Wednesday, December 19, 2012

மக்கள் தீர்ப்பே இனி மகேசன் தீர்ப்பு !!


              எகிப்தில் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் முதல் கட்ட வாக்களிப்பில் 56.5 சதவீத மக்கள் 

ஷரீஅத் அடிப்படையிலான அரசியல் சாசனத்தை ஆதரித்தும், 43 சத 

வீதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளதாக இஹ்வானுல் 

முஸ்லிமூன் இயக்கம் தெரிவித்துள்ளது.



                                                                              தலைநகர் உட்பட 10 மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் 

பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டுள்ளனர். வாக்களிப்புக்கள் 

நடைபெற்ற 6300 க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் 
இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் பிரதிநிதிகள் இருந்தனர். 

இவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் புள்ளிவிபரங்கள் 
வெளியிடப்பட்டுள்ளன.ஆனால், இரண்டாவது கட்ட வாக்களிப்பு 22 ஆம் திகதி நடைபெற்றதன் பின்னரே அதிகாரப்பூர்வ முடிவுகள் 

வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மக்களின் தெரிவுக்கு வஹி  விடப்பட்டுள்ளது ! சிலவேளை 

மக்களின் தெரிவு மாறி வந்திருந்தால் ? கிடப்பில் 

போடப்படவேண்டியது வஹியா ? சரி இன்று எதோ காரணத்தால் 

ஆதரிக்கும் மக்கள் நாளை தேவையில்லை என கருதினால் !!!  

வஹி என்பது குப்ரிய அரசியலின் விளையாட்டுப் பொருளா ? வாழ்க 

ஜனநாயகம் .வாழ்க ஜனநாயகம்.








   

                        



                         

No comments:

Post a Comment