
ஜனநாயக சாக்கடையில் தீர்வு தேடும்
சமரசக் குப்பைகளுக்காக இப்போது மேற்கு
எம் வீரத்தையல்லவா விலை பேசத் துடிக்கிறது !
தேசியச் சிறையில் கௌரவக் கைதிகளாக்கி
அயோக்கிய யூதனை அயல் நாடாக்கி
எமக்குத் தருவது எதிரியோடு சமத்துவ வாழ்வு !
எமது துயரங்களின் தொடர்கள் ஆக்கிரமித்த
அந்த யஹூதிக்கு அது சுதந்திரப் போர் .
நாமடித்தால் அது அத்து மீறல் அதுவும் எமது நிலத்தில் !
வீட்டோ சாம்ராஜ்யத்தின் விலை மாது தான் U .N அவளின்
தரக்குறைவான தர்பாரில் அசுத்தமான ஓர் அகராதி அதில்
அதில் அநியாயமே என்றும் நியாயங்கள் !
No comments:
Post a Comment