Sunday, December 9, 2012

தடுமாறும் எகிப்திய அரசியல் ...ஒரு சுருக்கப் பார்வை .



        'முபாரக்கின் வீழ்ச்சியை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பது  உண்மை. ஆனால் மதச்சார்பின்மையை அல்ல. அந்த சாபக்கேட்டை கருத்தில் சுமந்தவர்களாக முபாரக்கை வீழ்த்துவதட்காக  ஒப்புக்காக சொன்ன வார்த்தைகளில் தான் இஸ்லாம் ஒட்டிக் கொண்டிருந்தது .

                            இந்த வார்த்தைகள் முழு எகிப்திய மக்களை குறிக்கா விட்டாலும் அதன் அதிகார ஆளுமை பொருந்திய சக்திகள் மற்றும் பலம் வாய்ந்த அதன் இராணுவம் என்பன மேற்கின்  மதச்சார்பின்மை அரசியல் சார் கருத்தோடுதான் இருந்தன ,இருக்கின்றன . இந்த நிலைமையில் தான் படிமுறை மாற்றம் என்ற வழிமுறையை நம்பி இன்றைய ஜனாதிபதி முர்சி பதவியேற்றார் .

                  மேற்குலகும் இத்தகு வரவைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது . 'எதிரியின் ஆயுதத்தால் எதிரியை அடித்தல் 'என்பது முர்சி தரப்பின் எதிர்பார்ப்பாய் இருக்க ,எதிரியின் பொறி இவர்களையே தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஆயுதமாக்குவது எனும் அரசியல் சாணாக்கியம் மீதுதான் இங்கு உண்மையான போராட்டக் களமே திறக்கப் பட்டிருந்தது .

                         ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாத்தை விட சமரச பேரங்களின் மீதான நம்பிக்கைகளில் தான் முர்சி தரப்பின் யுத்தம் தொடங்கப் பட்டிருந்தது . சேற்றில் நாட்டப்பட்ட இந்த அதிகார வேலி உண்மையில் எதிரி நிணைக்கும் திசையில் திருப்பப் படவும் திருத்தப் படவும் ஏதுவாய் அமைந்தது .

                                        உண்மையில் இந்தத் தவறு இலக்கு , பாதை , வழிமுறை என்பவற்றில் ஸுன்னாவை தேடாமல் ,தவறானவை ஸுன்னாவாக வளைக்கப் பட்ட, திரிக்கப்பட்ட வஹியின் ஆதாரங்களோடு முன்னிறுத்தப் பட்டதே ஆகும் . குறைந்த பட்சம் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) மக்காவில் ஏறத்தாள இதே சமரச பேரத்தோடு குறித்த சில விட்டுக் கொடுப்பை வேண்டியவர்களாக குரைசிக் காபிர்கள் , மற்றும் நபியவர்களால் நுஸ்ரா வேண்டப்பட்ட சில கோத்திரத்தார் முன்வந்த போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள்  அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற பாடம் கூட நவீனம் ,காலத்தின் தேவை என்ற தவறான பார்வைகளால் மாற்றப்பட்டிருந்தது .

  இஸ்லாமிய அதிகாரத்திற்கான முதல் நிபந்தனையே வஹியின் மீது யாரும், எதுவும் எவ்வித  நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்பதே .இந்த முதல் அடிப்படையே முர்சி தரப்பால் மீறப்பட்டுள்ளது . மக்கள் கருத்து குறிப்பாக ஆளுமை பொருந்திய சமூகத் தலைமைகள் ,இராணுவம் என்பன இஸ்லாத்தின் கருத்தில் கவரப் பட்டிருக்கவில்லை இது இரண்டாவது தவறு . இந்த இரண்டு முக்கியமான தவறுகளையும் காலத்தால் கனிய வைக்கலாம் எனும் நப்பாசை மட்டுமே முர்சி தரப்பில் இருந்தது . அதன் விளைவுகளே இன்றைய நிலமை .

                                           இன்னும் கூட ஜனாதிபதியாக முர்சி அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்க முடியும் அது அவர்கள் நம்பிய சமரசத்தை பேணுவதும் ,இஸ்லாத்தை விட்டுக் கொடுப்பதிலும் தான் தங்கியுள்ளது . கவலையை விடுவோம் அந்த மகத்தான பணியை அவர் சார் உலமாக்கள் காலத்தின் தேவை கருதி வெளியிடக்கூடியவர்களே .

             இஸ்லாமா , துப்புக்கெட்ட இந்த அதிகாரமா ? என்பதில் தான் ஜனாதிபதி முர்சியின் இன்றைய தற்காப்புப் போராட்டம் சூடு பிடித்துள்ளது . காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .
                                           

                                        

No comments:

Post a Comment