Saturday, November 30, 2013

'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '!


       ( டி. ஈ. லாரன்ஸ் அல்லது டி. ஈ. லாரன்சு (Thomas Edward Lawrence, ஆகஸ்ட் 16, 1888 – மே 19, 1935) ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராச தந்திரி மற்றும் எழுத்தாளர். முதல் உலகப் போரில் உதுமானிய கிலாபாவுக்கு  எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக லாரன்ஸ் ஆஃப் அரேபியா (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக அறியப்படுகிறார்.

Friday, November 29, 2013

ஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்!


1) மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களை கற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன. அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உக்கிரமடைகின்றன.

 ஒபாமா நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால் எரியூட்டப்பட்டுள்ள அபாயங்களின் மற்றொரு அறிகுறியாக, சீன கடலில் ஒரு"வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை" (ADIZ) சனியன்று சீனா அறிவித்தது. இந்த புதிய மண்டலம் இதேபோன்ற ஜப்பானிய ADIமண்டலத்திற்கு உள்ளே வருகிறது. மேலும் அப்பிராந்தியத்தின் வெடிப்பு புள்ளிகளில் ஒன்றாக விளங்கும் மற்றும் இருநாடுகளும் தங்களுக்கென்று உரிமைகோரும் சென்காகூ தீவுகளையும் (சீனாவில் இது தியாவூ என்றழைக்கப்படுகிறது) உள்ளடக்கி உள்ளது.

ஓநாய்களின் பாசறை (பகுதி 03)



        பாலஸ்தீனை அபகரிக்க யூதப் பொறிமுறை உதுமானிய கிலாபாவை தனது கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அணுகியபோது அதன்அது  சாதகமாகவில்லை .கிலாபா அரசு பலவீனமான தனது இறுதி நிலைவரை பாலஸ்தீனை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. யூத அதிகார நிலத்தின் எதிர்பார்ப்புகளை கைவிட யூதர்களும் தயாரில்லை .எனவே இறுதித் தூதுக்குழு கலீபாவுடன் நிகழ்த்திய பேச்சுக்களை முடித்து திரும்பியது .

Thursday, November 28, 2013

முஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்துவா'மெசின்கள்!


           1924 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் திகதி முஸ்லீம் உம்மத்தின் கேடயமான கிலாபா அரசு திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது . குப்ரிய ஏகாதிபத்திய எதிரிகள் இஸ்லாத்தின் பூமிகளை சூறையாடவும் ,முஸ்லீம்களை வஞ்சம் தீர்க்கவும் திட்டமிட்டபோது ,தகர்க்கப் படவேண்டிய முதல் இலக்காக இந்த கிலாபா அரசே அவர்களுக்கு தெரிந்தது .அதை வீழ்த்த சிந்தனை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லீம் உம்மாவில் இருந்த சிலரே கோடரிக் காம்புகளாக பயன் பட்டனர் .

Wednesday, November 27, 2013

'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா !?

(ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம் தவறாக குற்றம் சாட்டப்படுகிறது . அந்த இயக்கம் பற்றிய விமர்சன நோக்கம் தூய்மை ஆனதல்ல . அதை புரியப்படுத்தவே இந்தப்பதிவு. )

 ஆத்திரத்தோடு அணுகினால் நிரபராதியும் குற்றவாளி ஆகிவிடுவான் அனுதாபத்தோடு அணுகினால் குற்றவாளியும் நிரபராதி ஆகிவிடுவான் .எனவே விமர்சனங்களை ஆத்திரமும் இல்லாமல் அனுதாபமும் இல்லாமல் பூரண தேடலோடு சமர்ப்பிப்பது தான் உண்மையான விமர்சனத்துக்கு அழகு . 

அட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' !


மேட்டுக்குடி சுயநலத்தில் பொதுநல பிரசவமாக பிறப்பித்த அழகான பிணம்!கொள்கை என்ற பெயரில் குடிபுகுந்த கொள்ளை நோய் இந்த  'டிமோகிரசி' !செத்துப் பிறந்ததை 'ராஜாவாக்கி ' சீவிச் சிங்காரித்து அதிகார தேர் ஏற்றி 'செகியூலரிச ' பாகனோடு பார் முழுதும் பவனி விட்டார்கள் சுயநல நியாயத்தில் அந்த ஏகாதிபத்திய பகல் கொள்ளையர்கள் !


நேற்று ரோமில் என்றார்கள் கிரீசில் என்றார்கள் !
இன்று இங்கிலாந்தில் என்பார்கள் ஜெர்மனியில் என்பார்கள் !
அதோ பிரான்சில் என்பார்கள் ! இதோ இந்தியாவில் என்பார்கள் !
இருக்கும் ஆனால் இருக்கவே இருக்காது ! நடக்கும் ஆனால் நடக்கவே நடக்காது !அதுதான் மக்கள் நலன் பேசும்  டிமோகிரசி ' !

Sunday, November 24, 2013

இஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.


                    தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு அல்லது சுய அழிவு  அரசியலில் தான் முடியும் .

சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல்!(ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

  இலங்கையில் முஸ்லிம்களது நலன் காக்கப்படுவதற்கு இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் “முதலாளித்துவ, மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜனநாயக பாராளுமன்றத்திற்கு” அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் மூலம் தமது உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும் என்றும் , முஸ்லிம்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தமக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் நாடுகிறார்கள்.

இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு முகநூல் பதிவில் இருந்து .)

      இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணிக்கப்பட்ட  நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.

Saturday, November 23, 2013

ஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான மீள்பார்வை தேவை .

(  இன்றைய குப்ரிய சித்தாந்த அரசியல் மூலம் தீர்வு பற்றி பேசும் சில இஸ்லாமிய வாதிகள் முஸ்லீம் உம்மத்தை ஒரு பயங்கரமான திசையை நோக்கியே இட்டுச் செல்கிறார்கள் .அதன் புரிதலுக்காக சில முன்னைய பதிவுகளின் தொகுப்பு )

 தீமையில் இருந்து  நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் முஸ்லீம் உம்மத்தின் முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர முடியாது .

Wednesday, November 20, 2013

ஓநாய்களின் பாசறை ! (பகுதி 02)


         தமது  இனமே உலகில் சிறந்த இனம் என்ற அடங்காப் பிடாறித் தனத்தில் அடுத்த மனிதர்கள் மீது இழிவான பார்வை யூதர்களுக்கு இரத்தத்தில் ஊறியது . தான்தோன்றித் தனம் இவர்களுக்கு இயல்பானது . இறை கோபத்துக்கு உள்ளானவர்கள் என இறைவனே தூற்றும் அளவுக்கு வரம்பு மீறினார்கள் . இறை கட்டளைகளை 'டெக்னிக்காக ' மீறுவதில் இவர்களை அடிக்க ஆளில்லை ! 

Tuesday, November 19, 2013

ஓநாய்களின் பாசறை ! (பகுதி 01)



  வஞ்சகம் , ஏமாற்று , அக்கிரமம் ,ஆக்கிரமிப்பு இந்த வரிசையின் இறுதியில் ஒரு தேசமாக அறிவிக்கப்பட்ட அநீதியின் பெயரே இஸ்ரேல் .ஹிட்லரின் ஆரிய இன ஜேர்மனியர்களை உயர்த்திய இனவாதக் கோட்பாட்டை மனித விரோதப் பார்வையாக காட்சிப்படுத்தும் குப்ரிய மீடியாக்கள் இந்த யூத சியோனிசம் பற்றி மட்டும் அனுதாப நியாயங்களை சொல்லி நிற்கும் .

Monday, November 18, 2013

ஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......


    சுஹதாக்களின் பூஞ்சோலையில் ஒரு நாணல் புல்லாக வேணும் ஒரு ஓரத்தில் நிலைத்திருக்கும் சராசரி ஆசை இல்லாதவனாக ஒரு உண்மை முஸ்லிமால் இருக்க முடியாது .அந்த வகையில் கந்தக வாசத்தை சுவாசித்து  அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வின்  எதிரிகளை சந்திக்கும் ஆதங்கம் என்னையும் முற்றாகவே தழுவிக் கொண்டது . 

    ஹஜ்ஜுக்குப் போகவேண்டும் ,உம்ராவுக்கு போகவேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் இரத்தத்தோடு கலந்தது . விழிப்பிலும் ,உறக்கத்திலும் சத்திய வசந்தம் வீறு கொண்டெழுந்த புனித பூமிகளான மக்காவையும் ,மதீனாவையும் வாழ்நாளில் ஒரு தடவை தரிசிக்க வேண்டும் என்ற பேரவா எல்லோரையும் போலவே எனக்குள் இல்லாமல் இல்லை . 

Saturday, November 16, 2013

சிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad !!

     சிரியாவில் நடக்கும் தாக்குல்கள் பற்றி நாம் நிறையவே அறிந்துள்ளோம். பொதுமக்கள் மீது அரச இராணுவம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அநியாயங்களிற்கு பொதுவாக நாம் குற்றம் சாட்டுவது பஸர் அல்-அஸாத்தினை. மேற்கின் ஊடகங்கள் அவரை ஒரு கொலை வெறியனாக சித்தரித்து வந்தன. உண்மையில் சிரிய அரசாங்கத்தில் அதன் அதிபரையும் பார்க்க பலமிக்க ஒரு நபர் தான் இந்த வன்முறைகளிற்கு எல்லாம் பிரதான காரணம். அவர் பெயர் மாஹிர் அல்-அஸாத். சிரிய அதிபரின் சகோதரர். டமஸ்கஸ் மாகாணம் இவரது பொருப்பிலேயே இருந்து வருகிறது. 

Friday, November 15, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)

(பிரித்தானியர்கள் நேரடிகாலனித்துவம் செய்த போது இலங்கையர்கள் நடாத்தப்பட்ட விதம் இது! 

ஆனால், இன்று மேற்கத்தேய வாழ்க்கைமுறை மற்றும் அவர்களது நீதி, நிருவாகம், சட்டம், பொருளியல் ஒழுங்கு என்பவதற்றால் மறைமுகமாக இலங்கையர்களது இரத்தம் உறிஞ்சப்படுவதுடன் பல்வேறுவகையான சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளை முகம்கொடுக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இலங்கை மக்கள் உள்ளனர்.)

 இன்று இலங்கையில் கோலாகலமாக பொதுநலவாய அரச தலைவர்களது மகாநாடு நடைபெறுகிறது.

  பொதுநலவாய நாடுகள் என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். 

 இந்நாடுகள் இணைந்து 1949 இல் இவ்வமைப்பை ஸ்தாபித்தது. ஆரம்பத்தில் 8 நாடுகள் அங்கத்துவம் பெற்ற இவ்வமைப்பானது இன்று 53 நாடுகளின் உறுப்புரிமையைக் கொண்டதாக காணப்படுகிறது. 

'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தில் சாதிக்க நினைப்பது என்ன ?

       

       சிரியப் போராட்டம் பற்றி பல முன் பின் முரணான செய்திகள் ஊடகங்கள் மூலம் உலாவருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது . அண்மையில் கூட டமஸ்கஸில் ஒரு மஸ்ஜிதில் நடந்த குண்டு வெடிப்பில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன . அங்கு போராடும் இஸ்லாமிய போராட்ட அணிகள் தொடர்பில் பல உள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் தகவல்கள் பரப்பப் படுகின்றன . 

CHOGM ஒரு சோகமா !? (இது இன்னொரு திசையில் இலங்கை வாழ் பாமரன் பேசுகிறான் !.)

          "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது ! அறிவை நீ நம்பு அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது ... " என்று நேற்று ஒரு கவிஞன் சொன்ன கவிதை வரிகள் எனக்கு நடப்பு நிகழ்வுகளை பார்க்கும் போது என்னை அறியாமலே எனது உதடுகள் மொழிகிறது ! இலங்கையின்  'CHOGM ' திருவிழாவை பற்றித்தான் சொல்ல வருகிறேன் .

Monday, November 11, 2013

இது வரலாற்று சதிகளின் முகவரியில் இருந்து .....


   (முஸ்லீம் உம்மத்தே ! உனது பலத்தை புரிந்து கொள்ளாதவரை புழுக்கள் கூட உன்னை சிறைவைக்கும் ! புரிந்து கொண்டால் சிம்மாசனச் சிங்கங்களும் 'சல்யூட் அடிக்கும் ' ! இது ஸுன்னா காட்டித் தந்த சத்திய சுதந்திரத்தின் நிலையான செய்தி .கோழையான கோடி வருடங்கள் வீரமான ஒரு நொடிக்கு முன் அற்பமானவை ! அல்லாஹ்வின் மார்க்கம் போராட்டம் ,இரத்தம் ,சிதைவுகள் ,என்ற அம்சங்கள் இன்றி மேலோங்கும் என நினைப்பவர்கள் வெறும் கற்பனா வாதிகளே !தீமைக்கு முன் நீ மௌனமாக இருப்பதும் ஈமானின் இறுதி நிலைதான் ! அதிலும் நீ ஈமானை ஹிக்மத்தினுள் புதைத்து விட்டு குப்ரோடு குடும்பம் நடத்துவது அவமானமானது . நாளை எமக்கும் ஒரு வரலாற்றுப் பதிவு வரும் .அதில் நாம் எவ்வாறு சித்தரிக்கப் படவேண்டும் என்பதை தீர்மானிப்பது நாங்களே எனும் உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .)

Saturday, November 9, 2013

சிரிய இராணுவத்தின் “மாகின்” ஆயுத கிடங்குகள் போராளிகள் வசம் வீழ்ந்தது !!





   குறித்த இந்த சண்டையில் ஈரான் சார்பு ஹிஸ்புஸ் சைத்தான் அணியினரும் 
ஆசாத படைக்கு சார்பாக சண்டையிட்டனர் . இறுதியில் போராளிகளின் 
தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பலத்த இழப்புகளுடன் 
பசர் அல் அசாதின் இராணுவம் பின்வாங்கியது 

.இது பற்றிய வீடியோ கிளிப்கள் கீழே வருகின்றது .

Friday, November 8, 2013

இது வீரத்தின் மைந்தர்கள்!!! (சிரியா ஜிஹாதில் சில பதிவுகள்)

"இரத்தத்தின் மீதே அன்றி வளராத ஒரு மரம்தான் இஸ்லாம் என்பதை ஜிஹாத் எக்கு கற்றுத் தந்தது  "       

                     - அப்துல்லாஹ் ஆஸாம் (பாலஸ்தீனி)

ஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவம்!

   
   ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தாவிட்டால் NATO படைக்கு பொருட்கள் கொண்டு செல்லும் வழியை தடைசெய்வோம் ! தெஹ்ரீக் இ இன்ஸாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் .அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாதம் இருபதாம் திகதிவரை காலக்கெடு விதித்துள்ள இவர் இதுபற்றி BBC செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிப்பதாவது, இந்த விடயத்தை அமெரிக்கா அலட்சியம் செய்யும் நிலையில் கைபர் கணவாய் வழியாக (முஹம்மது பின் காசிம் சிந்துவை வெற்றிகொள்ள அப்‌பாசிய கலீஃபாவின் கட்டளையின் பெயரில் வந்த அதே பாதையா !!) ஆப்கானுக்கு NATO  படைகளுக்கு உதவிகள் கொண்டு செல்லும் பாதையை மறித்து ஒரு போராட்டத்தை மேட் கொள்ளப் போவதாக சூளுரைத்துள்ளார்.
  

டமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணுவ Commander Mohammad Jamlizadeh படுகொலை - சிரிய சண்டைகளின் ஈரானிய தளபதி என்ன செய்கிறார்? !!




       ஈரானிய குடியரசுகாவற் படையின் கட்டளையதிகாரி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். Commander Mohammad Jamlizadeh ஈரானியIslamic Revolutionary Gurard Corps (IRGC)-ன் முக்கிய தளபதிகளில் ஒருவராவார். ஈரான் ஈராக் யுத்தம் முதல் இவர் ஈரானிய இராணுவத்தில் பங்காற்றியவர். தென்கிழக்கு கேர்மன் மாகாணத்தை சார்ந்தவர். அவரது இறுதி ஊர்வலமும் இங்கேயே நடைபெற்றுள்ளது. சிரியாவில் வைத்து இஸ்லாமிய போராளிகளினால் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். ஷெய்யிதா ஷெய்னப் பள்ளிவாசலினை பாதுகாக்கும் படையணிக்கு இவர் தலைமை வகித்திருந்தார். ஈரானிய அரசு இவர் இராணுவ தரப்பில் அங்கு கடமையாற்றவில்லை என்றும் தொண்டர் சேவையின் அடிப்படையிலேயே புனித ஸரீனை பாதுகாக்கும் பொருட்டு சிரியா சென்றிருந்தார் என்றும் தெரிவித்துள்ளது. 

சிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... - கமால் பாஷா இன்னும் இறக்கவில்லை போலும் !!




  
      சிரிய விவகாரத்தில் நான்கு சக்திகள் தங்கள் எதிர்கால நலன்களிற்கான பின்புலத்தில் செயற்படுகின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி சவுதி அரேபிய என்பன ஒரு அணியாகவும், ஈரானும் ஷியா மத தலைமைகளும் மறு அணியாகவும் பங்காற்றுகின்றன. இதை விட மூன்றாம் அணியாக துருக்கி தனது பிராந்திய நலன்களை மேம்படுத்தும் நோக்கில் சிரிய விவகாரத்தை கையாள முற்பட்டுள்ளது. இவைகளை தவிர ரஷ்யாவும் தனது மத்தியகிழக்கு மற்றும் மத்தியதரைக்கடல் ஆதிக்கத்திற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இவர்கள் எவருக்குமே சிரிய பொது மக்கள் பற்றிய நலன்களின் எந்த கரிசணையும் இல்லை. 

Thursday, November 7, 2013

காமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா !?


(  இது 16/11/2011  இல் ' குமுதம் '  இதழில்  வந்த ஒரு நேரடி  ரிபோர்டின் சுருக்கம் . வல்லரசாகும்  தகுதிக்கான  தராதரங்களில்  இந்தியா  மேற்கின்  முதலாளித்துவ  சித்தாந்த  தரத்திலும் அதிலிருந்து  உதிக்கும் சிந்தனை  தரத்திலும் எவ்வகையிலும்  குறைந்ததல்ல  என்பதை  உணர்ந்து  கொள்ள  இந்த விடயங்கள்  சிறந்த  உதாரணமாகும் .
           
                                     குடி  குடியை கெடுக்கும்  என்பார்கள் வரி  வருமானத்துக்காக அதை  குடியிருக்கவும்  விட்டிருப்பார்கள் !  சாதிப்  பூசல் நாட்டைக்  கெடுக்கும் என்பார்கள்  சாதி , மத ,பேதங்களில்  இருந்துதான்  ஆதிக்க அரசியலுக்கு  கடிவாளம் போடுவார்கள் !

Wednesday, November 6, 2013

ஹிஜ்ரா சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்காலமும் .


          ஹிஜ்ரி 1435 இலும் காலடி எடுத்து வைத்துள்ளோம் ! அரசியல் அநாதைகளாக, குப்பார்களால் அவன் விரும்பியவாறு அத்துமீறப்பட முடியுமானவர்களாகவே இம்முறையும் ஹிஜ்ரி ஆண்டுக்குள் நுழைந்துள்ளோம் .ஆனால் ஹிஜ்ரா எனும் வரலாற்று வடிவம் இதற்கு எல்லாம் மாற்றமானது . அது இஸ்லாமிய இலட்சிய வாதத்தின் அரசியல் இராஜதந்திர வெற்றியின் அடிப்படை ஆகும் .

                 இஸ்லாமிய வாழ்வியலின் நடைமுறை சாத்தியம் ஹிஜ்ராவில் இருந்து பாதுகாப்புப் பெறுகிறது , சுதந்திரமாக அமுல் படுத்தப் படுகிறது . ஆனால் நாமோ பூரண இஸ்லாத்தை வைத்துக்கொண்டு பாதுகாப்பற்றவர்களாக ,அதை அமுல் படுத்த சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோம் .

Monday, November 4, 2013

அப்படியானால் இவர்கள் யார் !?


           இன்றைய தினம் நீ ஒரு சவூதி சலபியாக இருந்தால் சிரியாவின் விவகாரத்தில் நேற்றுவரை இருந்த  நிலைப்பாடுகளை மாற்றிக்கொள் ! அது இஸ்லாமிய போராட்டம் எனும் நிலையில் இருந்து மகத்தான சவூதி மன்னரின் கட்டளையின் பெயரில் அது வெறும் உள்நாட்டு யுத்தமாக ,சிரிய அரசுக்கெதிரான கிளர்ச்சியாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது .

                சிரியாவின் அரசுக்கெதிரான போரில் பாதிக்கப்படும் முஸ்லீம் சிவிலியன்கள் தொடர்பில் அனுதாபப்படலாம் ஆனால் அந்த அநியாயத்தை செய்யும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கு கொள்ளவோ ,ஆதரவு அளிக்கவோ முடியாது .அவ்வாறு செய்வது சவூதி மன்னரின் நியாயங்களின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் . 

Sunday, November 3, 2013

இஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ் உலகை ஆள....?

அனைத்து தடைக்கற்களையும் தகர்த்தெறிவோம்!

தேசியவாதச் சிந்தனையை களைவோம்…!

சகோதரத்துவப் பிணைப்பால் இணைவோம்!

இஸ்லாத்திற்கு பலம்சேர்ப்போம்!

முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்கு ஒன்றிணைவோம்!

இஸ்லாமிய அகீதாவே எமது ஒற்றுமையின் நாதம்!

குர்ஆன் சுன்னாவே எமது மூலமந்திரம்!

வாழ்வில் குர்ஆன் சுன்னா நிலைபெற கிலாபா மீண்டும் நபிவழியில் முஸ்லிம் உலகில் நிறுவப்படவேண்டும்!

அதுவே முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்பு!

அதுவே எமது கேடயம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”

(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

மேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் மீள் உதயம் '.

(காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )




         "அரேபிய சாம்ராஜ்யத்தில் முஸ்லீம்கள் ஓன்று பட்டு விட்டால் ,அவர்கள் உலகுக்கு ஆபத்தாகவும் சாபமாகவும் மாறலாம் .அல்லது அருட் கொடையாகவும் மாறலாம் .என்றாலும் ,அவர்கள் பிரிந்து காணப் பட்டர்களானால், எந்தவொரு பெறுமானமும் தாக்கமும் அற்றவர்களாகவே இருப்பார் "
                                                         
                                                                     - லோரென்ஸ் பிரேவின் -
                                                         ( ஒரு மேற்கத்தேய சிந்தனையாளர் )

Friday, November 1, 2013

இவர்களா வைத்தியர்கள் !?


இவர்கள் இலுமினாட்டிகளா !? என
தூதர் (ஸல் ) சமூகத்தை யூதர் சமூகத்தோடு சேர்த்து
போஸ்டர் ஒட்டிப்போனது ஒரு கூட்டம் !?
இவர்களா ஏகத்துவ வாதிகள்?என
பதில் போஸ்டர் மறுநாள் பல் இளிக்க !
இந்த வாடிக்கையான வேடிக்கை 'பேப்பர்களை
மாடொன்று சுவைத்துப் போனது !

அரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவா' முட்டை ஏன்!?

   சவூதி மன்னரின் உளவுப்பிரிவுத் தலைவர் பந்தர் பின் சுல்தான் , ரஷ்யாவின் விளாடிமிர் புடினின் இரகசிய  இணைவின் அர்த்தம் சவூதி அரண்மனை முப்தியின் சிரிய விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய 'பத்துவா ' மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

       "ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற லெனினிச பயிற்றுவிப்பில் KGB  தனத்தோடு வளர்ந்த விளாடிமிர் புடின் அமெரிக்க C .I .A ஆலோசனையில்  மத்திய கிழக்கு விடயங்களை கையாளத் தொடங்கியுள்ளார் . அந்த வகையில்  இந்த கூட்டுச் சதியின் தெளிவான வெளிப்பாடே  Abdul-Aziz ibn Abdullah Aalash-Shaikh இன் 'பத்துவா' ஆகும் .

சவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கும் நாடா..? (ஒரு முக நூல் பதிவில் இருந்து )


     ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின் அங்கு “இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில்” நிறுவப்பட்ட மனிதனுடைய அரசியல், பொருளில், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகளுடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு வழங்கப்படும் நிலையில் ஆட்சி நிகழ வேண்டும்.