Monday, February 25, 2013

உங்கள் சிந்தனைக்கு சில வரிகள் .


         கடந்த 12ம் திகதி 'பராக் ஒபாமா 'அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வாகிய பின் முதல் தடவையாக பேசியபோது பின்வரும் கருத்தை வெளியிட்டார் . இந்தக் கருத்தின் பின்னால் உள்ள அரசியலை சற்று அலச வேண்டிய தேவை உள்ளது .


     "ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 66 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களில் 34 ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் வாபஸ் பெறப்படுவார்கள். பின்னர் படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு அங்கு தீவிரவாதிகளுடனான (அமெரிக்க)  போர் ஆண்டு இறுதியில் (2013 டிசம்பரில் ) முற்றிலும் நிறுத்தப்படும்." (அப்படியானால் தாலிபான் இல்லாமல் போய் விடுமா ? அல் காய்தா அழிந்து விடுமா ? இந்த வினாக்களை மையப்படுத்தி சில ஆழமான பார்வை எமக்கு அவசியமானது .

Sunday, February 24, 2013

ஐ .நாவின் பார்வையில் யுத்தக் குற்றமும் அது கண்டும் காணாத அடாவடிகளின் யுத்த சுத்தமும் !                           அந்த' நான் கடவுள் ' என்ற அகம்பாவ தேசங்களின் நெற்றிக்கண் நியாயங்களில் பயங்கர குற்றங்கள் கூட இந்த   ஐ .நாவின் பார்வையில் சுத்தமாகவே எப்போதும் மொழி பெயர்க்கப்படும் ! அந்த அராஜகமான கழுகுக் கொள்கையை , அரிவாளும் சம்மட்டியும் கொண்டு எதிர்ப்போம் என்ற புரட்சிகர பூச் சுத்தளில் உலகின் ஒரு பகுதி அணி திரண்டதும் உண்மைதான் .ஆனால் நடந்த கதை வல்லரசுகளின் அடியாட்களாக அந்த குண்டர் படைக்கு தொண்டர் படையாக பனிப்போரில் மனித குலம்  பணி செய்தது மட்டும்தான்; இதில் வேடிக்கை என்னவென்றால் சில நடுநிலை நாயகங்கள் 'அணிசேராமலும்  ' அடியாளானது !

செத்துப் போன கிளிக்கு சிங்காரித்து என்ன பயன் ?                                   மூன்று தசாப்த  இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

                  ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்ற விடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு  விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

Friday, February 22, 2013

நான் கலந்து கொண்ட 'ஜும்மாஹ் '.              ' ஜும்மா' மேடைகள் சிந்தனைப்  பீடைகளை முஸ்லீம் உம்மத்தில் வளர்த்து விடும் வழமையான பணியை மிகச் சிறப்பாகவே செய்து வருகிறது என்பதற்கு , 22/02/2013 ஆகிய இன்று நான் கலந்து கொண்ட எனது 'மஹல்லா மஸ்ஜித் ஜும்மாஹ் ' ஒரு சிறந்த சான்றாக இருந்து வருகின்றது . வழமையான சம்பிரதாய தொடக்கத்துடன் ஆரம்பித்தபோது நானும் காதை கூர்மைப்படுத்தி கேட்க ஆரம்பித்தேன் .

Thursday, February 21, 2013

பசுந் தோல் போர்த்திய புலிகள் யார் !?
                "வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை " ! இவ்வாறு கூறுவது 'மாபியா ' இயக்கத்தின் தலைவரோ ,அல்லது ஒரு முன்னாள் 'ரவுடியோ ' அல்ல மாறாக ஒரு புகழ் பெற்ற வரலாற்றை பறை சாற்றி நிற்கும் முன்னாள் காலனித்துவ வாத நாடான 'இத்தாலி 'யின் முன்னால் பிரதமரான 'சில்வியோ பெர்லஸ்கோனி 'ஆவார் .

Wednesday, February 20, 2013

இஸ்லாம் கொச்சைப் படுத்தப் படுகின்றது;முஸ்லிமே ! நீ எங்கே இருக்கிறாய் !?


      முஹம்மத், அல்லாஹ்வின் தூதராவார் ;அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள் ;ருகூ செய்பவர்களாகவும் , சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் ; அல்லாஹ்விடம் இருந்து பேரருளையும் ,அவனுடைய பொருத்தத்தையும் மட்டுமே தேடுவார்கள் ; அவர்களுடைய அடையாளம் ,சிரம் பணிவதின் அடையாளத்தினால் அவர்களது முகங்களில் இருக்கும் ;இதுவே தவ்ராத்தில் உள்ள அவர்களது அடையாளமாகும் ; இன்னும் இன்ஜீளில் அவர்களுக்குள்ள உதாரணமாவது , ஒரு பயிரைப் போன்றதாகும் ; அது தனது முளையை வெளிப்படுத்தி ,பின்னர் அதை பலப்படுத்துகின்றது ; பின்னர் , அது (தடித்து ) கனமாகிறது . பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது ; விவசாயிகளை(யே) ஆச்சரியமடையச் செய்கின்றது .இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதட்காக  (இவ்வாறு உதாரணம் கூறுகிறான் );அவர்களில் விசுவாசங்கொண்டு , நட்கருமங்களையும் செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் ,மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான் .                                                      
                    (அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு - சூரா அல் பத்ஹ்,  வசனம் 29)

Saturday, February 16, 2013

சிரியச் செய்திகள் சில .


கடந்த 11ம் திகதி அலெப்போ நகரத்தில் அமைந்திருந்த இன்னொரு விமானத் தளமான 'ஜர்ராஹ் ' கைப்பற்றப் பட்டபின் கடந்த 14ம் திகதி அசாத் படையின் 3 தாக்குதல் ஜெட் விமானங்கள் முஜாஹிதீன்களால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது .


இதன் பின்னர் அலெப்போ நகரம் மிகக் கடுமையான 'ஸ்கட் ' ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . இதில் சிவிலியன்கள் தரப்பில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .


Friday, February 15, 2013

ஒட்டு மொத்த 'கிரிமினல்களின் ' பக்குவமான புகழிடம் எது ?                                           குடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அதுதான் ஜனநாயகம் . ஆண்டிக்கு ஆண்டியே அரசனாம் !! இப்படித்தான் சொன்னார்கள் . சுதந்திரத்தை அடுத்தவனின் மூக்கு நுனிவரை நீட்டமுடியும் என்று துள்ளிக் குதித்தார்கள் . அதன் வடிவம் பற்றிய ஆசை எப்போதும் நிராசையானது தவிர இன்றுவரை நியாயமாகவில்லை . பகல் கொள்ளைக்கும் ,பக்கச் சார்புக்கும் , படு பாதகங்களுக்கும் அது துணை போனதே தவிர உருப்படியாக அது என்றும் தீர்வு சொன்னதில்லை .

Wednesday, February 13, 2013

விசேட செய்தி ...(12/02/2013)


         சிரிய இஸ்லாமிய போராளிகள் அலேப்போ நகரத்துக்கு வடக்கே அமைந்துள்ள இன்னொரு இராணுவ விமானத் தளமான  ' அல் ஜர்ராஹ் 'வை  கைப்பற்றியுள்ளனர் . இதில் விசேடம் என்னவென்றால் இந்தக் கைப்பற்றலில் சேதமற்ற நிலையில் ' மிக் ' ரக தாக்குதல் விமானங்களும் , எம் 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் சிலதும் எவ்வித சேதமற்ற நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது . தக்பீர் அல்லாஹு அக்பர் ...அல்லாஹு அக்பர் ...


      

மேற்கின் குட்டையில் ஊறிய எம் மட்டைகள் யார் ?மேற்கு எனும் குட்டையில் ஊறிய
நமது மட்டைகளே இந்த ஒபெக், O .I .C எல்லாமே !!
இது எதிரிக்கு எண்ணை வார்த்து அந்த குப்ரிய
வண்டிகளில் பல்லாக்கு பவனி வரும்
செல்லாக் காசுகளே !!! ஓ என் முஸ்லீம் உம்மத்தே !
'யகூதிய ' உடும்புகளின் அநீதப் பொந்துகளில்
அரசியல் தஞ்சமாகியிருக்கும் இந்த
வெட்கக் கேடுகளை நீ புரிந்து கொள் .
உன் விடுதலையும் நீதியின் மறு வரவும்
கிலாபாத்தின் உதயத்தில் மாத்திரமே .

    கடந்த வாரம் 57 அரபு நாடுகளின் கூட்டமைப்பான O .I .C அமைப்பின் மாநாடு எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்றது . இந்த தலைவர்களில் நேற்று இவர்களோடு இதே போல் ஒரு மாநாட்டில் கலந்து இன்று பலாத் காரமாக கம்பி எண்ணும் முன்னாள் தலைவர்கள் ,பலாத் காரமாக கபுரில் நுளைவிக்கப் பட்ட முன்னாள் தலைவர்கள் என கூட்டிக் கழித்துப் பார்த்தால் புதிய முகங்கள் , அதே மேற்கின் 'ஸ்பீக்கர்' களாக அமர்ந்து அமர்க்களப் படுத்தினார்கள் . 

Tuesday, February 12, 2013

பிசாசை விரட்டியபின் சந்திக்க இருக்கும் பூதம் ! (ஒரு பார்வை )


                                                                                                                                                                                                         சிரியாவின் பற்றமான சூழ்நிலை பற்றி ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோர்ன் கெர்ரி தெரிவித்துள்ளார் . அங்குள்ள நிலைமையை சமாளிக்கவும் வன்முறைகளை தடுக்கவும் இராணுவ ,இராஜதந்திர நடவடிக்கை பற்றி இப்போது அமெரிக்க அரசு தீவிரமாக ஆராய்வதாக கனேடிய வெளியுறவு அமைச்சருடன் கடந்த பெப்ரவரி 08 இல் நடந்த சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார் .

Saturday, February 9, 2013

எமது பார்வையில் சில முடிவுகள் . (சிந்தனைத் தூண்டளுக்கான ஒரு சிறு முயற்சி )       இஜ்திஹாத் மூலம் ஒரு உசூலை மேட்கொள்ளுதல் என்பது ஒரு பாரிய துறை அதற்கு இஜ்திஹாத் பற்றிய சட்டங்களை கற்பதன் ஊடாக ஒரு உறுதியான தெளிவை பெறலாம் என நம்புகிறேன் . தீர்ப்பு என்ற வகையில் ஒரு பதிலை தரும் தகுதி எனக்கு இல்லை . ஆனால் ஒரு பொருத்தமான சிந்தனை நோக்கிய தூண்டலை முடிந்தவரை தருகின்றேன் . 

Friday, February 8, 2013

வேங்கைகளின் வேட்டைக்கு தயார்படுத்தப் படும் வெள்ளாடுகள் !?


" ........ ஒரு காலம் வரும் அன்று சண் ஆ வில் இருந்து ஹல்றல் மௌத் வரை ஒரு பெண் தனியாகச் செல்லாலாம் ......" (நபி (ஸல் ))


     மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இஸ்லாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளிள் ஒன்றே இந்த பெண் பாதுகாப்பாக வாழும் சூழல் பற்றியதாகும் . இன்று அத்தகு வாக்குறுதிகளை செயல் படுத்த விடாமல் தீமையின் அதிகார ஆணிவேர்கள் போடும் ஆட்டத்தின் விளைவு மிகப் பயங்கரமாக உள்ளது . சத்தியம் பயங்கர வாதமாக்கப் பட்டு அசத்தியம் நியாமாக்கப் பட்டுள்ள இன்றைய சூழலை விளக்க கீழ்வரும் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் . 


Thursday, February 7, 2013

இது சியோனிச ரேஞ்சில் ஒரு சிதம்பர இரகசியம் .


            கழுகுக்கு  உதவ தலைப்பாகை கட்டும் நாட்டுக்கு  சிங்கப் படை அனுப்ப கழுகு கேட்டால் அதுபற்றி யோசிப்போம் . மாணிக்க தீவின் ஊடகத் துறை பேச்சாளர் அதிரடி பேட்டி !! இந்த விடயம் சற்று குழப்பமாக இருக்கலாம் .ஆனால் தாம்  சியோனிசத்தின் பெட்டிப் பாம்புதான்  என்பதை சொல்லாமல் சொல்லும் ஆதார வாக்குமூலமாகவே இதை கருத வேண்டியுள்ளது .

யாருக்கு சொல்கிறார் யானைக்கதை !!??


     தேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர் ஒரு ஆதாரமாக எடுத்துள்ளது தவறான நகர்வு அப்படிப் பார்த்தால் கீழே ஆக்கத்தில் சொல்லும் யானைக் கதை சிலநேரம் அதை எழுதியவருக்காகவே என சொல்லப் பட்டிருக்கலாம் !


   தேசியம் என்ற சிந்தனையின் உள்ளே இருந்துதான் பக்தி மயமான குறுநில வாதம் உற்பத்தி ஆகும் என்பது சாதாரண விடயம்;அந்த வகையில் இன்று சிலரது பார்வை இலங்கையின் கடந்த கால அனுபவத்தை மறந்த ஒரு பார்வை . தேசத்தின் எதிரியாகவும் ,தேசியத்தின் எதிரியாகவும் ஏதாவது ஒரு குழுமத்தை காட்டுவதன் ஊடாகவே தேசிய அரசியல் என்பது பலமடையும் . ஒரு தேசிய இனம் என்பதை விட பெரும்பான்மை சிறுபான்மை என்பதன் ஊடாக ஒரே நிலத்தில் பிரித்தாளும் கொள்கையை இலகுவாக கையாளலாம் . என்பதே பிரித்தானிய அணுகு முறை . இந்த பயிற்றுவிப்பின் நீண்ட கால பிரதி பலனே கடந்த இனவாத யுத்தம் . மேற்கின் அரசியல் நாகரீக வழி வந்த இந்த சிந்தனைத்தரம் ஒரு 'மாபியா' தரக் கொள்கையே . 

Wednesday, February 6, 2013

' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

      உலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது . செர்பியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு மனிதனும் வெட்கித்துப் போக வேண்டியுள்ளது . ஆனால் 'கபிடளிசத்தின் ' 'ப்ரோபிட் அண்ட் பெனிபிட் ' தரத்தில் 'ஜஸ்ட் பிரக்டிகள் ஜோக்ஸ் ' வகையை சேர்ந்த இந்த சம்பவம் உலகம் எங்கே உள்ளது ? என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாகும் .

பிர் அவுன் படைகள் தோற்றுப் போகும் இந்த பசர் அல் அசாதின் அட்டூழியப் படைகளின் முன் .

அலேப்போவில் அசாத் படையின் அட்டூழியங்களில் இது ஒரு துளி!!!


 எதிர்பார்த்திருங்கள் அந்த முஹம்மதின் (ஸல் ) படை உங்கள் அருகில் வந்து விட்டார்கள் சகோதரர்களே !! உங்கள் அவமானத்தையும் முழு முஸ்லீம் உம்மத்தின் அவமானத்தையும் இஸ்லாத்தின் கேடயத்தால் அவர்கள் காப்பார்கள் இன்ஷா அல்லாஹ் .வல்லாஹி சத்தியத்தின் பலத்தின் முன் இந்த தாகூத்கள் வெருண்டோடும் காலம் சொற்ப தூரம் தான்.  தக்பீர் ,, அல்லாஹு அக்பர் ..அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்.
இறுதியாக அல்ஹம்துலில்லாஹ் சிரியாவின் அலேப்போ நகரத்தை இஸ்லாமிய இராணுவம் தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது . 

Tuesday, February 5, 2013

மேற்கின் கண்டு பிடிப்புகளை பயன்படுத்திக் கொண்டு மேற்கை விமர்சிப்பது சரியா!?                 அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் , மற்றும் கலாச்சார நாகரீக மாற்றங்கள் என்பவற்றின் வித்தியாசத்தை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேற்கை விமர்சித்துக் கொண்டு அதன் சாதனங்களை முஸ்லீம்கள் பயன் படுத்துகிறார்கள் என்னும் அழுத்தமான குற்றச்சாட்டு அந்நிய சமூகங்களால் முவைக்கப்படும் போது அதற்கான பதில்களில் சற்று தளம்பல் தெரிவதை நான் அவதானித்தேன் . மேற்கின் கல்வியும் அதன் நாகரீக பாதிப்பும் தொனிக்கும் பதில்களே அங்கு அதிகமாக உள்ளது .

ஒரே வானம் ஒரே பூமி , ஒரே ஜாதி ,ஒரே நீதி , உலக மக்களே ஓரினம் என்று சொன்னானே உங்கள் கென்னடி அன்று !!!  சியோனிசக் கழுகின் சர்வதேச நரவேட்டை போதாமல் பலத்த காவலோடு ஒரு சித்திரவதைக் கூடத்தையும் வைத்துள்ளது என்றால் அது குவாண்டனோமோ என்று பால்குடிக் குழந்தை கூட நடுக்கத்தோடு கூறும் . இந்த உண்மைகளை அமெரிக்கரின் வாய் வழியாக கேட்கும் போதாவது உலகம் உணருமா ? இதோ கீழே சில உண்மைகள் .

  இந்த சர்வதேச சண்டியர்களின் காட்டு மிராண்டித்தன தர்பார்100% முஸ்லீம்களை குறிவைத்தே நிகழ்த்தப் படுகின்றது . இந்த ஓநாய்களின் இரத்த வாடை கலந்த வார்த்தை களுக்குத்தான் உலகத்தின் பெரும்பகுதி இப்போது செவி சாய்க்கின்றது. இது ஏன் ?இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வு !!!

'இஸ்ரேலின் டெல அவிவ் ' வரையான முஸ்லிமின் பாதுகாப்பான பயணத்திற்கும் , அமெரிக்க 'வைட் ஹவுசின் ' செங்கம்பளத்தில் முஸ்லீம் தொழவும் இதோ ஓர் அரிய வாய்ப்பு !!!


      தீமையில் இருந்து  நல்லதை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும் எனும் முஸ்லீம் உம்மத்தின் முடிவில் அதில் இருக்கும் தீமையின் அளவு அதன் ஆதிக்கப் பாய்ச்சல் அதன் நன்மையின் மீது தாக்கம் செலுத்தியிருக்காது என்ற உத்தர வாதத்தை யாராலும் தர முடியாது .
 

சாக்கடை கழிவு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் பிரித்து பயன் பெற முனைவது அதிக 'ரிஸ்க் ' அதவிட அப்பழுக்கற்றது ,தீமையே இல்லாதது இஸ்லாம் என்பதுதான் எமது நம்பிக்கை அதன் பிரயோகம் தொடர்பில் ஜாஹிலீயத் உடன் பாலம் போட முனைவது இஸ்லாத்திடம் இந்த காலத்திற்கு எதுவும் இல்லை என்ற கருத்தையே வலுப்படுத்துகின்றது . 

Monday, February 4, 2013

வேஷம் போடும் வேதாளங்களும் 'பாத்தில்' சகதியில் புதைக்கப் படும் 'ஹக்' கும் !!!முதுகை அழுத்திய அந்த காலனித்துவ பூட்சுகள் 
அகற்றத் துணிந்த எமது பார்வைகளை அவர்களது 
கண்களால் பார்க்கவே கற்றுத் தந்திருந்தார்கள் 
அந்த 'வெள்ளைத் தோல் ' போர்த்திய ஏகாதி பத்திய 'SIR 'கள் !
எமது 'ஐயா ' க்களும் அவர்களின் பாதணிகளாகி 
பக்குவமாக அவர்களின் பாதங்களுக்கு முகமூடி போட்டார்கள் !

 விடுதலை எதிர் பார்ப்புகளுக்கு ஏட்டுச் சுரக்காய் உருவத்தோடு 
ஒரு கொடியும் தரப்பட்டது ! - சுவைக்கும் ஆசையோடு ஏற்றினோம் !
உற்சாகமாய் 'சல்யூட்டும் அடித்தோம் . நாம் அடிமையல்ல 
என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்களாக . - நடந்த கதை 
சுதந்திரத்தின் பெயரால் சுரண்டல் தத்துவத்தின் 
இரண்டாம் பாகம் இனிதே அரங்கேறியது !

Saturday, February 2, 2013

எது சுதந்திர தினம் !?


          ஒவ்வொரு நாடும்  தனக்கென ஒரு நாளை சுதந்திர தினமாக கொண்டாடுகிறது . ஆனால் சுதந்திரம் என்ற இவர்களது பார்வையில் அப்பட்டமான போலித்தனமே தெரிகின்றது . தம்மை ஆண்டு வந்த காலனித்துவ அடக்குமுறையில் இருந்தோ ,அல்லது சர்வாதிகாரமான மேலாதிக்கத்தில் இருந்தோ கிடைக்கும் விடுதலையே சுதந்திரம் என்பதாக பொதுவாக குறிப்பிடப் படுகின்றது .

                                            ஆனால் நிகழ் காலத்தில் சுதந்திர தினம் என குறிப்பிடப் படுவது காலனித்துவம் என்ற நேரடி அடிமை வடிவத்தில் இருந்து நாகரீகமான நவ காலனித்துவ மறைமுக அடிமைத்தன   வடிவத்துள் உத்தியோக பூர்வமாக அழைத்துச் சென்ற நாளையே ஆகும் .ஒரு பிரத்தியோக கொடியையும் , அதற்கொரு கீதத்தையும் அமைத்து அதன்கீழ் அணிவகுத்து நின்று தேசப்பற்றை தெய்வீக அம்சமாக்கி எமது என்ற போர்வையில் யாருக்காகவோ வாழ்ந்து விட்டுப் போவதே சுதந்திரம் என எம்மீது திணிக்கப் பட்டதுதான் உண்மையான  நிலை ஆகும்  .

Friday, February 1, 2013

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் .


           இந்த பதிவு சித்தாந்த ரீதியில் முதலாளித்துவ வடிவத்தை முன்வைக்கும் அடிப்படையில்  எழுதப்பட்டதல்ல .நிகழ்காலத்தின் உண்மைகளை அரசியல் தரத்தில் மனித சமூகம் புரிந்து கொள்ள  வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு சிறு முயற்சியாகும் .

                           ஒவ்வொரு தேசியமும் தனது எல்லைகளுக்குள் நலனையும் நியாயத்தையும் பேண முற்படும் போது . அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் மனிதன் கருத்தளவில் மிருகத்தை விட கேவலமாகப் பார்க்கப் படுகிறான் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் .

நாளைய பொறியை தவிர்க்கும் இன்றைய குறிகள் .                          'ஓநாயாக இருந்து பார்த்தால் தான் ஓநாயின் நியாயம் புரியும்' என்பார்கள் . சிரிய விவகாரத்தில் இன்றைய நிகழ்வுகள் பற்றி சொல்ல இந்த வார்த்தைகள் 100% பொருத்தமானவை . நான் சொல்ல வருவது சிரியாவின் டமஸ்கஸ் அருகில் ஜாம்றாயா என்ற இடத்தில் அமைந்திருந்த சிரிய இராணுவத்தின் ' இராணுவ ஆய்வு மையம் ' இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தையே ஆகும் .