Sunday, December 9, 2012

நாம் செய்யவேண்டிய பிரதான பணி என்ன ?




மனிதன் தனது உடல் சார்ந்த தேவைகளையும் ,உள்ளார்ந்த உணர்வுகளையும் 


திருப்திப் படுத்துவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இஸ்லாம் அவற்றை 

ஒழுங்கு படுத்துகிறது .பசி ,இனப்பெருக்கம் , உறவுகள் போன்ற எல்லாம் 

இங்கு வஹி மூலம் மிகச்சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது . 


தேவையான ஒன்றை புறக்கணித்தோ , மிதமிஞ்சிய கட்டுப்பாடற்ற 

வரையறுக்கப்படாத அனுபவிப்போ இந்த ஒழுங்கு முறையில் இருக்காது 

என்பதுதான் எமது அகீதா. 






முதலில் ஷரியாவின் எந்தப்பகுதிகளை பிரயோகிக்கலாம் எனும் 

சிந்தனையை விட இஸ்லாமிய அகீதாவை இன்று சமூகம் எவ்வாறு 

புரிந்துள்ளது ? எனும் அவதானிப்பின் ஊடாக எமது இஸ்லாமிய 

மயப்படுத்தல் சமூகத்தின் எல்லா மட்டங்களையும் சென்றடைகின்றதா ? 

என்பதும் மிக நிதானமாக ஆராயப்பட வேண்டும் .



காரணம் இஸ்லாம் அகீதாவில் இருந்தே வழிமுறைகள் தோற்றம் 

பெறுவதாக கூறுகின்றது . எனவேதான் அல்குர் ஆன் 'அல்லாஹ்வையும் 

மறுமை நாளையும் ..., ஈமான் கொண்ட விசுவாசிகளே ..., 

மூமீன்கள் யாரென்றால் ... ' போன்ற பதங்களை பல இடங்களில் அல்லாஹ் 

(சுப) கூறுவதாக நான் கருதுகிறேன் . 


ஈமானியப் பெறுமானம் உணரப்படாத,அகீதா தெளிவற்ற பிகிஹ் 

பேசப்படுவது மிகப்பெரிய தவறு .இன்று சமூகத்தில் 

அது சர்வ சாதாரண நிகழ்வு . இதனால் தான் உலகியல் விவகாரங்களில் 

இருந்து மார்க்கத்தை பிரிக்கும் முதலாளித்துவ அகீதா எமது 

உம்மத்துக்குள்ளும் புகுந்து விளையாடுகின்றது !


முதலாளித்துவத்திட்கு இறைவனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டு 

(இறைவன் அருளிய வாழ்வியல் விவகாரங்களில் மட்டும் அவனது 

கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாமல் ) வாழ்வதும் ஒன்றுதான் ,அல்லது 

இறைவன் மறுத்து வாழ்பவர்களும் ஒன்றுதான் . இங்கு இருதரப்பும் சம 

உரிமை உடையது மதச்சார்பின்மை கோட்பாடானது இந்த இடத்தில்தான் 

ஆரம்பிக்கின்றது .



 தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்ட ஒரு ஆன்மீக 

மதமாக இஸ்லாம் வாழ்ந்து விட்டுப்போவதில் முதலாளித்துவ 

அகீதாவிட்கு எந்தக் கவலையுமில்லை . 



முதலில் செய்ய வேண்டியது ஆன்மிகம் , உலகியல் என பிரித்து 

நோக்கும் மனநிலையில் இருந்து மாற்றி முஸ்லீம் சமூகத்தை தனது 

இஸ்லாமிய அகீதாவில் தனது இருந்தே வாழ்வியல் தோற்றம்பெற 

வேண்டும் எனும் மனோநிலையை உருவாக்குவதற்கான 

சாதகங்களையும் , சாதனங்களையும் பற்றி நாம் சிந்திப்பது 

ஆரோக்கியமானது .












































No comments:

Post a Comment