Saturday, December 15, 2012

முதல் கோணல் முற்றிலும் கோணல் .


       
            தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு , படக்கு என்றுமாம் ! என சுயநல 'லிஸ்டில்' ஒபாமாவின் ' அழுகையை அளந்து கொள்வதா ? அல்லது முதலாளித்துவ மேட்டுக்குடி அரசியலின் வழமையான  நாடக தரிசனமா ? சிலவேளை ஒரு 'ஹொலிவூட்   ' ஹீரோ ' தப்பித்தவறி நம்மூர் 'மெகா சீரியலுக்குள் ' நுழைந்து விட்டாரா ? 
                                                                                   
 ஓ ஒபாமாவே ? அப்பாவிகள் கொல்லப்படுவதில் ஆனந்தப்படுபவர்கள் இந்த முஸ்லீம்கள் அல்ல . ஆனால் உங்களது கொள்கைத்தவரின் கோர விளைவுகள் தொட்டில் முதல் மயானம் வரை பரவி விட்டது ! என்ற உண்மையை உணர்த்தும் ஒரு சிறு உதாரண சம்பவமே அங்கு நடந்துள்ளது .
                                                                                  ஓ ஒபாமாவே ? எங்களது இரத்தங்கள் மீது உங்களது மீடியாக்கள் நியாய தரிசனம் ஓட்டியதை மறக்கா விட்டாலும் ,நாம்  மனிதம் மறந்தவர்கள் அல்ல. நடந்த நிகழ்வு அரசியலுக்காகவோ ,ஆட்சிக்காகவோ அல்ல ,இது போல் சம்பவங்கள் அங்கு இதுதான் முதல் தடவையுமள்ள . அப்படியானால் மக்கள் நலன் என்ற அதிகார தலைமையின் வழிகாட்டலில் உங்கள்  சித்தாந்தத் தோல்வி புரியவில்லையா ?
                                                                                       ஓ ஒபாமாவே ? சுயநலம் + பழிவாங்கல் + விரக்தி + இலாபம் , என்பன உங்களது மேல் மட்டத்தில் நீதியாகி, அநீதி என்ற வார்த்தையே உங்க ள் அகராதியில் இல்லாமல் ஆக்கியபோது . உங்கள் கல்விக் கூடங்கள் பாவம் என்ன செய்யும் . அந்தப் பிஞ்சுகளுக்கும் இளமையில் கல்வி பசுமை மரத்தில் ஆணி  என்பது கொள்கையளவில் தவிர்க்க முடியாதது தானே ! இதைத்தான முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று நம்மூரில் 'சிம்பிளாய் 'சொல்வார்கள் .      
                                                                                              

No comments:

Post a Comment