Wednesday, November 7, 2012

இஸ்லாத்தில் அரசியல் அதிகாரத்தின் தரமும் ,பயண்பாடும் ,பிரயோகமும் ஒரு சுருக்கப்பார்வை ...


  
        அரசியல் என்பதன் உண்மையான பார்வை தவறான அறிமுகத்துடனே முஸ்லீம்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது .அதாவது1. இஸ்லாத்தில் அதன் முக்கியத்துவம் பெறுமதியற்றது ,2. இஸ்லாத்தில்  அதற்கென பிரத்தியோகமான பாதை வரையறுக்கப் படவில்லை , 3.சில செயட் கிரமங்களை செய்வதன் ஊடாக அரசியல் மற்றும் அதிகாரம் தானாகவே கிடைத்து விடும் போன்ற தவறுகளே அவைகளாகும்.இது ரசூல் (ஸல் )அவர்களின் சீரா தொடர்பான தவறான பார்வையில் இருந்தே தொடங்குகின்றது .


                  ஒரு முறையான திட்டமிட்ட கொள்கையே இஸ்லாமாகும் . அது தனது நடத்தையில் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறியதாக சில விடயங்களை சொல்லிவிட்டு அதை நாம் நினைத்த ஒழுங்கில் பின்பற்ற தூண்டுவதில்லை . அதாவது முறைமைகள் அற்ற வெறும் ஆன்மீக பரிசுத்தம் பற்றி பேசி செல்லும் மதமும் அல்ல . அதே போல ஆன்மீக பரிசுத்தத்தில் சில இபாதாக்களின்  படித்தரங்களை ஏற்படுத்தி அதன் பின்தான் ஒருவனுக்கு தன்னை முஸ்லீம் என்று கூற முடியும் என்ற புரோகித வாடை கலந்த மதமும் அல்ல .


          மாறாக  இஸ்லாம் சொல்வது அதன் அகீதாவை அறிவு பூர்வமாக ஏற்று அதனடியாக அதன் கட்டளைகளை எவ்வித அதிர்ப்தியும் அற்ற நிலையில் செயல் படுத்த துணிவது . எனவே (சிர்க்,பித் அத் போன்ற )சிந்தனை வீழ்ச்சிகளின் அடிப்படை அகீதா தெளிவின்மையே . எனவே இங்கு அகீதாவை மீண்டும் மீண்டும் சொல்வதன் ஊடாகவே( சிர்க் ,பித் அத் போன்ற பாவங்களை தடுக்க முடியுமே தவிர சிர்க் ,பித் அத் போன்ற பாவங்களை )விமர்சிப்பதன் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது .எனவேதான் இஸ்லாம்' லா இலாஹ இல்லல்லாஹ் ' என்பதை தனது ஆரம்ப பிரகடனமாக முன்வைத்து வாழ்க்கை தொடர்பான இஸ்லாத்தின் வழிமுறை பிரகடனமாக முன்வைக்கின்றது .

                           இந்த ' லா இலாஹ இல்லல்லாஹ் ' என்பதன் ஊடான ஒரு முஸ்லிமின் போராட்டம் தனக்கென பிரத்தியோகமான கலாச்சாரத்தையும் ,நாகரீகத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் இப்போது அதன் பாதுகாப்பு அதிகார மயப்பட்ட அரசியலில் பிணைத்துக்கொள்ள வேண்டும் . இதுவே இறைவனின் எதிர் பார்ப்புமாகும் .எனவேதான் இஸ்லாம் மதீனாவின் அதிகார கட்டமைப்புக்குள் வரும் வரை அதன் இபாதத் தொடர்பான கட்டளைகள் மட்டுப் படுத்தப் பட்டிருந்தமைக்கான காரணுமாகும். 
அதாவது அருளப்படவில்லை .


                             மேலும்" மனிதன் தவறுக்கும் மறதிக்கும் இடையில் படைக்கப் பட்டுள்ளான்" என்ற இஸ்லாத்தின்  பொது விதிக்கமைய அவன் வாழும் சமூக சூழலை பாதுகாக்கவும் நெறிப்படுத்தவும் 
குற்றவியல் தொடபான சட்டங்களும் , சிவில் உறவுகள் தொடர்பான கட்டளைகளும் மதீனாவில் வைத்தே அருளப்பட்டுள்ளன . இதிலிருந்து இஸ்லாத்தின் அரசியல் தொடர்பான தெளிவான காத்திரமான பார்வை எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் . மேலும் அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) தெளிவான நகர்வு பிரத்தியோகமான பாதை, வழிமுறை  கொண்ட அரசியலாகவே இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் .



                               


             

No comments:

Post a Comment