Saturday, November 24, 2012

பெண் விடுதலை என்பது விருப்பத்தோடு நடக்கும் விபச்சாரமா ?



      சாக்கடைக்குள் விரும்பி விழுந்து அந்த அருவருப்பை சந்தனமாக்கி அதில் அடுத்தவர்களையும் விழச்செய்வதற்கு அங்கீகாரம் கேட்டு கூவுகிறது ; பெண்  விடுதலை எனும் பெயரில் இந்த முஸ்லீம் உம்மாவின் உதிரத்தில் உதித்த ,மேற்கின் கலாச்சார  வைரசால் பீடிக்கப் பட்ட ஒரு முழு நீலக்குயில் !


          மேற்கின் மீடியாக்களுக்கு வழமை போலவே சும்மா சப்பும் வாய்க்கு ஒரு சுவையான 'சுவிங்கம்' கிடைத்தது போல் 'விபச்சாரத்துக்கு  லைசென்ஸ் கேட்டு போராடும் முஸ்லீம் பெண் சமூகவியலாளர்' எனும் தலைப்பு நன்றாகவே 'வேர்க் அவுட் ' ஆகியுள்ளது .அதன் தற்போதைய  கதாநாயகி இலங்கையின் 'சர்மிளா செய்யத்  'அவ்வளவுதான் .


               இங்கு நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்த முஸ்லீம் உம்மாவின் வழிவாராக வந்த கலாச்சார வேலி இந்த அதிரடி நடவடிக்கை மூலம் அதன் இரகசிய தாண்டல்களையும் , ஓட்டைகளையும் மீறி பிடுங்கி அகற்றப்பட்டுள்ளது .எனும் கெட்ட செய்தியே ஆகும் .ஒழுக்கத்தையும் ,தன்மானத்தையும் பற்றி சிந்திக்கும் முஸ்லீம் ,முஸ்லீமல்லாத ஒவ்வொருவரும் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை . இந்த விடயம் எந்தளவு தூரம் சரியான 'ரூட்டில் ' சிந்திக்கப் பட்டுள்ளது ? நாம் உணர வேண்டிய விடயங்கள் என்ன ?

                    'அகீதாவுக்கு 'அழுத்தம் கொடுக்காத 'சரீயத் 'மீது விசுவாசத்தை எதிர்பார்ப்பதும் ,'பிக்ஹை ' சுற்றியே பிரச்சினைகளை வட்டமிடும் ஆன்மீக வாதமும், தமது தவறுகளை மறுபரிசீலனை செய்ய நடந்துள்ள இந்த நிகழ்வு ஒரு சிறந்த ஆதாரமாகியுள்ளது . 'செவி மடுத்தோம் வழிப்பட்டோம் ' என்பது வெறும் சமூக கலாச்சார அழுத்தங்களால் 
கட்டமைக்கப்பட முடியாதது என்பதையும் , இஸ்லாமிய அகீதா தொடர்பில் தெளிவான அறிவுத் தேடலின் விளைவாக 
மட்டுமே கலாச்சார வேலி பாதுகாக்கப் பட முடியும் என்ற செய்தியையும் இஸ்லாமிய வாதம் பேசும் ஒவ்வொருவருக்கும் உணர்த்துவதாகவும் இந்த சம்பவம் நடந்துள்ளது .


                                  பெண் மற்றும் அவளது கண்ணியம் குடும்பம் ,சமூகவியல் ,கலாச்சாரவியல் என்பவற்றில் அவளது மறுக்க முடியாத தேவை ,சேவை என்பன பற்றி இஸ்லாத்தின் அறிவார்ந்த பார்வை எட்டுச் சுரக்காய் தரத்தில் இருக்க ,அவள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படுவது  ஆணாதிக்க ஜாஹிலீய வடிவங்களில் இருந்தே என்பது ஆண்களால் புரியப்பட வேண்டும் .




                                   பண்டைய கிறிஸ்தவம் அவளை'பாவத்தின் ஆன்மா ' என்றது . சிலகாலம் அவளுக்கு ஆன்மா என்று ஓன்று இல்லை எனவும் வாதிட்டது .இதேபோல கீழைத்தேய கலாச்சாரமும் இது விடயத்தில் சளைத்ததாக இருக்கவில்லை . அடிப்படையே அற்ற இந்த அடக்கு முறைகளின் உச்சக்கட்டமாகவே பெண் விடுதலை எனும் அழுத்தமான கருத்தியல் அவளில் கருக்கொண்டது .



                                                   அழுத்தமான கட்டுப்பாடுகள் பெண்களுக்கு மட்டும் தானா ? என்ற அவளது ஆதங்கமான கேள்விகளுக்கு  குழந்தையில் அவளுக்கு நிலாச்சோறு ஊட்டும் காலம் முதல் அறிவு பூர்வமாக ஊட்டி வளர்க்க வில்லை . முஸ்லீம்களின் அறிவு வீழ்ச்சியின் விளைவுகளில் இதுவும் ஒரு அங்கமானது . அதாவது பெண் அடிமைத்துவம் அறிந்தோ அறியாமலோ எம்மால் பின்பற்றப்பட்டுள்ளது . அவள் விடுதலையை தவறாக அவள் கையில் எடுக்கும் போது மட்டும் உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுத்து சீறிப் பாய்வதை விட அவளின் சிந்தனை தரத்தின் தவறை உணர்த்துவதும் எமது கடமையே .


                                     'நான் அடிமைப்படுத்தப் பட்டுள்ளேன்'  என்னும் அவளது ஆதங்கத்தில் இருந்து அவள் விடுதலை வேண்டியபோது .அவளது கண்ணுக்கு தெரிந்தது ,உலகத்தை ஆதிக்கப் படுத்தியிருந்தது சுயநல நுகர்வுக் கலாச்சாரத்தின் முதலாளித்துவ வடிவமே ,பெண் விடுதலை தொடர்பில் ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவத்தை நோக்கி இட்டுச்செல்வதே பெண் விடுதலை என்று சொல்லாமல் இதுவிடயத்தில் முதலாளித்துவம் சொன்ன தீர்வு அது  கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரத்தோடு அவளை வீதிக்கிறக்குவது . 


                                                                                                                                                                          இங்குஅவள் மீதான கட்டளை அழுத்தங்கள் தளர்த்தப் பட்டு கவர்ச்சி நுணுக்கங்களால் அவள் மூளைச் சலவை அவள் அறியாமல் செய்யப்படுவது தவிர அவள் வெறுத்தோடிய அதே  ஆணாதிக்கம் சுதந்திரமான கலை நயமிக்க கவர்ச்சிப் பண்டம் என்ற பார்வையோடு உலகில் அவள் உலாவிடப்பட்டாள் அவ்வளவுதான் .



                       ஆணாதிக்கத்தில் இருந்து பெண்விடுதலை தொடர்பில் முதலாளித்துவத்தின் தீர்வு அவள் சுயநல இலாப நோக்கின் அற்புதமான பண்டம் என்பது மட்டுமே ! இந்த கருத்தியல் துஸ்பிரயோகம் பெண்களால் புரியப் படாதவரை அந்த நிர்வாணப் பார்வைதான் பெண் விடுதலை !


                         அவளால் புரிந்து கொள்ள முடியாத பிரதான விடயம் இதுதான் .நேற்று வரை வீடும் சமூக சூழலும் வெறுப்பான வேலியாக இருந்தது .அதை உடைத்து அவள் சென்றிருப்பது உலகின் வெளியில் ஆணாதிக்க சுயநல முதலாளித்துவ மேலாண்மையின் கீழ் என்பது மட்டும் தான் உண்மை . பேய்களுக்கு பயந்து ஒரு கொடிய பூதத்திடம் 
தஞ்சமடைந்துள்ளால் . அங்கு வார்த்தை ஜாலங்களால் விபச்சாரம்  விடுதலையாக்கப்பட்டுள்ளது . அதில் ஒரு சிறு துளிதான் இந்த சர்மிளா செய்யத்  .

No comments:

Post a Comment