Thursday, December 13, 2012

இதுதான் வரலாற்று தூண்டில் இரை அரசியல் .


 
                  
                                வரலாற்றுப் பாத்திரங்களை தமது  சார்புப் பத்திரங்களாக   வளைத்துப் போடுவதில் தான்  பேரின ,மத வாத அரசியலின்  அதிகார இருப்புக்கும்  , ஆதரவு திரட்டலுக்கும்  , கூலியற்ற உணர்வுச் சலவை செய்யப்பட்ட மக்கள் படையையும் இலகுவாக திரட்டிக் கொள்ளவும் சாதகமான காரணியாக ஆகி விடுகின்றது . அந்த வகையில் 1970 களின் பிட் பகுதியில் இலங்கையில் சிங்கள பௌத்த பேரின வாதத்தின் வெறித் தனமான தூண்டலின் அருவருப்பான நிழலில் அரசியல் சுகம் காண ஒரு பண்டைய வரலாறு திட்டமிட்டு திரிக்கப் படுகின்றது .

                                                                    அநீதியான இரத்த சரித்திரங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இத்தகு பாத்திரங்கள் நிச்சயமாக அரங்கேற்றப் பட்டிருக்கும் .இதில் குறிப்பிடப்படும் பாத்திரங்கள், சம்பவங்கள்  இருந்ததா ? இல்லையா ? என்ற வாதங்களை ஒரு புறம் தள்ளி வைத்து பார்த்தாலும் அவைகளின் இறந்த கால சரித்திரத்துக்கு  சம்பந்தமில்லாத நவீனம் அங்கு திணிக்கப் படுவதில் தான் நிகழ்கால  புளுகுப் பூனைகளின் வீர அரசியல்  வாழ்வு கட்டமைக்கப் படுகின்றது . 


                                                                                               ஹிட்லர் யூதர்களை பயங்கரமாக  படுகொலை செய்தான் . என்ற ஆக்கிரோசமான பிரச்சார யுத்தத்தின் அறுவடை அனுதாப வடிவில் இஸ்ரேலின் உருவாக்கத்துக்காக ஜெர்மனியில் யூதர்களுக்கு நிதி வடிவில் கொட்டியது . மேலும் உண்மையாக்கப்படும் இந்த அரசியல் அண்டப் புளுகு களின் ஒரே எதிர் பார்ப்பு அரசியல் மேலாதிக்கமே . அப்படி ஒரு வரலாற்றுக் கதை திரிப்பு  தான் இலங்கையிலும் நடந்தது . அது இதோ .


                 கி .மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரு அரசர்களே துட்டகைமுனு, எல்லாளன் என்பவர்கள்   . அவர்கள்  1970 களின் நிகழ காலத்தில் இரண்டு முக்கிய அரசியல் வாதிகளால் தமது 'பொளிடிகளுக்காக ' கிட்னாப் ' செய்து கொண்டு வரப்பட்டார்கள்  . மக்கள் முன் அவன் அறியாத சிங்கள பௌத்த பேரினவாத நூல் கட்டப்பட்டவனாக துட்டகைமுனுவும் அவனின் எதிரியாக எல்லாளன்  தமிழ் பேரின வாதத்தின் நூல் கட்டப் பட்டவனாக அன்று அரசியல்  பொம்மலாட்டமும் அரங்கேற்றப்பட்டது . 

                                                                              இரண்டு மன்னர்களுக்கு இடையில் நிகழ்ந்த வெறும் அதிக்க யுத்தம் பக்காவான இனவாத யுத்தமாக சித்தரிக்கப்பட்டது ; துவந்த என்ற இடத்தில் நிகழ்ந்த யுத்தம் ! அதில் எல்லாளன் கொல்லப்பட அவனின் வீரத்தை மதித்து துட்டகைமுனு ஒரு நினைவுத் தூபியையும் அனுராதபுரத்தில் கட்டினான் என்ற வரலாறும் மேற்சொன்ன இரண்டு அமைச்சர்களாலும் திரிபு படுத்தப் பட்டது .


                                                                                   அதாவது அந்த நினைவுத் தூபியும் துட்ட கைமுனுவுடையது என உரிமை கொண்டாடப் பட்டது . காலம் காலமாக நம்பப்பட்ட ஒருபண்டைய  வரலாறு ஆச்சரியமாக திரித்து சொல்லப் பட, இனவாத  உணர்வில் தூண்டப்பட்ட வரலாற்றுத் தெளிவற்ற ஒரு மக்கள் படை அவர்கள் பின்னால் திரண்டது .(ஆனால் காலத்தின் கரங்களால் அதன் விளைவுப் பரிசையும் 1990 களில் அந்த பட்டதாரிகளான அமைச்சர்கள் அதே இன வாதத்தின் பதிலடியால் பெற்றுக் கொண்டனர் . அது அவர்கள்  அசாதாரணமாக படுகொலை செய்யப் பட்டதே . )

 
                                                                                                   ஆனாலும் இத்தகு கீழ்த்தர அரசியல் தொடர்ந்தும் செய்யப்பட்டே வருகின்றது . ஆதிக்கவெறி , பதவி மோகம் என்ற மேட்டுக்குடி அரசியலின் போலித்தனம் புரியாத மக்கள் இருக்கும் வரை இந்த வரலாற்று தூண்டில் இரை அரசியலில் மனித சமூகம் மாட்டிப் படுவது தவிர்க்க முடியாதது .
                                                                                          
                                                                                         


No comments:

Post a Comment