரை நியாயமாகவில்லை . பகல் கொள்ளைக்கும் ,பக்கச் சார்புக்கும் , படு பாதகங்களுக்கும் அது துணை போனதே தவிர உருப்படியாக அது என்றும் தீர்வு சொன்னதில்லை .

Wednesday, February 13, 2013

விசேட செய்தி ...(12/02/2013)


         சிரிய இஸ்லாமிய போராளிகள் அலேப்போ நகரத்துக்கு வடக்கே அமைந்துள்ள இன்னொரு இராணுவ விமானத் தளமான  ' அல் ஜர்ராஹ் 'வை  கைப்பற்றியுள்ளனர் . இதில் விசேடம் என்னவென்றால் இந்தக் கைப்பற்றலில் சேதமற்ற நிலையில் ' மிக் ' ரக தாக்குதல் விமானங்களும் , எம் 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் சிலதும் எவ்வித சேதமற்ற நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது . தக்பீர் அல்லாஹு அக்பர் ...அல்லாஹு அக்பர் ...


      

மேற்கின் குட்டையில் ஊறிய எம் மட்டைகள் யார் ?



மேற்கு எனும் குட்டையில் ஊறிய
நமது மட்டைகளே இந்த ஒபெக், O .I .C எல்லாமே !!
இது எதிரிக்கு எண்ணை வார்த்து அந்த குப்ரிய
வண்டிகளில் பல்லாக்கு பவனி வரும்
செல்லாக் காசுகளே !!! ஓ என் முஸ்லீம் உம்மத்தே !
'யகூதிய ' உடும்புகளின் அநீதப் பொந்துகளில்
அரசியல் தஞ்சமாகியிருக்கும் இந்த
வெட்கக் கேடுகளை நீ புரிந்து கொள் .
உன் விடுதலையும் நீதியின் மறு வரவும்
கிலாபாத்தின் உதயத்தில் மாத்திரமே .

    கடந்த வாரம் 57 அரபு நாடுகளின் கூட்டமைப்பான O .I .C அமைப்பின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றது . இந்த தலைவர்களில் நேற்று இவர்களோடு இதே போல் ஒரு மாநாட்டில் கலந்து இன்று பலாத் காரமாக கம்பி எண்ணும் முன்னாள் தலைவர்கள் ,பலாத் காரமாக கபுரில் நுளைவிக்கப் பட்ட முன்னாள் தலைவர்கள் என கூட்டிக் கழித்துப் பார்த்தால் புதிய முகங்கள் , அதே மேற்கின் 'ஸ்பீக்கர்' களாக அமர்ந்து அமர்க்களப் படுத்தினார்கள் . 

Tuesday, February 12, 2013

பிசாசை விரட்டியபின் சந்திக்க இருக்கும் பூதம் ! (ஒரு பார்வை )


                                                                                                                                                                                                         சிரியாவின் பற்றமான சூழ்நிலை பற்றி ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோர்ன் கெர்ரி தெரிவித்துள்ளார் . அங்குள்ள நிலைமையை சமாளிக்கவும் வன்முறைகளை தடுக்கவும் இராணுவ ,இராஜதந்திர நடவடிக்கை பற்றி இப்போது அமெரிக்க அரசு தீவிரமாக ஆராய்வதாக கனேடிய வெளியுறவு அமைச்சருடன் கடந்த பெப்ரவரி 08 இல் நடந்த சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார் .

Saturday, February 9, 2013

எமது பார்வையில் சில முடிவுகள் . (சிந்தனைத் தூண்டளுக்கான ஒரு சிறு முயற்சி )



       இஜ்திஹாத் மூலம் ஒரு உசூலை மேட்கொள்ளுதல் என்பது ஒரு பாரிய துறை அதற்கு இஜ்திஹாத் பற்றிய சட்டங்களை கற்பதன் ஊடாக ஒரு உறுதியான தெளிவை பெறலாம் என நம்புகிறேன் . தீர்ப்பு என்ற வகையில் ஒரு பதிலை தரும் தகுதி எனக்கு இல்லை . ஆனால் ஒரு பொருத்தமான சிந்தனை நோக்கிய தூண்டலை முடிந்தவரை தருகின்றேன் . 

Friday, February 8, 2013

வேங்கைகளின் வேட்டைக்கு தயார்படுத்தப் படும் வெள்ளாடுகள் !?


" ........ ஒரு காலம் வரும் அன்று சண் ஆ வில் இருந்து ஹல்றல் மௌத் வரை ஒரு பெண் தனியாகச் செல்லாலாம் ......" (நபி (ஸல் ))


     மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இஸ்லாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளிள் ஒன்றே இந்த பெண் பாதுகாப்பாக வாழும் சூழல் பற்றியதாகும் . இன்று அத்தகு வாக்குறுதிகளை செயல் படுத்த விடாமல் தீமையின் அதிகார ஆணிவேர்கள் போடும் ஆட்டத்தின் விளைவு மிகப் பயங்கரமாக உள்ளது . சத்தியம் பயங்கர வாதமாக்கப் பட்டு அசத்தியம் நியாமாக்கப் பட்டுள்ள இன்றைய சூழலை விளக்க கீழ்வரும் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் . 


Thursday, February 7, 2013

இது சியோனிச ரேஞ்சில் ஒரு சிதம்பர இரகசியம் .


            கழுகுக்கு  உதவ தலைப்பாகை கட்டும் நாட்டுக்கு  சிங்கப் படை அனுப்ப கழுகு கேட்டால் அதுபற்றி யோசிப்போம் . மாணிக்க தீவின் ஊடகத் துறை பேச்சாளர் அதிரடி பேட்டி !! இந்த விடயம் சற்று குழப்பமாக இருக்கலாம் .ஆனால் தாம்  சியோனிசத்தின் பெட்டிப் பாம்புதான்  என்பதை சொல்லாமல் சொல்லும் ஆதார வாக்குமூலமாகவே இதை கருத வேண்டியுள்ளது .

யாருக்கு சொல்கிறார் யானைக்கதை !!??


     தேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர் ஒரு ஆதாரமாக எடுத்துள்ளது தவறான நகர்வு அப்படிப் பார்த்தால் கீழே ஆக்கத்தில் சொல்லும் யானைக் கதை சிலநேரம் அதை எழுதியவருக்காகவே என சொல்லப் பட்டிருக்கலாம் !


   தேசியம் என்ற சிந்தனையின் உள்ளே இருந்துதான் பக்தி மயமான குறுநில வாதம் உற்பத்தி ஆகும் என்பது சாதாரண விடயம்;அந்த வகையில் இன்று சிலரது பார்வை இலங்கையின் கடந்த கால அனுபவத்தை மறந்த ஒரு பார்வை . தேசத்தின் எதிரியாகவும் ,தேசியத்தின் எதிரியாகவும் ஏதாவது ஒரு குழுமத்தை காட்டுவதன் ஊடாகவே தேசிய அரசியல் என்பது பலமடையும் . ஒரு தேசிய இனம் என்பதை விட பெரும்பான்மை சிறுபான்மை என்பதன் ஊடாக ஒரே நிலத்தில் பிரித்தாளும் கொள்கையை இலகுவாக கையாளலாம் . என்பதே பிரித்தானிய அணுகு முறை . இந்த பயிற்றுவிப்பின் நீண்ட கால பிரதி பலனே கடந்த இனவாத யுத்தம் . மேற்கின் அரசியல் நாகரீக வழி வந்த இந்த சிந்தனைத்தரம் ஒரு 'மாபியா' தரக் கொள்கையே .