Tuesday, December 4, 2012

வரலாற்றுச் சுவடுகளில் பலஸ்த்தீனப் போராட்டம் ... ஒரு குறும் பார்வை .



           அது 1980 களின்  இனவாத யுத்தத்தின் அச்சம் மிகுந்த காலப்பகுதி .விடயங்கள் யாவும் முற்றிலும் இராணுவ மயத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுக்கொண்டிருந்தது .தரையில் ஆட்லறி தாக்குதல் தொடங்கி வான் வெளிகளில் 'சியா மாசெட்டி' ரக இத்தாலிய தாக்குதல் விமானங்களின் பிரசன்னமும் ,50 கலிபர் ரக இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்திய 
'பெல் 212' ரக ஹெலிகொப்டர்களின் ரோந்து மற்றும் தாக்குதல்கள் 'வியட்நாமின் '  கடந்த காலத்தை நினைவு படுத்த முற்றிலும் யுத்த பூமியாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாறிக் கொண்டிருந்தது .


                                                                               ஈழப் போராட்டத்தின் நியாயத்தையும், அவசியத்தையும் , வலியுறுத்தி போராட்ட இயக்கங்கள் மீதான கவர்ச்சிகர ஆட்சேர்ப்புக்கள் வேறு நடந்து கொண்டிருந்தது .அதற்காக பல்வேறு வெளியீடுகள் ,பிரசூரங்கள் சஞ்சிகைகள் பரவலாக வெளிவிடப் பட்டுக்கொண்டிருந்தது . அப்படியான வெளியீடுகளில் உயர்ந்த உதாரண போராட்டமாகவே பாலஸ்தீனப் போராட்டம் எனக்கு அறிமுகமானது .

                                                                              பாரபட்சமற்ற ஒப்பீடு என்பது இரண்டு வரலாற்றையும் ஆராய்வதிலும் ,தெளிவாக  இனம் காண்பதிலும் ஊடான   அதன் ஒற்றுமையை முன்வைத்து ,தெளிவான வரைவிலக்கனங்களின் ஊடாக நிரூபித்தலே ஆகும் . இடைக்கால செயட்கலங்களின் அமைப்பு மாதிரிகளை மட்டும் வைத்து செய்யப்படும் ஒப்பீட்டு நியாயம் சந்தர்ப்ப வாத குறை மதிப்பீடு ஆகும் .

                                                                                தமிழர் போராட்டத்தின் அன்றைய தேவை உணர்ச்சி மிகு போராளிகள் ! பாலஸ்தீன் அன்று(ம் இன்றும் ) சூடான ஒரு கெரில்லா போராட்ட களம் ,அந்த இதமான சூடு இவர்களின் போரியல் வேட்கைக்கு ஒத்தடமனது . அது மட்டும்தான் உண்மையே தவிர வேறு குறிப்பிடும் படியான நியாயங்கள் இந்த இரு போராட்டங்களிலும் இருக்கவில்லை . அதைவிட சற்று அதிகமாக பாலஸ்தீனின் கெரில்லா பயிற்சி  தளங்களில் சிலர் பயிற்சி பெற்றிருக்கலாம் .



                                                            ஒரு சிலவேளை தேச, தேசிய துர்நாற்றச் சகதியில் தடுக்கி விழுந்த பாலஸ்தீன போராட்டத்தின் இடைக்கால தவறுகள் ஒப்பீட்டு மாதிரிக்கு அதாரமாய் இருக்கலாம் .அதில் கூட P .L .O , P .F .L .F போன்ற இயக்கங்கள் பிரித்து எடுக்கப்பட்டு ஒப்பிடப்படலாம் தவிர பாலஸ்தீன் போராட்டத்தை ஒரு தேச ,தேசிய விடுதலை பார்வையோடு பார்க்க முடியாது .

                                                                    யாசிர் அரபாத் , அபூஜிஹாத் , அபூநிடால் , ஜோர்ஜ் ஹப்பாஸ் , லைலா காலித் என்பவர்களைத்தான் மனக்கண் முன் நிறுத்தி பாலஸ்தீன் அவதானிக்கப் பட்டதன் தவறு அன்று திருத்தி சொல்லப்  படவில்லை ! அல்லது 'இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் ' யூத ஆக்கிரமிப்பு என்பவற்றோடு மட்டும் வரலாற்றை பார்ப்பதும் ஒரு இடைக்கால வரலாற்று சுருக்கம் தான் என்பதும் அன்று உணர்த்தப் படவில்லை .

                                              ஆனால் அதற்கும் முன்னாள் சலாகுதீன் ஐயூபி(ரஹ் ) ,சிலுவைப்போர் எனவும் ,அதற்கும் முன்னாள் கலீபா  உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் தொடர்பு ,மிஹ்ராஜில்  குறிப்பிடப்பட்ட ரசூல் (ஸல் ) அவர்களின் பைத்துல் முகத்திஸ் சம்பவம் ,பின் சுலைமான் (அலை ) இப்படி தொடர்ச்சியாக பின்னோக்கி சென்றால் எமக்கெல்லாம்  முஸ்லீம் என பெயரிட்ட எம் தந்தையாக உதாரணப் படுத்தப்படும் இப்ராகிம் (அலை ) வரை பாலஸ்தீனின் வரலாறு நீளமானது ,ஆழமானது .


                                                                                     உண்மை என்னவென்றால் பாலஸ்தீன் பூமி குறிப்பிட்ட ஒரு இன, கோத்திர சார் துண்டங்களாக ,தேசங்களாக ,தேசியங்களாக பிரிக்கும் உரிமை  யாருக்குமில்லை .அது  புனித பூமி ,இஸ்லாத்தின் பூமி ,அந்த வகையில் வரலாற்றின் ஒரு காலப் பகுதியில் இறை தூதுத் துவம் மூலம் வேதம் அருளப் பட்டவர்களான யூத ,கிறிஸ்தவர்களுக்கு அதன் அதிகாரத்தில் உரிமை இருந்தது . இறுதி வேதமான புர்கானோடு முஹம்மது (ஸல் ) வருகையின் பின் யார் அவர்களை பின்பற்றினார்களோ அவர்களுக்கே அந்த புனித பூமியின் அதிகார உரிமை  என்பதே இறைவனின் தீர்ப்பு . அந்த தீர்ப்பின் மீதான யூத  , கிறிஸ்தவர்களின் காழ்ப்புணர்வே இன்று வரை தொடரும் சூடான போராட்டங்கள் .

                                       
                               அந்த நிலத்தில் வாழ்வியல் அனுமதி என்பது வேறு ,அதிகார உரிமை என்பது வேறு அங்கு யூதர்களும் வாழலாம் ,கிறிஸ்தவர்களும் வாழலாம் ஆனால் இஸ்லாம் அதிகார ஆளுமையில் இருக்க வேண்டும் என்பதே அதன் உண்மையான போராட்ட வடிவம் . இந்த உண்மை உணரப்படாது தவறான தேசிய சந்தையில் பங்கு போடப்படும்  அதன் உரிமையில் எம் பங்கு என  போராடுவதும் தவறான போராட்டவடிவமே .
 

                                                                  மேலும் சுலைமான் (அலை ) அவர்களால்  கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா தொடர்பிலும் யூதர்களின் அழுத்தமான உரிமைகோரல் காணப்படுவதையும் முஸ்லீம்களாகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .தற்போதும் அதன் உரிமை அவர்களின் கைகளில் தான் இருக்கின்றது . அவர்களின் நீண்ட கனவு 'temple of sulaiman ' என்பதை அவர்களின் சாம்ராஜ்யத்தில் உட்படுத்துவதே . இந்த கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மிகப்பெரிய தடை  இஸ்லாமிய கிலாபா அரசே . சியோனிச சக்திகள் திட்டமிட்டு கிலாபா அரசுக்கு எதிராக சதிகள் பல செய்ததற்கான அதை திட்டமிட்டு வீழ்த்தியதட்கான காரணமும் இதுதான் . 
                                                                    


                  இந்த நிலை எதுவரை என்றால் இஸ்லாத்தின் அரசியல் இராஜ தந்திர பின்புலமான   கிலாபா அரசு மீண்டும் உருவாகும் வரையே   . எனவேதான் அது மீண்டும் உருவாகாமல் தடுக்க ஆகுமான எல்லா வழிகளிலும் சியோனிஸ்டுகள் போராடுகிறார்கள் . அவர்கள் உணர்ந்த உண்மை என்னவென்றால் இஸ்லாமிய கிலாபா அரசு தோன்றும் பட்சத்தில் அடுத்த கட்டாமாக அமீருல் ஜிஹாத்  தனக்கு முன் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் பலஸ்தீனை மீட்க ஒரு படை நடத்தல் செய்வது  கட்டாயமானதாக இருக்கும் என்பதே . அதன் முடிவு 
மீண்டும் ஒரு கைபரை அவர்கள் சந்திக்க வருமா ? என்ற அச்சமே முஸ்லீம்கள் ஒரே தலைமையில் ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கான காரணமாகும் .  




No comments:

Post a Comment