Wednesday, November 21, 2012

காலம் கனியும் காத்திருங்கள் .



   

   பாலஸ்தீன விவகாரம் பற்றி புரிந்து கொள்ள ஒரு நீண்ட நெடிய வரலாற்றுத் தெளிவு அவசியமானது .அப்படி இல்லாமல் இடை நடுவில் இருந்து பார்க்கும் போது அந்த மண்ணை ஆக்கிரமித்துள்ள யூதர்கள் தொடர்பில் நடுநிலை தவறிய பக்கச்சார்பு இயல்பாகிவிடும் அல்லது அங்கு நடக்கும் அநீதிகள் தொடர்பில் மித மிஞ்சிய கொடிய வார்த்தைகளையும் பேச முற்பட்டு விடுவோம் அனேகமாக இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது .


                                     ஒரு மாற்று மத சகோதரன் தனது ஆதங்கத்தை பின்வருமாறு இது தொடர்பில் வெளிப்படுத்துகிறார் 
1. அந்த யூத அக்கிரமிப்பாளர்களது பாதுகாவலனாக அமெரிக்கா  இருந்துவர அந்த நசரானியின்  பாதங்களை கழுவி இஸ்லாத்தின் அடிவருடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்கள் தங்களது  தவறை உணர மாட்டார்களா ? 
2. இந்த நிகழ்வுகள் தெரியாமல் அல்லாஹ் 'ரெஸ்ட்' எடுக்க சென்று விட்டானா ? (அல்லாஹ் (சுப ) நம்மை பாதுகாக்க வேண்டும் ) என கேள்வி எழுப்புகிறார் .
                        
                                       இவரது  முதலாவது கேள்வி யதாத்தத்தின் உண்ணிப்பான பார்வையையும் ,இரண்டாவது கேள்வி கடவுள் கொள்கை மற்றும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் இடைத் தொடர்பு , இறை உதவி ,காரண காரிய விதி , போன்ற பல்வேறு விடயங்களின் தெளிவோ ஆய்வோ அற்ற நிலையில் சொல்லப்பட்ட குழந்தை தனமான வார்த்தைகள் . இவருடைய  பலவீனத்தை நிவர்த்தி  செய்ய கடவுள் கொள்கை ,இறைவன் தொடர்பில் ஒரு தெளிவான தேடல் அவசியமானது என்பது மட்டும் தான் எம்மால் பரிந்துரைக்கக் கூடியது . விரும்பினால் அதற்கும் எம்மால் உதவமுடியும் .



                                                                       சரி இப்போது நாம் விடயத்துக்கு வந்தால் பாலஸ்தீன் விவகாரம் இன்று நகர்ந்து கொண்டிருக்கும் திசையில் முஸ்லீம்கள்  தரப்பு சேதம் ,கொடுக்கப்படும் விலை மிக மிக அதிகமாகும் .ஆனால் ஒரு உண்மையை நாங்கள் அவதானித்தால் , தலைமையும் ,தலைவர்களும்  தொடர்ச்சியாக யூதக் குறிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டும்  அச்சுறுத்தும் அதி நவீன ஆயுதங்கள் பிரயோகிக்கப் பட்டும் ,சுற்றியிருக்கும் முஸ்லீம் உலகு யூத சதிகளால் பாரா முகமாக்கப்பட்டு உள்ள நிலையிலும் அது ஒய்வடையாத , ஆயுத சமபலமற்ற நிலையிலும் இறுதி  வெற்றி தோல்விகள் தீர்மானிக்க முடியாத களமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது ஏன் ? இது பற்றி யாரும் சிந்தித்ததுண்ட ? 




                                  வெறும் சில கற்களை கையில் வைத்துக்கொண்டு உலகின் அதி நவீன யுத்தத் தாங்கிகளுக்கும் , கவச வாகனங்களுக்கும் முன் எதிர்க்கத் துணிந்த அந்த சிறார்களை நினைத்தால் சிலருக்கு முட்டாள் தனமாக தோன்றலாம் ஆனால் அங்கு ஒரு உத்வேகமிக்க போராட்ட உணர்வு பளிச்சிட வில்லையென்றால் அந்த  கணிப்பு தவறானது . அதாவது ஒவ்வெரு பாலஸ்தீனனும் பயிற்சி பெற்று சீருடை அணிந்து அங்கு களமிறங்க வில்லை மாறாக அங்கு போராட்டத்தின் குழந்தையாகவே அவன் பிறக்கிறான் இன்று ஆட்லறிகளின் அதிர்வில் அங்கு தொட்டிலாட்டப்பட , சீரிச்செல்லும் தோட்டாக்கள் தாம் அவர்களின் தாலாட்டு .அவர்களது தலைக்கு மேல்' ஐயன்  டோம் டிபென்ஸ்  சிஸ்டம் ' இல்லை ! , 'ஆட்டோமேடிக்  அண்டி எயார் கிராப்ட் மிசைல் சிஸ்டம் இல்லை !




                                    வீரம் அந்த மண்ணில் வரலாற்று நெடுகிலும் புதைக்கப்பட்ட விதை அது விருட்சமாகி காயாகி கனியாகி மீண்டும் விதையாகி தொடர்கின்றது . இறைவன்  நாடினால்  இனியும் தொடரும் . எதுவரை  என்றால் அநீதி அந்த  மண்ணில் இருந்து அகற்றப்படும் வரை , எதிரியின் சுடு சக்தி( fire power ) என்பது மிக மிக அதிகம் தான் .ஆனால் இந்த முஸ்லீம் உம்மாவின் மனோவலிமை அதைவிட அதிகமானது .இறைவன் நாடினால் இஸ்லாத்தின் அரணால் யூத வெறியர்கள் முற்றுகையிடப்படும் நாள் வெகு  தூரத்திளில்லை .




No comments:

Post a Comment