Friday, June 28, 2013

சிந்திக்க ஒரு உண்மைக் காட்சி ....

மனித இதயத்தை திண்ணும் காட்டு மிராண்டிகள் தான் சிரியப் போராளிகள் என்று நேற்று படம்காட்டிய மேற்கின் மீடியா மிலிடரிகள் இந்த சம்பவம் பற்றியும் பேசுவதுதான் மீடியா தர்மம் .



சம்பவம் இது தான் குறித்த ஒரு பகுதியில் நடந்த சண்டையில் அரச தரப்பு சிப்பாய் ஒருவன் உயரோடு போராளிகள் வசம் பிடிபட அவனிடம் நிலைமையை விளக்கி வீடு செல்ல அனுமதிக்கும் போராளிகள் பற்றிய உண்மை சம்பவமே கீழ்வரும் காட்சியாகும் . 


தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுதியில் தர்மமே வெல்லும் .


 # அல்லாஹ் நாடியவரை உங்களிடையே நபித்துவம் இருக்கும் .அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பிறகு நபித்துவத்தின் வழியில் 'கிலாபா ' ஆட்சி முறையாக அது அமையும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பிறகு அது கடினமான மன்னராட்சி முறையாக அது அமையும் ;அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பிறகு அது அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சியாக அது அமையும் .அல்லாஹ் எதுவரை நாடுகிறானோ அதுவரை அதுவரையிலும் அது நீடிக்கும் ;அதன் பின்னர் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான் .
 # பின்னர் (மீண்டும் ) நபித்துவ வழிமுறையில் கிலாபா ஆட்சி ஏற்படும் என்று கூறி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அமைதி காத்தார்கள் .
                                                                        அறிவிப்பவர் :- ஹுதைபா (ரலி )
                                                                        ஆதாரம் :-  முஸ்னத் அஹ்மத் 

Sunday, June 23, 2013

'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......



'வஹி' முன்னறிவித்த அப்தால்கள் வாழும்  வரலாற்று பூமியது .
சத்திய மீள்வருகையின் முகவுரை எழுத இன்று 
ஓர் 'தாகூத்திய ' அசிங்கத்தின் முடிவுரை எழுத 
முயற்சிக்கும் நிலமே அது 'அஷ் ஷாம் '

Thursday, June 20, 2013

அந்நாள் வெகு தூரமில்லை .........


      அறியாமையை அகற்றி சத்திய ஒளி கொடுத்தது  தாருல் இஸ்லாம். இருளை வெளிச்சமாக்கி சூனியத்தை பூரணமாய்  காட்டும் அசத்திய எதிரி அவன் சாக்கடை அகீதாவை சிந்தனாயுதம் கொண்டு சந்தனமாய் ஏவிய போது அதன் கீழ் ஒரு கொத்தடிமை போல வாழ்ந்தான் முஸ்லிம் ! காலத்தால் அந்த அநாகரீகம் நாகரீகமாய் வாழ்வை ஆக்கிரமிக்க அதில் நியாயம் கண்டான் !

         'ஜாஹிலியா ' வரைந்த சித்தாந்த வரிகளில் சுதந்திரம் எனும் சிறைச்சாலை தேசிய வேலியோடு பக்குவமாய் சகோதரத்துவத்தை சிதறடித்து முஸ்லிமை சிறைப்படுத்தியது . மறுபக்கம் இறுமாப்போடு இஸ்ரேலை பலப்படுத்தியது .

Friday, June 14, 2013

'விலாங்கு மீன்' அரசியலும் நடப்பு நிகழ்வுகளும் சொல்வதென்ன ?


                           இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் படிமுறை மாற்றம் ஒரு   சாத்தியமான ,சரியான வழிமுறையாக சிந்திக்கப் பட்டும் அமுல் நடத்தப் பட்டும் வரும் இன்றைய காலப் பகுதியில் முஸ்லீம் சமூக சிந்தனா தரம் ஜாஹிலீய விருப்புகளால் ஆளப்  பட்ட போராட்ட ஒழுங்கில் தான் இன்னும் இருக்கின்றன என்பதை நடப்பு விவகாரங்கள் நமக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன .

Friday, June 7, 2013

முஸ்லீம் அரசியலால் விலை பேசப்படும் இஸ்லாமிய அரசியல் !



          ஒவ்வொரு புரட்சிகளும் ,போராட்டங்களும் ஒரு மாற்றத்தை வேண்டியே நடத்தப் படுகின்றன .அந்த மாற்றம் நிகழ்கால வாழ்வியல் ,அதன் அடிப்படை இலக்கு , அதை அடைவதற்கான வழிமுறைகளுக்கு பாதகம் இல்லாத ,அல்லது அதில் சிற்சில மேலோட்டமான பகுதி மாற்றங்களை செய்வது எனும் போராட்டமாக அமைந்து விட்டால் அதை ஒரு சித்தாந்த மாற்றமாக கருத முடியாது ; மாறாக அது வெறும் உரிமைப் போராட்டமாகவே கருதப்பட முடியும் .

Thursday, June 6, 2013


   இன்று உலகை ஆள்வது  முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .