Friday, March 1, 2013

இலங்கையின்'ஹலால் விவகாரம் 'ஒரு பார்வை .



                          இலங்கையின் பொது பல சேனா எனும் பௌத்த மதவாத அமைப்பின் அண்மைய நகர்வு பொருட்களுக்கு 'ஹலால் ' சான்றிதழ் வழங்கும் முறையை நீக்கக் கோரிய முஸ்லீம் எதிர்ப்பு வடிவமாகும் .நடப்பு நிலவரப்படி' ஹலால் ' சான்றிதழ் வழங்கும் விவகாரத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முஸ்லீம்கள் இதோ ஓரளவு நல்ல அறிகுறி குறித்த விடயத்தில் கிடைத்து விட்ட திருப்தியோடு 'அல்ஹம்துலில்லாஹ் ' சொன்னதையும் நாங்கள் அவதானிக்கிறோம் .

                         பொது பல சேனா உண்மையில் முஸ்லீம்களை குறிவைக்கவில்லை ;அவர்கள் குறிவைத்திருப்பது இன்றைய இலங்கை வாழ் முஸ்லீம்களின் வாழ்வில் அமுல் நடாத்தப் படும் மிகக் குறைந்தபட்ச இஸ்லாமிய வாழ்வின் எதிர்பார்ப்புகள் மீதே என்றால் அது மிகையான கருத்தல்ல .புனித பூமி சிந்தனா வாதத்தின் எதிரொலியாக மஸ்ஜித்கள் ,சாவியாக்கள் ,குறிவைக்கப்பட்டது , முஸ்லீம்களின் வியாபாரத் தளங்கள் ,வியாபார நடவடிக்கைகள் மீதான அச்சமூட்டும் நச்சுக் கருத்துக்களை பௌத்த சமூகத்திடம் பரப்பப்பட்டது  ,இப்படி பல்வேறு விடயங்களை குறிப்பிட முடியும் .

                        முஸ்லீம்கள் எல்லோரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அது 'குப்ரிய ' அதிகாரங்களின்  கீழான முஸ்லிமின் வாழ்வு இவ்வாறுதான் அமையும் என்பது வெளிப்படையான உண்மை .'குப்ர் ' எங்களை எதிர்ப்பதற்கான காரணம் ஒன்றே ஓன்று தான் ;அது இஸ்லாத்தை வாழ்வியலாக முஸ்லீம் எதிர்பார்க்கக் கூடாது என்பதேயாகும் .முழு உலகிலும் முஸ்லீம் உம்மத்தின் நிலை இது தான் . அது முஸ்லீம் பெரும்பான்மை நிலமாக இருக்கட்டும் ,அல்லது சிறுபான்மை நிலமாக இருக்கட்டும் எங்கும் இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு தீர்வளித்தல் என்ற விடயத்தில் தடைகள் மற்றும்  பல்வேறு முட்டுக் கட்டைகள் தொடர்கின்றன .


                                    இஸ்லாத்தால் ஆளப்பட்டால் மாத்திரமே இஸ்லாம் வழிமுறையாகளாம் என்ற உண்மை முஸ்லீம்களால் உணரப்படவேண்டும் . 'குப்ரிய ஆட்பலமாக இருக்கட்டும் ,அல்லது அதிகார நிலையில் இருக்கும்  'குப்ரிய 'சிந்தனா பலத்தின் வழி வந்த முஸ்லிமாக இருக்கட்டும் ,இவ்வாறான யாராலும் இஸ்லாத்தின் சிந்தனைத்தரத்தை அதன் அரசியல் வடிவத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியாது .எனவேதான் இத்தகு சூழலில் இஸ்லாத்தின் சட்டங்கள் 'குப்ரிய 'சிந்தனா வாதத்தால் கேவலப்படுத்தப்படும்.

                        மத்திய கிழக்கின் முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களில் கூட  இஸ்லாம் ஒரு ஆரோக்கியமான ஆதிக்க சக்தியாக இல்லை .!அதாவது  முஸ்லீமிடம் இஸ்லாமும் ஒரு 'சொய்ஸ் ' . தேவையானால் வாக்குப் பலத்தின் மூலம் தேர்ந்து கொள்ளலாம் !!எனும் மேற்கின் அரசியல் சகதியே சந்தனமாக ஆட்சி ஏறியுள்ளது .மேற்கின்  எதிர்பார்ப்பின் படி மதச் சார்பின்மை ஒரு பலமான ஆளும் கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாக விடப்பட்டுள்ளது.

                                                       இப்படி இருக்கும் நிலையில் 'குப்ரிய ' மேலாதிக்கத்தின் கீழ் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்களின் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை . அதன் தொடர் வடிவமே இந்த இலங்கையின் 'பொது பல சேனா ' சொல்லும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் ஆகும். இஸ்லாம் ஒரு அரசியல் இராஜ தந்திர சக்தியாக உலகில் இல்லை . முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களும் தமது தேசிய ,சர்வதேச விதிகளை மீறி இலங்கையில் தலையிட முடியாது எனும் இன்றைய ஜனநாயக முற்றுகையின் கீழ் இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவம் எப்போதும் ஒரு கேள்விக்குறிதான் .என்பதை 'பொது பல சேனாவும்' தெரிந்த செய்திதான் .

                            ஹலால் ,ஹராம் என்பது தான் உண்மையில் ஒரு முஸ்லிமின் வாழ்க்கை .ஹராத்தை தவிர்த்தல் ,ஹலாலை அமுல் படுத்தல் என்பதிலேயே இறை திருப்தி தங்கியுள்ளது என்பதை புரிந்து கொண்ட சாத்தானிய சக்திகள் ஹராமான வாழ்வை நோக்கி ஒரு முஸ்லிமை திருப்ப பகீரத பிரயத்தனம் செய்யும் என்பதுதான் இயல்பு . இதிலிருந்து தவிர ஒரே வழி முழு முஸ்லீம் உம்மத்தையும் ஒரே தலைமையில் இணைத்து ,'குப்ரிய ' அதிகாரங்களை தனது அரசியல் இராஜதந்திர பலத்தின் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய 'கிலாபா ' அரசை தகுதியான இடத்தில்  உருவாக்குவது மட்டுமே .அவ்வாறு சிந்திக்காத நிலையில் 'சமரச 'தளத்தில் சரணடைவு அரசியலில் இஸ்லாத்தை விட்டுக்கொடுத்து 'சபூர் ' வாழ்க்கையில் கோழைகளாக வாழ்வது தவிர வேறு வழியில்லை .

                                       அதாவது நான் இங்கு சொல்ல வருவது முஸ்லீம்களது போராட்ட சிதனையில் முன்னுரிமை கொடுக்கவேண்டியது எது ? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் . எமது மதிப்பு மிக்க பூமாலையை குட்டிக் குரங்கு சின்னா பின்னப்படுத்த தொடங்கியுள்ளது ! என்ற அச்சத்தில் அதன் அப்பனான கொரில்லாவிடம் பாதுகாக்க கொடுக்க நினைப்பது மிகத் தவறானது .

                            

No comments:

Post a Comment