Friday, November 8, 2013

சிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... - கமால் பாஷா இன்னும் இறக்கவில்லை போலும் !!




  
      சிரிய விவகாரத்தில் நான்கு சக்திகள் தங்கள் எதிர்கால நலன்களிற்கான பின்புலத்தில் செயற்படுகின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி சவுதி அரேபிய என்பன ஒரு அணியாகவும், ஈரானும் ஷியா மத தலைமைகளும் மறு அணியாகவும் பங்காற்றுகின்றன. இதை விட மூன்றாம் அணியாக துருக்கி தனது பிராந்திய நலன்களை மேம்படுத்தும் நோக்கில் சிரிய விவகாரத்தை கையாள முற்பட்டுள்ளது. இவைகளை தவிர ரஷ்யாவும் தனது மத்தியகிழக்கு மற்றும் மத்தியதரைக்கடல் ஆதிக்கத்திற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இவர்கள் எவருக்குமே சிரிய பொது மக்கள் பற்றிய நலன்களின் எந்த கரிசணையும் இல்லை. 



      இதில் துருக்கியின் வகிபாகம் பொதுவாக யாருக்குமே தெரிவதில்லை. முஸ்லிம் தேசங்களின் தலைமைத்துவத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஓநாய் தனமான சிந்தனைகளுடனேயே துருக்கிய அரசு செயற்பட்டு வருகிறது. சிரிய துருக்கிய எல்லையில் ஒரு குர்திஸ்களிற்கான சுயாட்சியை ஏற்படுத்தும் திட்டத்தில் துருக்கிய உளவமைப்பு தனது செயற்பாடுகளை செய்து வருகிறது. பலம்வாய்ந்த இராணுவ வளங்களுடன் கூடியு குர்திஷ் அணியொன்று சிரிய சமர்க்களத்தில் இறக்கி விடப்பட்டிருப்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. அதன் இன்னொரு கட்டமாக துருக்கிய அதிபர் சில கருத்துக்களை பிரித்தானிய கார்டியன் பத்திரிகைக்கு கடந்த ஞாயிற்க்கிழமை வெளியிட்டுள்ளார். 

     அவர்...“இஸ்லாமிய போராளிகள் மத்திய கிழக்கில் ஒரு ஆப்கானிஸ்தானை உருவாக்கப் போகிறார்கள்” என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். “நாம் உலகை நோக்கியும் அதன் தலைவர்களை நோக்கியும் பல தடவை சிரியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கை செய்திருந்தோம். யாருமே அது பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை. இப்போது அந்த பயங்கரவாதம் துருக்கு முதல் ஐரோப்பா வரை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைவது அவசியம்” என தெரிவித்துள்ளார். 

    “மத்திய தரைக்கடல் படுக்கைகளில் ஆப்கானிய பிராந்தியங்களை முஸ்லிம் போராளிகள் உருவாக்கியுள்ளார்கள்” எனும் அப்துல்லாஹ் குல்லின் கருத்துகளிற்கு பின்னால் உள்ள விபரீத அரசியல் என்னவென்பது வாசகர்களிற்கு புரியும் என்று நினைக்கின்றோம். 

    “உலகம் மேலும் சிரியாவின் விவகாரத்தில் மெத்தனப்போக்கை மேற்கொள்ளுமாக இருந்தால் அதன் விளைவுகள் விபரீதமானவை. இப்போது போராளிகள் தான் அடிப்படைவாதிகளாக மாறியுள்ளனர். இந்நிலை நீடித்தால் சாதாரண பொது மக்களும் அடிப்படைவாதிகளாக மாறி விடுவார்கள்” என துருக்கிய அதிபர் அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார். 

  20,00,000 சிரிய மக்கள் வேறு தேசங்களிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மொத்தமாக உள்நாடு உட்பட 50,00,000 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 600,000 பேர் துருக்கியினுள் அகதிகளாக வருகை புரிந்துள்ளனர் என்பதனையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

துருக்கி முன்பு சிரியாவுடன் நல்ல நண்பனாக இருந்தது. துருக்கிய பிரதமர் ராயிப் தய்யிப் ஏர்டோகான் சிரிய அதிபர் பஸர் அல்-அஸாதுடன் நட்பாக செயற்பட்டவர். பிற்பட்ட காலங்களில் அவர் சிரிய அரசின் எதிரியாக மாறினார். சிரிய அரசிற்கு எதிரான துருக்கிய இராணுவ நடவடிக்கைகள், நேட்டோவுடன் இணைந்த சிரிய அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கைகள் என பல திட்டங்கள் பற்றி விவாதித்தவர் துருக்கிய பிரதமர். 

துருக்கிய பிரதமர் அஹ்மட் டாவுட்டோக்லு ஒரு முறை பேசுகையில் “ நாம் (துருக்கி) ஒரு போதும் முஸ்லிம் நாடுகளிற்கு எதிராக இஸ்ரேலுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட மாட்டோம்” என கூறியிருந்தார். 

ஆனால் தற்போதையை சிரிய விவகாரத்தில் அரசியல் மற்றும் உளவு பரிமாற்றங்களை மிக நெருக்கமாக துருக்கி அரசு இஸ்ரேலுடன் மேற்கொண்டு வருகிறது. மீண்டும் சொல்வதானால் கவுண்டமணி பாஷையில் “அரசியலில் இதெல்லாம சகஜமப்பா....”

No comments:

Post a Comment