Thursday, February 27, 2014

சிறுபான்மை 'பிக்ஹை' நம்பிய பயணங்கள் முடிவதில்லை !!


('மைனோரிட்டி பிக்ஹ் ' ஒரு கொல்லை நோய் ஆக முஸ்லீம் உம்மத்தை பீடித்திருக்கும் ஒரு சாபக்கேடு . அது பாவத்தை நன்மையாக்கி விடுகிறது . குப்ரின் கீழ் அடிமை வாழ்வில் நிர்ப்பந்தத்தை காரணம் காட்டி முஸ்லிமை பணிந்து போக அது அழைக்கிறது . இறை திருப்தி ,தாகூத்தின் திருப்தி என்ற முரண்பட்ட எதிர் சக்திகளுக்கு இடையில் ஒரு சமரச தீர்வாக அது ஆகிவிடுகிறது .இப்போது ஒரு முஸ்லிம் தான் யாருக்காக ?எதற்காக ?வாழ்கிறேன் ?எனக்கான வாழ்வியல் விவகார  சட்டங்களை யார் தீர்மானிக்கிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு  பதிலை தேடும் தேடும் போது .  கசப்பான பதிலாக 'குப்ர்' என்ற கொடுமை விடையாகி விடுகிறது . இந்த உண்மையை புலப்படுத்த ஒரு சிறு பதிவு .                  - அபூ ருக்சான் - ) 

ஹுப்புத் துன்யாவின் அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க 
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும் 
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில் 
ஒரு பந்தயக்குதிரை போல !

Tuesday, February 25, 2014

ஜனநாயக நிழலில் முஸ்லிம்!!??


      ஆட்சியாளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில பண்புகளை அது சுமந்திருப்பதால் "ஜனநாயகம்" (Democracy ) சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல. .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்கு எடுக்கும் தேவை ஏன்?

Monday, February 24, 2014

முதலாளித்துவம் ஒரு சுயநலவாதம் !


 
     இன்று உலகை ஆள்வது  முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

Saturday, February 22, 2014

நிர்ப்பந்தத்துக்கும் சரணடைவு அழைப்புக்கும் மத்தியில் எனது போராட்டங்கள் !!

அவ நம்பிக்கை ஆக்கப்பட்டுள்ளது நம்பிக்கை !
சமத்துவம் சகவாழ்வு என்ற போர்வையில் நான் 
சடத்துவ வெப்பத்தில் குடித்தனம் நடத்த அழைக்கப் படுகிறேன் !
இஸ்லாத்தின் இலட்சியங்களை ஏட்டுச் சுரக்காய் ஆக்கிவிட்டு 
அலட்சிய அதிகாரத்துக்குள் அடிமைப்படுவதில் சத்தியம் உள்ளதாம் !
உளரும்' உலமாத்' தனங்களில் 'பிக்ஹுல் அகல்லியாத் ' எனும் 
தன்மான விற்பனை நிலையத்தின் இலவச விளம்பரங்கள் வெளியிடப் படுகின்றன !கோழையாக வாழ்வதில் கொள்கை சிறக்குமாம் !

Friday, February 21, 2014

இலங்கையிலும் 'BROTHERS WAR' "சபாஷ் சரியான போட்டி !"

           "தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும் , முற்றிலும் ஒரு மனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்பதை தவிர வேறு
எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்பட வில்லை 
                                                                                               (அல் குர் ஆன் 98:05)

                                                     ( நபியே !) நீர் இவர்களை பார்க்கவில்லையா ? 'உமக்கு இறக்கி அருளப் பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் அருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம் "; எனக் கூறுகிறார்கள் .எனினும் ,அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகிறார்கள் . ஆயினும் தாகூத்தை நிராகரிக்குமாறே அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள் .
                                                                                               (அல் குர் ஆன் 4:60)

F.S.A.-யின் புதிய கொமாண்ட் இன் சீஃப் - Brigadier General Abdul-Ilah al-Bashir al-Noeimi - ஜெனரல் சலீம் இத்ரீஸ் கட்டாரில் தஞ்சம் !


 (ஈரானின் 'ஹிஸ்புஸ் ஷைத்தான்கள் ' போல குப்ரிய மேற்குலகின் 'ப்ரீ வெஸ்டர்ன் ஆர்மி ' FSA என்ற பெயரில் சிரியாவில் இஸ்லாமிய இலட்சிய வாதத்துக்கு எதிராக எவ்வாறு தொழிற்படுகிறது ? என்பதை புரியப்படுத்தும் ஒரு பதிவு .)

      Brigadier General Selim Idriss. இந்த பழைய பெயர் ஞபாகம் வருகிறதா?. சுதந்திர சிரிய இராணுவத்தின் (F.S.A.) சீஃப் கொமாண்டிங் ஜெனரல். பஸர் அல் அஸாத்தின் இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளில் ஒருவர். மேற்கின் பேரம்பேசலின் விளைவாக போராளிகளுடன் இணைந்து கொண்டவர். சில சடுதியான தாக்குதல்களின் மூலம் ஹோம்ஸின் பல நிலைகளை கைப்பற்றி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். ஹிஸ்புல்லாக்களுடனான கரையோர நகரான ஹுஸைரின் சண்டைகளின் போது FSA -யின் பெயர் வேகமாக பரவியது. பின்னர் அதே FSA-யின் சிதைவிற்கும், உள்முரண்பாடுகளிற்கும் முழுப்பொருப்பும் இவர் மேலேயே சுமத்தப்பட்டது. சிரிய இராணுவத்தின் என்ஜினியரிங் டிவிசன் தளபதியால் தனது இயக்கத்தை பேணவோ நிர்வகிக்கவோ முடியவில்லை. மேற்குலகம் FSA -யிற்கு வழங்கிய பல நவீன ஆயுதங்கள் மாற்று இஸ்லாமிய போராளிகள் வசம் சென்றதற்கும் இவரே காரணம் என்பது இவர் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு. FSA-யிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை இவர் பெருமளவில் விற்று விட்டார். இப்போது சிரியாவை விட்டு ஓடி, தோஹாவில் (கட்டார்) அடைக்கலம் புகுந்துள்ளார். 

ஹிஜ்ரி 1342, ரஜப் 28ல் என்ன நடந்தது-?

          முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) -ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார்.முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்கவேண்டும் என்ற இழிநிலை உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாசானில் நடைபெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)


         மக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற பிணைப்பு (Raabitah Al Wataniyyah) உருவாகின்றது. மனிதர்களிடம் காணப்படும் உயிர்வாழும் உள்உணர்வு (Survival Instincts) தாம் வாழும் நாட்டிற்கு ஆதரவாகவும், அந்நிய நாட்டிற்கு எதிராகவும், தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் நிலையை நோக்கி அவர்களை தள்ளுகிறது. இதன் மூலம் தேசப்பற்று (Patriotic Bond) என்ற பிணைப்பு ஏற்படுகிறது. இத்தகைய பிணைப்பு மிகவும் பலவீனமானதும், தாழ்ந்த தரத்திலுள்ளதுமாகும். மனிதர்களைப் போலவே இப்பிணைப்பு விலங்குகளிடமும், பறவைகளிடமும் காணப்படுவதுடன், இது உணர்ச்சி பூர்வமாகவும் வெளிப்படுகிறது. ஆக்கிரமிப்பு மூலமாகவோ அல்லது தாக்குதல்கள் மூலமாகவோ அந்நிய நாட்டவர்களின் அச்சுறுத்தல்களுக்கு தாய்நாடு ஆளாகாத நேரங்களில், தேசப்பற்று என்ற இந்த பிணைப்பு மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அந்நியர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் அல்லது விரட்டி அடிக்கப்பட்டவுடன் இதன் தாக்கம் காணாமல் போய் விடுகிறது. ஆகவே, இந்தப் பிணைப்பு குறைந்த தரத்திலுள்ள பிணைப்பாகும்.

Saturday, February 15, 2014

இஜ்திஹாத் ஒரு நோக்கு!

 (இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டுள்ளது எனும் மகா தவறுக்கும் , அது யாரும் எப்படியும் நுழைய முடியும் எனும் நிலையில் திறந்துள்ளது எனும் நவீன  வேடிக்கையான  பார்வைக்கும் இடையில் இஸ்லாமிய வாழ்வு நோக்கிய பாதை இன்று அல்லாடி நிற்கின்றது . இத்தகு தவறை புரிய வைக்க ஒரு சிறு பதிவு .                  - அபூ ருக்சான்-)                                                                                                                                      

     இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்குர்ஆன், ஸுன்னா ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களது மரணத்துடன் பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்ப்பதற்கோ அல்லது இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்பது மிக முக்கியமான அடிப்படையாகும்.இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் கூறும் நடைமுறைப் பிரச்சினைகளை விளங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி ‘இஜ்திஹாத்’ என்றழைக்கப்படுகிறது.

Thursday, February 13, 2014

இது 'பெனால்டி கிக்கா சேம் சைட் கோலா' !?

           
    ' பயங்கரவாதம் ஒழியுமா ? ' இந்த காரசாரமான தலைப்பு கடந்த பெப்ரவரி 2014 'அல் ஹசனாத் ' இதழின் 10 ஆம் பக்க பதிவு . அல்ஹம்துலில்லாஹ் குப்ரிய தேசியக்கொடிக்கு கம்பமாக விறைத்து நின்ற ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் ! 'சேம் சைட் கோல் ' சிறப்பாக இருந்தது .ஆனால் யார் சைட்டில் இருக்கிறோம் என டீம் தெரியாமல்  அடித்த சேம் சைட் பெனால்டி கிக் போல அது இருந்தது . நேற்று ஹிக்மதியார் படம் போட்டு இஸ்லாமிய எழுச்சி...!! என ஆப்கான் போருக்கு மகுடம் கொடுத்தவர்கள் இன்று போட்டுள்ள' ஹிக்மத் தேசிய 'அட்டைப்படத்துக்கும் இடையில் தொடர்பை தேடிய எமக்கு சற்று ஆறுதலாக இருந்தது . "முதலாளித்துவ அரசியலில் இதெல்லாம் சஹாஜமப்பா" என அவர்களே தம்மை பற்றி எழுதிய சுயசரிதை போல விடயம் இருந்தது .

காதலர் தினம் ! முஸ்லீம்களே அவதானம் !

          இல்லாததை இருப்பதாக காட்டுவதுதான் மேற்கின் நாகரீகம் ஹோலிவூட்டை போலவே தினமும் 'பிலிம் 'காட்டும் வரிசையில் பெப்ரவரி 14 காதலர் தினம் (வலண்டைன்ஸ் டே ) எனும் வெளியீடாகும் . நிஜமான அதன் கொடிய முகத்தில் ரோமன்ஸ் எனும் மேக்கப்பை இட்டு காட்டும் இடுகாட்டு அரசியலின் இதிகாசமே இது தவிர வேறு ஒன்றுமில்லை . சுய இலாபத்துக்காக பலரிடம் பல் இழித்து பணம் தேடுவாள் விலைமாது ; இந்த அசிங்கமான மடி விரிப்புகள் தேவைக்கு ஆக்கிரமிப்பாக வடிவம் பெறும் . இத்தகு குணம் கொண்ட விபச்சாரம் பிளஸ் சர்வாதிகாரம் கலந்த அசிங்கம்  தந்த ஒரு அசுத்தத்தை மனித சமூகத்தில் தூய்மையின்  பெயரில் படர விட்டுள்ளார்கள். இதன் பூரண அனுசரணை இவர்களின் மீடியாக்களே .

Tuesday, February 11, 2014

வீரர்களின் மார்க்கம் கோழைகளை பிரசவிக்குமா !?

                                                                                                                                                                                இஸ்லாம் மேலோங்க வேண்டும் என அதற்காக தம்மை அர்ப்பணித்து உழைத்து நிற்கும் வீரர்களின் தேடல் தேசம் தாருல் இஸ்லாம் மட்டுமே . அவர்கள் எதிர்பார்க்கும் பறந்து விரிந்த தேசியம் இஸ்லாமாகவே இருந்தது .இத்தகு தூய இலட்சியத்தோடு புறப்பட்ட மனிதர்களின் துணிவுக்கு முன் சோதனைகள் தூசி போல் ஆகின ! இழப்புகளை நாளை இறைவன் முன் தம் செயல்களுக்கான ஆதாரமாக்க சேமித்துக் கொண்டார்கள் .இவர்களது புறப்பாடுகள் வீரத்தையே அச்சம கொள்ள வைத்தது !"வாழ்ந்தால் இஸ்லாம் எனும் கண்ணியத்தோடு வாழ்வு ;அல்லது வீழ்ந்தால் சஹீத்களாக வீர சுவனம் ." எனற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முன்னால் தாய் ,தந்தை மனைவி பிள்ளைகள் , செல்வங்கள் ,பிறந்த மண் இப்படி எல்லா வற்றையும் இரண்டாம் மூன்றாம் பட்சமாக்கியது .

Monday, February 10, 2014

அலிபோவின் மத்திய சிறைத்தளம் மீது ஜபாஃ அல்-நுஸ்ரா பெருந்தாக்குதல் - களத்தில் காவியமானார் Saifullah Nushrah Ash-Syisyani

Belasungkawa Jabhah Nushrah atas gugurnya komandan Saifullah Asy-Syisyani
அலிபோவின் மத்திய சிறைச்சாலை என்பது சிரிய முஜாஹித்களிற்கு என்றும் எட்டாக்கனியாகவே இருந்தது புலிகளிற்கு ஆனையிறவு படைத்தளம் போல. பல முறை இதன் மேல் தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன இழப்புக்களுடன். அஹ்ரார் அல்-ஷாம் அணியினர் இரண்டு முறையும், ஜபாஃ அல்-நுஸ்ரா ஒரு முறையும் பெருந்தாக்குதல்களை ஆரம்பித்து பின்னர் சிரிய படைகளின் வான்தாக்குதல்கள் காரணமாக பின்வாங்கினர். இதில் பலநூற முஜாஹித்கள் மரணித்தனர். கடந்த வாரம் மீண்டும் ஒரு புதிய இறுதித் தாக்குதலை ஜபாஃ அல்-நுஸ்ராவின் முஜாஹித்களும், அஹ்ரார் அல்-ஷாமின் போராளிகளும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். 5000-இற்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு தினமும் டசன் கணக்கானவர்கள் இழுத்து வரப்பட்டு அஸாதிய படை அதிகாரிகளின் விருப்பம் போல படுகொலை செய்யப்பட்டு வந்தனர். அந்த சிறைச்சாலையின் மதில்களின் எல்லையை அண்மித்தவர்கள், இரவு நேரங்களில் பெண்களின் அழுகுரலும், சித்திரவதையை தாங்க முடியாத கூக்குரலும் காதை அடைக்கும் அளவிற்கு கேட்கும் என தெரிவித்திருந்தனர். இப்போது அந்த சிறைத்தளத்தையே சிரிய முஜாஹித்கள் தாக்கியுள்ளனர். 

Friday, February 7, 2014

ஒரு புலி நியாயம் பேசுகிறது !!! (பகுதி 2)

              போட்டுத் தள்ளுவது (கொலை செய்வது ) கொள்கையாகி போனதால் அதையே இலட்சியத்துக்கான காரணமாய் மாற்றுவதில் இருந்தே எமது இயக்கத்தின் அரசியல் வடிவம் பெற்றது . ஒரு சிங்களச் சிப்பாயை கொலை செய்வதில் இன்பம் கண்ட எமக்கு சிங்களம் என்ற வார்த்தையில் அடக்குமுறை காட்டப் பட்டது .அதனால் அத்தகு இன அடைமொழி சுமந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் எதிரிகளாக தெரிந்தார்கள் . ஒவ்வொரு தமிழனும் புலியாக சிங்கள இராணுவத்தால் பார்க்கப்பட்டதட்கும் இத்தகு நியாயம் அவர்களுக்கும் இருந்திருக்கலாம் .இந்த  இனவாத பாரம்பரியத்தை பயிற்றுவித்தே நவகாலனித்துவ விசாவை 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் என்ற பெயரில் பிரிட்டிஸ் காரன் கொடுத்தான் . இந்த அநீதியின் பின்னால் ஒரு தவறான மேட்டுக்குடி அரசியல் பாரம்பரியமும் விட்டுச் செல்லப்பட்டது . 

'தாகூத்தும் 'நாமும் !!!( ஒரு புரிதல் நோக்கி ...)


       ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனைவருமே முஸ்லிம்களாக இருந்தாலும் அங்கு நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களும் பாதுகாப்பும் இஸ்லாமிய முறைப்படி அமையப்பெறாவிடில் அது தாருல் குஃப்ர் ஆகும். ஏனெனில் ஒரு நிலப்பகுதியை தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எனப் பிரித்தரிய அங்கு நடைமுறைப்படுத்தப்படும் அங்குள்ள அரசியல் அதிகார ஒழுங்கும் ,அங்கு நிலவும் சட்டதிட்டங்களும்  முக்கியக்காரணியாகும். 

Thursday, February 6, 2014

சிரியப் போராட்டம் பற்றி நிஜங்களை மறைக்கும் நிழல்கள் !! (ஒரு சுருக்கப்பார்வை )


         தேவைகளால் ஒரு போராட்டம் நிர்ப்பந்திக்க படும் போது அதை கொடுப்பவர்களால் அந்தப் போராட்டம் ஆளப்படும் என்பது ஏகாதிபத்திய சுயநல  அரசியலின் அடிப்படை விதி . அதற்காக தேவைகளை ஏற்படுத்தல் ,அதை தமது கட்டுப்பாட்டில் பராமரித்தல் என்பவற்றை இந்த இத்தகு சக்திகளின் (பென்டகன் போன்ற )  மூல மையங்கள் தமது உளவாளிகள் மூலமும் , குறித்த பகுதியில் விலைபேசிய அவர்களது விசுவாசிகள் மூலமும் சாதிக்கும் .மத்திய கிழக்கின் அண்மைய ஆட்சி மாற்றங்கள் , ஆட்சி மாற்றங்கள் தொடர்பான புரட்சிகள் வரை இந்த தத்துவம் தாராளமாகவே பயன்பாட்டுப் போனது .ஆனால் சிரியா விவகாரத்தில் இந்த விடயம் புறநடையாகிப் போனது இத்தகு ஏகாதிபத்தியங்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது பிராந்திய கைத்தடிகளாக தொழிற்படும் விசுவாசிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

மௌலானா மௌதூதியின் (ரஹ் ) ஜமாதே இஸ்லாமியும் , இன்றைய 'நியோ இஸ்லாமியும்' !!!

     சில கேள்விகள் பதில்களை தேடியபோது காலத்தால் அந்த கேள்விகளே மாற்றப்பட்டிருந்தன .நேற்று  இகாமதுத் தீன் என்ற இலக்கைக் காட்டியவர்கள் இன்று  தாகூத்தோடு அதன் வாழ்வியலோடு சமரசம் செய்து, தேசிய சகவாழ்வு என்ற சரணடைவில் தான் மீட்சி உண்டு ;என சொல்கிறார்கள் . அவ்வாறு சொல்வது சாதாரண ஒரு பாமர முஸ்லீம் அல்ல . இஸ்லாமிய அரசியலை வாய் கிழியப் பேசிய ஒரு இஸ்லாமிய இயக்கம் !! இவர்கள் குப்ரை திருப்திப்படுத்துவதில் அஹ்லாகை வரைவிலக்கணப் படுத்துகிறார்கள் .ஒரு தெளிவான ஜாஹிலீயத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசி முஸ்லிம் உம்மத்தை ஏமாற்றுகிறார்கள் . 

Tuesday, February 4, 2014

எது சமூக மாற்றம் !

        ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்த இயல்பு கொண்ட மக்கள் தொகையின் தொகுப்பே சமூகம் என்பதாக இன்று பொதுவாக கருதப்பட்டு வருகின்றது .அந்த ஒத்த இயல்பு இன, மத ,சாதி ,தேசியம் ,தேசம் ,போன்ற எந்த அடையாளமாகவும் இருக்க முடியும் ;ஆனால் இஸ்லாம் சொல்லும் இஸ்லாமிய சமூகம் எனும் கோட்பாடு இன்றைய உலகம் கருதும் சமூகம் எனும் கோட்பாட்டோடு சிறிதும் உடன்படவில்லை.ஏனென்றால் இன்றைய உலகின் கருத்து வெளிப்படையான சில அடையாளங்களையே அது பொதுவாக 
நோக்கி அதில் வாழும் தனி மனிதர்களது உள்ளார்ந்த உணர்வுகளையோ அதன் கொள்கை ,வழிமுறை பற்றியோ சிந்திப்பதில்லை .
 

Monday, February 3, 2014

சஹாதத்தின் சுவை தேடும் வீரத்தின் மைந்தர்கள் ......



சிரியாவின் உள்ளே........... என்ன நடக்கிறது? - I.S.I.S.- ன் நட்சத்திர தளபதி பற்றிய ஓர் அறிமுகம் !

 (சிரிய இஸ்லாமிய போராளிகள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள் ஏன் ? இது இஸ்லாம் இகாமத் செய்ய வேண்டும் அதன் நிழலில் ஒரு நொடியாவது வாழ்ந்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் தோன்றிய கருத்து வேறுபாடு மேற்குலகு மற்றும் அதன் அராபிய கைத்தடிகள் விடயத்தை பூதாகரமாக காட்டியது .ஆனால் இதன் பின்னால் உள்ள அரசியல் சூட்சுமங்கள் ஏகாதிபத்தியத்தின் பழுத்த உளவுப் பிரிவுகளுக்கே தலை வலியை கொடுத்துள்ளது . அதாவது  ஆப்கானில் இருந்து போஸ்னியா சென்று செச்னியாவை ஊடறுத்து சிரியா வரை வந்த விடயம் பலஸ்தீனை அடைந்தும் தொடரும் என்பது மிகச் சாதரணமாக ஊகிக்க கூடியது .

ஒரு புலி நியாயம் பேசுகிறது !!!


         நேற்று எம்மை உசுப்பி விட்டு ஓடி ஒழித்தவர்கள் இன்று எம்மை சமாதி கட்டிவிட்டும் அதை அரசியல் ஆக்குகிறார்கள் ! அன்று துவக்கு துவக்கு போரை என்றவர்கள் துரோகிகளாய் சுயரூபம் காட்டினார்கள் அதுவும் சுயநல அரசியலே ! எமது உணர்வுகள், வேட்கைகள் , இலட்சியம் என்பவற்றை துறந்து இத்தகு சுயநலத்தில் நாமும் அடிவைத்தோம் ! மாற்று வழி இல்லை .உலகை ஆளும் முதலாளித்துவம் கற்றுத் தந்தது இது மட்டும்தான் . 

Sunday, February 2, 2014

சிந்திக்க சில வரிகள் ......(காலத்தின் தேவை கருதிய மீள்பதிவு .)


 முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)

Saturday, February 1, 2014

நவ காலனித்துவ விழா ! நாமும் கொடியேற்றுவோமா !?


      "சில மனிதர்கள் தொடர்ந்தும் இன்னுமொருவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதில் இன்பம் காண்கின்றனர் .ஒருவன் விரட்டி விட்டால் இன்னுமொருவனை எஜமானனாக்கி கொள்வார்கள் . அந்த உணர்வு அவர்களில் அப்படியே படிந்து போய் விட்டது ... தம்மை அடிமைகளாக ஆள யாருமே இல்லை என்ற நிலை வந்துவிட்டால் மனம் பொறுத்துக் கொள்ளாது ... யாரும் சுட்டு விரலை நீட்ட மாட்டானா !? என்று தேடிக்கொண்டே இருப்பார்கள் கால்களில் வீழ்ந்து விட ! "                                                                                                                            - செய்யத் குத்ப் (ரஹ் ) -