Saturday, November 10, 2012

சிறை குற்றவாளிகளின் தாய் வீடா ?


                  
           இடம்பெறும் சில நிகழ்வுகள் தொடர்பில் ஒரு தெளிவான அவதானத்தை உணர்த்தும் சம்பவங்களில் ஒன்றுதான் கடந்த 09/11/2012 வெள்ளிக்கிழமை இலங்கையின் வெலிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சமர் தொடர்பான விடயமாகும் . சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையை பொறுத்தவரை இது முதல் தடவை அல்ல. என்றாலும் இந்த நிகழ்வு இனவாத யுத்தத்தின் போது கருக்கொண்ட துப்பாக்கிக் கலாச்சார வடிவத்தின் அவசியமற்ற நாசகார பிந்திய பிறப்பின் சாயல் தெரிவதால் அதுபற்றி எழுத வேண்டிய கட்டாயம் இருக்கின்றது .
                                                                              மேற்படி சம்பவத்தில் ஏறத்தாள 13 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும்   .சம்பவ தினம் குறிப்பிட்ட பகுதியில் இயல்புநிலை ஸ்தம்பிதம் அடைந்து யுத்தக்களம் போல் காட்சி தந்ததாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன . கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் மற்றும்  விசேட அதிரடிப்படையினருக்கும் இடையிலேயே இந்த சமர் இடம்பெற்றுள்ளது .
                                                                                சம்பவம் திட்டமிடப்பட்டதா ? இல்லையா ? என்ற வாதப் பிரதிவாதங்கள் ஒருபக்கம் இருக்க கைதிகள் சிறைக்காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து . விசேட அதிரடிப்படையினருடன் சமரிட்டுள்ளனர் ! ஆகவே இங்கு நெறிப்படுத்தலுடன் கூடிய இராணுவ தாக்குதல் வியூகம் பயன்படுத்தப்பட்டுள்ளது ! இது ஆயுத கலாச்சார வடிவத்தின் பிடியில் இருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை என்பதையும் ,மேலும் குற்றவியல் தடுப்பு மற்றும் தண்டனை தரத்தில் காணப்படும் பாரிய ஓட்டையையும் , நீண்ட சிறைச்சாலை தண்டனை முறை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றது .
                                                                                    குற்றத்தடுப்பு எனும் பெயரில் குற்றவாளிகளின் கூட்டுககலாச்சாரம்  மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதே காலஅவகாத்துடன்  மற்றும் கால அவகாசம் அற்று கொடுக்கப்படும் சிறைத் தண்டனையாகும் . இந்த சிறைத்தண்டனையால் திருந்துவது என்பதை விட ஒரு குற்றவியல் சாம்பிராஜ்யத்தின் அங்கத்துவனாக ஒருவன் உருவாகுவதட்கான வாய்ப்புக்களே இங்கு அதிகமாகும் . 
                                                                                                              தவறுக்கான தண்டனைகள் அவசரமாகவும் பகிரங்கமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் .மாறாக குற்றவாளிகளின் ஒரு கூட்டு நாகரீகத்தை தோற்றுவிப்பதால் குற்றங்கள் தடுக்கப்படாது மாறாக குற்றங்கள் கட்டமைக்கப்பட்ட நிறுவனமயப்படும் ! அதன் பின்னால் அதை எதிர் கொள்வது ஒரு பாரிய சவாலாகி விடும் .  சட்டம் என்பது குற்றவாளிகளின் கேடயமாகி விடுமானால் சிறை என்பது அவர்களின் தாய் வீடாகிவிடும் . 

No comments:

Post a Comment