Sunday, November 11, 2012

சர்வதேச மலாலா தினம் உணர்த்தும் உண்மைகள் ........


(தாடி வைத்து குல்லா போட்டு துப்பாக்கியோடு வந்தால் அவன் முல்லா உமர்  குரூப் அதாவது தாலிபான் !! அப்படியானால் கோட் சூட் போட்டு  துப்பாக்கியோடு வந்தால் அவன் ஒபாமா குரூப்பா ?? கீழே ஒரு திரைக்கதை திரையில்லாமலே ஓட்டப் படுகின்றது மலாலா யூசுப் எனும் சிறுமியின் பெயரால்! படித்தால் உங்களுக்கே புரியும் .)

 (தலிபான்களின் சின்னம் பதித்த)  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான  பாக்.சிறுமி மலாலாவை கெளரவிக்கும் முகமாக நவம்பர் 10ஆம் திகதியை   மலாலா தினமாக  ஐ.நா அறிவித்துள்ளது. மலாலாவுக்கு நோபல்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானின்  சுவாத்  மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்த 15 வயதான மலாலா யூசுப்சை பாக். பெண்கள் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வந்த நிலையில் அவரை கெளரவிக்கும் விதமாகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது.
 
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையின் பிரகாரம் தற்போது பிரித்தானியாவின் குயின்ஸ் எலிசபத் மருத்துவமனையில்சிகிச்சைப் பெற்று வரும் மலாலாவை கெளரவிக்கும் வகையில் நவம்பர் மாதம் 10 ஆம் திகதியை மலாலா நாளாக கொண்டாட  தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்   அவரை ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதுவராகவும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்  கேர்டன் பிரவுன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்  “இந் நாளானது   மலாலா மற்றும் அவரைப்போன்ற கல்வி உரிமை மறுக்கப்படும்  32 மில்லியன் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” என்றார்.
 

 
                                                                        இது குறித்து கருத்து வெளியிட்ட ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ,கல்வி கல்வி என்பது அடிப்படை உரிமையாகும்.மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது.மலாலா  பெண் கல்வி உரிமைக்கான அடையாளச்சின்னம். மலாலா மட்டுமன்றி  உலக நாடுகளிலுள்ள ஆண் ,பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்யவது தொடர்பில்  அனைவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். என தெரிவித்தார்.


கீழே வருவது பாகிஸ்தான் கல்வி அமைச்சரின் கருத்துக்கள் ....

தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  தற்போது பிரித்தானியாவின் குயின்ஸ் எலிசபத் வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண்கள் கல்வி தொடர்பில் குரல் கொடுத்த பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் தைரியத்தின் சின்னம் என பாக்.கல்வி அமைச்சர் சர்தார் ஷாஜெஹான்  யூசுப் தெரிவித்துள்ளார்.சர்வதேச கல்வி தொடர்பான மா நாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது ,
 
மலாலா பாடசாலையிலிருந்து திரும்பும் வழியிலேயே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.அவர் தைரியத்தின் சின்னம்.அவர் விரைவில் குணமடைந்து பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்பதே எங்கள்  எதிர்ப் பார்ப்பாகும் என்றார்.அத்துடன் மலாலாவை ஒரு கல்விக்கான தூதுவராக ஏற்றுக்கொள்ளும் படியும் அவர்  குறித்த கல்வி மா நாட்டில் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.
 

 
இரண்டு நாட்கள்  நடைபெறும் குறித்த கல்வி தொடர்பான மாநாடான ஈ -9 மா நாட்டில் உலகில் அதிக சனத்தொகையைக்  கொண்ட 09 நாடுகள் பங்குகொள்கின்றன . இம்முறை பாகிஸ்தானுடன் பங்களாதேஷ், பிரேசில் , சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, நைகர்  ஆகிய நாடுகள் பங்கு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களின் கல்வி தொடர்பில் ஆர்வலராக உலகால்  அறியப்பட்ட  15 வயது  சிறுமி ஒருவர் துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக்கொலை செய முயன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றபோது முழு உலகமே அதிர்ச்சியிலும்  கவலையிலும்  உறைந்து போனது. பாடசாலை சென்ற குறித்த சிறுமி பாடசாலை  விட்டு வீடு திரும்புகையிலேயே கவலைக்குரியவகையில் இச் சம்பவம் இடம்பெற்றதாக  சர்வதேச  செதித்தாபனங்களூடாக அறிய முடிகிறது.

உண்மையில் யார் இந்த சிறுமி? ஏன் அவர் மீது தாக்குதல் நடத்த வேண்டும்? யாரால் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை தெரிந்து கொள்வது நமக்கு சம்பவம் தொடர்பில் பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள துணை புரியுமல்லவா?
பாகிஸ்தானின் ஹைபர் பக்தூன்வா மாகாணத்தில் சுவாத் மாவட்டத்தில் மிங்கோரா நகரில் 1998 ஆம் ஆண்டு பிறந்தவரே துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்கான சிறுமி ‘மலாலா யூசுப்ஸை’. ஒரு கவிஞரை தந்தையாகப் பெற்றிருந்த மலாலாவுக்கு கல்வியில் இயற்கையாகவே நாட்டம் அதிகமாகவே இருந்தது. பெற்றோரும் தனது மகள் கல்வியில் சிறந்து விளங்குவதையே விரும்பியபோதிலும் குறித்த பிரதேச நிர்வாகத்தின் முன்னெடுப்புகள் அக்கனவுகளையெல்லாம் சிதறடிக்கும் விதமாகவே அமைந்திருந்தது. 
ஏனெனில் மலாலா பிறந்த அந்த சுவாத் பள்ளத்தாக்கு தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘குல் மகா’  என்பவர் பி.பி.ஸி உருது மொழிச் சேவைக்கு வழங்கியிருந்த டயறிக் குறிப்புகளே மலாலாவை தலிபான்கள் குறிவைக்க ஏதுவானது.

குறித்த  டயறிக் குறிப்புக்களை வழங்கிய குல் மகா வேறு யாரும் அல்ல, மலாலா யூசுப் ஸை தான். 

அது 2009 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதி. மலாலாவுக்கு அப்போது வெறும் 11 வயது மட்டுமே. சுவாத் பள்ளத்தாக்கு  தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமது இறுக்கமான சட்டதிட்டங்களை  சுவாத் பகுதியில் அமுல்படுத்தி வந்த தலிபான்கள் பெண்களின் கல்வி தொடர்பிலும்  கடும் போக்கையே கடைப்பிடித்தனர். அதனால்  கல்வியில் மிகுந்த ஆர்வமுடையவராக  விளங்கிய மலாலா  தான் அனுபவிப்பவற்றை  டயறிக் குறிப்பாக்கி பி.பி.ஸி. யினூடாக உலகுக்கு தெரியப்படுத்தினார்.

பாக். அரசு  சுவாத் பள்ளத்தாக்கை தலிபான்களிடமிருந்து மீட்கும்வரை அவர்களால் குல் மகாயை அடையாளம் காண முடியவில்லை.  ஏனெனில் அது ஒரு புனைப் பெயர். பாகிஸ்தான் அரசு தனது அதிகாரத்தை   சுவாத் பள்ளத்தாக்கில் நிலை நிறுத்திய பின்னர்தான் மலாலா யூசுப்ஸைதான் அந்த குல் மகா என உலகம் அறிந்தது. 

பெண்களின் கல்வி தொடர்பில் தொடர்ந்து ஆதரவுக் கருத்துக்களை டயறிக் குறிப்புக்களாக வெளியிட்டு துணிச்சல்மிகு பணியினை செததற்காக  மலாலாவை  விருதுகளும் பாராட்டுக்களும் முத்தமிட்டன. 2010  ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சமாதானத்துக்கான பரிசினை  முதன் முறையாக வென்ற மலாலாவுக்கு சர்வதேச  சிறுவர்களுக்கான சமாதானப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளும் விருதுகளும் கிடைத்தன. சமாதானத்துக்கான பரிசினை அப்போதைய பிரதமர் யூசுப் ரசா கிலானி வழங்கி வைத்தபோது  மலாலாவிடம் உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டிருந்தார். அதற்கு மலாலா தமது பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்ப தொடர்புகளின்பொருட்டு பெண்களுக்கான பட்டப் படிப்புக் கல்லூரி ஒன்றினை  நிறுவுமாறு வேண்டுகோள்விடுத்திருந்தார். சாதாரண பாடசாலைகளுக்கு பெண்கள் சென்று கல்வி கற்பதை விரும்பாத தலிபான்களுக்கு மலாலாவின் இந்த வேண்டுகோள் மேலும் ஆத்திரத்தை ஊட்டியிருக்கக் கூடும்.

சம்பவமன்று பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லத் தயாரான நிலையில் பாடசாலை மைதானத்திலிருந்து பஸ்ஸில் ஏறிய நிலையிலேயே தலிபான்களை  சார்ந்தவர் என சந்தேகிக்கப்படும் தாடி வைத்த அந்த துப்பாக்கிதாரி தாலிபான் சீருடையில் வந்து  மலாலாவின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செது விட்டு தப்பித்துள்ளார்.

(சம்பவங்களை உருவாக்குதல் என்பதும் ,சம்பவங்களுக்காகவே உருவாக்குதல் என்பதும் , மேற்கின் உளவுத்துறைக்கு கைவந்த கலை இந்த விவகாரமும் அப்படி ஒன்றுதான் .)

No comments:

Post a Comment