Sunday, September 15, 2013

சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை )

    
 சிரிய விவகாரத்தில் U .N தனது அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது .அதன்படி சிரியாவில் நிகழ்ந்துள்ள யுத்தக் குற்றங்களில் பசர் அல் அசாத் தரப்பு மற்றும் சிரியப் போராளிகள் தரப்பு ஆகிய இருபக்கமும் குற்றமிழைத்துள்ளது  என்றும் ,சிவிலியன்கள் படுகொலை விவகாரத்தில் இரு தரப்பும் தாராளமாக ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

                 அதே நேரம் பசர் அல் அசாத் இரசாயன மற்றும் அழிவுதரும் ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பில் NATO வின் நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வந்துள்ளார் .
                              
                            இந்த வகையில் U .N அறிக்கையானது சிரிய விகாரத்தில் மேற்குலகு தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது  .அதாவது பசர் அல் அசாத்தோடு  விடயங்கள் முடியப் போவதில்லை ! அது ஒரு உப்புச் சப்பற்ற தொடக்கம் மட்டுமே என்பதையும் ,தாம் உண்மையிலேயே எதிர்பார்க்கும் எதிரியை நோக்கி விடும் யுத்தப் பிரகடனமாகவும் விடயத்தை கருத முடியும் .

                      இந்த U .N (ஐக்கிய நாடுகள் சபை ) என்பது எப்படியான நிறுவனம் என நாம் முன்னர் ஒரு பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம் . அதனால் இப்போது சுருக்கமாக விடயத்தை பார்த்தால் இப்படிக் கூறலாம் . மகாபாரத இதிகாசத்தில் பஞ்சபாண்டவர்களின் மனைவி திரெளபதி பற்றி அறிவீர்களா ? அதாவது ஐந்து கணவன் மாருக்கு ஒரு மனைவி போல அதை விட' அட்வான்சாக ' இன்று ஏகாதிபத்தியங்களின் மனைவியாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலின் வைப்பாட்டியாகவும் தொழிற்படும் அமைப்பே இந்த U .N ஆகும் .

                       'வீட்டோ ' என்ற 'சுப்பர் பவர்' சர்வாதிகாரத்தில் அடிக்கடி சோரம் போனாலும் அறிக்கை விடுவதில் மட்டும் ஒரு சுத்தமான கற்புக்கரசி ! நீதிக்காக ,நியாயத்துக்காக இந்த அமைப்பு சாதித்தது என்பதை விட ஏகாதிபத்தியங்களுக்கு இலாபங்களை நிறையவே சம்பாதித்து கொடுத்துள்ளது . அவர்களின் அரசியல் ,பொருளாதார ,இராணுவ நிர்ணய செயற்பாடுகளுக்கு இந்த U .N நிறையவே தோள் கொடுத்துள்ளது .

                       அதுவும் குறிப்பாக முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுடன் நெருக்கமும் விசுவாசமும் அதிகம் .ஜெனீவா இதன் வசிப்பிடமாக இருப்பதால் புகுந்த வீட்டு கலாசாரத்தை பின்பற்றி தன் கணவர்மார்களின் நிகழ்கால ,எதிர்கால 'அக்சன் பிளான்களை ' அறிக்கையாக வெளியிட்டு விடுவதில் இந்த U .N  ஒரு PERFECT ஆன பொண்டாட்டி .

                  அந்த வகையில் மேற்குலகு சிரிய விவகாரத்தில் எத்தகு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது !? என்பது தொடர்பில் இந்த U .N அறிக்கை ஒரு தெளிவான முன்னறிவிப்பை செய்துள்ளது என்று தான் எம்மால் கருத முடிகிறது . அந்த இலக்கு சிரியப் போராளிகள் தாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . சரி இனி இதுவிடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் ? இன்ஷா அல்லாஹ் மறுபதிவில் தருகிறேன் .

No comments:

Post a Comment