Monday, May 27, 2013

'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகுதிகள் .         இங்கிலாந்தில் படைவீரர் ஒருவர் வூல்விச் நகரில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் ,முஸ்லீம்கள் மீதே காழ்ப்புணர்வான பார்வை திசை திருப்பப் பட்டதாக நினைத்தாலும் சம்பவங்களின் காட்சி வடிவங்கள் சித்தரிப்புகள் ,குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் என்பன பிரித்தானிய மக்கள் மத்தியிலும் , சர்வதேச சமூகத்திலும் விதைக்க நினைக்கும் முக்கிய தகவல்கள் பற்றி முஸ்லீம்கள் அவதானமாக இருக்க வேண்டும் .               அதாவது இனி சம்பவங்களின் பின்னணியோடு குறித்த ஓர் இயக்க சார் பயங்கர வாதமாக சித்தரிக்கும் அரசியல் தலா ரீதியாக முஸ்லீம் உம்மத்தின் மீது பங்கு போடப்பட்டுள்ளது  ,இதன் மூலம் 'குப்ரிய ' ஆதிக்கக் கடிவாளத்தை வழமையான இறுக்கத்தை விட மிக கொடுமையாக இறுக்கப்பட செய்யப்பட்டுள்ள சதியா !? எனும் சந்தேகமே வலுக்கின்றது . அதாவது 
1. தனிநபர் இஸ்லாமிய பயங்கரவாதம் .
2. தனி நபர் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் எதிர்பார்ப்பு .
                                                                                                                                                                              பற்றி நிகழ்கால சம்பவங்கள் தொடர்பில் அச்சம் கலந்த சமூக பேசுபொருளை ஏற்படுத்துவது எனும் சூழ்ச்சி அரசியல் தந்திரமா !? என்றே சிதிக்கத் தோன்றுகிறது .        
                   
                                                   
            காட்சிகள் யாவும் 'ஹோலிவூட் ' தரத்தில் கச்சிதமாக கையாளப் பட்டுள்ளது . இந்த நிஜ சினிமாவின் 'கிளைமக்ஸ்' காட்சி பொலிசார் வந்து காலில் சுட்டு குறித்த நபர்களை பிடித்ததில் முடியவில்லை .கொலையும் கொலையாளிகளும் என்பதுதான் இந்தப் படத்தின் தொடக்கமே ஆகும் . 'போஸ்டன் ' குண்டு வெடிப்பு சம்பவம் போல் இஸ்லாமிய உலகோடு 
அறிமுகமான செச்னியர்கள் சம்பந்தம்  போல் அல்லாமல் நைஜீரியர்கள் அதுவும் கடும்போக்கு கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள் . போஸ்டனில் கொல்லப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது . வூல்வீச்சில் சம்பவ தாரிகள்  பிடிக்கப்பட்டு 'மெகா சீரியல் ' செட்டப் போடப்பட்டுள்ளது .
               (இதற்கு நடுவில் உலகம் இன்னொரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் அது இவ்வாறு விடுப்பில் வரும் சிப்பாய்களையும் ,இராணுவ அதிகாரிகளையும் கொலை செய்ய திட்டமிடுவது ஒரு இராணுவ இயக்கத்தை பொறுத்தவரை மிக இலகுவானது . இப்படி ஒரு இலக்கு சார் நடவடிக்கை தொடர்பில் முஸ்லீம்கள் சார் இராணுவ இயக்கங்களின் உரிமை கோரல் சம்பவங்கள் இல்லை என்றே கூற முடியும் .)


               மேலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் வெளியிட்டுள்ள செய்தியில் "இது பிரித்தானியாவுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல இஸ்லாத்துக்கும் எதிரான தாக்குதலே " எனும் வார்த்தைகள் மிக அவதானமாக சிந்திக்கப் பட வேண்டியவை .மேற்படி சம்பவம் தொடர்பில் பெயர் வெளியிடப்படாத இரண்டாவது ஆயுத தாரி 'சிரிய புரட்சிக்கு ஆதரவாக உள்ளூரில் ஆதரவு வேண்டி அண்மையில் துண்டுப் பிரசூரங்களை வினியோகிப்பதில் ஈடுபட்டார் ' . எனும் விடயமும் இவ்விடத்தில் மிக முக்கியத்துவம் பெறுகிறது . அதாவது இந்த சம்பவம் முடிச்சுப் போடப்பட இருக்கும் இன்னொரு தெளிவான திசை பற்றிய அறிமுகத்தை கொடுப்பதாக இருக்கலாம் .


  குறித்த சம்பவதாரிகளில் ஒருவர் (SIS , MI5 , MI6 போன்ற ) உளவு அமைப்பில் பணி செய்பவர் அல்லது பணிக்காக தேர்வு செய்யப் பட்டவர் எனும் தகவல்களின் கசிவும் இந்த சம்பவம் தொடர்பான அவதானத்தை  அதிகரிக்கச் செய்கின்றது . ஒட்டு மொத்தமாக மேற்கின் எதிர்பார்ப்பு , முஸ்லீம் ,இஸ்லாம் ,இஸ்லாமிய எழுச்சி தொடர்பில் அவர்கள் 
அமைத்த 'பிரேமுக்குள் ' சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சூத்திரத்தைத்தான் ஆகும் .          மேலும்  இந்த அச்சப்படுதல் மூலம் தான் இனி தமது முதலாளித்துவ ஏக போகத்தை கட்டிக் காக்கலாம் என்ற எதிர்பார்ப்பாக அல்லது சில ஆக்கிரமிப்புகளுக்கான ஆதார சம்பவமாகவும் அமையலாம் . 'டுவின் டவர்' போன்ற பாரிய கட்டடங்களின் தகர்ப்பை விட இஸ்லாத்தின் மீது கரி பூச இத்தகு 'லோ  பட்ஜெட் ' காட்சி அமைப்புகள் சிறப்பாக 
கை கொடுக்கும்  என்ற புதிய வழிமுறை முழு உலகிலும் பேனப்படலாம் .
        

No comments:

Post a Comment