Tuesday, November 13, 2012

மூடப்பட்ட முட்டாள் தனத்தில் இருந்து அவிழ்க்கப்பட்ட அறியாமையை நோக்கி !




        'desert flower' எனும் நூலைப் பற்றி சரியாகச் சொல்ல வேண்டுமானால் மேலே நான் தந்த தலைப்பே போதுமானதாகும் 'வேண்டாப் பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் ' என்பதை மேற்கின் மீடியாக்கள் அடிக்கடி நிரூபிக்கின்றன . அவர்களது நோக்கம் ஆபிரிக்க பழங்குடியினரின்  தவறான 
கலாச்சார மரபை  தடுக்க வேண்டும்  தவிர்க்க வேண்டும் என்பதாக இருந்தால் இந்த விடயத்தை வேறு விதமாக அழகாக சொல்லியிருக்கலாம் ஆனால் இவர்களின் நோக்கம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் 

வீழ்த்துவது .

 

  1. பழங்குடியினரின் முட்டாள் தனத்தை வெளிக்காட்டுவது.   
  

2. இஸ்லாத்தையும் தவறானதாகவும் பிட்போக்கனதாகவும்   
சித்தரிப்பது . 
  
  3. மேற்கின் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் நியாயம் காட்டுவது .
                                                   'desert flower' எனும் நூல்  மேற்கின் இஸ்லாத்திட்கெதிரான மீடியா யுத்தத்தின் 
ஒரு இரகசிய ஆயுதமாக தாராளமாகவே பயன்படுத்தப் பட்டுள்ளது . பெண் விடுதலை ,பெண் சுதந்திரம்  எனும் பெயரில் ஒரு கலாச்சார ரீதியான கவர்ச்சி நோக்கி  பெண்கள் சமூகம் ஆசை காட்டி இழுத்துச்செல்லப் படுகின்றது . 

 
 ஒரு முஸ்லிமிடம் மூட நம்பிக்கைகள் இருக்கலாம் என்பதற்காக அது இஸ்லாத்தில் இருந்துதான் 
எடுத்தாளப்பட்டுள்ளது அல்லது இஸ்லாமும் அதை அங்கீகரிக்கிறது  எனும் மறைமுகமான சுட்டிக்காட்டல் தான் 'desert flower' இல் காட்டப்படும் தெளிவான பாணி . திறந்த பாலியல்  கலாச்சாரத்தின் கவர்ச்சிப் பிண்டம் தான் பெண் என்பதை மேற்கின் நாகரீகம் ஒரு பெருமையாகவே கருதுகின்றது . ஆனால் அது ஆபத்தான அசிங்கமான அவமதிப்பு என்பதை பெண்கள் சமூகம் உணராதவரை அந்த நிர்வாணம்தான் பெண் விடுதலை !! அப்படி ஒரு அழைப்புதான் இந்த 'desert flower' .





Sunday, November 11, 2012

சர்வதேச மலாலா தினம் உணர்த்தும் உண்மைகள் ........


(தாடி வைத்து குல்லா போட்டு துப்பாக்கியோடு வந்தால் அவன் முல்லா உமர்  குரூப் அதாவது தாலிபான் !! அப்படியானால் கோட் சூட் போட்டு  துப்பாக்கியோடு வந்தால் அவன் ஒபாமா குரூப்பா ?? கீழே ஒரு திரைக்கதை திரையில்லாமலே ஓட்டப் படுகின்றது மலாலா யூசுப் எனும் சிறுமியின் பெயரால்! படித்தால் உங்களுக்கே புரியும் .)

 (தலிபான்களின் சின்னம் பதித்த)  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான  பாக்.சிறுமி மலாலாவை கெளரவிக்கும் முகமாக நவம்பர் 10ஆம் திகதியை   மலாலா தினமாக  ஐ.நா அறிவித்துள்ளது. மலாலாவுக்கு நோபல்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானின்  சுவாத்  மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்த 15 வயதான மலாலா யூசுப்சை பாக். பெண்கள் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வந்த நிலையில் அவரை கெளரவிக்கும் விதமாகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது.
 

Saturday, November 10, 2012

சிறை குற்றவாளிகளின் தாய் வீடா ?


                  
           இடம்பெறும் சில நிகழ்வுகள் தொடர்பில் ஒரு தெளிவான அவதானத்தை உணர்த்தும் சம்பவங்களில் ஒன்றுதான் கடந்த 09/11/2012 வெள்ளிக்கிழமை இலங்கையின் வெலிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சமர் தொடர்பான விடயமாகும் . சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையை பொறுத்தவரை இது முதல் தடவை அல்ல. என்றாலும் இந்த நிகழ்வு இனவாத யுத்தத்தின் போது கருக்கொண்ட துப்பாக்கிக் கலாச்சார வடிவத்தின் அவசியமற்ற நாசகார பிந்திய பிறப்பின் சாயல் தெரிவதால் அதுபற்றி எழுத வேண்டிய கட்டாயம் இருக்கின்றது .
 

Friday, November 9, 2012

ஆடு நனைவதில் விக்கித்து அழும் ஓநாய் !!!


இது சிரியா பற்றி பிரித்தானிய பார்வை .....   சியோனிசத்தின் கௌரவ வேடம் !!!

   சிரிய அதிபர் பஸர் அல் அஸாதை நாட்டைவிட்டு வெளியேற்றுவதன் மூலம் அந்நாட்டு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமானால் அதற்காக ஒத்துழைப்பு வழங்க தான் தயாராகவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள கமரூன் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.சிரியாவில் மாற்றமொன்றைக் கொண்டுவரும்பொருட்டு எந்தவழிகளிலேனும் அஸாதை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், அதற்குத் தேவையான சகல விதமான ஒத்துழைப்புகளையும் நல்க பிரிட்டன் தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 
 

கிலாபா ஒரு கடமை! - அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களின் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள்...


அஹ்ளுசுன்னாவை சேர்ந்த மூத்த அறிஞர்களினதும் கருத்துக்களை இங்கு பதிகிறேன்.

அந்த ஆக்கம் கிலாபா வாஜிப் என்பதை தமது முடிவாக எடுத்த அறிஞர்களை பட்டியலிடுகிறது. இதில் அ

றிஞர் இப்னு ஹசம் அவர்கள் தனது (الفصل في الملل والأهواء والنحل) எனும் நூலில் :

اتفق جميع أهل السنة وجميع الشيعة، وجميع الخوارج (ماعدا النجدات منهم) على وجوب الإمامة
"தலைமைத்துவம் வாஜிப் (கடமை) எனும் விடயத்தில், அஹ்லுஸ் சுன்னாவுடைய அறிஞர்களும் அனைத்து ஷீஆக்கலும், (சில விதிவிலக்கானவர்களித்தவிர) அனைத்து கவாரிஜ்களும் கடமை எனும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்."

இமாம் இப்னு ஹஜர் அல்அச்கலாணி தனது 'பத்ஹுள் பாரி' நூலில் இது பற்றி குறிப்பிடும் போது, இமாம் நவவி அவர்களும் இன்னும் பலரும் இந்த விடயத்தில் (கிலாபா ஒன்று அமைவது கடமை) ஒத்த கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறார்.

இப்னு ஹஜர் ஹய்சமி எனும் அறிஞர் இது பற்றி ( الصواعق المحرقة) எனும் நூலில் கூறும்போது:

"اعلم أيضا أن الصحابة رضوان الله عليهم أجمعوا على أن نصب الإمام بعد انقراض زمن النبوة واجب بل جعلوه أهم الواجبات حيث اشتغلوا به عن دفن رسول الله صلى الله عليه وسلم

"சஹாபாக்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்களின் பின் ஒரு அரசியல் தலைவர் ஏற்படுத்தப் படல் வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை பட்டனர். மட்டுமல்லாது, அவர்கள் ஒரு முக்கிய கடமையாகவே ஆக்கினர். எந்த அளவு என்றால், நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்யும் வேலையை விட இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்." என்று குறிப்பிடுகிறார்.

சிந்தனைத் தடைகள் !!



என் ஆன்மீக கண்களை கட்டி 
'ஜாஹிலீய' கைத்தடி கொடுத்து 
இருளுக்குள் நடைபோட 
வைத்தது யார் ?
 தூய சிந்தனைக்கு விலங்கிட்டு 
அசத்திய சிறையில் 
ஆயுள் கைதியாய் 
தள்ளியது யார் ?

Thursday, November 8, 2012

அமெரிக்கா நடத்தி வரும் சிறைச்சாலைகளில் ஆப்கான் டைரி



அவர் பெயர் நூர். ஆப்கனிஸ்தான் வாசி. நண்பர்களுடன் சேர்ந்து பீடி புகைத்துக்கொண்டே அரசியல் பேசிக்கொண்டிருந்தார். கும்பலாக வந்தார்கள். பிடித்து கீழே தள்ளி நாலு சாத்து சாத்தினார்கள். எட்டி உதைத்தார்கள். அப்படியே வாரி ஜீப்பில் போட்டு கொண்டு போய் உள்ளே தள்ளினார்கள். விசாரணை தொடங்கியது. உண்மையைச் சொல் துப்பாக்கிகளை எங்கே வைத்திருக்கிறாய் என்றான் ஒருவன். எந்தத் துப்பாக்கியை என்றார் நூர். பளாரென்று ஒரு அறை விழுந்தது. நான்கு பேர் நூரின் மீது ஏறி நின்று மிதித்தார்கள். அவர் உடைகளைக் களைந்தார்கள். ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஏவிவிடப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நூர் அலறியடித்துக் கொண்டு அத்தனை 'உண்மைகளையும்' கக்கிவிட்டார்.

இது தான் சியோனிசம் ....


   
     கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப்  பிரதேசங்களில் புதிதாக 1213 குடியிருப்புக்களை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் புதிதாக அமைக்கவுள்ள 1213 குடியிருப்புக்களில்  609 குடியிருப்புக்கள் கிழக்கு ஜெரூசலம் அருகிலுள்ள எரக்ட்  பகுதியிலும் 606 குடியிருப்புக்கள் பிஸ்கட் சீ பகுதியிலும் 
நிர்மாணிக்கப்படவுள்ளதோடு மேலதிகமான 72 குடியிருப்புக்களும் மேற்குக் கரையில் 
நிர்மாணிக்கப்படவுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டதை முஸ்லிம் நாடுகளின் முகமூடி சியோனிஸ்ட் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.


 அமெரிக்காவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் சியோனிஸ்ட் ஒபாமா தொடர்ந்தும் பதவியிலேயே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். அதிகமான மலேசியர்கள் அமெரிக்க தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் இருந்தனர் என்றும் அவர் மலேசியாவின் த ஸ்டார் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை ஒபாமாவின் வெற்றியையடுத்து உலகில் முஸ்லிம் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட நாடான இந்தோனேஷியாவில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 

மீண்டும் வேதம் ஓத அதே அமெரிக்க சாத்தான் !!!சந்திக்க முஸ்லீம் உம்மா தயாரா ??

    சியோனிச  ஜனாதிபதித் தேர்­தலில் தற்போதைய ஜனாதிபதியும், ஜன­நாயக சியோனிசக் கட்சியின் வேட்பாள­ருமான பராக் ஒபாமா (வயது - 51) தம்மை எதிர்த்­துப் போட்டியிட்ட குடியரசு சியோனிசக் கட்சியின் வேட்பாளரான மிட்ரோம்னியைத் தோற்கடித்து இரண்டாவது தடவையும் வெற்றிபெற்றுள்ளார்.

இதோ இன்னொரு முஹர்ரம் ....


       அது கலீபா உமர் (ரலி ) ஆட்சிக்காலம் ; அபூ மூசா அல் அஸ் அரி (ரலி )  கலீபாவிட்கு எழுதிய கடிதத்தின் வரிகளின் முக்கியத்துவம் கலீபாவால் உணரப்பட்டது . அப்படி என்னதான் எழுதியிருந்தார் ?விடயம் இதுதான் " உங்களிடம் இருந்து வரும் கடிதங்களில் காலம் குறிப்பிடப்படுவதில்லை " எனும் செய்தியே அது . கலீபா முக்கியமான சஹாபாக்களை ஓன்று கூட்டி ஆலோசித்தார்கள் . முஸ்லீம் உம்மாவின் காலக்கணிப்பின்' கலண்டர் ' உதித்தது . அந்தக் கட்டங்கள் சுருக்கமாக உங்கள் கண்முன் தருகிறேன் .கீழே அவதானியுங்கள் .

Wednesday, November 7, 2012

இஸ்லாத்தில் அரசியல் அதிகாரத்தின் தரமும் ,பயண்பாடும் ,பிரயோகமும் ஒரு சுருக்கப்பார்வை ...


  
        அரசியல் என்பதன் உண்மையான பார்வை தவறான அறிமுகத்துடனே முஸ்லீம்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது .அதாவது1. இஸ்லாத்தில் அதன் முக்கியத்துவம் பெறுமதியற்றது ,2. இஸ்லாத்தில்  அதற்கென பிரத்தியோகமான பாதை வரையறுக்கப் படவில்லை , 3.சில செயட் கிரமங்களை செய்வதன் ஊடாக அரசியல் மற்றும் அதிகாரம் தானாகவே கிடைத்து விடும் போன்ற தவறுகளே அவைகளாகும்.இது ரசூல் (ஸல் )அவர்களின் சீரா தொடர்பான தவறான பார்வையில் இருந்தே தொடங்குகின்றது .

Tuesday, November 6, 2012

மதச்சார்பின்மை ! மேட்டுக்குடி அரசியலின் தந்திரமான கருவியே ..


      கண்ணுக்கு புலப்படுவதை வைத்துத்தான் சராசரி மனித உள்ளம் தனது நடத்தைகளை தீர்மானிக்கும் . இந்த சூழல் எமக்கு பிடித்திருக்கும் ஒன்றாக இருக்குமானால் அதற்கு ஏற்றால் போல் எமது சிந்தனைகளையும் நடத்தைகளையும் நாம் மாற்ற சிந்திப்போம் . பல்லின ,மத சமூகங்களுக்கு இடையில் வாழுவது தொடர்பான விருப்பம் இன்று மதச்சர்ப்பின்மை தொடர்பில் அதை  சுதந்திரப் பாதையாக  சிந்திக்க தூண்டுகின்றது . 
   

Saturday, November 3, 2012

அரசியல் 'கோமா ' ஒரு ஆதாரப் பார்வை ....


              
                சூழ்நிலைகள் இலட்சியங்களை திசை மாற்றும் சக்தி வாய்ந்தவை . பருவமடையாமல் வெளிவருவது ஒரு அரசியல் தற்கொலை ஆவது போலவே ,இலட்சிய வாதத்தில் இருந்து சூழ்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது அப்பட்டமாக அது அரசியல் கோமா நிலை ஆகும்  . இந்த நிலை இலட்சியத்தை  இரண்டாம் மூன்றாம் நிலைக்கு இட்டுச் சென்று கடைசியில் அதை காணாமல் செய்து, பெயரளவில் ஒரு பேசுபொருளாக  ஆக்கி விடும் . அத்தோடு அழிவையும் நிச்சயப்படுத்தும் .
 

அது கத்தியல்ல ஜனநாயகம் !



(உண்மைக்குள் ஒரு கற்பனை இனி உங்களுக்கு பெண்டகன் கட்டுக்கதைகள் இவ்வாறும் வரலாம் )
அவர் நிதானமாகவே முடிவெடுத்தார் ."மீண்டும் அதே கனவு இது என் ரப்புவின் கட்டளைதான் " என தனக்குள் முனு முனுத்தவாறு தெளிவடைந்தார் . கட்டளையை நிறைவேற்றவும் துணிந்தார் .எந்த ஒரு தந்தைக்கும் கஷ்டமான கட்டளைதான் இறைவனுக்காக பலி கொடுக்க வேண்டியது மகனையல்லவா !! அதை விட சிலருக்கு தமது கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கச் சொன்னாலும் சுகமானதுதான் .