Monday, December 31, 2012

பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா !?


தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே 
சத்திய  விருட்சம் செழித்து வளர்கின்றது .
மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும் .
கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு 
சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும் .
விதையாக வீழத் தயங்குபவன் மனித 
அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன் .
போராட்ட வரலாறு பஞ்சு மெத்தையில் 
படிக்க திகட்டாத சுவையுடையது தான் .
யதார்த்தத்தில் அதன் ஓய்வு கூட சுமையாகி 
நாளைய பொழுதை புலர்ப்பிக்க இன்று 
முற்படுக்கையில் முகவுரை எழுதப் படலாம் .
தோல்விகளில் படிப்பினை காணாதவன் 
இழப்புக்களில் விரக்தியை நிச்சயம் தழுவுவான் .
சோதனைகளை நிஜத்தில்  சந்திக்க தயங்குபவன் 
வேதனைகளில் அற்புத சுகத்தை காணாத் தயங்குபவன் 
களத்தை பற்றி கற்பனை கதை பேசவே தகுதியற்றவன் .
இலட்சிய வாதம் அலட்சியமாக்கப்படும்  இவர்களால்
தூய புரட்சிகரத்தால் புத்துலகை படைக்க முடியாது .
கோழைத்தனத்தின் விலாசத்தை நெற்றியில் சுமந்து 
இவன் கட்டில் சாவுக்கே கதி கலங்கியே சாவான்  .

No comments:

Post a Comment