உங்கள் தேசம் இரத்தத்தினால்
யஹுதிகளால் குளிப்பாட்டப்படுகிறது.
நிலத்தில் சிந்திய இரத்தத்தின் அச்சத்தில்
குழந்தைகள் கூட சிறுநீர் கழிக்க மறுக்கின்றன இங்கே.
யஹுதியின் “மர்கபா” டாங்கிகள்
உங்கள் வாசல் வரை வந்து விலாசம் தேடுகின்றன
எதிரி சாவகாசமாக எல்லையில் நின்று குண்டு போட
எம் எல்லைக்குள் அரபு தேச எஜமானரின் பூட்ஸ் லேஸ்
கூட உள் நுழைய அச்சப்படுகிறது.