Tuesday, December 18, 2012

தர்மச் சக்கரத்தின் புதிய 'வெர்சன் ' இதுதான் .



                                                            சிலுவைகளின் சிந்தனைகளில் தான் இப்போது சீனப் பெருஞ் சுவர் தொடராக சர்வதேசத்தில் கட்டப்பட , இந்த போட்டிச் சந்தையில் அதே சிலுவைகளின் சிந்தனைகளில் சிந்து நதியும் காவித்தன காழ்ப்புணர்வோடு அரசியல் பாய்ச்சல் நடத்த , இனவாத போதையில் மூழ்கித் தவிக்கும் இந்த மாணிக்க தீவின் மனிதர்கள் ஆதிக்க பேயாக மீண்டும் ஆட்டப் படுவது தவிர்க்க முடியாதது தான் .
   
                                           
                    சிறுபான்மை எதிர்ப்பு எனும் வரையறையை காட்டி முஸ்லீம் சமூகத்தின் மீது அதி உச்சமாக அத்துமீறுவது ஒரு அரசியல் 'பெசனாகவே' மாறிவிட்டது . முஸ்லீம்களின் உணர்வுகளை மிதித்து தங்கள் கொத்தடிமைகள் ஆக்குவதில் தான் தங்கள் அரசியல் வெற்றி தங்கியிருப்பதாக பெரும் பான்மைகள் கருதத் தொடங்கி விட்டன .

                                                       சிலுவைப்போர் தொடர்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் மிக மோசமான   தாத்தாரியர் படையெடுப்பு நிகழ்ந்த்தது அதன் போது கிறிஸ்தவ உலகம் தமது பணியை தமக்கு இழப்பின்றி இன்னொரு சமூகம் செய்கிறது என கிறிஸ்தவ சமூகம் பார்த்துக் கொண்டிருந்தது . அப்படி ஒரு நவீன 'தாத்தாரிசமாக ' இன்று வளர்ந்துள்ள மதவாதம் காட்டு மிராண்டித் தனமாக மியன்மாரில் முஸ்லீம்களை வேட்டையாடி நரமாமிசம் திண்ட போது மேற்குலகு இவ்வாறுதான் பார்த்துக் கொண்டிருந்தது .எமக்கும் அதுதான் .

                                                            தட்டிக்கேட்க இப்போது யாருமில்லை . நிலமைகள் கைமீறி சென்று கொண்டிருக்கின்றன . நாங்கள் முஸ்லீம்கள் 1990 களில் நாம் சந்தித்த 'பிரபாகரனிசம் ' நாம் தஞ்சமடைய சில எல்லைகளோடு எம்மை அழித்தது ,விரட்டியது . இப்போது எம்முன் இருக்கும் ' அசோகனிசம் ' அதை 
விட ஆபத்தானது அது 'இராமநிசத்தின் ' நேரடி வழிகாட்டலில் வளர்ந்தது . அழித்தலில் மட்டுமே அதீத திருப்தி காணும் கொடிய 'வைரஸ் .

  இவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது . இவர்களின் கண்களுக்கு உணவுக்காக மாடருக்கும் முஸ்லீம் மட்டும் தான் தெரிவான் . மத வெறியில் மனிதக் கழுத்தறுக்கும் அவர்களின் கத்தி தூய்மையானது  . இவர்களின் தர்மச் சக்கரத்தின் புதிய 'வெர்சனில் ' முஸ்லீம் அற்ற உலகு மட்டும்தான் புனிதமானது .
                                 
                                                    


                               

No comments:

Post a Comment