Saturday, December 1, 2012

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து .....


Photo: A diplomatic trap for Palestinian Authority

அநியாயக்காரர்கள் இட நினைக்கும் 
அராஜக வாய்ப் பூட்டுகள்  -   இனியும்  
கொந்தளித்துள்ள சத்தியப் 
புறப்பாடுகளை  முடக்கி  விடாது .

மனித அடிமை சாசனத்தின் நிழலில்  -  நீ
நேசக்கரமாய்  நீட்டி இணைக்க நினைக்கும் 
நாசகார சுயநல பாலத்தில் -  இனியும் 
பயணித்திட  நான் குருட்டுப் பயணியல்ல .

நீ யதார்த்தமாய் காட்டும 'மெகா சீரியலில் '
நேற்றைய பாத்திரம் -  நான்  உனக்கு 'எனமி '
இன்று என்னையே 'ஹீரோவாக்கி ' - நீ தரும் 
'திமோ கிரசி' டைட்டிலில் ' உனக்கு கௌரவ வேடமா ?

சரி இந்தக் கதையில் யார் வில்லன் ? 
சுத்தி வளைத்து எம் அடி மடியில் வருடுவது 
பழமை வாத 'பேனரில்  ' நீ இஸ்லாத்தை 
இந்த முஸ்லிமிற்கே எதிரியாக்கவா ?  


No comments:

Post a Comment