Friday, December 14, 2012

சிரியாவில் அமெரிக்காவால் மீண்டும் தூசி தட்டப்பட்டு வெளியிடப்படும் பழைய பட்டங்கள் ஏன் ? ஒரு குறும் பார்வை ...


    

                 சிரியாவின் இன்றைய நிலமைகள் இஸ்லாத்தின் அதி பயங்கர எதிரிகளான சியோனிஸ்டுகளுக்கு வயிற்றில் புளியை கரைப்பதாக அமைந்துள்ளது . ஜெஸ்மின் புரட்சியின் ஜனநாயக தேசிய சிறையில் சிரியர்களையும்  கௌரவ ஆயுள் கைதிகளாக அடக்கி விடலாம் என்ற நப்பாசை மீது அங்கிருக்கும் போராட்ட குழுக்கள் தெளிவாகவே மண்ணள்ளிப் போட்ட பின், இப்போது தமது எதிர்காலம் பற்றிய நியாயமான அச்சத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றனர் .


                                                                           சிரியாவில் போராடும் குறித்த குழு பயங்கர வாதி ,குறித்த குழு தீவிர வாதி என்ற தமது பழைய பல்லவியை அமெரிக்கா இன்றைய நிலையில் வெளியிட்டிருப்பதானது இந்தக் கருத்தையே உறுதிப் படுத்துகின்றது . லிபியாவைப் போல்' பிரீ டோம் போர் சிரியா ' அல்லாஹு அக்பர்' என்று சிரியர்கள் களத்தை திறந்திருந்தால் அமெரிக்க தரப்பிற்கு சந்தோசமாக இருந்திருக்கும் .

                                                                                                         
                                                                               ஆனால் இங்கு ' ஓபன் டு இஸ்லாம் ' என்ற கோசத்தோடு களம் திறக்கப்பட்ட போதே அவர்கள் உசாராகி விட்டதன் விளைவே இன்றைய 'மீடியா'  முழக்கங்கள் என்றால் அது மிகையான கருத்தல்ல . எகிப்தில்'ஓகே' , தியூனீசியாவில் 'ஓகே ' , லிபியாவில் டபுள் ' ஓகே ' என ஜெஸ்மின் புரட்சியின் வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டி இருக்க , இவர்களின் முதலாளித்துவ ஜனநாயக  மல்லிகைப் பூ சிரியாவில் மட்டும் பக்குவமாக கசக்கி வீசப்பட்டுள்ளதுடன் . இஸ்லாம் எனும் இவர்கள் அஞ்சும் சாவோலையும் அனுப்பப்பட்டுள்ளது  . இது இவர்களுக்கு  ஏறத்தாள பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய நிலை .

                                                                               இங்கு குறித்த சில இயக்கங்களை நோக்கி அச்சத்தோடு விரல் நீட்டியிருப்பது அவை சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருப்பதே ஆகும் . மேலும் இவர்கள் குறிப்பிடும் இயக்கங்கள் தமக்குள் இணக்கப் பாட்டுடன் இருப்பதுடன்; ஏனைய போராட்ட அமைப்புகளோடு பேச்சு வார்த்தைகளையும் நடத்தி சுமூகமான கருத்துக்குள் அவர்களையும் கடுமையான யுத்த சூழலிலும் ஆரம்பத்திலேயே வலைத்திருப்பதானது, அமெரிக்க தரப்பிற்கு," இங்கு இனி இஸ்லாம் வரும் ஆசாத் மட்டுமல்ல நீங்களும் தப்ப மாட்டீர்கள் " என்று சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது . 
 
                                                                          
                                                                                    அதாவது இதுவரை அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என அமெரிக்க தரப்பு நம்பிய 'மிலிடரி + டிப்லோமடிகல் பொலிடிகல்' நகர்வுகள் முஸ்லீம்களுக்கும் தெரியும் ;என செயலில் புரிய வைத்ததே மீண்டும் அமெரிக்க தரப்பு ,பயங்கரவாதி ,தீவிரவாதி , அடிப்படை வாதி என்ற வார்த்தைகளை சிரியாவின் சில போராட்ட இயக்கங்கள் மீது குற்றச் சாட்டாய் முன் வைப்பதற்கு காரணமாகும் .

              


                                                                     



2 comments: