Thursday, November 8, 2012

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டதை முஸ்லிம் நாடுகளின் முகமூடி சியோனிஸ்ட் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.


 அமெரிக்காவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும் சியோனிஸ்ட் ஒபாமா தொடர்ந்தும் பதவியிலேயே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். அதிகமான மலேசியர்கள் அமெரிக்க தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் இருந்தனர் என்றும் அவர் மலேசியாவின் த ஸ்டார் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை ஒபாமாவின் வெற்றியையடுத்து உலகில் முஸ்லிம் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட நாடான இந்தோனேஷியாவில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஒபாமாவின் மீள் வெற்றியானது எகிப்து-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என அந்நாட்டின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி தெரிவித்துள்ளார்.
 
"அமெரிக்க மக்களின் தெரிவை நாம் பாராட்டுகிறோம். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அமெரிக்க நிர்வாகமானது இரு நாட்டினதும் இலக்குகளை அடைந்து கொள்வதில் ஒருமித்துச் செயற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம்" என முர்ஸின் பேச்சாளரான யாசிர் அலி ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
 
2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக முதன் முறையாகத் தெரிவான பின்னர் கெய்ரோவுக்கு விஜயம் செய்து உரையாற்றிய ஒபாமா, முஸ்லிம் நாடுகளுக்கான தனது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலே தந்த விபரங்களோடு சிறப்புத்தகவலாக ஐரோப்பிய யூனியன் ஒரு மில்லியன் யூ .எஸ் டொலரை மியன்மார் இனவாத அரசுக்கு கொடுக்க உடன்பட்டுள்ள நல்ல செய்தியையும் லண்டன் பி .பி .சி .கடந்த மூன்று  நாட்களுக்கு முன் அறியத்தந்தது . இது இதுவரை செய்த கடமைகளுக்காகவா ? அல்லது இனி செய்யப்போகும் கடமைகளுக்காகவா ? என்பது குறிப்பிடப்பட வில்லை .
                                                                  இந்தத் தகவல்களோடு துருக்கியின் மியன்மார் வருகையையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கடமை உலக அரசியலை அலசிப்பார்க்கும் யாவருக்கும் உண்டு ...  (இந்த சதிகள் தொடரும் ..)

No comments:

Post a Comment