Friday, December 7, 2012

அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .


 
          இனத் துவேச துரோக வரிகளில் 
          எனக்கும உன் அடக்கு முறை 
          அடிமை சாசனம் தயார்தான் 
          என்பது நான் அறிந்ததே !

         சிறுபான்மை நசுக்களை  அவசியமாக்கி 
         பெரும்பான்மை  சுகம் காட்டுவதில்தான் - உன் 
         ஜனநாயக பெயர் தாங்கி வாக்கு வங்கிகளுக்கு 
         கொளுத்த இலாபம் என்பது அறிந்த வரலாறே  !

        காலம் காலமான இந்த சதிகளில் 
        நேற்று 'எல்லாளன்' தெரியாத  அரசியலை 
        'துட்டகைமுனுவின்' வரலாற்றில் 
        அநீதமாய் ஊடுருவி கற்றுக் கொடுத்தீர்கள் !

        விளைவு மகாவலியை விட 
        இங்கு  ஒரு இரத்த ஆறு 
        முப்பது வருடங்கள் பேய்த்தனமாக ஓடியதே !
        இன்னுமா தாகம் தீரவில்லை !
         
         அச்சுறுத்தும் உன் கோஷங்களுக்கு அஞ்சி 
         அடிமைப் பட்டையை நெற்றியில் இட்டு 
         நீ கேட்கும் விலையில் தன்மானத்தை விற்க 
         தரங்கெட்ட பிண்டமல்ல - நான் முஸ்லிம் .  

         உன் நிகழ்கால நகர்வுகளில்  போதி மரத்திலும் 
        அந்த  இந்துத்துவா அல்லவா பளிச்சிடுகிறது !
        அதே சீருடை  காவி அழிப்புப் பனி  ஒரே பாணி 
        அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .

         

No comments:

Post a Comment