
முஸ்லீம்கள் மட்டுமே பயங்கர வாதிகள் , தீவிரவாதிகள் என்ற மீடியா எல்லையை தாண்டிய செய்திகளை எப்போதும் மீடியாக்கள் பெரிது படுத்துவதில்லை . ஒரு சில வேலை ராஜேஷ் சௌத்ரியை மனதால் சுபாஷ் சந்திர போஸ் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கும் அஞ்சலியாகக் கூட இந்திய மீடியாக்களின் மௌனம் இருக்கலாம் .
பக்கச்சார்பு மீடியா பரிமாணம் என்பதுதான் இன்றைய ஜனநாயக அரசியல் கருத்துச் சுதந்திரம் காட்டும் தெளிவான திசை. இங்கு பெரும்பான்மை கவரப்படுதல் என்பது தான் அவர்களின் தெளிவான இலக்கு தவிர உண்மைகள் அல்ல (இதில் சிலர் விதி விலக்கு ). இதையே ஒரு முஸ்லீமோ ,பாகிஸ்தான் ஆதரவு அமைப்போ செய்திருந்தால் பக்குவமாக பிரித்து மேய்ந்திருப்பார்கள் .
இதைத்தான் எங்கள் 'லோக்கல் ' பாசையில் சொன்னால் 'இளகிய இரும்பு கிடைத்தால் கொல்லனின் பொண்டாட்டியும் ஓங்கி அடிப்பாளாம் ' எனலாம் . இந்த நியாயப் போலியில் தான் முஸ்லீம் உம்மத்தை சுமந்த உலகம் உருண்டு கொண்டிருக்கின்றது . இதில் இந்த கேடு கேட்ட ஜனநாயகத்தை வக்காலத்து வாங்கும் எம்மவர்கள் அதன் பக்கச்சார்பு பரிமாணம் சுதந்திர மீடியாக்களையும் தாண்டி பாதாளம் வரை பாய்ந்து ,இலாபம் ,நன்மை என்ற முதலாளித்துவ வட்டத்தில் நியாயத்தை புதைப்பதை உணர்ந்து கொள்வார்களா.
மிக அருமையாக தெளிவு படுத்தி இருக்கிறீர்கள் சகோதரரே. ஊடகங்கள் செய்யும் திரிபு வேலையெல்லாம் கூடிய விரைவில் முற்றிலும் மாறும்.
ReplyDeleteInternational media is needed in all sectors and in all languages which is based on truth especially for Muslim ummah
ReplyDelete