Saturday, December 22, 2012

ஏன் இந்த பறக்கும் அரண்மனை!!?



இந்த ஆடம்பர அரவணைப்புக்கு ஒரு நியாயம் சொல்லட்டும் . சுகபோகம் மட்டும் குறியாக்கப்பட்டு இலாப அறுவடைகள் யாருக்கு செல்கின்றது ? சற்று சிந்திப்போமா ?

சவூதி அரேபிய இளவரசரும் மத்திய கிழக்கின் கோடீஸ்வரர்களில் முன்னிலை வகிப்பவருமான அல் வலீத் பின் தலாலினால் கொள்வனவு செய்யப்பட்டு பறக்கும் அரண்மனையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஏ380 ஜெட் விமானத்தின் உட்கட்டமைப்பு வரைபடங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விமானத்தின் பெறுமதி 240 மில்லியன் யூரோக்களாகும். இந்திய நாணயப்படி இதன் மதிப்பு 2770 கோடி ரூபாவாகும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தனியார் விமனாம் தற்போது சகல ஆடம்பர வசதிகளும் கொண்ட ஒரு பறக்கும் மாளிகையாக மாற்றப்பட்டு வருகிறது. குறித்த பறக்கும் மாளிகையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின்னர் அடுத்த ஆண்டு முற்பகுதியில் இவ் அரண்மனை முதன்முறையாக வானில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சுமார் 800 ஆசனங்களைக் கொண்ட குறித்த விமானத்தை கொள்வனவு செய்து ஆசனங்கள் அளைத்தையும் அகற்றிவிட்டே இளவரசரின் ரசனைக்கேற்ப இந்த விமானம் அரண்மனையாக மாற்றப்பட்டு வருகிறது. இவ்விமானத்தினுள் படுக்கையறைகள், மாநாட்டு மண்டபம், நீச்சல் தடாகம், குளியலறை, தொழுகை அறை, கார் தரிப்பிடம், விருந்தினர் அறைகள், மின்னுயர்த்திகள், மாடிப்படிகள், ஒன்றுகூடல் மண்டபம், டென்னிஸ் அரங்கு, பியானோ உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
விசேடமாக விமானம் எந்தவொரு வான்பரப்பில் பறக்கின்ற போதிலும் மக்காவை நோக்கி கிப்லா திசையைக் காட்டக் கூடிய இலத்திரனியல் தொழுகை விரிப்புகள் உள்ளடங்கிய அறை ஒன்றும் இப் பறக்கும் அரண்மனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
57 வயதான மேற்குலகில் கல்வி கற்ற இளவரசர் அல் வலீத் பின் தலால் மத்திய கிழக்கின் 'வரன் பவ்வட்' என வர்ணிக்கப்படுகிறார். இவர் ஏலவே போயிங் 747, எயார்பஸ் 321 ஆகிய விமானங்களுக்கும் 280 அடி உயரமான சொகுசு ஆடம்பர கப்பலுக்கும் சொந்தக்காரராவார்.
 
இந்த விமானம் உலகின் அதி சொகுசு விமானம் என்பதற்கு அப்பால் அதன் சொந்தக்காரரின் கலாசாரப் பின்னணியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளமை இதன் விசேட அம்சமாகும் என குறித்த மாளிகையின் உட்கட்டமைப்பை வடிவமைக்கும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
.



No comments:

Post a Comment