சிரியாவின் இன்றைய நிலமைகள் இஸ்லாத்தின் அதி பயங்கர எதிரிகளான சியோனிஸ்டுகளுக்கு வயிற்றில் புளியை கரைப்பதாக அமைந்துள்ளது . ஜெஸ்மின் புரட்சியின் ஜனநாயக தேசிய சிறையில் சிரியர்களையும் கௌரவ ஆயுள் கைதிகளாக அடக்கி விடலாம் என்ற நப்பாசை மீது அங்கிருக்கும் போராட்ட குழுக்கள் தெளிவாகவே மண்ணள்ளிப் போட்ட பின், இப்போது தமது எதிர்காலம் பற்றிய நியாயமான அச்சத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றனர் .
Friday, December 14, 2012
Thursday, December 13, 2012
சிரியாவில் தடுமாறும் 'தாக்கூத்' படை .
சிரியாவின் இரண்டாவது பெரிய நகராக கருதப்படும் அலப்போ நகரின் ஷேய்க் சுலைமான் இராணுவத்தளத்தை ஒருங்கிணைந்த சிரிய எதிர்த்தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற மோதல்களை அடுத்தே குறித்த தளத்தை எதிர்த்தரப்பினர் கைப்பற்றியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவன வாசத்தில் நாம் மரணத்தை வெல்வோம் .
இனி மீண்டும் இஸ்லாத்தின் நிழலில் மீண்டும் தூய
உலகைக் காண்போம் 'இன்ஷா அல்லாஹ் '.
இதுதான் வரலாற்று தூண்டில் இரை அரசியல் .
வரலாற்றுப் பாத்திரங்களை தமது சார்புப் பத்திரங்களாக வளைத்துப் போடுவதில் தான் பேரின ,மத வாத அரசியலின் அதிகார இருப்புக்கும் , ஆதரவு திரட்டலுக்கும் , கூலியற்ற உணர்வுச் சலவை செய்யப்பட்ட மக்கள் படையையும் இலகுவாக திரட்டிக் கொள்ளவும் சாதகமான காரணியாக ஆகி விடுகின்றது . அந்த வகையில் 1970 களின் பிட் பகுதியில் இலங்கையில் சிங்கள பௌத்த பேரின வாதத்தின் வெறித் தனமான தூண்டலின் அருவருப்பான நிழலில் அரசியல் சுகம் காண ஒரு பண்டைய வரலாறு திட்டமிட்டு திரிக்கப் படுகின்றது .
Wednesday, December 12, 2012
வரலாற்றையே மாற்றியது இந்த புர்க்கான் எனும் வஹி ....
கோத்திர வெறியும் ,பழிவாங்கும் உணர்வும் மலிந்த பண்டைய அரேபிய தீப கற்பம் ; ஒரு சாராரின் ஒட்டகம் இன்னொரு சாராரின் தோட்டத்தில் நுழைந்து மேய்ந்து விட்டது எனும் ஒரே அற்ப காரணத்தி ற்காக பரம்பரை பரம்பரையாக வாட்களால் மனித இரத்தம் சுவைத்த சமூகம் . ஒரு தந்தையின் மரண சாசனம் அன்று விசித்திரமாக இருந்தது அது 'இன்னாரின் மண்டை ஓட்டில் நீ மது அருந்த வேண்டும் 'என மகனிடம் கடைசி ஆசையாக பணித்தது .
Tuesday, December 11, 2012
இஸ்லாமிய இயக்கங்கள் மறுக்க முடியாத இன்னும் சில கோணங்களில் ......
இஸ்லாமிய சிந்தனா ரீதியாகவும் ,கொள்கை ரீதியாகவும் அழுத்தமான பயிற்றுவிப்புகள் இல்லாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலை வாத செயற்கட்ட நடவடிக்கைகளுக்குதான் இஸ்லாமிய இயக்கங்கள் இன்று முன்னுரிமை கொடுக்கின்றன .
முதலாளித்துவ ஏகாதிபத்திய சிந்தனா வாதத்தின் எதிர்பார்ப்பை ஒத்த இத்தகு கருத்துப் போக்கு போட்டிச் சந்தையை ஒத்த பிரச்சார வலை விரிப்புகளோடு மக்கள் முன் நிற்கின்றன . நிகழ்கால ஜாஹிலீய கவர்ச்சிகளின் முன் வாழ்வு என்பதை இஸ்லாமிய வடிவத்தோடு கொடுத்தல் என்பதில் "மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி " என்பதே சில இஸ்லாமிய இயக்கங்களின் அமுத வாக்கு .
Sunday, December 9, 2012
தடுமாறும் எகிப்திய அரசியல் ...ஒரு சுருக்கப் பார்வை .
'முபாரக்கின் வீழ்ச்சியை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை. ஆனால் மதச்சார்பின்மையை அல்ல. அந்த சாபக்கேட்டை கருத்தில் சுமந்தவர்களாக முபாரக்கை வீழ்த்துவதட்காக ஒப்புக்காக சொன்ன வார்த்தைகளில் தான் இஸ்லாம் ஒட்டிக் கொண்டிருந்தது .
இந்த வார்த்தைகள் முழு எகிப்திய மக்களை குறிக்கா விட்டாலும் அதன் அதிகார ஆளுமை பொருந்திய சக்திகள் மற்றும் பலம் வாய்ந்த அதன் இராணுவம் என்பன மேற்கின் மதச்சார்பின்மை அரசியல் சார் கருத்தோடுதான் இருந்தன ,இருக்கின்றன . இந்த நிலைமையில் தான் படிமுறை மாற்றம் என்ற வழிமுறையை நம்பி இன்றைய ஜனாதிபதி முர்சி பதவியேற்றார் .
கோழைத்தனத்தின் மீதொரு கௌரவ அழைப்பு !
ஜனநாயக சாக்கடையில் தீர்வு தேடும்
சமரசக் குப்பைகளுக்காக இப்போது மேற்கு
எம் வீரத்தையல்லவா விலை பேசத் துடிக்கிறது !
தேசியச் சிறையில் கௌரவக் கைதிகளாக்கி
அயோக்கிய யூதனை அயல் நாடாக்கி
எமக்குத் தருவது எதிரியோடு சமத்துவ வாழ்வு !
நாம் செய்யவேண்டிய பிரதான பணி என்ன ?
மனிதன் தனது உடல் சார்ந்த தேவைகளையும் ,உள்ளார்ந்த உணர்வுகளையும்
திருப்திப் படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை
ஒழுங்கு படுத்துகிறது .பசி ,இனப்பெருக்கம் , உறவுகள் போன்ற எல்லாம்
இங்கு வஹி மூலம் மிகச்சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது .
தேவையான ஒன்றை புறக்கணித்தோ , மிதமிஞ்சிய கட்டுப்பாடற்ற
வரையறுக்கப்படாத அனுபவிப்போ இந்த ஒழுங்கு முறையில் இருக்காது
என்பதுதான் எமது அகீதா.
Saturday, December 8, 2012
இடிக்கப்பட்டது' பாபர் மஸ்ஜித் 'அல்ல மனிதம் .
திரிக்கப்பட்ட வரலாற்றின் சுவர்களில்
இந்து மத வாத ஓவியம் துவேஷ தூரிகைகளின்
கைவண்ணத்தில் கச்சிதமாக காட்சியாகியது !
புராதனங்களில் புகுந்த பொய்களில்
சிதைந்த புராணங்கள் கொம்பு சீவி விட
இராமன் வரலாற்றில் பாபர் நுழைக்கப் பட்டார் !
Friday, December 7, 2012
அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .
இனத் துவேச துரோக வரிகளில்
எனக்கும உன் அடக்கு முறை
அடிமை சாசனம் தயார்தான்
என்பது நான் அறிந்ததே !
சிறுபான்மை நசுக்களை அவசியமாக்கி
பெரும்பான்மை சுகம் காட்டுவதில்தான் - உன்
ஜனநாயக பெயர் தாங்கி வாக்கு வங்கிகளுக்கு
கொளுத்த இலாபம் என்பது அறிந்த வரலாறே !
Thursday, December 6, 2012
இஸ்ரேல் சமன் பண்டி புரியாணி !!!
அந்த தியாகத்தின் தேசத்தில்
சத்தியத்தின் உயிரோட்டத்தை கண்டோம்
நேற்றைய சஹாதத் வரை - அத்தோடு
அந்த போராட்டமும் கபுரில் போட்டு
மூடப் பட்ட செய்தியை U .N சொன்ன போது
அதிர்ந்தே போனோம் - இனி
இஸ்ரேல் எனும் அந்த கள்ளப் பிறப்பின்
அங்கீகாரத்தை சீ என் வாயாலேயே ......
அதைவிட பண்டி புரியாணி திண்பது !!!
இரண்டும் ஒன்றுதானே ...!!!!
எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது: பாலஸ்தீன அதிபர் அப்பாஸ்(புதிய கண்டு பிடிப்பு )!!
(கீழ்வரும் செய்தியை படியுங்கள் புதிய ஹிஜ்ரி வருடத்தின் முஸ்லீம்களுக்கான சிறந்த ஜோக் ......)
பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலுள்ள தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றியுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது" எனக் கூறியுள்ளார்.நியுயார்க்கில் ஐநா தலைமையகம் சென்று திரும்பிய அப்பாஸுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.
உறுப்பு நாடல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற ஒரு அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் வென்று அப்பாஸ் நாடு திரும்பியுள்ளார்.
மதச் சார்பின்மை மார்க்க ஆதாரத்தோடு 'பராக் பராக் ' !! முஸ்லீம்களே ஏற்க தயாரா ?
இன்றைய ஜாஹிலீய மேலாதிக்க உலகு, முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல் போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும் போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .
Wednesday, December 5, 2012
நோபல் பரிசு வாங்க சிறந்த கொலைகாரன் என்ற தகுதியே போதும் !!??
இவரது பெயர் மேனிகம் பிகன் (MENACHEM BEGIN).
இஸ்ரேலின் முன்னாள் பிரதம
மந்திரி. பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேறவும் அங்கு
இஸ்ரேல் உருவாகவும் முக்கிய
பங்கு இவரை சாரும்.பாலஸ்தீனதிலே யுதர்களுகேன்றதனி நாடு அமைக்கவேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்பை தலைமைதாங்கி நடத்தியவர்.
இவர்கள் மேற்கின் தொட்டில் குழந்தைகளா !?
நாகரீக தொட்டிலில் இட்டு
கவர்ச்சித் தாலாட்டு பாடினால்
இன்றைய அராபிய 'அபாபீல்கள் '
அந்த 'க ஃபாவையும்' தாரை வார்த்து
உறங்குவார்கள்! என்பதை
நன்குணர்ந்து கொண்டார்கள்
சிலுவை அணிந்த 'சியோனிஸ' யானைகள் !
Subscribe to:
Posts (Atom)